வெள்ளி, 11 ஜனவரி, 2013

”நிர்பயா” – அமிதாப் கவிதை - தமிழாக்கம்இன்று காலை வெளியிட்ட ஃப்ரூட் சாலட் பகிர்வில் அமிதாப் பச்சன் அவர்கள் எழுதிய கவிதையை ஹிந்தியில் வெளியிட்டு இருந்தேன். ஹிந்தி தெரியாத பலரும் புரியவில்லையே என பின்னூட்டத்தில் தெரிவித்தனர்.  அப்படியே தமிழில் கவிதையாக எழுத நான் கவிஞர் அல்லன்! அதனால் கவிதையின் சாராம்சத்தினை தமிழில் இங்கே தந்துள்ளேன் – ஹிந்தி தெரியாதவர்களின் புரிதலுக்காய். 

மொழி பெயர்ப்பில் நான் பெரிய வல்லுனன் என்று சொல்லவும் முடியாது. அதனால் தவறுகள் இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.

ஹிந்தி மூலம்:

माँ, बहुत दर्द सहकर, बहुत दर्द दे कर, तुझ से कुछ कह कर मैं जा रही हूँ...
आज मेरी विदाई मे जब सखियाँ मिलने आएंगी
सफ़ेद जोड़े मे लिपटी देख सिसक सिसक कर मर जाएंगी
लड़की होने का खुद पे फिर वो अफसोस जताएंगी
माँ तू उनसे इतना कह देना.... दरिंदों की दुनिया मे संभल कर रहना...

माँ, राखी पर भैया की कलाई जब सूनी रह जाएगी,
याद मुझे कर जब उनकी आँख भर आएगी,
तिलक माथे पर करने को माँ, रूह मेरी भी मचल जाएगी
माँ तू भैया को रोने मत देना
मैं साथ हूँ हर पल, उनसे कह देना
 
माँ, पापा भी छुप छुप बहुत रोएँगे
मैं कुछ न कर पाया, ये कह के खुद को कोसेंगे
माँ, दर्द उन्हे ये होने न देना
इल्ज़ाम कोई लेने न देना
वो अभिमान है मेरा, तू उनसे इतना कह देना
 
माँ, तेरे लिए अब क्या कहूँ
दर्द को तेरे शब्दों मे कैसे बांधू
फिर से जीने का मौका कैसे मांगू
माँ, लोग तुझे सताएंगे
मुझे आज़ादी देने का तुझपे इल्ज़ाम लगाएंगे
माँ, सब सह लेना पर ये न कहना
अगले जनम मोहे बिटिया न देना। 

தமிழ் சாராம்சம்


அம்மா, வலி பல அனுபவித்து, வலி தந்து, உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லி விடை பெறுகிறேன்.

இன்று என்னை விடையனுப்ப எனது தோழிகள் வரும்போது, வெள்ளைத் துணியில் கட்டியிருக்கும் எனது உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது வருத்தத்தில் மாள்வர். பெண்ணாய்ப் பிறந்ததற்கு தன் மீதே மீண்டும் வருத்தம் கொள்வார்கள்.  அம்மா, நீ அவர்களிடம் சொல்....  காட்டுமிராண்டிகள் நிறைந்த இவ்வுலகில் பத்திரமாக இருக்கச் சொல்...

அம்மா, வரும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று சகோதரனின் கைகள் காலியாய் இருக்கும்போது, என்னை நினைத்து சகோதரனின் கண்கள் கண்ணீரால் நிரம்பும்போது, சகோதரனுக்கு நெற்றியில் திலகமிடுங்கள். அப்போது எனது ஆத்மா மகிழ்ச்சியில் திளைக்கும். அம்மா....  சகோதரனை அழ விடாதே! நான் எப்போதும் அவருடனேயே இருக்கிறேன் என்று அவரிடம் சொல்....

அம்மா, அப்பாவும் மறைந்து மறைந்து ரொம்பவே அழுவார்கள். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன தன்னையே வருத்திக்கொள்வார். அம்மா, அந்த வலியை அவருக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ளுங்கள். தன்னையே குற்றம் இழைத்தவராக எண்ணாது இருக்கச் செய்யுங்கள். என்னுடைய மதிப்பிற்குரியவர் அவர் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

அம்மா, உனக்காக நான் என்ன சொல்ல? வலியை உன்னுடைய வார்த்தைகளில் எப்படிச் சொல்ல? மீண்டும் வாழ ஒரு வழி சொல் என உன்னிடம் எப்படிக் கேட்க?  அம்மா, உலகம் உன்னை பழிக்கும், எனக்கு அதீத சுதந்திரம் கொடுத்ததற்கு உன் மேல் பழி சுமத்தும் – எல்லாவற்றையும் தாங்கிக் கொள் ஆனால் – “அடுத்த ஜன்மத்தில் எனக்கு பெண் குழந்தை வேண்டாம்என்று மட்டும் சொல்லி விடாதே....

