எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 28, 2012

ஷங்கர் விமான மண்டபம் மற்றும் குஸ்ரோ பாக்திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 12

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11

சென்ற பகுதியில் [B]படே ஹனுமான் கோவில் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது ஹனுமான் கோவில் அருகே இருக்கும் ஷங்கர் விமான மண்டபம் பற்றி.

காஞ்சிபுரம் நகரில் இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தினால் அலஹாபாத் நகரில் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஷங்கர் விமான மண்டபம். முற்றிலும் தென்னகத்தின் கட்டிடக்கலை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோவில் அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில், சங்கமத்திற்கு வெகு அருகிலேயே இருக்கிறது. மொத்தம் நான்கு மாடிகள் கொண்ட இக்கோவிலில் சிறப்பான சிற்பங்கள் இருக்கின்றன. 16 தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கோவிலின் மொத்த உயரம் 130 அடி.


கோவில் நுழைவாயில்

1970-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1986-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் வாயிலில் ஆதி சங்கரர் மற்றும் மந்தன் மிஷ்ரா [இவர்களுக்கிடையே நடந்த விவாதம் பிரபலமானது] அவர்களுடைய உருவச் சிலைகள் வைத்திருக்கிறார்கள்.  கோவிலின் உள்ளே மீமாம்ச தத்துவத்தினை பரப்பிய குமாரில பட்டர், ஜகத்குரு சங்கராச்சாரியர், காமாட்சி தேவி [51 சக்திபீடங்களுடன்], திருப்பதி பாலாஜி [108 விஷ்ணுவுடன்], யோகஷாஸ்திர சஹஸ்ரயோக லிங்கம் [108 லிங்கம்] ஆகிய சிலைகளும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

 கோவிலின் முழுத் தோற்றம் - பட உதவி கூகிள்.

அழகிய சிற்பங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை ஓவியங்களாக வரைந்து கோவிலின் சுவற்றில் வைத்திருக்கிறார்கள்.  காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும். சிறப்பான விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன. 

கோவில் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.  இங்கேயும் உள்ளே சென்று பார்வையிட ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். [நான் சென்ற நேரத்தில் பொது சேவை இல்லையோ!]

கோவிலின் வெளியே வரிசையாக நிறைய கடைகள். கடைகளில் விற்பது - வேறென்ன பெண்களுக்கான வளையல்கள், மோதிரங்கள், பொட்டு போன்றவை தான். மகளுக்கும் மனைவிக்கும் சில பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து காரில் கிளம்பினோம் அடுத்த இலக்கை நோக்கி. 

அடுத்ததாய் நாம் பார்க்கப்போவது ஒரு அழகிய பூங்கா பற்றி.  கி.பி. 1606 ஆண்டு கட்டப்பட்டது இப்பூங்கா.  பூங்காவின் பெயர் மற்றும் பூங்கா இருக்கும் இடத்தின் பெயரும் குஸ்ரோ பாக் [Khusrau Bagh]. இவ்வழகிய பூங்காவினுள் சுல்தான் பேகம், நிடார் பேகம் மற்றும் குஸ்ரோ மிஸ்ரா ஆகியோருடைய சமாதிகள் இருக்கின்றன.


குஸ்ரோ பாக் [Khusrau Bagh] - பட உதவி கூகிள்.

அலஹாபாத் ரயில் நிலையத்தின் வெகு அருகிலேயே அமைந்திருக்கும் இந்தப் பூங்காவினுள் அமைந்திருக்கும் கட்டிடம் முகலாயக் கட்டிடக்கலையின் சிறப்பினை இன்றளவும் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.  முகலாய மன்னர் ஜஹாங்கீர் அவர்களின் முதல் மனைவி ஷா பேகம் அவர்கள் 1604-ஆம் ஆண்டு இறக்க, அவருக்கு ஒரு சமாதி எழுப்பி, அதனைச் சுற்றி ஒரு பெரிய பூங்காவும், பூங்காவினைச் சுற்றி பெரிய மதில் சுவரும் எழுப்பியுள்ளார்கள். 

