இந்த வார செய்தி: இரண்டு ரூபாயில் Diabetis [நீரிழிவு] நோய்க்கான சோதனை செய்ய முடியும் என்று புதிய செய்தி வந்துள்ளது. BITS, Pilani விஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சோதனைக் கருவி மூலம் மிகக் குறைந்த அளவு ரத்தம் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முடியும் எனச் சொல்கிறார்கள். இந்தியாவில் உள்ள Indian Council of Medical Research இந்தக் கருவியை சோதனை செய்து முதல் கட்ட அனுமதி அளித்து இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக ஒரு மாதத்துக்கு பல இடங்களில் சோதனை செய்த பின் டிசம்பர் மாதத்திற்குள் முழுதாய்ச் செயல்படுத்த அனுமதி கிடைக்குமென எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவில் வளர்ந்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிச்சயம் இது நல்ல செய்தியாகவும் ஒரு பெரிய கண்டு பிடிப்பாகவும் இருக்கும். இப்போதே 61 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்பது வேதனையான உண்மை. இன்னும் ஒரு சந்தோஷமான செய்தி, இந்த கருவி மூலம் சோதனை செய்ய மிகக் குறைந்த ரத்தம் எடுத்தாலே போதுமாம். இந்தக் கருவியை உருவாக்கிய திரு சுமன் கபூர் [BITS, Pilani] அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!
இந்த வார முகப்புத்தக இற்றை:
அம்மா...
அடிமுடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச்சித்திரம்
அம்மா...
இந்த வார குறுஞ்செய்தி:
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக் கின்றன. ஒன்றுஞாபக மறதி. மற்ற இ ரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
ரசித்த புகைப்படம்:
படித்ததில் பிடித்தது:
நகர்வு:
ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்து வரும் பூவை.
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
--- கல்யாண்ஜி
படுத்தும் பிளாக்கர்: என்னமோ தெரியவில்லை இந்த Blogger ரொம்பத்தான் படுத்துகிறது. நான் வெளியிடும் சில பதிவுகள் என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் Update ஆவதில்லை. எப்போதோ வெளியிட்ட பதிவுகள் இப்போது வெளியிட்டது போல் காண்பிக்கிறது – ஆனால் சுட்டியை அழுத்தினால் அவர்களது டாஷ்போர்ட் தெரிகிறது. RSS Feed, புண்ணாக்கு, பொடிமட்டை என எனக்குத் தெரிந்த எல்லா டெக்னிகல் விஷயங்களும் பார்த்து விட்டேன். ஒண்ணும் புரிபடல! உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்....
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வ ரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இந்தியாவில் வளர்ந்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிச்சயம் இது நல்ல செய்தியாகவும் ஒரு பெரிய கண்டு பிடிப்பாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய ஃப்ரூட் சாலட் அருமை.. பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குகல்யாண்ஜி கவிதையும் படமும் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.
நீக்குநகர்வு, குறுஞ்செய்தி இரண்டும் அருமை! மொத்தத்தில் சாலட் மிகவும் பிடித்தது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குஅ. சக்கரை நோய் என்ற
பதிலளிநீக்குஸ்டிக்கர் ஒட்டிவிட்டால்
சகலமும் வாழ்க்கையில்
சரி பாதி ஆகிவிடுகிறது.
ஆ. அம்மா !
அது சொல்லல்ல. சுவை
அன்று என்னை ஈன்றெடுத்தது முதல்
இன்று என் நினைவு இருக்கும் தருணம் வரை
என்னுடனே என்னுள்ளே
மறைந்திருக்கும்
மானுடம். மனித நேயம்.
இ. . முதல் ஒன்று என்ன சொன்னீர்கள் ?
முற்றிலும் மறந்து போனதே !!
ஈ. ஆமாம். அந்த திருவானைக்காவல் அருகில்
இட்லி யைச் சுவைக்க நானும் என்ன படாது பட்டு விட்டேன்.
இனியும் அங்கே போய் பிரயோசனம் இல்லை.
இட்லி எனி வே ஆறிப்போய் இருக்கும் என விட்டுவிட்டேன்.
சுப்பு ரத்தினம்.
தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குஇட்லி பதிவு முன்பே [சென்ற மாதம் வெளியிட்டது].... இரண்டு நாட்கள் முன்பு திரும்பவும் வந்தது.... :(
நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குப்ளாகருக்கு மடல் அனுப்பிக் கேட்டுப் பாருங்களேன்.
