எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 2, 2012

ஃப்ரூட் சாலட் – 19: – படிப்பதற்கு வயது தடையல்ல – தேவை ஆவிகள்.காம்இந்த வார செய்தி:  இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் முனைவர் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை சில நாட்கள் முன்னர் நடத்தியது. இத்தேர்வில் திரு பினய் குமார் என்பவரும் பங்கு கொண்டார்.  இதில் என்ன விசேஷம் என்று கேட்பவர்களுக்கு, அவரது வயது 77 என்பது தான்!  பீஹார் மாநில அரசில் பணிபுரிந்து 1994-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற திரு பினய் குமார் இந்த வயதிலும் படித்து பட்டங்கள் பெற விருப்பத்துடன் இருக்கிறார்.
இந்த வருட நுழைவுத் தேர்வில் பங்குபெற்றவர்களில் 10 பேர்கள் 55 – 65 வயது வரம்பில் இருந்தாலும், இவர் தான் எல்லோரையும் விட வயதானவர். தான் படிப்பது மட்டுமல்லாது தனது 4 மகன்கள், 2 மகள்கள் எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்துள்ள இவர், தற்போது இருப்பது பீஹார் மாநிலத்தில் என்றாலும் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காகவே புது தில்லி வந்திருக்கிறார்.

இவர் இப்படி படிப்பதற்குச் சொல்லும் காரணமும் நல்ல விஷயம் – படிப்பு முக்கியமானது என்பதை எல்லோருக்கும் உணர்த்தவே தான் முன்மாதிரியாக இருப்பதாகச் சொல்கிறார்.  படிப்பதற்கு வயது தடையல்ல என்று சொல்லும் இவர் பாராட்டுக்குரியவர்.    

இந்த வார முகப்புத்தக இற்றை:

தவறே செய்யாத மனிதன் இல்லை.  தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.


இந்த வார குறுஞ்செய்தி

LIFE IS BETTER WHEN YOU ARE HAPPY; BUT LIFE IS AT ITS BEST WHEN OTHER PEOPLE ARE HAPPY BECAUSE OF YOU!  BE INSPIRED,GIVE LOVE AND SHARE YOUR SMILE TO EVERYONE.

ரசித்த புகைப்படம்:  எந்த மீனுக்காக இந்தக் கொக்கு காத்திருக்கிறது?
இந்த வாரக் காணொளிஒரு சிலரிடம் இருக்கும் திறமைகள் வியப்பானது.  அப்படி திறமை பெற்ற ஒருவரைப் பற்றிய காணொளி தான் இன்றைக்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  எண்கள், எழுத்து என்று எதை எழுதினாலும், அதிலிருந்தே ஒரு பிள்ளையாரை வரைந்து விடுகிறார் நிதிஷ் பாரதி.  இக்காணொளியைப் பாருங்களேன்.
ராஜா காது கழுதைக் காது

சென்ற வாரம் ஒரு சங்கீத நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.  செவிக்குணவு படைத்தார் பாடகர்.  நிகழ்ச்சிக்குப் பிறகு வயிற்றுக்கும் உணவு கிடைத்தது! உணவு உண்டபிறகு, வெளியே நின்று வேறொரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அப்போது அங்கே நின்று கொண்டிருந்த வயதான பாட்டி “என்ன தான் பணம் நிறைய இருந்தாலும், மனசுல நிம்மதி இல்லைன்னா என்ன பயன் சொல்லு? என்று கேட்டுக் கொண்டிருந்தார் இன்னொரு பாட்டியிடம். எத்தனை உண்மையான வார்த்தை.   

படித்ததில் பிடித்தது:

மகனே நீ பிறந்த அன்று 
தோட்டத்தில் நான் நட்டு வைத்தேன் ஒரு தென்னங்கன்று 
என் உழைப்பின் வியர்வையில் நீ வளர்ந்தாய் 
நான் ஊற்றிய தண்ணீரில் தென்னை வளர்ந்தது 
இன்று எங்கோ இருந்து நீ  ஈட்டுகிற பொருள் 
உனக்கு இன்பம் தருகிறது 
அன்று நான் நட்டு வைத்த தென்னை 
இன்று எனக்கு சுவை நீரும் சுக நிழலும் தந்துகொண்டிருக்கிறது 
மகனே !ஒரு நாள் இமெயிலில் நீ மூழ்கிக் கிடக்கும் போது
என்னை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
அதனால் என்ன?
என் இறுதிப் பயணத்தில் நீ இல்லாமல் போனாலும் 
என் தென்னை ஓலை எனக்கு  கடைசி மஞ்சமாகும் 
மகனே! ஒரு வரம் தா...
விண்ணில் இருந்தும் உன்னோடு பேச நான் விரும்புகிறேன்...
உன் விஞ்ஞானிகளிடம் சொல்லி www.aavigal.com என்ற website ஒன்று கண்டுபிடித்தால் நல்லது!...

