சிறுவயதில் மர இலைகளை புத்தகங்களில் வைத்து பதப்படுத்தி இருக்கிறீர்களா நீங்கள்!
தானாக வீழ்ந்த இலையை எடுத்து புத்தகத்தின் தாள்களுக்கிடையில் வைத்து தினம் தினம் எடுத்துப்
பார்த்து இருக்கிறேன் சிறு வயதில் – அது மென்மையாக ஆவதைப் பார்த்து, பொறுமையாய் அதனைத்
தொட்டு அதை உணர்ந்திருக்கிறேன்.
இன்னொன்றும்
தெரியும் – வாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் நான் மட்டுமல்ல நம்மில் பலர் “ஒரு
கட்டு” கட்டுவோம்! ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது
சாப்பாட்டு இலை அல்ல!
இன்று நாம்
பார்க்கப் போகும் புகைப்படங்கள் இலைகளோடு சம்பந்தப் பட்டவை.
சாதாரணமாகவே இலைகள் மென்மையானவை. அந்த
இலைகளில் சிலர் வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் சைனாவின்
Jiangsu மாநிலத்தில் 1950-ஆம் வருடம்
பிறந்த Huang Taisheng என்பவர் இலைகளில் உருவங்களைச்
செதுக்குகிறார்! மாதிரிக்கு ஒன்றைப்
பாருங்கள். பிறகு விவரங்களைச் சொல்கிறேன்.
சிறு வயதில் புழு ஆங்காங்கே கடித்த ஒரு இலையைப் பார்த்த
ஹுவாங் அவர்களுக்கு கடிபட்ட இலையில் சீனாவின் வரைபடம் போன்ற உருவம் தெரிந்தது. அங்கே
ஆரம்பித்தது அவரின் இலையில் உருவம் செதுக்கும் கலை. சாதாரணமாக கடினமான பொருட்களில் தான் உருவங்களைச்
செதுக்குவார்கள் – மென்மையான இலையில் செதுக்கினால்? தோல்வியில் முடிந்த பல
முயற்சிகளுக்குப் பிறகு அவருக்கு வெற்றி.
தாமஸ் ஆல்வா எடிசனின் புகழ் பெற்ற வாக்கியமான "If I find 10,000 ways something won't work, I haven't
failed. I am not discouraged, because every wrong attempt discarded is another
step forward" நினைவுக்கு வருகிறது.
உயிரியல்
வல்லுனர்களின் உதவியோடு ஒரு திரவத்தினைக் கண்டுபிடித்து அதில் இலைகளை பல மணி நேரம்
வைத்து, இலைகளைப் பதப்படுத்தி, அதன் பிறகு பல் வேறு செய்முறைகளைக் கடந்து இலைகளில்
செதுக்கப்பட்ட ஓவியங்கள் கெடாமல் பாதுகாக்க முடியுமாம். 1994-ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம்
பெற்றிருக்கிறார் இந்த சாதனை மனிதர். இவர்
செதுக்கிய இலைச் சிற்பங்கள் சைனாவின் பல அருங்காட்சியகங்களில் இருக்கிறதாம்.
என்ன நண்பர்களே இவரது
அற்புதமான ”இலையில் அற்புதக் கலை” ஓவியங்களைக் கண்டு
ரசித்தீர்களா? மின்னஞ்சலில்
இந்த புகைப்படங்களை அனுப்பிய தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றி.
மீண்டும் வேறு சில
புகைப்படங்களோடு உங்களை அடுத்த ஞாயிறு சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
arumaiyaana padangal sako...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குபிரமிக்க வைக்கும் கலை. எவ்வளவு பொறுமை வேண்டும், இல்லை? ரசிக்க வைத்தீர்கள்.
பதிலளிநீக்குபடங்கள் பார்த்த பிரமிப்பிலிருந்து இன்னமும் மீளவில்லை.
நீக்குஇதில் நான் சேர்த்த படங்கள் தவிர சில படங்கள் இருந்தன. எல்லாப் படமும் வேண்டுமென்றால் மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அற்புதமான படைப்பு காவியம், படங்கள் யாவும் மனதை கவர்ந்ததன...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.
நீக்குதங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
பதிலளிநீக்குதமிழனின் நன்றிகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சு. ராபின்சன்.
நீக்குநேபாளம் சென்றிருந்த போது அரசமர இலையைப் பதப்படுத்தி புத்தர் உருவங்களை பதித்தது புனிதப் பொருளாக வாங்கி வந்தோம்..
பதிலளிநீக்குபசுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
நீக்குபடங்கள்லாம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குகுழந்தைகள் படிக்கும் போது அர்பேரியம் ஃபைல் காக இப்படி இலகளை பதப்படுதி வைப்பார்கள் . படங்கள் எல்லாமே நல்லா இருக்கு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குதகவல் புதியது; படங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!
நீக்குஇலையில் செதுக்குவதா? கேட்கவே ஆச்சர்யமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஎன்ன ஒரு உன்னதமான படைப்புகள்!
அற்புதமான கலைஞனுக்கும், அவரது படைப்புகளுக்கும்
தலை வணங்குகிறேன்.
இந்த விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குSuper, Venkat. Thanks for sharing.It teaches all that perseverance is the "Tharaka Manthra" for success.
பதிலளிநீக்குV.K.N.
தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்திற்கும் நன்றி V.K.N. சித்தப்பா.
நீக்குஆஹா, இன்னிக்கு வடை எனக்கா? இலைச் சிற்பங்கள் நல்லா இருக்கே. நல்ல பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவடை! கொடுத்தா போச்சு - உங்க கமெண்ட் - 11 வது :)
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அற்புதம்! இதற்கு ஈடு இலை!
பதிலளிநீக்குஈடு இலை!
நீக்குரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே. பி. ஜனா சார்.
ஒவ்வொன்றும் மிகவும் வியப்பளிப்பதாகவே உள்ளன.
பதிலளிநீக்குமிகவும் ரஸித்தேன். எவ்வளவு பொறுமை வேண்டும்!
பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஅருமையானதொரு பகிர்வு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஇலையிலும் கலைவண்ணம் கண்டார்-னு பாடலாம் போலிருக்குது. மலைக்க வைக்கிற கலை!
பதிலளிநீக்குநிச்சயம் மலைக்க வைக்கும் கலை தான் இது...
நீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன்.
கண்கவர்ந்த பதிவு! வியக்கவைத்தது! பகிர்விற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குHuang Taisheng உண்மையிலேயே அற்புதமான கலைஞர்தான். ஒவ்வொரு படைப்புமே அற்புதமாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரைடேனியல்.
நீக்குஅற்புதம்!!!!!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குமிகவும் அற்புதமான கலையை பற்றிய விவரங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி. படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குஇதுதான், இலை மறைக் கலையா?
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றிகள்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]
நீக்குஇலையில் கலைவண்ணம் அற்புதமாக இருக்கின்றது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநேற்றுதான் ஒரு பத்திரிகையில் பார்த்தேன், ஒரு உணவுக் கம்பெனியின் பிராண்ட் லோகோவும் இதேபோல இலையில் செதுக்கபப்ட்ட மயில் படம்தான். அழகாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.
நீக்கு