திங்கள், 22 அக்டோபர், 2012

சங்கமத்தில் குளியல் – காசுக்காகப் படும் கஷ்டம்


திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 9

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8

படகுக் காரரிடம் ஒரு வழியாகப் பேசி வாடகையினை முடிவு செய்தோம்இங்கேயும் நிறைய இடைத்தரகர்கள்இவர்கள் பேசி முடித்த பிறகு படகோட்டியிடம் சொல்கிறார். அவர் ஓட்டும் படகுக்குச் சொந்தக்காரர் வேறொருவர்.    இப்படகு ஓட்டத்தினை வைத்து எப்படியோ மூன்று நான்கு பேர் பிழைக்கிறார்கள். ஆனாலும் பாஷை தெரியாதவர்களை ரொம்பவே படுத்துவது பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. பத்து-பதினைந்து நிமிட பயணம் சென்று அரை மணி நேரம் சங்கமிக்கும் இடத்திலிருந்துவிட்டு மீண்டும் கரைக்கு அழைத்து வர வாய் கூசாது சில ஆயிரங்கள் பணம் கேட்கிறார்கள்.நாங்கள் இருவர் மட்டுமே சென்று சங்கமத்தில் சிறிது நேரம் இருந்து விட்டு திரும்ப வர வேண்டும் என்பதால் நூறுகளில் முடிந்ததுகரையோரம் பல படகுகள் முண்டியடித்தபடி நிற்கிறதுஎங்கள் படகிற்கு ஒரு வழியாக, பல படகுகள் தாண்டிப் போனோம்ஒரு எங்களுடன் படகோட்டி மட்டுமே வந்தார்கூடவே பூஜை செய்ய வேண்டுமா எனக் கேட்டபடியே வேறொருவரும் படகில் ஏற, அவசியமில்லை என நான் அமைதியாகச் சொல்ல அவர் எங்களைத் திட்டியபடியே அடுத்த படகிற்குத் தாவினார்.சங்கமிக்கும் இடம் கிட்டத்தட்ட நாற்பதடி ஆழம் இருக்குமெனச் சொன்னார் எங்கள் படகோட்டி சிவகுமார்அவரும் காவட் எடுப்பவர்கள் போட்டிருக்கும் ஆரஞ்சு கால்சட்டையும், சிவபெருமான் உருவம் பொறித்த பனியனும் போட்டிருந்தார்இரண்டு நாட்கள் முன்னர் தான் காசிக்குச் சென்று புனித நீரால் அபிஷேகம் செய்து அர்சித்து வந்ததாய்ச் சொன்னார்.

அவரிடம் பேசியபடியே நதியை ரசித்தேன். படகுத்துறையில் போட்டி அதிகம் என்றும் இருக்கும் அத்தனை படகுக்காரர்களும் எப்படியாவது பணம் பறித்துவிட யோசிக்கிறார்கள் எனவும் சொல்லிக் கொண்டு வந்தார்இரண்டு துடுப்புகளை வைத்து படகினைச் செலுத்தும் அவர் ஒரு நாளைக்கு பல முறை இப்படி சங்கமத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்வாராம்.

10 - 15 நிமிடம் துடுப்புப் போட்டு எங்களை நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்அங்கே ஏற்கனவே பல படகுகள் இருந்தனஇரு படகுகள் நின்றுகொண்டிருக்க, அவற்றிற்கு இடையே இரண்டு கழிகளை வைத்து அதில் தொட்டி போன்று ஒரு ஏற்பாடு செய்து, கீழே மெத்தை [தக்கத் என்று அழைக்கிறார்கள் அதை] போன்ற ஒன்றை கட்டி வைத்திருக்க, அதில் இறங்கி பக்தர்கள் குளிக்கிறார்கள்.ஈமச் சடங்குகள் செய்து தனது தந்தைதாய் போன்றவர்களின் அஸ்தியைக் கரைக்க சங்கமத்திற்கு வரும் பக்தர்கள் தான் அதிகம்காரியங்கள் செய்து முடித்து மேலே சொன்ன தொட்டி போன்ற இடத்தில் ஒரு வித பயத்துடன் குளித்து எழும் அவர்களை மேலே கை கொடுத்து படகிற்குள் ஏற்றி விடுகிறார்கள்.

