திங்கள், 1 அக்டோபர், 2012

மன்மந்திர் [G]காட்


திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி 6

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்:   பகுதி 1 பகுதி 2 பகுதி 3   பகுதி 4 பகுதி 5 
  
இளநீர் அருந்திக்கொண்டிருந்த போதே பக்கத்தில் ஒருவர் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  எனக்குக் கொடுத்த இளநீரில் சுத்தமாக ஒன்றுமே இல்லை!  அதனால் நான் இளநீர்க்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரும் “வேற இளநீர் வெட்டிக்கொடு” என்று சொன்னார்.  என்னடா சம்பந்தமே இல்லாது ஆஜர் ஆகிறாரே எனப் பார்த்தேன்.  கேட்கவும் கேட்டுவிட்டேன்.  ”உங்களுக்கு இளநீர் வேணுமா?”. அதற்கு அவர் “எனக்கு இளநீர் வேண்டாம்.  நான் படகோட்டி! எல்லா [G]காட்-ஐயும் சுற்றிக்காட்டுகிறேன்.  இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள்!” என்றார். 



”எங்களுக்குப் படகில் போக விருப்பமில்லை நண்பரே… குகனோடு ஐவரானோம்!” என்று சொல்லுவதற்கு ”நான் ராமனுமில்லை, நீர் குகனுமில்லை” என நினைத்தபடியே, நண்பர்களோடு நடக்க ஆரம்பித்தேன்.  நாங்கள் சென்றது “மன் மந்திர் [G]காட்”.  நிறைய சாதுக்கள் அங்கே கரையில் உட்கார்ந்திருந்தார்கள்.  எல்லா இடங்களிலும் சாதுக்களைப் பார்க்க முடிகிறது. 



”கங்கா மையா” நுப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தாள்.  சமீபத்தில் பெய்த மழை காரணமாக மண் நிறத்திலேயே தண்ணீர்.  நிறைய சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது.  ஆந்திராவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர்.  அவர்களை  ஏமாற்றிப்  பணம் பறித்துக் கொண்டிருந்தனர் படகோட்டிகள்.  சுற்றுலாவாக வரும் நபர்களிடமிருந்து, அதுவும் அந்த ஊர் பாஷை தெரியாதவர்களிடமிருந்து பணம் பறிப்பது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது! 



கரையோரத்திலேயே ஒரு கோவிலும் இருக்கிறது.  கங்கையில் குளித்து கோவிலில் ஆண்டவனை தரிசித்து வெளியே வந்து உட்கார்ந்து கங்கா மையாவின் ஆக்ரோஷமான ஓட்டத்தினை தரிசிக்கலாம். 



ஒரு வழியாக மன்மந்திர் [G]காட் சென்று ”கங்கா மையா”வினை தரிசித்த பிறகு எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு இரண்டு ரிக்‌ஷாக்களில் பயணித்தோம்.  வழியெங்கும் நிறைய கடைகள்.  புனித கங்கா நீரை சிறு செம்புக் குடங்களில் அடைத்து விற்கும் கடைகள், வளையல்கள் இத்யாதி விற்கும் கடைகள் என அடைந்து கிடக்கிறது - அவற்றில் மனிதர்களும்…







சாலையில் சில மனிதர்களின் புகைப்படங்கள் உங்களுக்காக மேலே இணைத்திருக்கிறேன்.  ரிக்‌ஷாவில் பயணித்து இரண்டு பேருக்கும் தலா இருபது ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால் எங்களுக்காக அப்துல் கலாம் காத்திருந்தார். 

அப்துல் கலாமுடன் பயணம் தொடர்ந்தது.  அடுத்த பகுதியில் பயணமும் தொடரும். அது வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. ரசித்தேன். படகுக்கு நான் 500 ரூபாய் கொடுத்ததாக ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா....

      படகிற்கு நிறையவே பேசவேண்டியிருக்கிறது! :(

      நீக்கு
  2. ரசனையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. படகோட்டியின் தாகம் தீர்க்க நினைத்த உங்களிடமே 2000 ரூபாய் கேட்ட அவரின் நிலையை என்னவென்று சொல்வது............
    நல்ல பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி A.R. ராஜகோபாலன் ஜி!

      நீக்கு
  4. கங்கைப்பயணமும் வர்ணனைகளும் அருமை.

    நான் 1983 இல் சென்று வந்தபோது, அந்த காசி விஸ்வநாதர் [பிரதான சிவன்] கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் உள்ள கடைகளில் நிறைய பொருட்கள் வாங்கிக்குவித்து வந்தேன்.

    அவற்றில் நிறைய பொம்மைகள் வாங்கினேன். அவை மாக்கல்லில் செய்து, மேலே ஷைனிங்காக ஒருவித பூச்சு பூசப்பட்டவை. மிகவும் அற்புதமான கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்டவை. சுவரில் மாட்டக்கூடிய வகையில் பின்புறம் ஒரு துவாரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

    என் வீட்டில் அவை பலநாட்கள் அலங்காரமாகக் காட்சியளித்தன. பல நண்பர்களுக்கும் + உறவினர்களுக்கும் அந்த பொம்மைகளில் இரண்டும், ஒவ்வொரு குட்டி கங்கைச்சொம்பும் அன்பளிப்பாக அளித்தேன்.

