எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 22, 2013

ஃப்ரூட் சாலட் - 34 – குடியரசுத் தலைவர் மாளிகை – காதலர் தினம்இந்த வார செய்தி:

தில்லியின் முகல் கார்டன் இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் தான் பொதுமக்கள் அனுமதிக்கப் படுவார்கள். இதனால் தமிழகத்திலிருந்து தில்லிக்கு சுற்றுலா நோக்கத்துடன் வரும் பயணிகளால் முகல் கார்டனின் அழகைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடிவதில்லை என்ற குறை எப்போதும் உண்டு. இதைப் போக்க ஒரு வழி பிறந்திருக்கிறது. நீங்கள் எந்த சமயத்தில் வந்தாலும், குடியரசுத் தலைவர் மாளிகையையும், முகல் கார்டனையும் பார்க்க முடியும்.  

சமீபத்தில், அதாவது திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு சில பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்களும் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்.  அதுவும் இதற்கான வழிமுறைகளும் சுலபமாக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் தில்லிக்கு எந்த சமயத்தில் வந்தாலும் முன்கூட்டியே குடியரசுத் தலைவர் மாளிகையைக் காண முன்பதிவு செய்து கொள்ள முடியும் – அதுவும் இணையத்தின் மூலமாகவே. குடியரசுத் தலைவரின் இணைய முகவரியில் இதற்கான சுட்டி இருக்கிறது. இங்கே சென்று நீங்கள் செல்ல விரும்பும் நாளில் தேவையான நேரத்தினையும் தெரிவு செய்து விவரங்கள் அளித்து முன்பதிவு செய்ய வேண்டும். இரண்டு நாட்களில் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யப்பட்டதன் விவரம் வந்து சேரும்.

வாரத்தில் மூன்று நாட்கள் – அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த ஏற்பாடுகள் உண்டு. இந்த தளத்திலேயே எந்த வழியாக செல்வீர்கள், அங்கே என்ன காண முடியும், செல்லும் போது என்ன பொருட்கள் எடுத்துக் கொண்டு போகக் கூடாது ஆகிய விவரங்களும் இருக்கின்றன.

என்ன அடுத்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை ஒரு ரவுண்ட் சுற்றி வருவீர்கள் தானே!    

இந்த வார முகப்புத்தக இற்றை:

நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும் போது அழுகிறார்கள்! நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் தாம் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்.


இந்த வார குறுஞ்செய்தி

ACCORDING TO A RESEARCH 87% OF YOUNG PEOPLE HAVE BACK PAIN. THE OTHER 13% HAVE NO COMPUTER!

ரசித்த புகைப்படம்: 


ரொம்பவே பசிக்குது போல. திறந்த வாயை மூடலையே?  ப்ளீஸ் யாராவது கொஞ்சம் உணவு கொடுங்களேன்....என்று கேட்பது போல இருக்கு! சரியான நேரத்தில் எடுத்த படம்!
  

ரசித்த காணொளி:

காதலர் தினம் என்று கவிதைகள், கதைகள் என நிறைய விஷயங்கள் எல்லோரும் எழுதியாயிற்று. நான் ஒன்றுமே எழுதவில்லையெனில் காதல்னா என்ன விலை? என்று கேட்கும் ஆளென நினைத்து விடுவார்கள். காதலர் தினம் சமயத்தில் SBI Life Insurance விளம்பரம் அடிக்கடி வந்தது. எனக்கு மிகவும் பிடித்த விளம்பரங்களில் இதுவும் ஒன்று. பாருங்களேன் இந்த முதியவர்களின் காதலை!
ரசித்த பாடல்:

ரசித்த பாடலில் எப்பவும் ரொம்ப பழைய பாடல் தான் போடுவீங்களா,  என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காகவே இந்தப் பாடல். வாகை சூடவா படத்திலிருந்து ‘சர சர சாரக்காத்து வீசும்போதுபாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். நீங்களும் ரசிக்க ஏதுவாய் இங்கே! 


