எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 11, 2012

குரங்கு அருவிபுத்தாண்டு – 2009 – சரி எங்கேயாவது போகலாமென நினைத்துச் சென்ற இடம் – கோவை – பொள்ளாச்சி அருகே இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் ஆழியார் அணை.  கல்லூரியில் படித்த போது சக மாணவ/மாணவியர்களோடு சென்ற இடம்.  இப்போது சென்றது மனைவி, மகள் மற்றும் இரண்டு நண்பர்களோடு. இன்றைய புகைப்படங்களாக நான் எடுத்த சில படங்களை உங்கள் ரசனைக்காய் பகிர்ந்திருக்கிறேன்.
 


மலைமேல் பிறந்து பாறைகள் மேல் தவழ்ந்து அருவியாக உருவெடுக்கும் இதன் அழகை என்ன சொல்ல!பாறைகளைத் தழுவும் தண்ணீர் – மற்றொரு நீர்க்கோலம்!


என்ன அழகு.  சற்றே நெருங்கி, பாறை மேல் குரங்கு போல் தாவ ஆசை. ஆனால்..  வாலைச் சுருட்டிக்கொண்டு zoom செய்து தண்ணீரை படம் பிடித்தேன்!


இது என்ன பனிக்கட்டியா எனக் கேட்டால், இல்லை என்பேன் – தண்ணீர் விழும் இடத்தினை படம்பிடித்தால் பனிக்கட்டி போல் தெரிகிறதே!


அதெல்லாம் சரி, குரங்கு நீர்வீழ்ச்சி எனத் தலைப்பில் சொல்லிவிட்டு குரங்கையே காண்பிக்கலையே என்று ஏக்கத்துடன் பார்ப்பவர்களுக்காகவே ஒரு குரங்கு படம்! நாங்கள் அருவியின் அழகில் நனைந்து திரும்பும்போது எங்கள் வண்டியின் மேல் அமர்ந்திருந்தார் திருவாளர் குரங்கார். 


அடுத்து செய்தது – Antena-வை பிடித்து கடித்து ருசி பார்த்தார்! அதானே இப்படி ஏதாவது விஷமம் செய்தால் தானே நமது பெருமையை உலகுக்குப் பறை சாற்ற முடியும்!  நீ கடிடா ராசா....

என்ன நண்பர்களே, குரங்கு அருவியை ரசித்தீர்களா?  அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. இருமுறை சென்றதுண்டு... படங்களும் கருத்துக்களும் அருமை... முடிவில் திருவாளர் குரங்கார் இப்படி செய்து விட்டாரே...

  நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. என்ன இருந்தாலும் குரங்கார் நமது மூதாதையர் அல்லவா!
  அருவி பெயரிலேயே ஒரு இன்பம் இருக்கத் தான் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 3. மலைமேல் பிறந்து பாறைகள் மேல் தவழ்ந்து அருவியாக உருவெடுக்கும் இதன் அழகை என்ன சொல்ல//

  ரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. இயற்கை அழகு கொஞ்சும் இரம்மியமான இடம். படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 5. அங்கே குளிசீன்களா இல்லியா

  ReplyDelete
  Replies
  1. கல்லூரி நண்பர்களோடு சென்ற போது குளித்தேன். இரண்டாம் முறை சென்ற போது குளிக்கவில்லை!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 6. அருமை அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு நன்றி.

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 7. குரங்கு நீர்வீழ்ச்சியா.. பெயரே நல்ல ஜாலியா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. பெயர் மட்டுமல்ல, இடமும் ஜாலியான இடம் தான்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹாரி.

   Delete
 8. குரங்கார் வேற ஒண்ணும் பண்ணலயே? நாங்க போனபோது காருக்குள் வந்து சாக்கலேட்டைத் தூக்கிக்கொண்டார்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க இரண்டு முறை சென்றோம். ஒவ்வொரு முறையும் குரங்கார் எதாவது விளையாட்டு காண்பிப்பார்... :)

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 9. கு'ரங்கார்' படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. இங்கே குளிப்பது அருமையான அனுபவம். அருவி விழும் இடத்தில் நீச்சல் தெரிந்தவர்கள் பயமில்லாமல் நீந்தலாம்.
  கோவையிலிருந்து இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து அனுபவித்தோம்.

  தீபாவளி நல்வாழ்த்துகள் வெங்கட்,.

  ReplyDelete
  Replies
  1. கல்லூரி பயணத்தின் போது இங்கே குளித்திருக்கிறேன்.... பொதுவாகவே அருவியில் குளிப்பது ஒரு பரவசமான அனுபவம்தான்....

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 11. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பட்டு ராஜ் அவர்களே.

   Delete
 12. படங்கள் அனைத்தும் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி........

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்ரி மலர்.

   Delete
 13. எங்க ஊரு போலாகுமா...? எங்கள் பகுதியில் சுற்றிப்பார்த்து வாழ்க்கையின் பாதியை அனுபவித்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரு, எங்க ஊரு கூட.. [என்னோட மனைவி ஊரு ஆச்சே... விட்டுக் கொடுக்க முடியுமா....]

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 14. படங்கள் எல்லாமே அருமை. மிக ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி கணேஷ்.

   Delete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 16. அருமையான படங்கள்!

  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 17. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 19. அழகான அருமையான பதிவு.
  குரங்கார் ;)))))
  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 20. rasanaiyaana aaal sir!
  neenga...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....