    அந்த கலையுணர்வுடன் கூடிய மாக்கல் பொம்மைகள் கீழே விழுந்தால் போச்சு ... உடனே உடைந்து விடும். மற்றபடி சுவரில் மாட்டியிருந்தால் வெகு அற்புதமாக, எண்ணெய் தடவிய நிஜமான சிலைகள் போல அழகாக ஜொலிக்கும் தன்மை உடையவை. அனைவரும் ரஸித்து மகிழ்ந்தவை.

    இனிமையான பசுமையான நினைவலைகளைத் தட்டி எழுப்பியது தங்களின் இந்தப்பதிவும் படங்களும். பாராட்டுக்கள்..... வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பயணப் பகிர்வு உங்கள் நினைவலைகளை மீட்டெடுத்தது குறித்து மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. கங்கைக்கரைகளில் ஹனுமான் காட், ஹரிச்சந்திரா காட், கேதார் காட் [காட் = கட்டம்] என்ற பெயர்களில் நிறைய படித்துறைகள் இருக்குமே!

    படகு சவாரி அருமையாகவே இருக்கும். பல அசுத்தங்களும், சரியாக எரிக்கப்படாத மனித உடல் பாகங்களும் கூட மிதந்து வரும்.

    இருப்பினும் பொங்கியோடும் கங்கை புனிதமானது தான்.

    அப்புறம் வெங்கட், இந்தக்கரைகளின் ஓரமாக சாலையோரம் அமர்ந்தபடி எல்லா சந்து பொந்துகளிலும், விடியற்காலம் முதல் ஜாங்கிரி பிழிந்து விற்பார்கள் தெரியுமோ!

    நம்மூர் ஜாங்கிரி போல சூடாக சுவையாக ஜீராப் பாகுடன் சிவந்த நிறத்தில் இல்லாமல், மஞ்சள் நிறத்தில் சற்றே பெரியதான சைஸில் இருக்கும். காலை எழுந்தவுடன் கங்கையில் போய் குளிப்பார்களோ இல்லையோ, இந்த ஜாங்கிரியை வாங்கி [பல் தேய்க்கும் பக்ஷணம் போல] கடித்து சுவைத்துக்கொண்டிருப்பார்கள் .... பலரும். இதைப் பார்த்த எனக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது எனக்கு.

    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாங்கிரி பற்றிய குறிப்பு பிந்தைய பகிர்வுகளில் வரும்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  6. படங்களுடன் அனுபவங்களைச்சொல்லும்போது நாங்களும் உங்க கூடவே வருவதுபோல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  7. சுற்றுலாவாக வரும் நபர்களிடமிருந்து, அதுவும் அந்த ஊர் பாஷை தெரியாதவர்களிடமிருந்து பணம் பறிப்பது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது! //

    இதை தடுக்கவே முடியாது.

    அவர்களுக்கு காலத்தில் பயிர் செய்வது போல! சுற்றுலா மாதங்கள்(சீஸன்) மட்டும் தான் சம்பாதிக்க முடியும் அகபட்டவரை லாபம் என்று பார்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. பயணக் கட்டுரையை இரசித்துப் படித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  9. இவ்வளவு அற்புதமான பக்திச் சுற்றுலாத்தலத்தை படகோட்டிகளும் அரைவேக்காட்டுப் பண்டிட்களும் கொள்ளையடித்து புனிதத்தையே கெடுக்கிறார்கள். அந்த ஊர் உள்ளாட்சியின் கையாலாகத்தனத்தையே இது காட்டுகிறது.

    //எனக்குக் கொடுத்த இளநீரில் சுத்தமாக ஒன்றுமே இல்லை!// உள்ளே இருந்த இளநீரைக் கூட அசுத்தப்படுத்தி விட்டார்களா!! (வேண்டாம். அடிக்காதீங்க. அழுதுருவேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

      அழக்கூடாது!... :))

      சரியா அண்ணாச்சி [ஈஸ்வரன்]

      நீக்கு
  10. காசிக்கு பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு உங்கள் கட்டுரை (எல்லா பகுதிகளும்) மிகச் சிறந்த வழிக்காட்டியாக இருக்கும். எளிய நடை வாசிப்பவர்களை மிகவும் கவருகிறது.

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  11. சுவாரசியம். தொடருங்கள். இளநீரே இல்லையா? இளநீரில் ருசியில்லையா? மக்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது நாடுமுழுதும் நடக்கிறது! ம்..ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்ததே ஒரு சொட்டு இளநீர்.... அதுவும் ருசியில்லாதது!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  13. // சுற்றுலாவாக வரும் நபர்களிடமிருந்து, அதுவும் அந்த ஊர் பாஷை தெரியாதவர்களிடமிருந்து பணம் பறிப்பது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது! //

    உண்மைதான். ( நம்ம ஊரில் நம்ம ஆட்களுக்கே நம்ம ஆட்கள் ஆட்டோவில் நன்றாக சுற்றிக் காட்டுவார்கள்.) படங்களோடு பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊரு ஆட்டோவாலாக்கள் இதில் PhD பட்டம் பெற்றவர்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. நம்மால் ரசிக்க மட்டும் முடியும் போல...

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. முதல் படத்தைப் பார்த்ததும் ஒரு retirement idea தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நல்ல ஆப்ஷன்! பக்கத்திலேயே ஒரு சில இடங்களைப் போட்டு வைங்க! நம்ம ஆளுங்க எல்லாம் உட்கார்ந்துடலாம் :)))

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

      நீக்கு
  17. பயணத்தில் இப்போதுதான் கலந்து கொள்ளக் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பயணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....