அப்பெண்ணின் மனதினை அப்படியே வடித்தது போல இருக்கிறது இக்கவிதை.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. காலேல படிச்சப்பவே கவிதையை புரிந்து கொள்ள முடிந்தது (ஹிந்தி தெரியும் என்பதால.) மற்றவர்களும் புரிந்து கொள்வதற்காக தமிழில் அர்த்தமுடன் விளக்கியது நல்லா இருக்கு. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   நீக்கு
 2. ஒரு பெண்ணின் வலி மிக அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்தக் கவிதை வரிகளில். நிர்பயாவின் வலியை உணர முடிகிறது. அவளது வலியை வாங்கிக் கொள்ளவும் முடியாமல், நீக்கவும் வழி தெரியாமல், இதைப் போன்று இன்னொரு முறை இன்னொரு பெண் தவிக்காமல் இருக்க என்ன செய்வது என்று புரியாமல் என்னைப் போன்றோர் கையாலாகாது தவிக்கிறோம் என்பதுதான் இன்றைய நிஜம்.

  கண்களில் நீர் ததும்ப நிர்பயாவிற்கு விடை கொடுப்போம். மனிதனை மனிதன் அழிக்கும் நிலை மாறட்டும்.

  நிர்பயாவின் தவிப்பை, வலியை, ஆதரவற்ற நிலையை தன கவிதையில் வெகு நேர்த்தியாக சித்தரித்திருக்கிறார் திரு அமிதாப்.

  எனது பதிவில் இணைப்பு கொடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பக்கத்தில் இணைத்ததற்கு நன்றிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. உருக்கம். நிர்பயா போல் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களின் உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது கவிதை. தமிழாக்கத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 4. “அடுத்த ஜன்மத்தில் எனக்கு பெண் குழந்தை வேண்டாம்” என்று மட்டும் சொல்லி விடாதே....


  நிர்பயாவின் மனதினை அப்படியே வடித்தது போல இருக்கிறது இக்கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 5. இந்த வரிகளை மடக்கி மடக்கிப் போட்டால் அதுதான் கவிதை வெங்கட். கவிதையில் உணர்வுகள் கொப்பளிக்கின்றன. படிககையிலேயே கண்ணீர் திரையிடுகிறது. கடைசி்ப் பாரா மனசை அசைத்து விட்டது. அமிதாப் ஒரு பெரிய கவிஞரின் மகன் என்பதை நிரூபித்து விட்டார். நம் மனங்களில் உயர்ந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மடக்கிப் போட்டால் கவிதை - மடக்கிப் போடத்தான் தெரியவில்லை! :)

   தங்களது வருகைக்கும் பகிர்வினை வாசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 6. அருமை...அருமை.

  ஹிந்தி வார்த்தைகளைத் தமிழில் போட்டிருந்தால் ஓரளவு நானும் புரிந்து கொண்டிருப்பேன். படிப்பதில் சிரமம். 'ரகு தாத்தா' சின்ன வயதில் படித்தது!

  கணேஷ்.. வெங்கட் மடக்கி மடக்கி போடா விட்டாலும் கவிதை வரிகள் நம் மனதை மடக்கிப் போட்டு விடுகின்றன. உணர்வுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். மனதை மடக்கிப் போட்ட கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் அமிதாப் தான்.....

   நீக்கு

 7. வணக்கம்!

  கண்ணீா் சிந்தும் கவிவரிகள்!
  கவிஞன் யானும் அழுகின்றேன்!
  புண்ணீா் பாய்ந்து கண்சோரப்
  புனைந்த கவிதை! மனம்தங்கும்!
  தண்ணீா் போன்றே ஓடுகிற
  தன்மை கொண்ட மொழிபெயா்ப்பு!
  தெண்ணீா் காட்டும் முகம்போன்று
  திறமாய்ப் பதிவைப் படைத்தனையே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கவிதையாய் ஒரு கருத்துரைக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 9. அழுத்தமான வார்த்தைகள் அடங்கிய கவிதை...
  உணர்வுகள் கொப்பளிக்கின்றன....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 10. செய்திகளைப் பார்த்தபோது கலங்கிய ஆத்திரப்பட்ட மனம் இன்று கண்ணீர் விட ஆரம்பித்தது.
  இந்த மனிதரின் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. சக்தியும் கொடுக்கட்டும். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 11. மனம் கனத்துப் போய் விட்டது வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 12. “அடுத்த ஜன்மத்தில் எனக்கு பெண் குழந்தை வேண்டாம்” என்று மட்டும் சொல்லி விடாதே....//

  கவிதையும் இந்த வரியும் மனதை கலங்க வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 13. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா!

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 15. வலிமிகுந்த அழகான கவிதை. ;(

  மொழியாக்கம் அருமை. பாராட்டுக்கள். ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 16. சாகுந்தருவாயில் கூட தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றிய கவலையில் மூழ்கும் பெண்மனத்தை அப்படியே பிரதிபலிக்கும் கவிதை. துளியும் மாறாத நேர்த்தியான மொழியாக்கம். வாசிக்கையிலேயே மனம் இளகுகிறது. நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. மனம் கனத்துதான் போகிறது தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....