ஜஹாங்கீரின் மூத்த மகன் குஸ்ரோ, தனது தந்தைக்கு எதிராக குரல் கொடுத்த போது இங்கே தான் சிறை வைக்கப்பட்டார்.  தப்பிக்க முயற்சி செய்த போது அவரை கடுமையாகத் தண்டித்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டதாகவும், 1622-ஆம் வருடம் கொல்லப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.  அதன் பிறகு அவருக்கும் இங்கே சமாதி எழுப்பியிருக்கிறார்கள். 

இந்த இரண்டு சமாதிகளுக்கு இடையே இருக்கும் இடம் தான் மிகவும் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டது. 1624-25-ல் கட்டப்பட்ட இது குஸ்ரோவின் சகோதரி சுல்தான் நிடார் பேகம் சொன்னபடியே அவருக்காக வடிவமைக்கப்பட்டது என அங்குள்ள பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

1857-ஆம் ஆண்டின் சிப்பாய்க் கலகத்தின் போது மௌல்வி லியாகத் அலி அவர்களுடைய தலைமையில் போரிட்ட சிப்பாய்களின் தலைமையகமாக இருந்தது இந்த குஸ்ரோ பாக் தான். அவர்கள் கைப்பற்றிய இரண்டே வாரத்தில் ஆங்கிலேயப் படைகளால் மீட்கப்பட்டதாம் இந்த இடம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இடத்தினையும் பார்த்து ரசித்தோம்.  அடுத்தது என்ன என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.  சீக்கிரமே மேலும் சில சிறப்பான இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் வரும் காசி – அலஹாபாத் பயணப் பதிவுகளில்.

அடுத்த வாரம் இப்பயணத் தொடரின் அடுத்த பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

  ReplyDelete
 2. உடன் பயணித்த திருப்தி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் நன்றி ரமணி ஜி!

   Delete
 4. பார்த்ததை பார்க்கும் மாதிரியே விவரிக்கும் விதம் சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுமதி.

   Delete
 5. சரித்திரத் தகவல்களுடன் பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. படித்தேன் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. அறியாத தகவல்களை அறிந்தேன்...

  நன்றி...
  tm8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. என் அலகாபாத் பயண நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்.நல்ல பகிர்வு வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 9. Replies
  1. தமிழ்மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி குட்டன்.

   Delete
 10. பயனுள்ள பயண அனுபவங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 11. படங்களுடன் சரித்திரமும் சேர்வது அருமை. நீங்கள் பகிர்வதால்தான் இவ்வளவு இடங்கள் இருப்பது தெரிகிறது. ரசிக்க முடிகிறது. நன்றி மா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 12. முகலாயக் கட்டிடக்கலையின் சிறப்பினை இன்றளவும் பறைசாற்றிக்கொண்டு இருக்கும் வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களின் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   Delete
 14. அலஹாபாத்தை பற்றி நேர்முக கொடுத்து கலக்கி விடீர் ஐயா.
  மிக அருமையா. மேலும் மேலும் கலகுப்பா !!!!!
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. nallla suththunga sako...


  engalukkum azhakaa sollunga...


  mikka nantri!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 16. விடுபட்ட இப்பயணத்தில் இன்று சேர்ந்துகொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 17. நல்லதொரு அருமையான பகிர்வு. பாராட்டுக்களும் நன்றிகளும், வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete
 18. இந்தப் பதிவைப் படிச்ச நினைப்பு இருக்கு. பின்னூட்டம் போடலை போல! :)))) இன்னிக்குத் திரும்ப வந்து படிச்சேன். அப்போத் தான் புரிஞ்சது ஏற்கெனவே படிச்சாச்சுனு. :))))வல்லியோட பதிவிலே இருந்து வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒரு முறை வந்து படித்ததற்கு நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....