நாங்கள் கொண்டு சென்ற பூக்கள் நிரம்பிய தொன்னையில் இருந்த விளக்கினை ஏற்றி கங்கையில் சமர்ப்பித்தோம்பக்கத்திலே வேறொரு படகில் விறுவிறுப்பாய் வியாபாரம் நடக்கிறதுதேங்காய், பூக்கள், பூஜைப் பொருட்கள் என விற்கிறார் ஒருவர்கங்கைக்கு அர்ப்பணம் செய்ய தேங்காய் வேண்டுமா? பத்து ரூபாய் தான் என்கிறார் அவர்.

சற்று முன் அவர் ஒருவருக்கு தேங்காய் விற்றதைப் பார்த்தேன்கங்கையில் தேங்காயைப் போட்டவுடன் தண்ணீரில் பாய்ந்து ஒருவர் அத்தேங்காயை மீட்டெடுத்து வருகிறார் ஒருவர்மீட்டெடுத்த தேங்காய் மீண்டும் வருகிறது படகுக் கடைக்காரரிடம். அடுத்து வேறொருவருக்கு பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது!   பார்த்த பிறகு வாங்கத் தோன்றவில்லைவேண்டாமென மறுத்த்தற்கு சிரத்தையே இல்லாது எதற்கு இங்கே வருகிறாய்? என திட்டு வேறு வாங்கிக் கட்டிக்கொண்டேன்.பக்கத்திலேயே வேறொரு படகில் பிளாஸ்டிக் கேன்கள் விற்பவர் இருக்கிறார்.  10 – 20 – 30 ரூபாய்களுக்கு கிடைக்கிறது.  30 ரூபாய்க்கு ஒரு கேன் வாங்க, “சரியாக இருக்கா எனப் பாருங்கள் என்கிறார் சிவகுமார்நானும் கங்கையில் முக்கி தண்ணீர் பிடித்து ஒழுகாமலிருக்கிறதா என்று பார்த்து, தண்ணீர் பிடித்து படகில் வைத்துப் பார்க்கிறேன்கேன் விற்றவரைக் காணவில்லை! அய்யோ காசு கொடுக்கலையே எனப்பதற, “கவலைப்படாதீர்கள், வந்து வாங்கிக் கொள்வார்! எனச் சொல்கிறார் சிவகுமார்.பிளாஸ்டிக் கேனிற்குக் காசு கொடுத்துவிட்டு திரும்பினோம்ஒரு படகில் படகோட்டி மட்டுமே அமர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு துடுப்புப் போட்டுக் கொண்டிருந்தார்படகில் ஆளேயில்லாமல் படகோட்ட ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார் எனப் புரியவில்லைசிவகுமாரிடம் கேட்க, காசு சேர்க்கிறார் எனச் சொன்னார்படகில் ஒரு கயிறு கட்டி, அதன் மறுமுனையில் பெரிய காந்தத்தினைக் கட்டி நதியில் தொங்கவிட்டு அதனுடன் ஓட்டிக் கொண்டு வருவாராம்அதில் பலவித பொருட்கள் ஒட்டிக்கொண்டு வந்துவிடுமாம்தங்கத்திலிருந்து, காசு வரை….  காசு சேர்க்க என்ன கஷ்டம்!

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. திரிவேணி சங்கமம் – திருப்தியான பயணம் ! பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 2. மார்ச்சில் இங்கெல்லாம் செல்ல
  திட்டமிட்டிருக்கிறோம்
  தங்கள் பதிவு எங்களுக்கு நல்ல
  வழிகாட்டியாக உள்ளது
  படங்களுடன் விளக்கிச் செல்வதும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... மார்ச் மாதத்திலா... மிக நல்லது....

   தில்லி வந்தால் சொல்லுங்கள். நிச்சயம் சந்திக்கலாம்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 3. மிகவும் தெளிவாக, விரிவாக ஒவ்வொரு இடம் பற்றியும் எழுதுகிறீர்கள்.
  உங்கள் சொந்த அனுபவமும் சேர்ந்து சுவாரஸ்யம் கூடுகிறது.

