எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 27, 2012

விளம்பரங்கள் அன்றும் இன்றும்நிறைய ஊடகங்கள் இருக்கும் நிலையில்  சாதாரண பற்பொடியிலிருந்து பளபளப்பான வைரக்கற்கள் பதித்த நகைகள் வரை  எந்த ஒரு பொருளையும் சுலபமாக மக்களைச் சென்றடையும்படி விளம்பரம் செய்வதில்  தொலைக்காட்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. சமீபத்தில் வந்த ICICI Bank இன் விளம்பரம் பார்த்தீர்களா? இரு சிறுமியர் ஒரு கடைக்குச் சென்று மிட்டாய் வாங்குவது போல் காண்பித்து நமது சிறு வயது நினைவுகளைத் தூண்டி விடுவார்கள். ஒரு நிமிடம் இருபது விநாடிகள் ஓடும் இந்த விளம்பரம், 10 பைசா ஐஸ் குச்சிக்காக, கையில் டம்ளரோடு தெருவில், அக்காவுடன் ஓடியதை  நினைவுக்கு வரவழைத்தது.  ஐந்து பைசாவிலும், 10 பைசாவிலும் பெற்ற கமர்கட் தேன் மிட்டாய் புளிப்பு மிட்டாய் சந்தோஷங்கள் அப்படியே நினைவில் வந்து நிறுத்திய விளம்பரம்.  இது வரை பார்க்காவிட்டால் இங்கே  பாருங்க.
.
மற்றுமொரு விளம்பரம் இதுவும் குழந்தைகளை வைத்து எடுத்த விளம்பரம் தான்.  ப்ரிட்டானியா குட் டே பிஸ்கெட்டுகளுக்காக எடுத்த இந்தக் காணொளியைப் பாருங்கள்.  குழந்தைகள் முகத்தில் ஏமாற்றமும், பிஸ்கெட் கிடைத்த பின் உள்ள குதூகலத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
!


சினிமாவிற்கு வரும் விளம்பரங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. புதிதாய் ஒரு படம் பூஜை போட்டாலே, தமிழில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் போட்டி போட்டுக் கொண்டு அப்படத்தின் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விடுகின்றன.  நாளிதழ்களும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், செய்திகள், கிசுகிசுக்கள் என்று வெளியிட்டு அப்படத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். 

ஆனால், இந்நாள் போல இத்தனை ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் விளம்பரங்கள் செய்ய வானொலியோ, வார இதழ்களோ, சிறப்பு மலர்களோ பயன்பட்டன.  நண்பர் பால கணேஷ் தன்னுடைய மேய்ச்சல் மைதானம் வலைப்பூவில் ர்ர்ர்ர்ரீவைண்ட் சினிமா! என்ற பதிவில் 1948 - ஆம் வருடத்திய பேசும்படம் இதழிலிருந்து, அலிபாபாவும் 40 திருடர்களும், வேதாள உலகம், பக்தஜனா, ஜீவஜோதி போன்ற படங்களுக்கு வெளியான விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.  

அதே போல 1949 ஆம் வருடம் வந்த சில விளம்பரங்கள் சினிமா விளம்பரங்கள் இல்லாது கார், இன்சூரன்ஸ், போன்றவற்றின் விளம்பரங்களை இன்றைய பொக்கிஷப் பகிர்வாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.     ப்யூக் ஸுபர் 1949 ஆம் வருட மாடல் கார் விநியோகஸ்தர்களான டி.வி. சுந்தரம் அய்யங்கார் & ஸன்ஸ் லிமிடெட்”  வெளியிட்ட விளம்பரம்.


பிருத்வி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வெளியிட்ட கொடுக்கிற தெய்வம்விளம்பரம்.நீங்கள் அழகு பெற சுலபமான வழி சொல்லும் மைசூர் சந்தன சோப் விளம்பரம் 

.

அரைக்கீரை விதை தைலம் இது என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட ரிப்பன்களுக்குக் கூட அந்நாளில் விளம்பரம் செய்திருக்கிறார்கள்....ரேடியோ வாங்குவது ஒரு சம்பிரதாயம் என்று சொல்லும் ரேடியோக்களுக்கான விளம்பரம்...

என்ன நண்பர்களே இக்கால மற்றும் அக்கால விளம்பரங்களைக் கண்டு ரசித்தீர்களா

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி 

.

60 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 2. அரிய படங்கள்... பொக்கிசங்கள் தான்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. பழைய விளம்பரங்கள் போட்டு மலரும் நினைவுகளுக்கு செல்ல வச்சுடீங்க இப்பவும் மைசூர் சாண்டல் சோப்புதான் யூஸ் பன்ரேன்.ரெமி பவுடர் ஆப்கன் ஸ்னோ எல்லாம் போன இடமே தெரியல்லே.

  ReplyDelete
  Replies
  1. ரெமி பவுடர் இப்பல்லாம் கிடைக்கிறதா என தெரியவில்லை. இந்த பவுடர் பற்றி அப்பா சொல்லி இருக்கிறார்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....

