திங்கள், 5 நவம்பர், 2012

மாயா – சுஜாதா
கருங்கல் சுவர் ஆள் உயரம் இருந்தது. வாசலில் காவற்காரன் என் காரை நிறுத்தினான்.  என் பெயர் கேட்டான். கணேஷ்’ என்றேன். உடனே கதவைத் திறந்து என்னை அனுமதித்தான். காத்திருக்கிறார்கள் எனக்காக. திறந்த கதவின் கம்பிகளுக்கு நடுவில் ஆங்கில கே. எம். எழுத்துக்கள் சமீபத்திய ப்ராஸ்ஸோவில் பளபளத்தன. கிருஷ்ணா மிஷன் உலக அமைதி’ என்று அதன் கீழ் எழுதியிருந்த்து. உள்ளே அந்தக் கட்டடத்தை அடையும் பாதை கவிதையுடன் நெளிந்தது. இருபுறமும் வரிசையாக குல்மோஹர், டாலியா, ஸெஸ்பானியா பூக்கள், கொடிகள், வர்ணங்கள், பச்சைப் புல் சதுர கஜங்கள்.

வெண்மையான கட்டடம். தந்தம் போல் மெலிதான, மஞ்சள் கலந்த, பளபளக்கும் வெண்மை. வெள்ளையடித்தவனை விசாரிக்க வேண்டும். கில்லாடி வேலை வாத்யாரே!’.

போர்ட்டிகோவில் என் கறுப்பு கார் உறுத்தி இருக்கும். எனக்காக அந்த மாது காத்திருந்தாள். நீங்கள் பத்து நிமிடம் லேட்’ என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையில் மறைத்தேன். பின் குறிப்பாக, ‘ஸாரி’ என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்து எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள்தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.

இப்படித்தான் விறுவிறுப்பாக ஆரம்பித்தது வாத்யாரின்’ மாயா என்ற சிறுகதை. நாகப்பட்டினம் குமரிப் பதிப்பகம்’ வெளியிட்ட மாயா’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஐந்தாம் பதிப்பு [1994] அப்போதைய விலை ரூபாய் 19! [பத்தொன்பது ரூபாய் மட்டுமே!]. மாயா கதைச் சுருக்கத்தினைப் பார்ப்போமா?

கிருஷ்ணா மிஷன் என்பது சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா என்கிற சிக்கலான பெயரால், ‘சுவாமி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகானின் தலைமையில் நடத்தப்படும், பணம் படைத்த ஒரு இயக்கம்.  அவர்கள் நடத்தும் கல்லூரிகள், ஆராய்ச்சிக் கழகங்கள், அனாதை இல்லங்கள், புனர் வாழ்வு இல்லங்கள் ஆகியவை கணக்கிலடங்கா.

சுவாமி மீதும், அந்த மிஷன் மீதும் மாயா எனும் பெண் தந்த புகார் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? இதையே தான் கணேஷும் கேட்டார். 

சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி என்னை மிஷனில் நடக்கும் ஹேலஜ்ர பூஜையில் கன்னிகைப் பெண்ணாக அழைத்தார்கள்.  நான் அங்கே சென்ற போது என்னை சுவாமி பலாத்காரம் செய்து விட்டார். [இங்கே தந்திருப்பது சுருக்கம் மட்டுமே! முழுப் புகார் படிக்க மாயா புத்தகத்தினைப் படிக்கலாமே!]

கணேஷ் இந்தப் புகாரினைப் படித்து சில விசாரணைகள் செய்து புகார் கொடுத்த மாயாவினையும், அவளது அண்ணனையும் சந்திக்கிறார்.  அங்கேயும் சில விவரங்கள் சேகரித்துக் கொண்டு அலுவலகத்திற்குத் திரும்பி வசந்திடம் இந்த கேஸ் பற்றிய விவரங்களைச் சொல்கிறார். 

வாத்தியாரின் கணேஷ் வசந்த் வந்துவிட்டால் கதையில் விறுவிறுப்புக்கா பஞ்சம். காட்சிகள் விறுவிறுப்பாக மாறுகின்றன.  விசாரணை, மாயா, மிஷன், கோர்ட் என்று படிப்படியாக மாறும் காட்சியில் கணேஷ்-ன் திறமையான வாதத்தினால் சுவாமி மீது சுமத்தப்பட்ட பழி பொய் என்று நிரூபிக்கப்படுகிறது.  இதோடு நிறுத்தி இருந்தால் அது சாதாரணமான கதை.  இதற்குப் பின் ஒரு ட்விஸ்ட் வைத்தால் தானே அது வாத்யாரின் கதையாக முடியும்.

வெற்றிக்குப் பிறகு மிஷன் சென்று சுவாமி தன் கையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொடுத்த ஒரு சிறிய தங்க கிருஷ்ணன் விக்ரஹத்தினை வாங்கிக் கொண்டு காரில் திரும்பும்போது கணேஷ் தன்னுடைய கைப்பெட்டியை மிஷன் அறையிலேயே விட்டு வந்தது தெரிகிறது. மீண்டும் மிஷனிற்குச் சென்று அதை எடுக்கும் போது... 

என்ன நடந்தது என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! :) ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த கதையில் வாத்தியாரின் முத்திரைகள் ஏராளம்.

சுவாரசியமான இந்த சிறுகதைத் தொகுப்பில் இன்னும் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை அஸ்திவாரம், குணம், மந்திரவாதி மற்றும் பொய்கள்.  உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள ஆனால் பைண்ட் செய்து வைக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின் கடைசி பக்கங்களை யாரோ ஸ்வாஹா செய்து விட்டார்கள்!