-          தமிழருவி மணியன்.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி
.

66 comments:

 1. //தவறே செய்யாத மனிதன் இல்லை. தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.//

  எண்கள், எழுத்து என்று எதை எழுதினாலும், அதிலிருந்தே ஒரு பிள்ளையாரை வரைந்து விடுகிறார் நிதிஷ் பாரதி திறமைகள் வியப்படைய வைத்தது...

  ரசிக்கவைத்த ஃப்ரூட் சாலட் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. அடடடா............. அந்த அக்‌ஷர் கணபதிகள் அபாரம்!!!!!

  நிதிஷுக்கு இனிய பாராட்டுகள்.

  தகவல் சொன்ன உங்களுக்கு இனிய நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. அவரது திறமையைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது இல்லையா.... அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. பெரியவர் மாதிரி ஒருவர் எங்க ஆபிசிலும் இருக்கார். அம்பது வயசுக்கு மேல் ஆகுது விடாமல் படிச்சிக்கிட்டே இருக்கார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 4. பெற்றோர் பற்றிய அருமையான கவிதை !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 5. உண்மையாகவே ஆவிகள்.காம் இருக்க வாய்ப்புண்டு.
  நுண்ணலைகள் வழியே நம்முடன் பேச தந்தை தாய் வந்தாலும் வியப்பில்லை. ''தென்னையைப் பெத்தா இளநீரு
  பிள்ளைப் பெத்தா கண்ணீரு'' பாட்டு நினைவுக்கு வருகிறது.
  எல்லாப் பிள்ளைகளும் அப்படியில்லை.

  ReplyDelete
  Replies
  1. //எல்லாப் பிள்ளைகளும் அப்படியில்லை.//

   சரிதான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 6. திரு. பினய் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  கவிதை சூப்பர்ப்...

  மற்ற அனைத்து ஃப்ரூட் சாலட் ரசிக்க வைத்தது...

  நன்றி...
  tm3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. மொத்த ஃப்ரூட் சாலட்டும் சூப்பராக இருந்தாலும், அக்‌ஷர் கணபதி தான் மேலே வைத்த செர்ரிப் பழம்போல படுசுவாரசியம்! :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன். மளமளவென்று வரைந்து தள்ளுகிறார் அவர். எனக்கும் முதல் முறை பார்த்ததலிருந்தே ஆச்சர்யம் தான்.

   Delete
 8. இந்த வயதிலும் படிக்கும் ஆர்வமுடன் மற்றவருக்கு முன்னுதாரணமாய் இருக்கும் பினய்குமார் பாராட்டுக்குரியவர். நீங்கள் ரசித்த புகைப்படத்தை நானும் மிக ரசித்தேன். இற்றையும் அருமை. அதுசரி... வயதான பாட்டி -அப்படின்னு எழுதியிருக்கீங்களே... வயதானா தானே அது பாட்டி? ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   வயதான பாட்டி - நான் சொல்ல நினைத்ததை துளசி டீச்சர் சொல்லிட்டாங்க! இங்கே 40 வய்து பாட்டியும், 43 வயது தாத்தாவும் இருக்காங்க! :)

   Delete
 9. அனைத்தும் அருமை....ரொம்ப பிடித்தது
  //தவறே செய்யாத மனிதன் இல்லை. தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.// இந்த வரிகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மலர்.

   Delete
 10. நல்ல சாலட்.

  ஆவிகள்.காம்-இன் ஐஎஸ்பி ஆவி மீடியேட்டர்களிடம் இருப்பதாகக் கேள்வி!!! :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சமுத்ரா.

   Delete
 12. திரு பினய் குமாருக்கு (என் அனுபவம் நினைவுக்கு வருது!) பாராட்டுக்கள்.

  புகைப்பட கொக்கு அருமை!

  அசரவைத்து விநாயாகரின் சித்திரங்கள்.

  இதேபோலவே ஒரு கவிதை முன்னமேயே படித்திருக்கிறேன்.
  இறந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி வராமலா போய்விடும் என்று முடியும்.

