இந்த வார செய்தி:
Eshaan Shevate எனும் சிறுவனுக்கு
Type 1 நீரிழிவு நோய் இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்ட
போது அவனுக்கு வயது 14. நோய் வந்ததற்குக் கூட கவலைப்படவில்லை சிறுவன். ஆனால் அவனால்
ஒரு வருடத்திற்கு நீந்த முடியாது என்பதைத் தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.
ஐந்து வயது முதல் நீச்சல் கற்றுக்கொண்டு பல போட்டிகளில் வென்று
பதக்கங்கள் பெற்ற சிறுவன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது உடல் நிலை சரியில்லாது
போய்விட்டது. என்ன ஏது என புரியாது மருத்துவர்களைச் சந்தித்து, பரிசோதனைகளுக்குப் பிறகு,
சிறுவனுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட, சிறுவனுக்கும் பெற்றோர்களுக்கும்
பலத்த அதிர்ச்சி.
குழந்தையாக இருக்கும்போது வைரஸ்களால் கணையங்கள் தாக்கப்பட்டு
பல சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நாள் ஒன்றுக்கு
நான்கு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறதாம்.
Eshaan Shevate, ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு சிறிது சிறிதாக பயிற்சியில் ஈடுபட்டு,
இப்போது மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற ஆரம்பித்து இருக்கிறாராம்.
மன உறுதியோடு நீரிழிவு நோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வரும் இச்சிறுவனுக்கு Diabetes
Care and Research Foundation நிறுவனம் பரிசு அளிக்க இருக்கிறார்கள்.
அவரது விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும்
ஒரு பூங்கொத்து!
இந்த வார முகப்புத்தக இற்றை:
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால்
பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
இந்த வார குறுஞ்செய்தி:
நட்பு என்பது கைக்கும் கண்களுக்கும் உள்ள உறவைப் போல இருக்க வேண்டும் –
கையில் அடிபட்டால் கண்கள் அழும். கண்கள்
அழுதால் கைகள் துடைக்கும்!
ரசித்த புகைப்படம்: இவர்களின் அன்பை என்னவென்று சொல்ல!
ரசித்த பாடல்: ”சொல்லாயோ வாய்திறந்து” மோகமுள் படத்திலிருந்து. சிறப்பான
இப்பாடலை இந்த வாரத்தின் ரசித்த பாடலாய் பகிர்ந்திருக்கிறேன் நீங்களும் ரசிக்க!
ராஜா காது கழுதைக் காது
தில்லியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது
ரயிலில் ஒரு புதுமணத் தம்பதியும் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பயணத்தின் போது
ஒரு வயதான பெண்மணி “Brainvita” மற்றும் சில விளையாட்டுப் பொருட்கள் விற்றபடி வர, நேரத்தினைப்
போக்க, அந்தப் பெண் “Brainvita” வாங்கி விளையாட ஆரம்பித்தார். ”ஒரு கோலிகுண்டு மட்டுமே மீதமிருந்தால் வெற்றி பெற்றதாக ஆகும்” எனச் சொல்லி
விளையாடி, அப்படி வெற்றி பெற்றால், அப்பெண்ணின் கணவர் 100 ரூபாய் தரவேண்டும் என
அவர்களுக்குள் பந்தயம். பெண் விளையாடி
வெற்றி பெற, கணவரிடம் பணம் கேட்டபோது, “நீ போங்கு ஆட்டம் ஆடறே” என மறுக்க, அப்பெண்
சொன்னது – “நம்புப்பா! நான் சரியாதான் ஆடினேன். நம்பிக்கைதான்
Life-ஏ!”
படித்ததில் பிடித்தது:
ஒரு நண்பரின் வீட்டிற்குக் கி.வா.ஜ.
சென்றாராம். நண்பர் ஒரு அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில்
படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை. வாசல் பக்கத்தில் தான் வெய்யில்
அடித்துக் கொண்டிருந்தது.
நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து
வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப்
பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ., “இது என்ன புடவை தெரியுமா?” என்று
நண்பரைக் கேட்டார். “ஏன் சாதாரணப் புடவைதானே?” என்றார் நண்பர். ‘அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச்
சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!” என்றார் கி.வா.ஜ.
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.புது தில்லி.
ரயிலில் பந்தய விளையாட்டு ரசிக்க வைத்தது... நல்ல பதிவு... அருமை... நன்றி....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குEshaan Shevate மன உறுதிக்கு பாராட்டுக்கள்.கி.வ.ஜ வின் பஞ்ச் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குசரியான முகப்புத்தக இற்றை...
பதிலளிநீக்குநல்ல பாடல்....
மற்ற ஃப்ரூட் சாலட் தகவல்கள் அருமை...
tm3
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
(http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_16.html)
நன்றி...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவலைச்சரம் அறிமுகம் பற்றிய தகவலுக்கும் தான்!
Eshaan Shevate எனும் சிறுவனுக்கு விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு பூங்கொத்து!
