எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 24, 2013

தேசிய பெண் குழந்தைகள் தினம்

இன்று ஜனவரி 24 – இந்த தினத்தினை தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறது இந்திய அரசு. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியாக திருமதி இந்திரா காந்தி பதவியேற்ற தினம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்னமும் இந்தியாவின் பல கிராமங்களில் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதி, கருவிலேயே அழித்து விடுவதும், அல்லது பெண் குழந்தை பிறந்த பின் அழித்து விடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். சில ஆண்டுகளாக, கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனப் பரிசோதிப்பது குற்றமாக பாவிக்கப்பட்டாலும், சில பணத்தாசை பிடித்த நிறுவனங்கள் காரணமாக சிசுக் கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆண்-பெண் விகிதாசாரப் படி பார்த்தால் கேரளாவில் அதிக பெண்களும், ஹரியானாவில் ஆண்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள்.  மொத்த இந்தியாவினையும் எடுத்துக் கொண்டால், நகரப் புறங்களை விட கிராமப் புறங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது.

பெண் நமது எதிர்காலத்தின் அடையாளம் – பெண் இல்லாது நாமேது – நம்மைப் பெற்றெடுத்த தாய் எனும் பெண் இல்லாதிருந்தால் நாமேது!  பெண்களுக்கு நல்ல எதிர்காலத்தினை படிப்பின் மூலமும் பாதுகாப்பின் மூலமும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது எல்லோருடைய கடமை.

பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா...  பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா...என பாரதியார் சொன்னது போல, நாளைய பாரதத்தினை வெற்றிப் பாதையின் வழி நடத்த ஆண் - பெண் பேதமில்லாது குழந்தைகளை சிறந்தவர்களாகவும்,  வளர்ப்போமென உறுதி கொள்வோம்.
நாளைய ஃப்ரூட் சாலட் பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

26 comments:

 1. இன்றைய தினம் தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுவதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படட்டும். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 2. பெண் இல்லாது நாமேது – நம்மைப் பெற்றெடுத்த தாய் எனும் பெண் இல்லாதிருந்தால் நாமேது!

  இதை உணர்ந்தால் வராது பெருந்தொல்லைகள்..

  ReplyDelete
  Replies
  1. //இதை உணர்ந்தால் வராது பெருந்தொல்லைகள்..// உண்மை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. நாளைய பாரதத்தினை வெற்றிப் பாதையின் வழி நடத்த ஆண் - பெண் பேதமில்லாது குழந்தைகளை சிறந்தவர்களாகவும், வளர்ப்போமென உறுதி கொள்வோம்.

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. இன்றைய நாளைப் பற்றி செய்தியில் படித்துத் தெரிந்து கொண்டேன். தெய்வமாக வணங்க வேண்டாம், தனியாக நாள் கூட ஒதுக்க வேண்டாம். உரிய மதிப்பைக் கொடுத்து, மனுஷியாக மதித்தால் போதும். :))

  ReplyDelete
  Replies
  1. // மனுஷியாக மதித்தால் போதும். :))// அதுவே பல நேரங்களில் செய்வதில்லை பலர்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. I agree wth Sriram. 200 percent correct Venkat.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே!

   Delete
 6. நான் கூட இதைப் பற்றி போன வருடம் எழுதிய பதிவை மறுபடி என் இரண்டாவது எண்ணங்கள் தளத்தில் மீள் பதிவு செய்திருக்கிறேன்.
  இணைப்பு இதோ:http://wp.me/p2RUp2-25

  அம்மா, அப்பா, கூடப் பிறந்தவர்கள் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.... இதோ உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.....

   Delete
 7. தாய்லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னாலே
  கருவிலேயே பல பெண் குழந்தைகளை அழித்து விட்டதால்
  இப்பொழுதிருக்கும் இளைஞர்களுக்கு பெண்கள் திருமணத்திற்கு
  கூட கிடைப்பதில்லையாம்.

  நம் நாட்டிலும் இந்நிலை வராதிருக்க
  இப்படிப்பட்ட தினங்களைக் கொண்டாடி
  பெண் பிள்ளைகள் சமுதயாதத்திற்கு
  கட்டாயம் வெண்டும் என்பதைச்
  சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது.
  பகிர்விற்கு நன்றி.
  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கூட இதே நிலைதான். இப்போது பெண் கிடைக்காது இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து பெண்களை கல்யாணம் செய்து கொள்கிறார்கள்!

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி!

   Delete
 8. மிக நல்ல இந்த நாளுக் கேற்ற பதிவு.
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மிக்க நன்றி சீனி....

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மிக்க நன்றி சீனி.

   Delete
 11. இன்றைய பெண்களுக்கு எதிரான
  வன்முறைகள் கூடிய நிலையில்
  இத்தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது
  பெறவேண்டியுள்ளது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. அருமையான பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராம் மலர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....