பிளாக்கருக்கு மடல் அனுப்பிப் பார்க்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீங்க சொல்லி இருப்பது போல இப்பல்லாம் புது ப்ளாகர் டாஷ் போர்ட் ரொம்பதான் படுத்துது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குகல்யாண்ஜி கவிதை அருமை..பிடித்த புகைப்படம் என்னையும் கவர்ந்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.
நீக்குஇரண்டே ரூபாயில் சோதனை வசதி- நிச்சயமாக நல்ல செய்தி நீரிழிவு நோயாளிகளுக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.
நீக்குanaiththum good.dashboard therikirathaa?matravarkal dashboard / ungalodaiyaa?
பதிலளிநீக்குஎனக்கல்ல! என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் என் புதிய பதிவு என பழைய பதிவு வரும்.... அதை அவர்கள் கிளிக் செய்தால், புதிய விண்டோவில் அவர்களது டாஷ்போர்ட் திறக்கும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.
//ஆனால் சுட்டியை அழுத்தினால் அவர்களது டாஷ்போர்ட் தெரிகிறது. RSS Feed, புண்ணாக்கு, பொடிமட்டை என எனக்குத் தெரிந்த எல்லா டெக்னிகல் விஷயங்களும் பார்த்து விட்டேன். ஒண்ணும் புரிபடல! உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.... //
பதிலளிநீக்குஉங்களுக்கே இப்படி என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்? இங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேர மின்தடை போன்ற பல்வேறு தொல்லைகள், வெஙகட்ஜி.
நல்ல பதிவு. எல்லாமே ஜோர் ஜோர்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குமருந்துகள், சிகிச்சைகளைவிட மருத்துவ பரிசோதனைகளே ஆரம்பத்தில் பெருஞ்செலவு தந்துவிடுவதால், தொடர்ந்து சிகிச்சை எடுப்பதற்கு தடங்கல் வந்துவிடுகிறது - மனதளவிலும்கூட. பரிசோதனைகளின் விலை, மற்றும் நேரம் குறைந்து வருவது நல்ல விஷயம்.
பதிலளிநீக்குதர்பூசணி வேலைப்பாடு அழகுதான், ஆனாலும்... ரசிக்க முடியவில்லை இப்போதெல்லாம்.
//மருத்துவ பரிசோதனைகளே ஆரம்பத்தில் பெருஞ்செலவு தந்துவிடுவதால், தொடர்ந்து சிகிச்சை எடுப்பதற்கு தடங்கல் வந்துவிடுகிறது - மனதளவிலும்கூட. //
நீக்குஉண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுஸைனம்மா
ஏற்கனவே சில மருத்துவ மனைகளில் டிஜிடல் சர்க்கரை டெஸ்ட்கள் (ஒரு துளி ரத்தத்தை முனையில் வைத்தால் சர்க்கரையில் அளவைக் காட்டும்) உபயோகிக்கிறார்கள். உடனடியாக முடிவுகள் தெரிவதால் இது அதிகம் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது. [எங்கள் காலணியில் 2-3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடக்கும்; அதில் இதைத் தான் உபயோகிக்கிறார்கள்]
பதிலளிநீக்குநல்ல கலவை..
//புண்ணாக்கு, பொடிமட்டை//
புண்ணாக்கு சரி. பொடிமட்டை - இந்தப் பழக்கம் எப்போதிலிருந்து? :-)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு! [வேங்கட ஸ்ரீநிவாசன்]
நீக்குபிளாக்கர் மக்கர் பண்ணுதா? நீங்க க்ரோம்’ல்தானே உபயோகப்படுத்துறீங்க?
பதிலளிநீக்குநட்புடன் மணிகண்டவேல்
//பிளாக்கர் மக்கர் பண்ணுதா? நீங்க க்ரோம்’ல்தானே உபயோகப்படுத்துறீங்க?//
நீக்குஆமாம்.... க்ரோம் தான் பயன்படுத்துகிறேன்....
தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணிகண்டவேல்.
//படுத்தும் பிளாக்கர்// - Google Reader-க்கு மாறவும்...
பதிலளிநீக்குமுக்கியமான முதல் செய்திக்கு மிக்க நன்றி...
