புதன், 3 அக்டோபர், 2012

IRCTC ஒப்பந்த ஊழியருடன் ஒரு நேர்காணல்தில்லியிலிருந்து சென்னை வரும் துரந்தோ விரைவு வண்டி துக்ளாகாபாத் கூட தாண்டவில்லை – நின்றுவிட்டது. எல்லா IRCTC ஊழியர்களும் இறங்கி இஞ்சினை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். “என்ன ஆயிற்று?” என்று கேட்ட எனக்கு ”எருமை மாட்டிடுடுச்சு” என்று வந்தது பதில். சரி வழக்கம்போல் நேரம் தவறிப் போகப் போகிறது என்ற நினைவுடனே அமர்ந்திருந்தேன். இரண்டு மணி நேரம் தாமதமாகத் தான் சென்னை வந்தது.

இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வரும் எனத் தோன்றியபோது இருக்கையிலிருந்து எழுந்து ஒரு நடை போய்வந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது ”எருமை மாட்டிடுச்சு” என்று சொன்ன நபர் எனது இருக்கையில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் எழ முயல, “பரவாயில்ல, உட்காருங்க!” என்றபடியே நானும் அமர்ந்தேன்.

பட உதவி: கூகிள்


வேலையெல்லாம் முடித்துவிட்டு சென்னையில் இறங்கத் தயாராக இருந்த அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தேன். [அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது!]. 25 வயது இளைஞர். இனி நான் கேட்ட கேள்விகளுக்கு அவரது மொழியிலேயே பதில்கள் கீழே.

"அண்ணே, என் பேர் வேலு. நான் பன்னண்டாங்கிளாஸ் வரை படிச்சுருக்கேன். இந்த வேலைல சேர்ந்து மூணு வருஷமாச்சு. மாசத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். வேற எந்தவிதமான சலுகையும் கிடையாது – அதாவது மருத்துவ உதவி, GPF, பென்ஷன், ரயிலில் இலவச பயணம் போன்ற எதுவும் கிடையாது. வேலைக்குச் சேரும்போது சீக்கிரமே ரயில்வே துறையில் நிரந்தர ஊழியர் ஆக்குவோம்னு சொன்னாங்க. ஆனா, மூணு வருஷம் ஆயிடுச்சு, இன்னும் ஒண்ணும் செய்யல. வருடத்துக்கு ஒரு முறை சம்பளம் அதிகமாக்குவோம்ன்னு சொன்னதும் செய்யல!
 
நான் வேலையில் சேரும்போது என் கூட 30 பேர் சேர்ந்தாங்க – சிலர் பத்தாவது வரை படிச்சவங்க, சிலர் பட்டதாரிகள், சிலர் கேட்டரிங் கூட படிச்சு இருக்காங்க. எல்லோருக்கும் இதே 5000 ரூபாய் தான் சம்பளம்.
 
மாசத்துக்கு ஐயாயிரம் சம்பளம் - அதுக்கு மொத்தம் 4 ட்ரிப் போவோம். சென்னையில் காலை 06.10க்கு ஏறினா அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு தில்லி போய் சேர்வோம். அன்னிக்கே சாயங்காலம் 03.50-க்கு ஏறினா அடுத்த நாள் நைட் 08.05க்கு சென்னை வந்துடுவோம். வந்தா, இரண்டு நாள் ரெஸ்ட். இந்த மாதிரி 4 அப், 4 டௌன். ஒரு ட்ரிப் போலைன்னா 1250 ரூபாய் சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க!
 
தவிர ஒவ்வொரு பயணத்தின் போதும் பயணிகள் கொடுக்கும் டிப்ஸ் சுமார் 300 ரூபாய் கிடைக்கும். அதாவது மாசத்துக்கு 2400 ரூபாய் கிடைக்கும் – அது ரெண்டு பேருக்கு பங்கு! எனக்கு 1200 ரூபாய் தான் கிடைக்கும். சில சமயம் இன்னும் கம்மியா கிடைக்கும். இதை  வைத்துத் தான் மாதம் பூரா ஓட்ட வேண்டும்.
 
எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுண்ணே. மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்காங்க – இரண்டுமே ஆண் குழந்தைகள்.  அவங்க எல்லாம் ஆம்பூர் பக்கத்துல கிராமத்தில இருக்காங்கண்ணே. ஒரு தடவை போய்ட்டு வந்தா, அடுத்த வண்டி எது கிடைக்குதோ அது புடிச்சு ஆம்பூர் ஸ்டேஷன் போய் அங்க காலை வரை இருந்துட்டு, முதல் பஸ் புடிச்சு கிராமத்துக்குப் போவேன். மாசத்துல பாதி நாள் ட்ரையின்லயே போய்டும். வாழ்க்கை வண்டியும் ”தடக் தடக்”ன்னு தடங்கல்களோடு தான் ஓடிட்டு இருக்குண்ணே.”

இவருடன் பேசிக்கொண்டு இருந்ததில் இவர் போன்றவர்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் ஓரளவுக்குப் புரிந்தது. மனிதர்களின் வாழ்வில்தான் எத்தனை பிரச்சனைகள்? வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் எத்தனையோ பேர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

56 கருத்துகள்:

 1. பேட்டி சிறியதாக இருந்தாலும் மனதை தொட்டது. இவரை போன்று ஒப்பந்த ஊழியர்களின் நிலை இதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக். பெரும்பாலான ஒப்பந்த ஊழியர்களின் நிலை இது தான் என்பது உண்மை.....

   நீக்கு
 2. வருத்தமாக இருக்கிறது. இனி நயிலில் போனால் இவர்களுக்கு டிப்ஸ் அதிகமாக கொடுக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. ஒப்பந்த ஊழியரின் நிலை அருமையாக உங்கள் பாணியில் சொல்லப்பட்டுள்ளது! இவர் போன்றவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என மனதார பிரார்த்திப்போம்! பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில் நான்கைந்து பதிவுகள் தங்களின் கருத்துரைக்கு காத்திருக்கின்றன! நேரம் கிடைக்கையில் வருகை தரவும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதாரப் பிரார்த்திப்போம்... ம்ம்ம்ம்....

   தில்லி வந்த பிறகு வேலைகளில் மூழ்கிவிட்டேன். நாளை கண்டிப்பாக விட்டுப்போன உங்கள் பகிர்வுகளைப் படித்து கருத்திடுகிறேன் நண்பரே. தாமதத்திற்கு மன்னிக்கவும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வேலைக்குச் சேரும்போது சீக்கிரமே ரயில்வே துறையில் நிரந்தர ஊழியர் ஆக்குவோம்னு சொன்னாங்க.//
  இன்று நிரந்தர ஊழியர்களே எந்த நேரம் வீட்டுக்கு அனுப்பப் படுவோமொன்னு பயப்படுற காலத்தில
  contract ஊழியர்கள் தம்மை நிரந்தரமாக்குவார்கள் என்று நம்பி இருப்பது தான் காலத்தின் சோகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நிரந்தரமாக்குவார்கள் என்று நம்பி இருப்பது தான் காலத்தின் சோகம்//

   உண்மை. நம்பிக்கையில் தானே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருஃபீனா ராஜ்குமார்.

   நீக்கு
 6. இயந்திர வாழ்க்கை... பல பேர்களின் வாழ்க்கையும் இப்படித் தான்... பேட்டி நெகிழ வைத்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு குமுறல். வெளியே தெரிவதில்லை. சின்ன பேட்டி என்றாலும் அந்த ஊழியரின் வாழ்க்கை எப்படி என்பதை காட்டி நிற்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 8. வேலை இல்லாதவர்கள் கஷ்டம் ஒருவிதம்னா ஒப்பந்த ஊழியர்களின் நிலமை அதைவிட மோசமான்னா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....

   நீக்கு
 9. வருத்தமாக தான் உள்ளது ; இந்த சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்துவாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்துவாரோ?//

   கஷ்டம்தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   நீக்கு
 10. இதே போல ரயில்வே டிரைவர்கள் உத்தியோகமும். வருமானத்தில் பெரிய அளவு குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற நிலைமை தான். ஆனால் வேலை நேரம்.. கிட்ட தட்ட கொத்தடிமை தான்! ஒரு ட்ரிப் -க்கும் இன்னொரு ட்ரிப் -க்கும் பதினான்கு மணி நேர இடைவெளி. மூன்று ஜங்க்க்ஷங்களுக்கு இடையே தொடர்ந்து செல்லும் ஷெடியூல். அந்த பதினான்கு மணி நேர இடைவெளி இதில் எந்த ரயில் நிலையத்திலும் கிடைக்கலாம். நாம் இருக்கும் ஊரில் கிடைத்தால் வீட்டிற்கு வந்து விடலாம். இல்லையேல், ரயில்வே இவர்களுக்கு ஒதுக்கியிருக்கும், வசதி குறைந்த, ரெஸ்ட் ரூமில் இருக்கலாம். பிரம்மச்சாரி வாழ்கையில் பரவாயில்லை. (அதுவே கொடுமை). குடும்பஸ்தர் என்றால்.. போதும் போதும் என்று இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனால் வேலை நேரம்.. கிட்ட தட்ட கொத்தடிமை தான்! //

   உண்மை. எனது நண்பர் ஒருவரின் பெரிய அண்ணன் ரயில் இஞ்சின் ட்ரைவர் தான்... அவரது வாழ்விலும் கஷ்டங்கள் நிறைய....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu.