மீண்டும் வேறொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

பின் குறிப்பு:  பதிவிற்கான படம் நண்பர் திரு பாலஹனுமான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.  அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

42 கருத்துகள்:

 1. சுஜாதா கதைகள் என்றால் சுவாரஸ்யத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன? இன்று டைம் கிடைக்கும்போது மறுபடி படிச்சுடணும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுபடியும் படித்துச் சுவையுங்க....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பல வருடங்களுக்கு முன் படித்தது நினைவில்லை மறுபடி படிக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் படிக்கலாமே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 3. என்ன கணேஷ் வசந்த் இருக்காங்களா, என் அடுத்த டார்கெட் மாயா தான்

  பதிலளிநீக்கு
 4. சுஜாதாவின் தீர்க்க தரிசனம் வியப்புக்குரியதே. சுவாமிகள் இப்படியும் மாறலாம் என்ற முன்னெச்சரிக்கை?! இலாவகமாக 'மாயா'வைத் தேடும்படி செய்த உங்க திறன் பதிவில் வெளிப்படுகிறது சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   உங்களது லோகேஷை தெரியுமா பகிர்வு நேற்றைய தினமணிக்கதிரில் வெளிவந்துள்ளது. பாராட்டுகள்....

   நீக்கு
 5. கணேஷ் - வசந்த் என் ஃபேவரைட் டிடெக்டிவ் ஆட்கள், சுஜாதாவின் அறிமுகம் காலத்தால் அழியாது சுவாரஸ்யமும்...!

  பதிலளிநீக்கு
 6. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தமிழ் களஞ்சியம்.

   நீக்கு
 7. எந்த இடத்திலும் தடங்கல் ஏற்படுத்தாது வழுக்கிக் கொண்டு செல்லும் மொழிநடை சுஜாதாவினுடையது, குறுநாவல் என்ற வகையில் அடங்கும மாயாவிலும் அவரின் தனி முத்திரை மிளிரும். ஸ்ரீராம் சொன்னது சரிதான். மீண்டும் படிக்கும் ஆவல் இதைப் படித்ததும் எழுகிறது வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 8. அருமையான பகிர்வுகள்.. கடைச்சிப்பக்கத்தைக் காணோம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 9. ரொம்ப அருமை. சுஜாதாவை நீனைவுட்டியது and his Ganesh and Vasanth . Once he has told in an interview that he had lawyer friends like Ganesh and Vasanth, who had an immense knowledge about Law.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜு!

   நீக்கு
 10. சுஜாதாவின் எழுத்துகளின் சுவாரஸ்யத்துக்குக் கேக்கணுமா என்ன?. அதுவும் கணேஷ் வசந்த் இருந்தா இன்னும் ஜோர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 11. வாத்யாரின் "என் இனிய எந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" சமீபத்தில் தான் படித்து முடித்திருந்தேன்...மாயா ஆவல் காட்டுகிறாள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்யாரின் கதைகள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்! நானே என் இனிய இயந்திரா படிக்க நினைத்திருக்கிறேன்.... மீண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   நீக்கு
 12. //உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் ‘பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள – //

  ’பொய்கள்’ கதையின் முடிவு ’உண்மை’யாகத்தான் இருக்கும்.

  முடிவு தெரியாமலேயே தாங்கள் தவித்ததும் ’உண்மை’யே.

  நல்ல பகிர்வு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   நீக்கு
 13. பல வருடங்களுக்கு முன் படித்தது...Worth rereading...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 14. அன்புள்ள வெங்கட்,

  பொய்கள் கதையின் ஆரம்ப வரிகளை / அல்லது கதைச் சுருக்கத்தைக் கூற முடியுமா?

  என்னுடைய கலெக்க்ஷனில் உள்ளதா என்று பார்க்கிறேன் :-)

  த.ம. 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”ராமண்ணா கோட்டை அணிந்து கொண்டு குல்லாயைத் தேடினார். மணி மூன்றரை ஆகப்போகிறது. அவரிடம் அந்த ஆவேசம் புறப்பட்டு விட்டது.“ இப்படித்தான் ஆரம்பிக்கிறது அக்கதை.

   அலுவலத்திலிருந்து பணம் எடுத்து குதிரை ரேஸ் சென்று அங்கே தோற்று, ஒரு பொய்யை மறைக்க பொய்களாகச் சொல்வது பற்றிய கதை. கடைசி பக்கங்கள் இல்லாத போது உங்களைத் தான் கேட்க நினைத்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   நீக்கு
 15. சுஜாதாவின் கற்பனைக்கு ஈடு இணை இல்லை.மாயா படித்துவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 16. கதையைப் படித்து முடிவு தெரியாத கதை சற்று கஷ்டமானது தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 17. Have to read again .மன்னிக்கணும். மாயா அட்டையில் வேறு படம் இருந்ததாக நினைவு.
  நன்றி வெங்கட்.கணேஷ் வசந்த் பேரைக் கேட்டாலே சில்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குக் கிடைத்த புத்தகத்தில் முன் அட்டையே இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 18. இந்தக்கதையை வாசித்ததாய் ஞாபகம் இல்லை தலைவரே..நூலகத்தில் முயற்சிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுமதி!

   நீக்கு
 19. கடையில் புத்தகம் கிடைக்கிறதா கேட்டுப் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி காமாட்சி ஜி!

   நீக்கு
 20. சுஜாதா அவர்களின் கதைகள் எல்லாமே சுவாரசியம்தான்.அதிலும் கணேஷ் வசந்த் வந்துவிட்டால் அவ்வலவுதான் புத்தகத்தை கீழே வைப்பதற்கே மனம் வராது.படித்து முடித்தால்தான் நிம்மதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....