  படிக்கும்போது நான் எப்போது போகப் போகிறேன் என்று எண்ணத் தோன்றுகிறது.

  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 4. எப்படியெல்லாம் காசு சேர்க்கிறார்கள். சிறந்த பயண அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 5. வித்தியாசமான, வியப்பான தகவல்கள் அறிந்துகொண்டேன். படகிலேயே எத்தனை வியாபாரங்கள். கேரளாவிலும், காஷ்மீரிலும் படகில் காய்கறி, பழங்கள், பூ விற்பது போன்றவை (நேரில் அல்ல) பார்த்திருக்கிறேன். இவை புதிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களில் படகில் வியாபாரம் செய்வது இருக்கிறது - சில வெளிநாடுகள் உட்பட....

   இங்கேயும் வியாபாரம் ஜரூராய் நடந்தது...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   நீக்கு
 6. காந்தம் காசு சேர்க்கிறது.. :( எப்படி எல்லாம் கஷ்டம் இருக்கு வாழ்க்கையில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை முத்துலெட்சுமி. எதுவுமே சுலபமாய்க் கிடைப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க் நன்றி.

   நீக்கு
 7. தகவல்கள் ஆச்சரியம் தந்தது. மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 8. காசு சேர்க்க நல்ல வழி இருக்கு போல அங்கே

  பதிலளிநீக்கு
 9. எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார்கள்.:((
  எங்கு மக்கள் திரள்கிறார்களோ அங்கு ( தேங்காய் ) வியாபாரமும் களை கட்டுகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எங்கு மக்கள் திரள்கிறார்களோ அங்கு ( தேங்காய் ) வியாபாரமும் களை கட்டுகின்றது.//

   அதே தான்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 10. திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் அமைப்பு நல்லாத்தான் இருக்கு. இங்கே விரும்பினால் வேணிதானம் செய்யலாம்ன்னும் சொல்லுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 11. பூஜை வேண்டாம் என்றதும் திட்டுவதும், தேங்காய் வேண்டாம் என்றதும் திட்டுவதும்... நம் மக்கள் அடுத்தவர்கள் நம்பிக்கையை வைத்து நன்றாகவே பிழைக்கிறார்கள்! ம..ஹூம்!ஆனாலும் அவர்கள் பிழைப்பும் ஓடவேண்டுமே... காந்தம் கட்டிக் கஷ்டப்பட்டு இழுத்துக் காசு..... :))

  இங்கும் தமிழ்மணப் பட்டையைக் கா...ணோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   அவர்கள் பிழைப்பும் ஓட வேண்டுமே... சரி தான்.

   தமிழ்மணப் பட்டை - இன்று பட்டை அடித்து விட்டதோ!

   நீக்கு
 12. நன்கு விரிவாக சொல்கிறீர்கள். வித்தியாசமான அனுபவங்கள்! நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 13. Recycling ஜோரா நடக்குது; சாமான் வாங்கலை என்றல் அவன் அர்ச்சனை வேறா! படிக்க நன்றாக இருந்தது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி!

   நீக்கு
 14. சங்கமத்தில் அவர்கள் நம்மை முக்கி மேலே தூக்கி விடுவது ஏதோ மூட்டையை தூக்கிப் போடுவது போல இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகத் தான் சொன்னீர் புலவரே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 15. அருமையான பதிவு!!!!

  கண்டது கடுகளவு. காணாதது உலகளவுன்னு இருக்கு!

  எத்தனையெத்தனைசுவாரசியமான சமாச்சாரங்கள் நம்மைச்சுற்றியும்!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரசியமான விஷயங்களுக்குப் பஞ்சமா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 16. பெரிய கோவில்களுக்கு போனா பொதுவா மாலை எதுவும் வாங்கமாட்டேன். அது ஏற்கனவே சாத்தின நிர்மால்யமோ?ங்கர சந்தேகம் தான் காரணம் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.

   நீக்கு
 17. நான் இதேபோல திரிவேணி சங்கமத்துக்கு படகினில் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அன்று எடுத்து வந்த அந்த ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோ இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது. பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   நீக்கு
 18. நல்ல பதிவு அருமையான புகைப்படங்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....