   நீக்கு
 11. பாவம்... அரசு வேலை ஒரு நாள் நிரந்தரமாகும் என்று நம்பி எத்தனை பேர் இவரைப் போல... மனம் வருந்துகிறது.

  பதிலளிநீக்கு
 12. பிரச்சினை இல்லாத மனிதர்கள் ஏது?.. ரயில் வண்டியுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் பாவம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ரயில் வண்டியுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் பாவம்தான்.//

   உண்மை.... அனைவருக்கும் பிரச்சனை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 13. நிறைய பேர் இப்படித்தான் என்னிக்காவது கண்டிப்பா நிரந்தரமாகிடும்னு நம்பி, ஒப்பந்த வேலைகளில் இருக்கிறார்கள். அப்புறம் திடீர்னு, அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுறாங்க. அரசே இப்படி நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவது அநியாயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா... அரசு இதில் நேரடியாக தலையிடுவதில்லை. சாப்பாடு தருவதற்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். அந்த நிறுவனங்கள் இப்படி ஏமாற்றுகின்றன... ஆனால் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுவது உண்மை....

   நீக்கு
 14. IRCTC-ன் உணவுத்தரம் பார்த்து டிப்ஸ் கொடுக்க மனம் வருவதில்லை. இனி இவர்களுக்காக கொடுக்க வேண்டும் போல.

  (//எருமை மாட்டிடுச்சு!// 2G கேஸ்லயா! Coalgate கேஸ்லயா!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //(//எருமை மாட்டிடுச்சு!// 2G கேஸ்லயா! Coalgate கேஸ்லயா!)//

   ஆஹா.... அது தெரிஞ்சா நிச்சயம் உங்களுக்கு சொல்லாமலா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]

   நீக்கு
 15. எப்படி தான் சமாளிக்க முடிகிறதோ இந்த பணத்தை வைத்து.உலகிலேயே மிக பெரிய நெட்வொர்க்கில் பணிபுரிபவருக்கு சம்பளம் மிகவும் கம்மி தான். நிரந்தமானால் தான் அவருக்கு நிம்மதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 16. நம்பிக்கைகள்தான் வாழ்க்கையை ஒட்டுகின்றன. பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 17. என்னவோ இவர்களைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை. உங்கள் ரயில் பயணங்கள் பலவித அனுபவத்தைக் கொடுக்கின்றன. அதை ப் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி. இவருக்கும் இவர் போன்றவர்களுக்கும் பணி நிரந்தரமாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   தில்லி வந்த பிறகு இன்று தான் வலையுலகில் நுழைய முடிந்தது.... தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பிறகு மின்னஞ்சல் செய்கிறேன்....

   நீக்கு
 18. நானும் இவர்கள் வாழ்கையை பகிரவேண்டும்னு நினைச்சிருந்தேன் நீங்க முந்திகிட்டீங்க, சோகமான வாழ்க்கை அவர்கள் வாழ்க்கை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நானும் இவர்கள் வாழ்கையை பகிரவேண்டும்னு நினைச்சிருந்தேன்//

   நீங்களும் எழுதுங்க மனோ.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   நீக்கு
 19. இவரைப்போல மிகவும் சிரமமான வாழ்க்கைப்பயணத்தை மேற்கொண்டு நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஒப்பந்தப் பணியாளர்களை பெரும்பாலும் எந்த நிறுவனமும் நிரந்தரம் செய்ய முன்வருவதே இல்லை.

  நல்லதொரு பதிவு, வெங்கட் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 20. Not everything bad here. IRCTC s diversifying fast. In catering too, they r. To explain, IRCTC s the favourite orgn for govt offices to outsource their canteens. Now, they r going to pvt organisations. PSBs have been asked to take IRCTC and recently ONGC have given their cotnracty to run their canteens to IRCTC.

