புதன், 23 ஜனவரி, 2013

சூர்ப்பணங்கு - நாடகம்தில்லியில் கடந்த ஐந்தாம் தேதியிலிருந்து இருபதாம் தேதி வரை Bharat Rang Mahotsav 2013 – 15th Theatre Utsav நடந்தது. அதில் சனிக்கிழமை [19.01.2013] அன்று மாலை 05.30 மணிக்கு திரு. முருகபூபதி அவர்களின் இயக்கத்தில் சூர்ப்பணங்கு நாடகம் நடக்குமென தெரிந்தது. சனிக்கிழமை மாலை என்பதாலும், அன்று விடுமுறை என்பதாலும் நாடகத்தினைக் காண முடிவு செய்தேன்.

தலைநகர் தில்லியின் Mandi House பகுதியில் இருக்கும் Meghdoot Open Air Theatre-க்கு ஐந்தே கால் மணிக்கே சென்று சேர்ந்தேன். ஐம்பது ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு, காத்திருந்தேன். ஆறு மணிக்கு, காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்கள். தில்லியின் குளிரிலும் பல காலுறைகளிலிருந்து வந்த வாடை மூக்கை அடைந்து மூர்ச்சையடையச் செய்யும்படி இருந்தது!

மணல்மகுடி குழுவினரின் இந்நாடகம் ஒரு மணி நேரம் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நடுவே இடைவேளை இல்லை என்ற அறிவிப்புடன், ஏழு பாகங்கள் கொண்ட நாடகம் துவங்கியது.  ஒவ்வொரு பாகம் ஆரம்பிக்கும் முன்னர் அந்த பாகத்தின் கதையை இரண்டு பெரிய எல்.சி.டி. திரைகளில் ஆங்கிலத்தில் [தமிழ் தெரியாத தில்லி வாழ் மக்கள் சௌகரியத்திற்காக] விளக்கிச் சொல்லி விட்டு, நாடகத்தினை ஆரம்பித்தார்கள்.

நாடகத்தில் நடிக்கும் ஒரு நபர் வந்து “அந்த சனியனை அமுத்தி தூரப் போடுங்க! அதாங்க அந்த செல்ஃபோன் சனியனை அமுத்தி தூக்கிப் போடுங்க!என்று வேண்டுகோள் விடுத்தார். சைலண்ட் மோடில் போட்டுவிட்டு நாடகத்தினைக் காண ஆர்வத்துடன் காத்திருந்தேன்.  அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லாது நாடகம் ஆரம்பித்தது.

மேடையின் ஒரு மூலையில் ஒரு பெரிய வெள்ளைப் பொதி போல இருக்க, அதிலிருந்து நல்லதங்காளாக வெளியே வருகிறார் சூர்ப்பணங்கு.  தாயை அணைத்துக் கொண்டு இருக்கும் குழந்தைகள் போல அவரைச் சுற்றி ஏழு குழந்தைகளும் ஒவ்வொருவராய் வெளியே வந்து தனது பசியைச் சொல்கிறார்கள். பரந்து விரிந்து இருக்கும் இப்பூமியில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு அளிக்க இயலாது தன் பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கிறாள்.
வைக்கோல் பிரியைக் கூந்தல் போலக் கொண்டு நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் பெண்கள் படும் கஷ்டங்களை வெளிப்படுத்துகிறார்.  முன்னேற நினைக்கும் எல்லா திசைகளிலும் சமூகம் ஏதோ அடைப்புகளை ஏற்படுத்த, அவர்களை நோக்கி பெருமுழக்கத்தோடு போராடுகிறாள். நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் மிகவும் சிரத்தையோடு அப்பாத்திரங்களாகவே மாறிவிடுகின்றனர்.  கண்களிலும், உடல் அசைவிலும் அப்படியே அந்தப் பாத்திரங்களைக் காண முடிகிறது. 

சில சமயங்களில் அச்சத்தோடும், சில சமயத்தில் ஆங்காரம் கொண்ட வனப்பேச்சியாகவும் வலம் வருகிறாள் அணங்கு. கிராமத்தில் நெல் குத்த பயன்படுத்தும் உலக்கை கொண்டு பூமியைப் பிளந்து விடுவது போல ஆவேசத்தோடு மேடையில் குத்தி, சாட்டை கொண்டு பெண்களை அடிமைப் படுத்தும் அடக்கு முறைக்கு எதிராகப் போராடுகிறாள். அவள் சிந்திய கண்ணீரில் உப்பு நீர் வடிகிறது.  உலக்கை தவிர, சுளகு, துடைப்பம், என பல பொருட்களைக் கொண்டு போராட்டம் நடக்கிறது.

