திங்கள், 28 ஜனவரி, 2013

ரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா?”

பல முறை பார்த்த கே. பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வாபடத்தினை இக்காலத்திற்கு ஏற்றாற் போல ரீ-மிக்ஸ் செய்து எடுத்த படம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்று வலையில் பல பக்கங்களில் விமர்சனம் வந்தாலும்ஒரு முறை பார்க்கலாம் என விமர்சனம் படித்ததாலும், தில்லியில் வெளியிட்டதாலும் இந்தப் படத்தினை சென்ற புதன் கிழமையன்று பார்த்தேன்.

'கல்யாணம் டு காரியம்’ வரை காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் 'கேக்கேசந்தானம், பவர் ஸ்ரீனிவாசன் மற்றும் வேலையில்லாது வெட்டியாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் சிவா [சேது எனும் புதுமுகம்] ஆகிய மூவரும் இணை பிரியா நண்பர்கள். தண்ணி அடிப்பதிலிருந்து சைட் அடிப்பது வரை எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருக்கும் இந்த நண்பர்களைப் பிரித்துப் போடுகிறார் எதிர்வீட்டில் குடியேறும் அழகியான விசாகா. 

எதிர் வீட்டு ஃபிகரான விசாகா யாருக்கு என போட்டி வந்து மூன்று பேரும் அவரைக் காதலிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள்.  சேது எல்லா வீட்டு வேலைகள் செய்ய, சந்தானம் விசாகாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக் கொள்கிறார்.  பவர் ஸ்டார் விசாகாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக் கொள்கிறார்.  சந்தானம் பல இடங்களில் கொடுக்கும் பஞ்ச்கள் சிரிக்க வைக்கின்றன. சில முகம் சுளிக்க வைக்கின்றன. எதிர் வீட்டு மாமியாக வந்து விசாகாவிற்கு ஐடியாக்கள் தரும் தேவதர்ஷினி கேரக்டரை தவிர்த்திருக்கலாமென தோன்றியது. பவர் ஸ்டாரை பாவம் போட்டு அடிஅடியென அடித்துத் துவைத்திருக்கிறார் வசனங்களால் அவரும் பாவம் எத்தனை அடி வாங்கினாலும் சிரிப்பது போலவே முகத்தினை வைத்துக் கொண்டு காமெடி பண்ணுகிறார்.

பாக்யராஜின் படத்தினைப் பார்த்து ரசித்ததாலோ என்னமோ இப்படத்தின் சில காட்சிகளை ரசிக்க முடியவில்லை. ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகு தாத்தா” போன்ற காலத்தால் அழிக்க முடியாத காட்சிகள் இப்படத்தில் நிச்சயம் இல்லை. அப்போதைய ராதிகாவை விட இப்படத்தின் விசாகா பரவாயில்லை!

பாடல்களும் மனதில் ஒட்டவே இல்லை! இ.போ.வா வில் மலேசியா வாசுதேவன் பாடிய மதன மோக ரூப சுந்தரி” இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆனால் இப்படப் பாடல்கள் நினைவில் நிற்குமா என்பது சந்தேகம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்புவும் வந்து காதல் பற்றிய அட்வைஸ் சொல்லிச் செல்கிறார்!

ஒரு முறை பார்க்கலாம் எனச் சொன்னது போல ஒரு முறை பார்க்கலாம் திரையரங்கில் நல்ல கூட்டம் இருந்து ஆங்காங்கே வரும் கமெண்டுகள் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்!

அது சரி பதிவின் தலைப்பில் ரஜினி கமல் பார்த்த” அப்படின்னு ஏதோ போட்டு இருந்ததே? எனச் சந்தேகமாகக் கேட்பவர்களுக்கு அது ஒரு பெரிய கதைங்க!  