  Apart from catering, IRCTC is foraying into other areas like tourism. The person shown here shd continue here for some time. When IRCTC takes ppl for ground job, for e.g. their station canteen, he shd switch over there thus, he may get to stay at a permanent place.

  I am sure Mr Velu has a bright future with IRCTC.

  Rs. 5000 s a small amount; but possible to live in a village in TN. Wives of such workers dont always depend upon their husbands income purely. They too work. So, there may be double income in Velu's family: if not, soon his wife will opt for some rurual job.

  பதிலளிநீக்கு
 21. முன்பெல்லாம் டில்லியிலிருந்து சென்னை போகும் போது டிப்ஸ் கேட்பவர்களை பார்த்தால் கோபம் கோபமாகத் தான் வரும். இதே போல் நானும் ஒரு ஊழியரிடம் பேசிய பின் மனம் மாறி விட்டது. மேலும் இவர்கள் கால் வீக்கத்தை பார்த்தால் மிகவும் வருத்தமாகி விடும். அதனால் இப்போதெல்லாம் டிப்ஸ் சட்டமெல்லாம் பேசாது கொடுத்து விடுகிறேன். பெரிய பெரிய டிப்ஸ் வாங்குபவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் நிலை பாவம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெரிய பெரிய டிப்ஸ் வாங்குபவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் நிலை பாவம் தான்.//

   உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

   நீக்கு
 22. நினைக்கும்போதெ கஷ்டமாகத்தான் இருக்கிறது வெங்கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 23. இதென்ன கொடுமை! மூன்றாண்டுகள் முடிந்தும் அப்படியே வைத்திருப்பது மிகப் பெரிய குற்றம் அரசு கவனிக்குமா!!!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 24. கஷ்டப்பட வைத்த பதிவு....ரயில் பயண உணவுகளின் தரத்தால் இவர்களுக்கு டிப்ஸ் கொடுக்க மனதில்லை என்றாலும் நம்மை போல ஒருவன் என்று கொடுத்து விடுவேன்...ஆனால் காபி டீ யில் அடிக்கும் நூதன கொள்ளையும் ஐஸ் க்ரீம் போன்றவற்றின் மீதான விலையை விட அதிக விலையில் விற்பதையும் சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.சம்பள அதிகரிப்பும் நிரந்திர பணியும் மட்டுமே இவற்றை நிறுத்த வைக்கும்.தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன?

  ஒரே ஒரு முறை ராஜதானியில் தவறுதலாக பயணம் செய்தேன்...டிப்ஸ் குறைவு என்று ஏற்க மறுத்தார்கள்....ஒரு ஆளுக்கு கிட்டத்தட்ட 50 ரூபாய் என்று நியாபகம்...அதற்க்கு கீழே கொடுத்தால் வாங்காமல் சற்று கீழ்த்தரமாக நம்மை பார்ப்பதையும் கண்டால் கடுப்பாக இருந்தது.

  ஒரு ஏர் ஹோஷ்டலுக்கு செய்யும் மரியாதையை அரசு இவர்களுக்கும் செய்தால் இந்த பிரச்சனைகளும் தீரும்.அவர்களுக்கும் வாழ்வு பிறக்கும்.நமது பயன்களும் சுகமாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சதீஷ் செல்லதுரை.

   நீக்கு
 25. மனதை நெகிழ வைத்தது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   நீக்கு
 26. ஒருமுறை சதாப்தி வண்டியில் செல்லும்போது, என் மகன்,'பாவம் இவர்கள், என்ன சம்பளம் இருக்கும்?' என்று கேட்டபோது, 'இவர்கள் மத்திய அரசு ஊழியர்கள், ஒன்றும் குறைவிருக்காது' என்று சொன்னேன்.
  எத்தனை பெரிய தப்பு! அவ்வளவு ஊழியரிடமும் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

  புரிய வைத்ததற்கு நன்றி திரு வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 27. நம்பிக்கையில் நாட்களைக் கடத்தும் ஊழியரின் நிலை மனம் கனக்கவைக்கிறது. ஒரு கீழ்மட்ட ஊழியரைப் பேட்டி எடுத்து அவர்களுடைய பரிதாப நிலையை சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் உங்கள் பணிக்குப் பாராட்டுகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 28. ஒப்பந்த ஊழியரின் நிலை மிகவும் கஷ்டமாய் உள்ளது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  விரைவில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வாழ்த்துக்கள்.
  உங்களின் பேட்டி நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....