எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 22, 2012

படுத்த நிலையில் ஹனுமான்திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 11

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10

முஸ்கி:  ஒவ்வொரு திங்களும் வர வேண்டிய இத்தொடரில் சற்றே இடைவெளி.  தீபாவளி பயணமும், மற்ற வேலைகளும் நேரத்தினை எடுத்துக் கொண்டதால் வந்த இடைவெளி.சென்ற பகுதியில் அக்பர் கட்டிய கோட்டை, அக்‌ஷய் வட் மற்றும் பாதாள்புரி போன்ற இடங்கள் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் சங்கமத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் பிரசித்தி பெற்ற ஹனுமான் கோவில் பற்றி பார்க்கலாம். இக்கோவிலில் நின்ற கோலத்தில் இல்லாது வித்தியாசமாக படுத்த நிலையில் இருக்கிறார் அஞ்சனி மைந்தர். சங்கமத்திற்கு வரும் அனைத்து மக்களும் இக்கோவிலுக்கும் வந்து செல்வதால் எந்நேரத்திலும் கூட்டம் இருக்கிறது. 

இக்கோவில் பற்றிய கதையை அங்கேயிருக்கும் பிரசாதக் கடைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  பிரசாதம் என்றால் ஏதோ நம் ஊர் எள்ளு சாதம் என நினைக்க வேண்டாம்!  வடக்கில் ஹனுமனுக்கு படைப்பது – பூந்தி அல்லது மோதிசூர் லட்டு மட்டுமே. சரி கதையைப் பார்ப்போமா?

உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தியாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி. 

மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  [B]படே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.

கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்தியாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது.அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார்.

நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்!

சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘[B]படே ஹனுமான்அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.

படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! செவ்வாய்க் கிழமைகளில் வெளியூர் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். சிறப்பான இக்கோவிலில் ஹனுமனை தரிசித்து வெளியே வந்தோம்.  அடுத்ததாக நாங்கள் சென்றது காமாட்சி கோவில்.  அவ்வனுபவத்தினை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. தொடர்கிறேன்! :)

  நன்றி மோகன்.

  ReplyDelete
 2. நான் சங்கமம் சென்ற போது பார்க்க வில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியா... அதான் இப்போது இங்கே தரிசித்தாயிற்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete

 3. அனுமன் படுத்துக்கொண்டிருக்கும் நிலையில் எழுந்தருளிய வர்ணனை படித்தேன்.
  அனுமன் வேகம், விவேகம் இரண்டையும் கலந்த ஒரு நிலை.
  வடமொழியிலே ஒரு பா உள்ளது.
  அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவ கிம் வத என்று.
  இயலாது என நினைக்கப்படும் எதையும் இயலும் எனவும் முடித்தும் காண்பிக்க வல்ல
  அனுமனே !! உன்னால் எது இயலாது எனச் சொல்வாய் என.
  அனுமனே," நான் ஏன் பள்ளி கொண்ட பெருமானாக படுத்த நிலையிலே பக்தருக்கு காட்சி
  அளிக்கிறேன்" எனச்சொன்னால் தான் உண்டு.

  ஒரு வேளை வெங்கடராஜுக்கோ அல்லது கோவை2தில்லிக்கு ஒரு கனவு வரலாம்.

  அப்பொழுது அவசியம் அதை தெரிவியுங்கள்.

  அனுமனின் படங்களையும் கம்பன் பாடிய அனுமத் துதியுடன் சேர்த்து போடலாம் என நினைக்கிறேன்.

  "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
  அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
  அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்
  அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்'


  அனுமாருக்கு ஜே !
  வெங்கட நாகராஜுக்கும் ஜே !!

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. கம்பனின் துதி சேர்த்திருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 4. ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம். ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ!

  அருமையான ஹனுமத்தரிசனம் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. படங்களும் பகிர்வும் நன்று. விவரங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. சயன கோலத்தில் வித்தியாசமான மாருதி.