தினம் தினம் நாளிதழில் தில்லியின் PVR CINEMA’S ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா” போட்டிருப்பதைப் பார்த்து விட்டு, போகலாம் என இணையத்தில் முன்பதிவு செய்ய புதன் காலை பார்த்தேன். இருபது பேர் மட்டுமே பதிவு செய்திருக்க, சரி நேராகப் போனாலே கிடைக்குமென [நேரில் 100 ரூபாய், இணையத்தின் மூலம் 115 + சேவை வரி!] மாலை 07.15 காட்சிக்குச் செல்ல முடிவு செய்தேன். தனியாகப் போக வேண்டாமென நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டேன்.

அலுவலகத்திலிருந்து நண்பரது வீட்டுக்குச் சென்று பைக்கை விட்டுவிட்டு, மெட்ரோ மூலம் மாலை 06.35 மணிக்கே தியேட்டர் சென்று நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 07.10 க்குதான் உள்ளே விடுவோமெனச் சொல்ல, வெளியே Veg Burger Combo [190/-], Chicken Burger Combo [200/-], Large Nacho Combo [240/-], Chicken Hot Dog Combo [200/-], Big Tub Combo [240/-]   என எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு [பின்ன இதை விலை கொடுத்து வாங்கவா முடியும்?] படம் பார்க்க காத்திருந்த சிலரை வேடிக்கைப் பார்த்து விட்டு நுழைவு வாயில் திறந்தவுடன் உள்ளே போனோம்.

உள்ளே நுழைந்த பின் திரும்பினால் எங்களுக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டது. காத்திருந்த மற்றவர்கள் வேறு படத்திற்கு வந்தவர்கள் போல! 07.10 தானே ஆகுது, முன்பதிவு செய்தவர்களெல்லாம் மெதுவா வருவாங்களா இருக்குமென நினைத்து எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம்.

படமும் போட்டாச்சு எங்களைத் தவிர ஒரு ஈ காக்கா வரல! மொத்தம் 187 இருக்கைகள் இருக்கிற திரையரங்கில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்! கொஞ்சம் பயமா கூட இருந்தது! நல்ல வேளை காமெடி மூவியா போச்சு இதே ஏதாவது டெரர் மூவியா இருந்தா என்னாவது! ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம் இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!உங்களத் தவிர யாரும் வரல, அதனால காசு திரும்பி தரோம்னு சொல்லியிருந்தா திரும்பி வந்துருக்கலாம். ஆனா படம் பார்த்துட்டுதான் போகணும்னு அடம் பிடிச்சாங்க! 

இதுல இடைவேளையின் போது டை கட்டிய இளைஞர் ஒருவர் வந்து “Sir, Would you like to have Coffee/Tea or anything else?” என்று வேறு கேட்டார்! அவரிடம் இணையத்தில் நிறைய முன்பதிவு செய்யப்பட்டதாகக் காண்பித்ததே என்றால் மக்களைக் கவர நாங்களே இப்படிச் செய்து வைப்போம் என்றார்.  சாப்பிட ஒண்ணும் வேண்டாமெனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ப்ரொஜெக்‌ஷன் அறையிலிருந்து ஹிந்தியில் திட்டியபடியே இவனுங்க என்னத்த வாங்கப் போறானுங்க, அதனால் படத்தைப் போட்டுடலாம்னு சொல்லி படத்தைப் போட்டார். ஒரு காட்சிக்கு சுமார் 30,000 ரூபாயாவது [18700 நுழைவுச்சீட்டு விலை மற்றும் பொருட்கள் விற்பதில் மீதமும்] வந்திருக்க வேண்டியது ஆனால் வெறும் 200 மட்டுமே வந்ததில் கோபமோ!

ரஜினி கமல் ஆகியோருக்கு சந்தானம் தனிக் காட்சி போட்டுக் காண்பித்தாரோ இல்லையோ எங்களிருவருக்கும் அதாங்க எனக்கும் பத்மநாபன் அண்ணாச்சிக்கும் தனிக்காட்சி காண்பித்தார்கள்! அதான் ஒரு கிக்குக்காக இந்த டைட்டில்!