  இந்த வாரா ப்ரூட் சாலட் கடைசியில் மனதை கனக்க வைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 13. படிப்பதற்கும் கற்றுக்கொள்வதர்கும் வயது ஒரு தடையே இல்லைதான் அவருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 14. @பாலகணேஷ். அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.......

  20 வயசுலே கல்யாணம்பண்ணி மகள் பிறந்து அவளுக்கு 21 வயசுலே கல்யாணமாகி அடுத்த வருசம் பேரக்குழந்தையைப் பார்த்த 43 வயசு தோழி இருக்காங்க. அவுங்க வயதான பாட்டியா?

  ReplyDelete
  Replies
  1. அப்படி கேளுங்க டீச்சர்!

   கணேஷ் எங்க பதில காணோம்! :)

   Delete
  2. இதோ தோப்புக்கரணம் போட்டுடறேன் வெங்கட். ஹி... ஹி...

   Delete
  3. டீச்சர் கணக்கு சரியான்னு பார்த்துடுங்க! :)

   Delete
 15. - நல்ல முன்னுதாரணம் பினய் குமார்.
  - இற்றை அருமை. ரஜினி அல்லது விஜய் பன்ச் டயலாக் மாதிரி இருக்கிறது.
  - மனனம் செய்யப் படவேண்டிய குறுஞ்செய்தி!
  - புகைப்படத்துக்கு ஒரு 'அட!'
  - உண்மை. விலை கொடுத்து வாங்க முடியாதது நிம்மதி!
  - மனதைத் தொட்ட தமிழருவி மணியனின் வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   இற்றை - பஞ்ச் டயலாக் :)

   Delete
 16. //அதுசரி... வயதான பாட்டி -அப்படின்னு எழுதியிருக்கீங்களே... வயதானா தானே அது பாட்டி? ஹி... ஹி...//

  கணேஷ்....! :)))

  ReplyDelete
  Replies
  1. பாட்டியோட வயதான பாட்டி ஸ்ரீராம்.

   Delete
 17. ஆவிகள்.காம் இருக்கே, தெரியாதா? தினம் ராத்திரி பனிரெண்டு மணி முதல் ஒரு மணி வரை செயல்படும். ட்ரை பண்ணிப் பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... அந்த நேரத்திலே நானே அப்படித்தான் இருப்பேன்! :)

   Delete
 18. பினய் குமாரின் முனைப்பு பாராட்டுக்குரியது. எனினும் அவர் முன்மாதிரியாக இருப்பதாகச் சொல்வது இடிக்கிறது. தன்னிறைவுக்காகவே செயல்படுவதாகத் தோன்றுகிறது. பயனில்லாத படிப்பு காட்டில் விழுந்த மழை. இந்த நேரத்தையும் செலவையும் அவர் நாலு ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகப் படிப்பு சொல்லித் தருவதில் செலவழிக்கலாமோ?

  ReplyDelete
 19. திரு. பினய் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  வழக்கம் போல சாலட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 20. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி குட்டன்.

   Delete
 21. ஃப்ரூட் சால்ட் அருமை.

  படிப்பின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் அந்த பெரியவர் மிகவும் பாரட்டுக்குறியவர்.

  முகப்புத்தகம்,குறுஞ்செய்தி இரண்டுமே சிறப்பு.

  படம் காணொளி இரண்டுமே மிக அருமை.

  இன்றைய சாலட் நல்ல விஷயங்களின் தொகுப்பு. மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 22. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி தொழிற்களம் குழு.

   Delete
 23. நீங்கள் ரசித்த புகைப் படம் : கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற கேள்வியை நினைவூட்டியது. வழக்கம் போல ஃப்ரூட் சாலட் அருமை.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 24. அருமையான வீடியோ. இந்தியாவில் இரண்டு பேரை மட்டும்தான் எப்படியும் வரைய முடியும். ஒருவர் பிள்ளையார், மற்றவர் காந்தி.

  ReplyDelete
  Replies
  1. //இந்தியாவில் இரண்டு பேரை மட்டும்தான் எப்படியும் வரைய முடியும். ஒருவர் பிள்ளையார், மற்றவர் காந்தி//

   உண்மை. ஒரு கேள்விக்குறி போட்டு காந்தி வரைந்திருக்கிறேன் பள்ளிப் பருவத்தில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 25. முதியோர் என்பது
  முழுசா புளிச்சுப்போன
  முந்தா நாள் வடிச்ச சோறு

  புரிஞ்சுக்கோ
  ஒதுங்கிக்கோ.