பதிலளிநீக்குரசனையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குAll parts of salad are nice.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
நீக்கு
பதிலளிநீக்குகி.வா.ஜ. சொன்ன நகைச்சுவை மிகவும் சிறப்பு!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.
நீக்குஅந்த சிறுவனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் கி.வ. ஜ பற்றிய தகவல் முன்பு படிசிருகேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குசூப்பருங்க.. குறிப்பா சிறுவனோட செய்தி
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹாரி.
நீக்கு//நட்பு என்பது கைக்கும் கண்களுக்கும் உள்ள உறவைப் போல இருக்க வேண்டும் – கையில் அடிபட்டால் கண்கள் அழும். கண்கள் அழுதால் கைகள் துடைக்கும்!//
பதிலளிநீக்குஅருமை.
சிலேடைப்பேச்சில் மன்னரான கி.வா.ஜ. சொன்ன ’வாயில் புடவை’ யை மிகவும் ரஸித்தேன்.
பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஃப்ரூட் சாலட் சுவைத்தது..முகநூல் இடுகையும் உங்களைக் கவர்ந்த படமும் என்னையும் கவர்ந்தது..அந்தப் பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றுதான்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுமதி.
நீக்கு40,50களில் டி.பி மாதிரி இப்ப இந்த நீரழிவு யாருக்கு வேண்டுமானாலும் வந்து படுத்தி எடுக்கிறது. வராமல் தடுக்கும் மருத்துவம் வரும்.காத்திருப்போம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குஅருமையான ஃப்ரூட் சாலட்.தாத்தா பாட்டி படம் சூப்பர்.
பதிலளிநீக்குகிவாஜ ஐய்யாவின் நகைச்சுவையும் சிலேடையும் என்றுமே இனிக்கும். நீங்கள் இங்கே கொடுத்ததற்கு மிக நன்றி.
பாட்டு உருக்கம்.கண்ணும் கையுமாக இருக்கவேண்டும்.நட்பும் மணமும்.
நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குவலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குEshaan Shevate - க்கு பாராட்டுக்கள். எல்லா குழந்தை நீரிழிவு நோயாளிகளுக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.
ஜுவனைல் டயாபடிஸ் பற்றிய என் பதிவு:http://wp.me/p244Wx-2I
மிகவும் பிடித்த பாடல் மோகமுள் படத்தில் வருவது. நீண்ட நாளைக்குப் பிறகு பார்த்தது, கேட்டது சந்தோஷமாக இருந்தது.
கிவாஜ அவர்களின் நகைச்சுவை பிரமாதம்.
நல்லதொரு பழக்கலவைக்கு நன்றி!
தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குடயாபடிஸ் பற்றிய உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.
அன்புள்ள வெங்கட்,
பதிலளிநீக்குஎனது தாஜ்மஹால் பற்றிய பதிவில் திருப்பதி மலையில் இருக்கும் தெய்வம் முருகன் என்று சிலர் சொல்லுகிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள்.
இந்த இணைப்பை பாருங்கள்:http://wp.me/s2BbBR-98
ஆச்சர்யமான விஷயத்தை சொல்லுகிறது!
அன்புடன்,
ரஞ்ஜனி
படிக்கிறேன் மா....
நீக்குI had not heard the "Sollayo" song from Moga Mull before. Thanks for sharing it... Sounds great. Very different usage of the raga.
பதிலளிநீக்குThe best one for me was- "Vaayil Pudavai" ...
Thanks for the visit and the comment Matangi. Its a good song....
நீக்குநட்பின் வரிகள் சிறப்பு. வழக்கம் போலவே சாலட் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.
நீக்குஈஷானுக்கு ஒரு சப்பாஷ்.....
பதிலளிநீக்குஇற்றை - Factu factu factu factu.....!!! :))
குறுஞ்செய்தி - கண் கலங்குகிறது. கை தட்டுகிறது!
ரசித்த படம் - நெஞ்சைத் தொடுகிறது.
ரசித்த பாடல் - ஆஹா!
வெயிலில் புடைவை வாயில் புடைவை.... கி வா ஜ! ரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குருசியான ஃப்ரூட் சாலட்..
பதிலளிநீக்கு"வாயில் புடவை" ரசிச்சேன் :-)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஅந்த வயதான தம்பதியின் உண்மையான அன்பு அந்தப்புகைப்படத்தில் எத்தனை அழகாய் வெளிப்பட்டிருக்கிறது! புகைப்படம் பிரமாதம்! குறுஞ்செய்தியும் அருமை! Eshaan Shevateக்கு நானும் அளிக்கிறேன் ஒரு பூங்கொத்து!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குArumaiyna padhivu Nanbare, madhathaiyum sadhiyayum vaithu thatham kaazhpunarchigalai velipaduthum padhivugalukidaiyil ungalai ponravargaladhu padhivu manadhukku magizhchiyai tharugiradhu.thodarungal paarattukkal.
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமல்.
நீக்குபழக்கலவையை
பதிலளிநீக்குரசித்து ருசித்தேன் நண்பரே....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குnalla thakavalkal...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்கு