சரி நண்பர்களே.....  மீண்டும் வேறு ஒரு சுவையான அனுபவத்தோடு அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 கருத்துகள்:

 1. நல்ல வேளை இது காமெடி படம். இதுவே ஹாரர் படமா இருந்தா... வடிவேலுவும் சிங்கமுத்துவும் பார்த்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று டைட்டில் வைத்திருப்பீர்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... வடிவேலுவும் சிங்கமுத்தும்! நல்லா தான் இருக்கு உங்க கற்பனை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   நீக்கு
 2. உண்மையில் 2 பேர் மட்டும் எனில் அவர்கள் ஷோ கான்சல் பண்ணிட்டு பணம் திரும்ப தந்துடலாம் அதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு.

  வெறும் 2 பேருக்கு காட்டுவது அவங்களுக்கு செம லாஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயங்கர லாஸ் தான்.... நாங்க கேட்டாலும் திரும்ப வாங்கிக்காம அடம் பிடிச்சா, நாங்க என்ன பண்றது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

   நீக்கு
 3. இதே அனுபவம் எங்களுக்கு யுத்தம் செய்யில். நானும் என் மனைவி மட்டும் தனியாக படம் பார்த்தோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.... உங்களுக்கும் இதே அனுபவமா? எந்த ஊரில்?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   நீக்கு
 4. உங்களுக்கு ஒரு வித்யாசமான அனுபவம் போல இருக்கே. நலவேளை உங்க நண்பரையும் அழைத்து சென்றீர்கள் இல்லாவிட்டால் நீங்க மட்டும் தனியாக பார்த்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசமான அனுபவம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 5. ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம் – இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்! ’/

  கமலின் ஹே ராம் படத்தை நானும் கணவரும் குழந்தைகளும் மட்டுமே ஒரு தியேட்டரில் பார்த்து அனுதாபப் பட்டோம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹே ராம் - அதற்கே இந்த நிலைமை..... எனில் இது பரவாயில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 6. உங்கள் இருவரில் யார் கமல், யார் ரஜினி?

  'கண்ணா லட்டு திங்க ஆசையா?' உங்கள் வாழ்வில் நிறைவேறி விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை... ஆசை தோசை அப்பளம் வடை! நான் சொல்ல மாட்டேனே!

   நான் வெங்கட், அவர் பத்மநாபன் - அது தான் உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா!

   நீக்கு
 7. படத்தை விட படம் பார்த்த உங்கள் அனுபவம் செம
  கலக்கலா இருக்கு . , இதுல யாரு ரஜினி , யாரு கமல் ?
  ஆர்டர்படி? !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை... ஆசை தோசை அப்பளம் வடை! நான் சொல்ல மாட்டேனே!

   நான் வெங்கட், அவர் பத்மநாபன் - அது தான் உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி!

   நீக்கு
 8. இங்கே பஹ்ரைனில் எனக்கு மட்டுமே தனிக்காட்சி காட்டினார்கள் சத்தியமா நம்புங்கப்பா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ!

   நீக்கு
 9. ஆஹா இரண்டு பேருக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சியா..எனக்கு இந்த படம் சுத்தமாய் பிடிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 10. நல்லவேளை துணைக்கு ரஜினியோட (நான் தலையை வச்சுச் சொன்னேன்) போனீங்க. இல்லேன்னா நினைச்சுக் கூட பார்க்க முடியல.
  (ரஜினி - அவர் ஒருவர் படம் பார்த்தால் நூறு பேர் பார்த்ததுக்கு சமம்.)

  பவர்ஸ்டார் ரசிகர்மன்றம் தில்லியில் ஆரம்பிச்சிட்டீங்களாமே, அப்படியா! சொல்லவே இல்லை.

  கண்ணா இன்னொரு லட்டுத் தின்ன ஆசையா! விஸ்வரூபம் அதே மால்-ல் போடறாங்களாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா அண்ணாச்சி, வாங்க!

   படம் பார்க்கும்போது பவர் ஸ்டார் ரசிகர் மன்றம் தில்லில ஆரம்பிக்க சொன்னதே நீங்க தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி

   நீக்கு
 11. படத்தை விட படம் பார்த்த அனுபவம் ஜில்+திகீர்! சுவாரஸ்யம். இப்படி வாய்ப்பது அபூர்வம்தான்!

