எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 12, 2012

பாறை ஓவியங்கள் மற்றும் பழங்குடி நடனம்தலைநகரிலிருந்து – பகுதி 19சென்ற சனிக்கிழமை [08.12.2012] நாளிதழில் தில்லி ஜன்பத் சாலையில் இருக்கும் INDIRA GANDHI NATIONAL CENTRE FOR THE ARTS [IGNCA] வளாகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி பற்றி படித்தவுடன் செல்ல வேண்டும் என மனதில் தோன்றிவிட்டது.  ஆதி காலத்தில் மனிதன் பாறைகளில் வரைந்த ஓவியங்கள், வடிவங்கள் ஆகியவற்றினைப் பற்றிய கண்காட்சி என்றதும் நம் முன்னோர்கள் அப்படி என்னதான் வரைந்து இருப்பார்கள் என்று பார்த்து விடுவோம் என காலையில் வீட்டை விட்டு கிளம்பி வழியிலே ஒரு ஆதிவாசிகள் அருங்காட்சியகத்தின் சில படங்களை [அப் படங்களை வரும் ஞாயிறன்று பகிர்கிறேன்] எடுத்து விட்டு 11.30 மணி அளவில் பாறை ஓவியங்கள் கண்காட்சிக்குச் சென்றேன்.

IGNCA அமைந்திருக்கும் பெரிய வளாகத்தினுள் இருக்கும் ‘MATTI GHARஎனும் இடத்தில் தான் இக்காண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். உள்ளே சென்றால் ஒரு பெரிய பாறை போன்ற ஒரு அமைப்பில் இரண்டு மாடிகள் போல வடிவமைக்கப்பட்ட இடத்தில் கண்காட்சி.  வாயிலே நம்மை கவரும் வண்ணம் இருந்தது. உள்ளே நுழையும் இடத்திலேயே வரைபடங்கள் வைத்திருந்தார்கள்.  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு பிரிவுகளாக இந்தியாவினைப் பிரித்து அந்தந்த இடங்களில் உள்ள பழங்கால பாறை ஓவியங்களைப் படங்களாக சுவற்றில் வைத்திருந்தார்கள்.  சில இடங்களில் புகைப்படங்களாகவும், சில இடங்களில் பாறைகளுமாகவே வைத்திருந்தது நன்றாக இருந்தது.
பெரும்பாலும் நான்கு பகுதிகளிலுமே மனிதர்களின் வடிவங்களையும், விலங்குகளின் வடிவங்களையுமே வரைந்து இருக்கிறார்கள்.  ஒரு இடத்தில், இந்த ஓவியத்தினை ஆதி மனிதன் [நம்ம பிளாக்கர் என நினைத்து விடாதீர்கள்!, நான் ஆதிகால மனிதனைச் சொன்னேன்!] எப்படி வரைந்திருப்பார், அவருக்கு உதவி செய்தது யார், என்பதைக் காட்டும் வண்ணம் சிலை அமைத்திருந்தார்கள்.இந்தியா முழுவதுமே இந்த பாறை ஓவியங்கள் இருந்தாலும் மத்திய இந்தியாவில் தான் இந்த வடிவங்கள் நிறைய காணப்பட்டது என அங்கே அறிவிப்புப் பலகைகளில் எழுதி வைத்திருந்தார்கள்.  இந்த ஓவியங்கள் இரண்டு வகைகளில் வரையப்பட்டு இருக்கின்றன.  ஒன்று வண்ணக் கலவைகள் கொண்டு வரையப்பட்டவை மற்றது சிறு கற்கள், மற்றும் கம்பிகள் கொண்டு செதுக்கப்பட்டவை.