  கிழவி சொல்லுது ...
  கரேக்டாதான் இருக்கும்போல.


  அது சரி. அது என்ன?
  ஆவிகள் காம்.

  தேடிப்பார்த்தேன். வலையில்
  ஓடி அலைந்தேன்.
  இங்ஙன ஒண்ணு கிடைக்குது
  எல்லோருக்கும் நல்லது.
  பாருங்க...
  www.deathclock.com
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. //முதியோர் என்பது
   முழுசா புளிச்சுப்போன
   முந்தா நாள் வடிச்ச சோறு//

   அட.....

   www.deathclock.com - இத்தளம் நீண்ட காலமாக இருக்கிறது. முதன் முதல் தெரிந்தபோது நானும் விவரங்கள் அளித்து அதில் வந்த தேதியைப் பார்த்திருக்கிறேன்! :)

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 26. இந்த தளம் ரொம்ப நாளுக்கு முன்னேயே பார்த்தேன். அது சொல்லுச்சு நான் 'போயிட்டேன்'ன்னு!!!!!

  ReplyDelete
  Replies
  1. நானும் ஏற்கனவே இறந்த மாதிரி தான் காண்பித்தது - ஆவி ரூபத்தில் பிளாக் எழுதறேன்னு சொல்லிடப் போறாங்க!” ன்னு தான் முன்னாடி எழுதல!

   Delete
 27. படிப்பதற்கும் சாதிப்பதற்கும் வயது ஒரு தடையே இல்லை என்று நிரூபித்திருக்கிறார் பினய் குமார்.. வினய் தான் வழுவி பினய் என்று அழைப்பது.... முகத்தில் என்ன ஒரு தீட்சண்யம்...

  கொக்கு போஸ்ல நிற்க எத்தனை பிராக்டீஸ் அவசியம்.. ஹப்ப்ப்ப்ப்ப்ப அச்சு அப்டியே நிக்கிறாங்க கொக்கு போலவே...

  நிதிஷ் பாரதியின் கைகளா அவை இல்லை தூரிகையா? என்ன ஒரு அசத்தலான என்ன எழுதினாலும் அதில் ஒரு அழகிய படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் ரொம்ப அழகு....

  மன அமைதி இல்லன்னா உடல்நலம் மோசமாகும்... ஆரோக்கியம் போனால் சிந்தை தடுமாறும்.. சிந்தை தடுமாறினால் தொழிலில் வீழ்ச்சி... தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் பணம் கரையும்.... பணம் கரைந்தால் மனுஷன் ஓட்டாண்டி..... நிம்மதி இருக்கும் மனிதன் வாழ்வை ரசித்து வாழ்கிறான்.. வெற்றியின் இலக்கை நிம்மதியாக தொடுகிறான்.... சத்தியமான வார்த்தை....

  பிள்ளைகளை பிரிந்திருக்கும் பெற்றோரின் நிலை எத்தனை பயங்கரமாக இருக்கிறது :( தமிழருவியின் எளிய வரிகளில்... தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு.... இறந்தப்பின்பாவது பிள்ளையுடன் உரையாட வெப்சைட் கண்டுப்பிடிக்கச்சொல்வது அதீத பாசத்தின் உச்சம்...

  ருசிக்கவும் ரசிக்கவும் வைத்த ஃப்ரூட் சாலட் வெங்கட்.....

  மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான, விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி......

   Delete
 28. புருட் சலட் நாளில் தான் வருகிறேன் போல உள்ளது.
  ஆயினும் சுவை தான் தொகுப்பு.
  இனிய நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 29. ஃப்ரூட் சாலட் பகிர்வு அனைத்துமே அருமை.கவிதை மனதை தொட்டது.

  ReplyDelete
 30. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர் அவர்களே!

  ReplyDelete
 31. அனைத்தும் அருமை.

  //படிப்பதற்கு வயது தடையல்ல என்று சொல்லும் இவர் பாராட்டுக்குரியவர். // ஆமாம். நிச்சயமாக.

  கொக்குபோல நிற்பவர் + நிதிஷ் பாரதியின் கைகள் ;)))))

  பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 32. கொக்கு வியக்க வைக்குது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 33. சாலட் நன்று. தமிழருவி மணியனின் கவிதை வாழ்க்கை நிதர்சனம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....