  உடன் படம் பார்த்த நண்பர் பத்மநாபன் பதிவர் பத்மநாபனா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடன் படம் பார்த்த நண்பர் பதிவர் அல்ல! அவர் கமெண்டுகள் மட்டுமே போடும் சங்கத்தின் தில்லி கிளை தலைவர் [இப்ப பவர் ஸ்டார் ரசிகர் மன்றம் தில்லி கிளை ஆரம்பிக்க யோசனை சொல்றார்!] என்னுடைய பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துகள் எழுதுபவர் தான் பத்மநாபன் அண்ணாச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன் சே!

   நீக்கு
 13. பதில்கள்
  1. ”நீங்க நல்லவரா? கெட்டவரா?” ந்னு கேட்ட மாதிரியே இருக்கு! :)

   நான் ரஜினியும் இல்லை கமலும் இல்லை! - வெங்கட் :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்!

   நீக்கு
 14. enna sir , naanum delhi-la thaan irukken , oru call panni irukkalaam illaya, ippadi thaniyaa poyi maatiteengalae

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... நீங்க தில்லில இருக்கறது தெரியாம போச்சே! :)

   அடுத்த தடவை போகும்போது சொல்றேன்!

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாரியப்பன்!

   நீக்கு
 15. //கொஞ்சம் பயமா கூட இருந்தது! நல்ல வேளை காமெடி மூவியா போச்சு – இதே ஏதாவது டெரர் மூவியா இருந்தா என்னாவது! ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம்//

  சிரிப்பு வந்து விட்டது. இதில் காபி வேறா என்று கேட்டிருப்பது இன்னும் தமாஷ்.
  நீங்களும் விடவில்லை போல் தெரிகிறதே. டிக்கெட் வேறு திருப்பிக் கொடுத்து விடலாம் என்று போயிருக்கிறீர்கள். இது ஸூப்பர்.

  நல்ல புதுமையான அனுபவம் உங்களுக்கு மட்டுமல்ல படித்த எங்களுக்கும் தான்.
  நன்றி பகிர்விற்கு,
  ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுமையான அனுபவம் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு

 16. நாகராஜ் ஜி.... நீங்க பயந்து போய்
  லட்டு தின்னுட்டுவிட்டு
  எங்க எல்லோருக்கும் “அல்வா“ கொடுத்திருக்கிறீர்களே...
  ஆனால் சுவையாகத்தான் இருந்த்து.
  த.ம. 6

  (இனி தயவுசெய்து “அருணா“ என்றே அழையுங்கள். நன்றி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா

   நீங்களும் என்னை வெங்கட் என்றே அழைக்கலாம்! நாகராஜ் எனது தந்தையின் பெயர் சுருக்கம்! :)

   நீக்கு
 17. வித்தியாசமான அனுபவம் இப்படி ரெண்டே பேர் மட்டும் தியேட்டர்ல படம் பாக்கறது. (இங்க பெருமூச்சு!) சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க நண்பரே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 18. ... என எழுதியிருந்ததைப் படித்து விட்டு....//

  நல்லவேளை... இந்த ஒன்றையணா படத்துக்கு டிக்கெட்டோடு போனது செலவு.

  இதுக்கு அன்றைய 'இன்று போய் நாளை வா' படத்தை தேடிப் பிடித்து வீட்டிலேயே பார்த்திருக்கலாம் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இ.போ.நா. வா... படத்தினை இன்னுமொரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 19. புது அனுபவம் போல...
  க.ல.தி.ஆ. பார்க்கலாம் ரகம்தான்... பார்க்க வேண்டிய படம் ரகமில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 20. வித்யாசமான அனுபவம் வெங்கட்ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 21. ஆகா! இரண்டுபேர் மட்டுமா இங்கு பத்துபேருக்கு குறைந்தால் கான்சல்செய்துவிடுவார்கள்.

  லட்டு தின்ன மகள் தன் தோழிகளுடன் போனாள். ரசித்ததாகச் சொன்னாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....