 லாஞ்சியா சௌரா நடனம்


இக்கண்காட்சியில் பாறை ஓவியங்கள் தவிர, மூன்று முக்கிய இடங்களில் உள்ள பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களையும் சித்திரமாக வைத்திருந்தார்கள். அந்த மூன்று பழங்குடியினர் லாஞ்சியா சௌரா [ஒடிசா], வார்லி [மஹராஷ்ட்ரா] மற்றும் ராத்வா [ குஜராத்]. குஜராத் மாநிலத்தின் தென்கிழக்கு எல்லையில் வசிக்கும் ராத்வா பழங்குடி மக்கள் “பாபா பிதோராஎன்று அழைக்கப்படும் தெய்வத்தினை வணங்குகிறார்கள்.  எங்கும் நிறைந்திருக்கும் ‘பாபா பிதோராஇயற்கை சீற்றம், நோய், இறப்பு எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றுவார் என நம்புகிறார்கள்.  இவர்கள் வரையும் எல்லா ஓவியங்களும் செவ்வாய்க் கிழமையில் ஆரம்பித்து புதன் கிழமை தான் முடிப்பார்களாம். வரைவதற்கு இயற்கை முறையில் காய்கறிகளிலிருந்து பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களை தயாரிக்க இலுப்பை [மஹுவா] மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சாராயத்தினைக் கலந்து வரைவார்களாம்! வரைவதற்கு மூங்கில் கொண்டு செய்யப்படும் தூரிகையை பயன்படுத்துகிறார்கள்.அவர்கள் வரையும் பிதோரா ஓவியங்களில் ஏழு அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்து ஒரு கையில் மணக்கப் போகும் பெண்ணையும் மற்றொரு கையில் வாளையும் பிடித்திருப்பார்கள்.  நடுவே செல்லும் ஓரு கோடு நர்மதை நதியைக் குறிப்பதாகவும், நடுநடுவே மரங்கள், விலங்குகள் நிலம், பறவைகள், சூரியன், சந்திரன் எனவும் வரைவார்களாம். கல்யாணக் காட்சியை வரைந்து வைத்திருந்ததன் படத்தினை கீழே கொடுத்துள்ளேன். 

பழங்குடியினர் பயன்படுத்திய இசைக்கருவிகள், அணியும் உடைகள், அணிகலன்கள் என எல்லாவற்றையும் புகைப்படங்களில் நமது பார்வைக்கும் வைத்திருந்தார்கள்.  எல்லாவற்றையும் பார்த்து வெளியே வரும்போது ராத்ரா பழங்குடியினரில் சிலர் வெளியே அமர்ந்து இருந்தார்கள்.  ஒரு பெரிய மேளத்தினைத் தட்டி தாளம் சேர்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்.  அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். தட்டியபடியே, அந்த இசைக்கருவியின் பெயர் “டோல்என்றும், இதில் ஆட்டுத் தோல் பயன்படுத்தப் படுகிறது எனவும், பெண்கள் பயன்படுத்தும் இசைக்கருவியின் பெயர் சம்சரியா இது பாகவதர்கள் பயன்படுத்தும் சப்ளாக் கட்டை போல இருக்கிறது! 

இருந்த பெண்களில் ஒருவரிடம் சம்சரியாவினை வாங்கி இசைத்துப் பார்த்தேன்.  அந்தப் பெண், பெயர் கங்கா – நான் இசைத்ததைக் கேட்டு, நன்றாகவே வாசிப்பதாகச் சொன்னார்! அவர்களின் நடனத்தினையும் சில காணொளிகள் எடுத்தேன்.  பொதுவாக இந்த நடனங்கள் ஹோலி சமயத்திலும், பாபா பிதோராவின் விழாக்களிலும் ஆடுவார்களாம். 

அவர்கள் ஆடும்போது கண்காட்சியைப் பார்க்க வந்த பள்ளி சிறுமிகளில் சிலர் பின்னால் ஆடிப் பார்த்தது குறுநகையை வரவைத்தது. இன்னொரு பெண்ணும் அவர்களின் நடனத்தின் ஸ்டெப்ஸ் செய்து அது பிடிபட்டதால் குஷியில் ஒரு ஆட்டம் போட்டார்! சில சமயங்களில் இப்படித்தான் பார்ப்பவர்களையும் ஆட வைத்து விடும் நடனம்.
பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றாலும் கடமை அழைத்ததால் [வேற என்ன சாப்பிடுவது தான்! மணி ஒன்றரை ஆகிவிட்டதால் பசிக்க ஆரம்பித்து விட்டது] அங்கிருந்து கிளம்பி இல்லம் வந்தேன்.  நான் ரசித்த சில ஓவியங்களையும், காட்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிறைய படங்கள் எடுத்திருந்தாலும், இங்கே அனைத்தையும் பகிர இயலாது. பின்னர் ஃப்ளிக்கரில் பகிர்ந்து கொள்கிறேன்.மீண்டும் வேறு சில அனுபவங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.   

38 comments:

 1. பாறை ஒவியங்கள் மற்றும் பழங்குடியனர் நடனம் பற்றி சிறப்பாக பகிர்ந்து கொண்டீர்கள்.

  // ‘பாபா பிதோரா’ இயற்கை சீற்றம், நோய், இறப்பு எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றுவார் என நம்புகிறார்கள். //

  நம்பிக்கைத்தான் மனிதர்களை வாழவைக்கிறது.
  சம்சரியாவை அழகாய் இசைத்து நன்றாக வாசிப்பதாய் பெயர் வாங்கியது மகிழ்ச்சி.

  பள்ளிக் குழந்தைகள் ஆடியதையும், காணொளியையும் பார்க்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. காணொளியை இணைப்பதில் ஏதோ பிரச்சனை. சரிபார்த்து சீக்கிரம் இணைத்து விடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. கண்காட்சி - பார்ப்பவர்களையும் ஆட வைத்து விடும் நடனம் என சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. நல்லா இருந்திருக்கும்ன்னு தெரியுது.. நன்றி புகைப்படங்கள் வலையேற்றிவிட்டு தெரிவியுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை இக் கண்காட்சி இருக்கும் என தெரிகிறது. ஒரு காணொளி வலையேற்றி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 4. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 5. ஒரு காணொளியும் இப்போது சேர்த்து விட்டேன். மாலை இன்னுமொரு காணொளியும் சேர்க்க முயல்கிறேன்!

  ReplyDelete
 6. தில்லியில் இதுபோல் நடக்கும் பல நிகழ்வுகளை தவற விடுகிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது உங்கள் பதிவினைக் கண்டதும். வாழ்க.

  (”சம்சரியா”வினை சரியாக வாசித்த சம்சாரி என்ற பட்டம் வழங்கப்படுகிறது. சம்சாரம் சகிதமாக வந்து பெற்றுக் கொள்ளவும்.)

  (ஒரே ஒரு சந்தேகம். சப்ளாக்கட்டையை சரியாகப் வாசிக்காத பாகவதர், வீட்டில் அப்ளாக்கட்டையால் அடி வாங்குவாரா!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி. அடி வாங்குவது பற்றி தனியாக பேசலாம்! :)

   Delete
 7. ஒரு புதிய அனுபவம் எங்களுக்கு. நேரில் பார்த்த உங்களுக்கு பரவசமான அனுபவமாக இருந்திருக்கும் என்று (இசைக் கருவியை வாசித்துப் பார்த்தது) தோன்றுகிறது.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நேற்றைய மின்னஞ்சல் பார்த்து பயன் பெற்றது தெரிகிறது. வாழ்த்துகள்!

   Delete
 8. அன்புள்ள வெங்கட்,
  தமிழ் மணத்தில் வெற்றிகரமாக ஓட்டுப் போட்டு விட்டேன்!
  நன்றி!

  ReplyDelete
 9. எங்களால் காண இயலாத நிகழ்வுகளை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி .இயற்கை வர்ணம் குறித்த செய்தி நன்று..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 10. பாறை ஒவியங்கள் மற்றும் பழங்குடியனர் நடனம் பற்றி சிறப்பாக பகிர்ந்து கொண்டீர்கள்.

  உங்கள் எழுத்தில் எங்கள் பார்வை நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. அது என்ன காணொளியா ? வீடியோ என்பதின் தமிழாக்கமா?
  காணுமொளி சிறப்பாக இருக்கிறது.

  தானே ... தானே... தன்னா தன் தானே...

  யாராவது ஒரு கவிதை எழுதின், அதை இந்த மெட்டிலே பாடலாம்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. காணொளி = வீடியோ!

   கவிதை எழுத அழைப்பு வந்தாயிற்று.... கவிஞர்கள், கவிதாயினிகள் தயாரா? சீக்கிரம் எழுதி பகிர்ந்தால் சுப்பு தாத்தா பாடி விடுவார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
  2. காணுமொளி= நிகழ்காலத்தை மட்டும் குறிக்கும்;
   காணொளி வினைத்தொகை (கண்ட ஒளி, காணும் ஒளி, காணப்போகும் ஒளி என முக்காலத்தையும் குறிக்கும்) எனவே காணொளி தான் சரியென்றுத் தோன்றுகிறது

   Delete
  3. இலக்கணம்.... விளக்கத்திற்கு நன்றி சீனு! எங்க சில நாட்களா ஆளையே காணோம் என் வலைப்பக்கத்தில்?

   Delete
 12. பழங்குடியினரின் ஓவியங்கள்,நடனங்கள்...காணொளி என பகிர்வு மிகவும் அருமை. கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 13. எங்கெல்லாமோ போறிங்க!எதெல்லாமோ பார்க்கறீங்க!எங்களுக்கும் காட்டுறீங்க!தொடருங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 14. எத்தனை தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்! தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. வியப்பு அளிக்கும் செய்திகள்... செவ்வாயில் தொடங்கி புதனில் முடிப்பது உட்பட... இவ்வுலகம் தான் எவளவு ஆச்சர்யங்களை வழங்குகிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 16. பாறை ஓவியங்களைப் பார்க்க, தலைநகர் டில்லியில் கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டீர்கள்.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 17. Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 18. arumai arumai...
  nantri anne...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 19. பாறை ஓவியங்கள், கண்காட்சி, நடனம் என எல்லாமே அழகு ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....