  தரிசனம் செஞ்சு வெச்சதுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 7. இதுவரை அறியாத ஹனுமான்
  படமும் சொல்லிச் சென்ற விதமும்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ்மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. காணக்கிடைக்காத தரிசனம் தங்களுக்கு வாய்த்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 10. திரு வெங்கட் அவர்களே ,

  ஒருவேளை , செய்நன்றி மறந்த அந்த வியாபாரியே வந்து தன்னை நிற்கவைத்து கோயில் கட்டவேண்டும் என்று அந்த அஞ்சனா புத்திரன் விரும்பியிருபாரோ என்னவோ?!! எது எப்படியோ, நின்ற கோலத்திலேயே கண்டு வழிபட்டுக் கொண்டிருந்த நமக்கு, வாயு புத்திரனின் ஒரு அழகிய சயன கோலத்தினை கண்டு களிக்க வைத்தமைக்கு நன்றி அய்யா. தொடரட்டும் உங்கள் சீரிய பணி வாழ்க , வளர்க திரு வெங்கட்( நாக) ராஜ் அய்யா..புதிய பெயரிட்டு மகிழ்ந்த சூரிக்கு நன்றி.

  அன்பன் வேளச்சேரி நடராஜன்
  22-11-2012..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி VKN சித்தப்பா.

   Delete
 11. நானும் இந்தக் கோவிலைப் பார்த்ததில்லை. பகிர்வுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
 12. நல்ல தகவல்களுடன் அழகான தரிஸனம். நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. ஆஞ்சனேய பகவானுக்கு ஜெய் ஹோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி

   Delete
 14. நல்ல தகவல்கள். வல்லிம்மா வீட்டுக் கொலுவில் ஒரு சயன ஆஞ்சநேயர் பார்த்தேன். அவர்தான் இவரோ என்று பார்த்தேன். இல்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. சுவாரசியமான தகவல்களுடன் படங்களுடனும் பகிர்வு நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 16. தரிசனம் இன்று தான் கிடைக்கப் பெற்றேன்...

  நன்றி...
  tm10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. தாச்சிண்டிருக்குற உம்மாச்சி எனக்கு ஒம்ப பிடிக்குது அங்கிள்!

  ReplyDelete
  Replies
  1. தாச்சி தூச்சி எனக்கும் பிடித்த வேலை! - “தாச்சி தூச்சி’ ரோஷ்ணி சிறு வயதில் சொல்லும் வார்த்தை! :)

   Delete
 18. நம் வீட்டிலும் அநுமாஞி ஒருக்களித்துவண்ணம் இருக்கிறார். இவரோ அழகாக நிச் சிந்தையாக ஓய்வெடுக்கிறார். வெகு அழகு.
  காணக் கொடுத்தமைக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 19. தரிசனம் செய்வித்த புண்ணியம் உங்களைச் சேரும் சகோ... கதையும் அருமை. அந்த வியாபாரியை மன்னித்து அவர் வேண்டுதலையும் நிறைவேற்றி விட்டாரே... அதுதான் கடவுள் தன்மை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 20. சயன கோலத்தில் ஆஞ்சநேயர் தர்சனம் கண்குளிரக் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி

   Delete
 21. சயன ஆஞ்சநேயர் அருமை! ஒவ்வொரு பதிவிலும் ஒரு புது தகவல்.
  பாராட்டுக்கள்!
  கம்பனின் துதியில் இராமாயணம் முழுவதும் அடங்கி இருப்பது சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 22. படே ஹனுமானுக்கு பால ஹனுமானின் பணிவான வணக்கங்கள் :-)

  ReplyDelete
 23. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

  ReplyDelete
 24. என்னையா புதுசு புதுசா விஷயம் சொல்லு கிறாய் !!
  ஒரே குழப்பமா இருக்குப்பா !!
  மேலே மேலே படித்து கொண்டே போன முளை யே
  கொழம்பிடும் போல இருக்குப்பா !!
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....