நாடகத்திற்கு இசையும் ஒரு பெரிய பிளஸ். இசையும் திரு முருகபூபதியே தான். அப்படியே ஒவ்வொரு பகுதியின் வெற்றிக்கு பாத்திரங்களின் நடிப்பும், இசையும் போட்டிபோட்டுக் கொண்டு துணை போகின்றன. முழு நாடகத்திலும் அப்படியே ஊன்றி இருக்க முடிந்தது. நாடகத்தின் முடிவில், நாடக நடிகர்களுக்கும், இயக்குனருக்கும், குழுவினருக்கும் கிடைத்த கைதட்டல் ஓசைகளே நாடகத்தின் வெற்றியை பறைசாற்றியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைநகர் தில்லியில் ஒரு நல்ல நாடகம் பார்க்கக் கிடைத்தது. நாடகம் நடப்பது பற்றி தகவல் தந்த தில்லிகை நண்பர் திரு ஸ்ரீதரன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

முழுக் கதையையும் இங்கே சொல்லவில்லையே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம் – அதற்குக் காரணம் இருக்கிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் இந்த நாடகம் நடந்தால் நிச்சயம் சென்று பார்க்கவேண்டுமே என்ற காரணம் தான்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. //முழுக் கதையையும் இங்கே சொல்லவில்லையே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம் – அதற்குக் காரணம் இருக்கிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் இந்த நாடகம் நடந்தால் நிச்சயம் சென்று பார்க்கவேண்டுமே என்ற காரணம் தான்.//
  தில்லி போன்ற நகரங்களில் இது மாதிரி நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு!அதனை பார்த்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள் ஆசியா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா....

   நீக்கு
 2. நாடகத்தின் மையக் கருத்தைச் சொல்லிப் போனவிதமும்
  படங்களும் விளக்கமும் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி! ....

   நீக்கு
 3. சென்னையில் நடக்கும் போது அவசியம் சென்று பார்க்க வேண்டும் .ஒரு வேளை மிஸ் பண்ணி விட்டேனோ ?
  உங்கள் பதிவைப் படித்தவுடன் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது.

  நன்றி பகிர்விற்கு,

  ராஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!....

   நீக்கு
 4. நாடகத்தை யானே நேரில் பார்த்த உணர்வு! தாங்க முடியாத குளிரிலும்பார்!த்தது அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.......

   நீக்கு
 5. கதை சொன்னாலுமே கூட இந்த மாதிரி நாடகங்களை ரசிக்க முடியும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 6. நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.....

   நீக்கு
 7. சூற்பணங்கு கதை தெரியவில்லை, இருந்து நாடகத்தை நீங்கள் விவரித்த விதமே பார்க்கத் தூண்டுகிறது... என்றாவது வாய்ப்பு கிடைத்தால் தவறாது செல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....

   நீக்கு
 8. நேரில் பார்த்த உணர்வைத் தந்தது உங்களின் இப்பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ரவி....

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கந்தசாமி ஐயா.....

   நீக்கு
 10. நலமா?

  நல்லதொரு பகிர்வு வெங்கட்ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி....

   நீக்கு
 11. நாடக விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. பதிவே நடகத்தைப் பார்க்கத் துாண்டுகிறது்.
  எனக்கு அந்த சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் பார்த்து விடுவேன்.
  த.ம. 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி!....

   நீக்கு
 13. //அப்படியே ஒவ்வொரு பகுதியின் வெற்றிக்கு பாத்திரங்களின் நடிப்பும், இசையும் போட்டிபோட்டுக் கொண்டு துணை போகின்றன. முழு நாடகத்திலும் அப்படியே ஊன்றி இருக்க முடிந்தது. நாடகத்தின் முடிவில், நாடக நடிகர்களுக்கும், இயக்குனருக்கும், குழுவினருக்கும் கிடைத்த கைதட்டல் ஓசைகளே நாடகத்தின் வெற்றியை பறைசாற்றியது.//

  நாடகம் பற்றிய விமர்சனம் அருமை. ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!....

   நீக்கு
 14. நாடக விமர்சனம், நாடகத்தை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   நீக்கு
 15. //“அந்த சனியனை அமுத்தி தூரப் போடுங்க! அதாங்க அந்த செல்ஃபோன் சனியனை அமுத்தி தூக்கிப் போடுங்க!” //

  நல்லாத்தான் சொல்லி இருக்காங்க மேடையில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!....

   நீக்கு
 16. நாடக விமர்சனம் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 17. எங்களூர் 'ரங்க ஷங்கரா' வில் இந்த நாடகம் வருமா தெரியவில்லை. வந்தால் கட்டாயம் பார்க்க வேண்டும்.
  மேடை நாடகங்கள் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. உங்கள் பதிவு ஆசையைத் தூண்டிவிடுகிறது.

  பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 18. ஜனவரி 10ம் தேதி மதுரையில் சூர்ப்பணங்கு நடந்த பொழுது பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். மணல்மகுடி குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. ஒவ்வொரு பாகத்திற்கும் இடையில் வரும் கரைதல் போன்ற ஒலி, உடலை உலுக்கும் உறுமியோசை எல்லாமே அற்புதம். பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. உறுமியோசை, இசை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே அருமையாக இருந்தது......

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்திரவீதிக்காரன்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....