படிப்பதற்கு கூகிள் ரீடர் ஓகே.. ஆனால் பதிவிடுவதற்கு... ?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.
இனிப்பான செய்தி, இற்றை, குறுஞ்செய்தி, புகைப்படம், வண்ணதாசன் கவிதை, எல்லாமே அருமை. படுத்தும் பிளாக்கர்ப் பிரச்னைக்குத் தீர்வு தெரிந்தவுடன் எழுதுங்கள்!! :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....
நீக்குநீரழிவு பரம்பரையா வருவதை தடுக்க மருந்து வரும் வரை நம் பாடு திண்டாட்டம் தான்.
பதிலளிநீக்குஉண்மை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
//ஏற்கனவே சில மருத்துவ மனைகளில் டிஜிடல் சர்க்கரை டெஸ்ட்கள் (ஒரு துளி ரத்தத்தை முனையில் வைத்தால் சர்க்கரையில் அளவைக் காட்டும்) உபயோகிக்கிறார்கள். உடனடியாக முடிவுகள் தெரிவதால் இது அதிகம் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது.//
பதிலளிநீக்குஇது ரேண்டம் ஷுகர் (random sugar) அளவைத்தான் காட்டும். ரொம்பச் ச்சரியானது அல்ல. சரியான அளவு தெரிய, காலையில் கொலப்பட்டினியாகப் போய் ரத்தம் கொடுக்கணும். ;-))))))
தங்களது இரண்டாம் வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.
நீக்குநல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஜி!
நீக்குநீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட் ருசியாயிருக்கு.
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குகல்யாண்ஜி கவிதையும் குறுஞ்செய்தியும் மிக அருமை.எனது டேஷ் போர்டில் தாமதமாகத் தெரிந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குநீச்சல் தெரியாமல் கரையில் காத்திருக்கும் நமக்கு வண்ணதாசனின் எழுத்துக்கள் மிதந்து வரும் பூவாய்.
பதிலளிநீக்குகண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் தான் உங்க பதிவுகள்...
பிளாக்கர் பாடு பெரும்பாடுதான்.
நீரிழிவு எவ்வளவுக்கெவ்வளவு மக்கள் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது குறுகிய காலத்தில்...! புதுப் புது கண்டுபிடிப்புகள் எல்லாம் தற்காலிக ஆறுதலாய்...
அம்மா என்றாலே நெகிழ்வு தான் நம்முள். யார் என்ன சொன்னாலும் முதலிடம் அதற்கு.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்...
நீக்குஃப்ரூட் சாலட்-ன் எல்லாப் பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.
பணக்கார வியாதி என்கிற நிலையிலிருந்து
பதிலளிநீக்குஇந்தியர்களின் வியாதி எனச் சொல்லத் தக்க அளவு
மாறி வரும் நமக்கு நிச்சயம் தங்கள் செய்தி
இனிப்பான செய்தியே
கவிதைகள் இரண்டும் அருமை
பகிர்வுக்கு நன்றி
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குசில பதிவுகளாக தங்களது கருத்துரை இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... தங்களது வருகை மகிழ்ச்சி தந்தது.
tha.ma 9
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி.
நீக்குஅன்புள்ள வெங்கட்,
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html
நன்றி!
அடியேனுடைய வலைப்பூவினையும் நீங்கள் ஆசிரியராக இருக்கும் இவ்வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குநீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமானத் தகவல் நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குfruit salat mikka nanru.
பதிலளிநீக்குNalvaalththu.
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
நீக்குநல்ல விஷயம் ரத்தப் பரிசோதனை இரண்டு ரூபாயில் அமைவது.
பதிலளிநீக்குசிலசமயம் தான் டையபெடிஸ் பரம்பரையாக வருகிறது. என் பெற்றோருக்கு சர்க்கரை வியாதி கிடையாது. எனக்கு வந்தது.
அதனல் எல்லோருமே கவனத்தோடு இருப்பது நல்லது.
நல்ல ஃப்ரூட்சாலட் கொடுத்திருக்கிறீர்கள். காஃபி கொடுக்கும் மாடு ஸ்விஸ் மாடாகத் தான் இருக்கணும்:)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குஸ்விஸ் மாடு! :)))
கவிதையும் படங்களும் மிகவும் பிடித்தன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு