எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 25, 2013

ஃப்ரூட் சாலட் – 30: சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற பெண் – ரத்த தானம்


இந்த வார செய்தி:

 குடும்பத்தினருடன் செல்வி பிரேமா.....

மும்பையின் மலாட் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் திரு ஜெயகுமார் பெருமாள் அவர்களின் புதல்வி செல்வி பிரேமா தேசிய அளவில் நடந்த சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்றுள்ள செய்தி இரண்டு நாட்களாக நாளிதழ்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் வந்த வண்ணமிருக்கிறது. 

அதுவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து 300 சதுர அடி அறையில் வசித்துக் கொண்டு, இத்தனை கடினமான ஒரு தேர்வில் 607/800 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றது நிச்சயம் பாராட்டுக்குரியது.  இன்னொரு சந்தோஷமான விஷயம் இவரது சகோதரனும் இத்தேர்வில் வெற்றி பெற்றது தான். தேசிய அளவிலான இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்றாலும் இந்த வருடத்தின் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 12% மட்டுமே. அதிலிருந்தே இத்தேர்வு எவ்வளவு கடினம் என்று புரியும்.

தேர்வில் முதலிடம் பெற்ற செல்வி பிரேமாவிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்து லட்சம் பரிசுத் தொகையும், மத்திய அமைச்சர் திரு ஜி.கே. வாசன் அவர்கள் ஐந்து லட்சம் பரிசுத்தொகையும், தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். நம்மால் பணமாக ஒன்றும் கொடுக்க முடியாவிடினும், செல்வி பிரேமாவின் முயற்சிக்குப் பாராட்டாக ஒரு பூங்கொத்தினை வழங்கி பாராட்டுவோமே!


இந்த வார முகப்புத்தக இற்றை:

ஹிந்தியில் வந்ததை, தமிழில் தருகிறேன்: 

பிறந்தவுடன் நமக்குப் போட்டுவிடும் துணியில் பாக்கெட் [ஜேப்] இல்லை.  இறந்த பின் நமக்குப் போர்த்தும் வெள்ளைத் துணியிலும் பாக்கெட் இல்லை! பிறகு வாழ்நாள் முழுதும் பாக்கெட்டினை பணத்தால் நிரப்ப ஏன் இந்த ஓட்டம்....


இந்த வார குறுஞ்செய்தி

PAST OF ICE IS WATER AND FUTURE OF ICE IS WATER TOO…  SO LIVE LIKE ICE, NO REGRETS FOR PAST, NO WORRIES ABOUT FUTURE…..  JUST ENJOY EVERY MOMENT….

ரசித்த புகைப்படம்: மேல் நோக்கிய மகிழ்ச்சியான பார்வை....
நாளைய நல்வாழ்வின் அடையாளம்....
குழந்தையின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்!
  
ரசித்த பாடல்

மேகமே தூதாக வா....  அழகின் ஆராதனை என்ற இப்பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி மற்றும் பி. சுசீலா குரல் கொடுக்க சிவக்குமார் மற்றும் சுமித்ரா நடிப்பில் இடம் பெற்ற படம் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”.  நீங்களும் ரசிக்க – இதோ காணொளி!
ரசித்த காணொளி:

சமீபத்தில் ரத்த தானம் செய்வது பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். தலேசிமீயா இருக்கும் ஒரு பெண் வந்து ரத்தம் கொடுத்ததற்கு நன்றி எனச் சொல்லும் இந்தக் காணொளி – மிகவும் பிடித்தது – காணொளி அனைவரையும் ரத்த தானம் செய்ய வைக்குமென நம்புகிறேன்.


படித்ததில் பிடித்தது:

பெண்மை

அஞ்சரைப் பெட்டியிலும்,
அழுக்குத் துணி மூட்டையிலும்
கரைந்து போன....
அம்மாவின் வாசங்கள்....
கடிகார முட்களோடு...
போட்டிபோட்ட அவள் வேகம்...
அரசு விடுமுறையாம்!
என் வீட்டு அடுக்களைக்கும்,
அம்மாவுக்கும் கிடைக்காமல் போன....
விடுமுறை நாட்கள்....

இது தான் தாய்மையோ?

படித்த மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறதா? இருக்கலாம் – இக்கவிதை சக வலைப் பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்களின் தென்றலின் கனவு”  தொகுப்பிலிருந்து.  [விரைவில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் பதிவாக வந்தாலும் வரலாம்!]

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. பிரேமாவிற்கும்,அவரது தம்பிக்கும் பாராட்டுகள்.முகப்புத்தக இற்றை,குறுஞ்செய்தி இரண்டுமே அருமை.திருமதி சசிகலா அவர்களின் தாய்மை பற்றிய கவிதை நெகிழவைக்கிறது.
  ஃபுருட் சாலட் சுவையான கலவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 3. நல்ல செய்தி பிரேமாவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. ருசியான ஃப்ரூட் சாலட். பிரேமாவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 5. முதலிடம் பெற்ற மாணவியைப்பற்றிய செய்திகள் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தருகிறது.அவளுக்கு எல்லா வெற்றியும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகள்..
  குழந்தையும் நாளைய நல்வாழ்வும் நல்லா இருக்கு..:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 6. செல்வி பிரேமாவின் முயற்சிக்குப் பாராட்டாக ஒரு பூங்கொத்தினை வழங்கி சிறப்பாக பாராட்டுவோமே!

  தன்னிகரில்லாத தாய்மை பெருமை கொள்ளவைத்தது ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. ரசித்’தேன்’ - இப்படி எழுதினதால தப்பிச்சீங்க.....

   ரசித்தேன் - இப்படி எழுதியிருந்தா நம்ம பழனி. கந்தசாமி ஐயா - கோவையிலிருந்து காபி ரைட் வயலேஷனுக்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பார்.... :)

   தங்களது வருகைக்கும் ரசிப்பிற்க்கும் மிக்க நன்றி மூவார் முத்தே!

   Delete
 8. நீங்கள் ரசித்த பாடலைக் கேட்டுக் கொண்டே இதை எழுதுகிறேன்.
  செல்வி பிரேமா மேலும் மேலும் வாழ்வில் முன்னேற நல்வாழ்த்துகள். அவரது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  சிறப்பான காணொளி!'எனக்கு யாரெல்லாம் ரத்தம் கொடுக்கிறார்கள் என்று தெரியாது. அதனால் எல்லோருக்கும் நன்றி சொல்லுகிறேன்' என்று அந்தக் குழந்தை சொல்வது நிச்சயம் எல்லோரையும் சிந்திக்க வைக்கும்.

  மிகச்சிறந்த இந்த காணொளியை படைத்த படைப்பாளிக்கு தலை வணங்குவோம்!

  திருமதி சசிகலாவின் தாய் பற்றிய கவிதை அற்புதம்!

  வாராவாரம் நீங்கள் கொடுக்கும் பழக்கலவை அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.....

   உங்களைப் போல எல்லோரும் ரசிப்பதால் தான் ஃப்ரூட் சாலட் வாரா வாரம் தொடர்ந்து வருகிறது.....

   Delete
 9. உங்கள் பஞ்சாமிர்தம் மிக்ஸ் சுவை.....
  செல்வி பிரமாவிற்கு வாழ்த்துக்கள் சொல்வோம்.
  இளமையின் வறுமை ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று பிரேமாவின் வெற்றி உணர்த்துகிறது.
  திருமதி சசிகலாவின் கவிதை பாராட்டுக்குரியது.

  உங்கள் பதிவுக்கும் தான் பாராட்டு.

  நாடுடன்,
  ராஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 10. இந்த வார பழ கலவை (Fruit Salad) வழக்கம் போல அருமை! செல்வி பிரேமாவைப் பற்றி “செல்வி பிரேமாவின் முயற்சிக்குப் பாராட்டாக ஒரு பூங்கொத்தினை வழங்கி பாராட்டுவோமே!” என்ற தங்கள் கருத்தின்படை எனது வாழ்த்துக்கள்!  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 11. எனது கருத்துரையில் ”தங்கள் கருத்தின்படை எனது வாழ்த்துக்கள்!” என்பதில் ”தங்கள் கருத்தின்படி எனது வாழ்த்துக்கள்” என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! ( தட்டச்சில் கோளாறு) மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. தட்டச்சு செய்யும்போது இப்படி தவறுகள் வருவது இயல்பு.... நான் திருத்தியே வாசித்தேன்!

   தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 12. எல்லாமே அருமை. 'மேகமே' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. சூப்பர் கலவை!
  பிரேமாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்!

   Delete
 14. தகவல் களஞ்சியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 15. சிறப்பான தொகுப்பு. செல்வி பிரேமாவுக்கு வாழ்த்துகள். குழந்தை மனதில் நிற்கிறாள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. தங்கள் மனதில் இடம் பிடித்து தங்கள் வலையிலும் பாராட்டைப்பெற்ற வரிகளை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா......

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....