   Delete
 4. அருமையான பொக்கிசங்கள் காணக்கிடைத்தன.

  கோபால் பற்பொடிக்கு ஒரு விளம்பரம் வருமே அது ஞாபகத்துக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. கோபால் பற்பொடி இன்றும் இருக்கிறது...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
  2. நானும் கோபால் பல்பொடியைத் தான் முதலில் நினைத்தேன்!

   Delete
  3. அதே மாதிரி 1631 பயாரியா பல்பொடிக்கும் நிறைய விளம்பரங்கள் வரும்.... இப்போது கூட முரசு தொலைக்காட்சியில் இதன் விளம்பரம் வருகிறது. :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 5. பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்பது அந்தக்காலம் !அதற்கும் விளம்பரம் தேவைப்படுவது இந்தக்காலம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete
 6. ICICIன் விளம்பரம் ரொம்பப் பிடிச்சது. அதுவும் அதில் வரும் மங்கி குல்லாய் போட்ட இன்னொரு குட்டிக்குழந்தையை ரொம்பப் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மிகவும் பிடித்த விளம்பரம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 7. விளம்பரப் பதிவு நல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கௌதமன் சார்.

   Delete
 8. பழைய விளம்பரங்களைப் பார்க்க வாய்த்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுமதி.

   Delete
 9. எனக்கு முதலில் உள்ள ICICI விளம்பரம் ரொம்ப பிடிக்கும்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 10. விளம்பரத்தை பற்றி ஒரு சின்ன அலசல் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 11. அருமையான பகிர்வு அன்பரே
  விளம்பரங்களைப் பற்றிய விபரங்கள்
  அற்புதம். நல்ல பகிர்வு, நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜகோபாலன்.

   Delete
 12. பழைய விளம்பரங்களைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. விளம்பரங்கள் அன்றும் இன்றும் இரசிக்கும்விதமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு நன்றி குணசீலன்.

   Delete
 14. ஆஹா, இந்த மாதிரி படங்களை தேடித் பிடித்தர்க்கே உங்களை பாராட்ட வேண்டும் சார்!! Thanks for sharing them!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜயதேவ் தாஸ்.

   Delete
 15. சுவாரஸ்யமான பகிர்வு. தொலைக்காட்சி வராத அந்நாளில் தியேட்டரில் காட்டப்படும் விளம்பரங்களைப் பார்க்க சீக்கிரம் போக நினைப்போம்:)!

  கோபால் பற்பொடி இனிப்பாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இனிப்பு மட்டுமல்ல, கரகரவென்றும் இருக்கும்... :)


   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. கிளிப்பிங் கலக்கல் சுவாமி. மிகவும் அருமையான பதிவு அய்யா. வாழ்க வளர்க. தொடரட்டும் உங்கப் பணி .

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 17. அந்தக் காலத்து விளம்பரங்கள் நன்றாக இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 18. சூப்பர். சூப்பர்.

  (அந்த அரைக்கீரை விதை தைலம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் மட்டும் கொஞ்சம் தனியாச் சொல்லுங்க)

  ReplyDelete
  Replies
  1. தனியா தானே... சொல்லிட்டா போச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   Delete
 19. அக்கால விளம்பரங்களைக் காண வைத்த பகிர்விற்கு நன்றி! பொக்கிஷங்கள் தொடரட்டும்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 20. பொக்கிஷப் பகிர்வேதான்.அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
  2. மைசூர் சாண்டல் சோப் + கோகுல் சாண்டல் பவுடர் இரண்டும் அன்று முதல் இன்று வரை பலராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுகிறன.

   1967 ஆம் ஆண்டு மட்டும் மைசூர் சாண்டல் சோப்பின் ஷேப்பை மாற்றிப்பார்த்தனர். மற்ற லக்ஸ், ஹமாம் போல நீள்சதுர வடிவில், கலர் பேப்பர் ஒட்டி விற்பனைக்கு வந்தது. வியாபரம் சுத்தமாகப் படுத்து விட்டது. எவ்வளவோ கரடியாகக்கத்தி விளம்பரம் செய்தனர். மக்களிடம் அது எடுபடவில்லை.

   பிறகு அதை திரும்ப ஓவல் ஷேப்புக்கு பழையபடி மாற்றி, காகித அட்டைப்பெட்டியில் போட்டு அளிக்க ஆரம்பித்த பிறகே, மக்கள் பேராதரவு கொடுத்தனர்.

   விளம்பரங்கள் பற்றிய நல்ல அலசல் பதிவுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

   Delete
  3. மைசூர் சாண்டல் சோப் பற்றிய கூடுதல் தகவல் சுவாரசியம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 21. அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்லும் விளம்பரங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 22. அருமையான பகிர்வு வெங்கட். மிகவும் ரசித்தேன்.. நன்றி

  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   Delete
 23. mikka nandri thiru venkat nagaraj avargale
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுரேந்திரன்.

   Delete
 24. இக்கால மற்றும் அக்கால விளம்பரங்களைக் கண்டு ரசிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 25. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 27. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 28. சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Message4U.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....