 

படித்ததில் பிடித்தது:

தமிழகம் எங்கும் டாஸ்மாக் திறந்து குடிமக்களை ‘குடிமக்களாக மாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தக் கவிதை உங்களுக்காக. அதில் இருக்கும் உண்மை புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே :(

எழுதப்பட வேண்டும்
சாராயக் கடை நுகர்வோர் பற்றியும்
அடகுக் கடை வந்து போகும்
பெண்களைப் பற்றியும்
சாராயக் கடைக்கும்
அடகுக் கடைக்கும்
இடையே இருக்கும்
மறைவான சுரங்கப் பாதை பற்றியும்.

-          இரா. உமா மகேஸ்வரி.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. பார்த்தேன், படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இந்த முறை ரசிக்கும் படி இல்லையா? :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. உண்மையான முகப்புத்தக இற்றை...

  கவிதை புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும் போது அழுகிறார்கள்! நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் தாம் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்..- வாழ்க்கைத் தத்துவம் ..

  ஃப்ரூட் சாலட் ருசிக்கவைத்து ரசிக்கவும் வைத்தது ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. ருசியான சத்தான சாலட்,

  உமா மகேஸ்வரியின் கவிதை கனமானது.

  காணொளியை இன்னிக்குக் காலையிலும் பார்த்தேன். பாட்டியின் முகத்தில் தென்படும் வெட்கம்... அடடா!!. கவிதை :-))

  ReplyDelete
  Replies
  1. அதுவும் அந்தப் பாட்டி வெட்கப்படும்போது இன்னும் அழகா தெரிவாங்க! :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 5. புகைப்படமும் காணொளியும் அருமை... கவிதை மனதை வருடுகிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 6. என்ன அடுத்த பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை ஒரு ரவுண்ட் சுற்றி வருவீர்கள் தானே! //

  உண்மை ,கண்டிப்பாய் ஒரு ரவுண்ட் சுற்றி வருவோம், நன்றி.
  சர சர காத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நடிகை இனியா என்று தான் நினைக்கிறேன், அந்த பாட்டுக்கு அவரின் முகபாவம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
  ஃப்ரூட் சாலடில்- பகிர்ந்து கொண்ட அனைத்து விஷ்யங்களும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   அந்த நடிகை - இனியா என்று தான் நானும் நினைக்கிறேன் - நமக்கு இந்த தளத்தில் அறிவு கொஞ்சம் கம்மி! :)))

   Delete
 7. ஆஹா! அப்போ ஃபிப்ரவரியில் தவற விட்டதை மே மாதத்தில் பார்க்கலாம். ஆனால் பூக்கள் இருக்காதே....:(

  குறுஞ்செய்தி, இற்றை, காணொளி, புகைப்படம், கவிதை என அனைத்துமே அருமை...

  ReplyDelete
  Replies
  1. அந்த சீசனுக்கான பூக்கள் இருக்கலாம்.... சோ, பார்க்கலாம்! :)

   நன்றிங்கோ!

   Delete
 8. ரொம்ப சூப்பரா இருக்குது உங்களுடைய ப்ரூட் சாலட்......உங்களுடைய கவிதை மனதிற்கு மிக கடினமாக உள்ளது......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 9. மொகல் கார்டன் மற்றும் குடியரசு தலவர் மாளிகையை சுற்றி பார்க்கலாம் என்கிற தகவலுக்கும்,சுட்டிக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

  குறுஞ்செய்தி,முகப்புத்தக இற்றை,காணொளி புகைப்படம் அனைத்துமே மிக அருமை.

  கடைசி கவிதை சிறப்பாக இருக்கு.

  மொத்தத்தில் ஃபுருட் சாலட் சுவையான கலவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 11. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இரண்டு டிக்கெட் ப்ளீஸ்.

  //நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும் போது அழுகிறார்கள்! நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் தாம் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்.//

  உண்மை! அருமை!

  புகைப்படம் - எம்மாம் பெரிய வாயி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   சொல்லுங்க போயிடுவோம் ஒரு நாளைக்கு :))))

   Delete
 12. சுவையான பழக்கலவை!
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 13. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 15. ஃப்ரூட் சாலட் ரசிக்க வைத்தது ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஜி!

   Delete
 16. செய்தி , புகைப்படம் என அனைத்தும் சிறப்பு.

  ‘சர சர சாரக்காத்து....." எனக்கும் பிடித்த பாடல்.

  குருவிக்குஞ்சுகள் படம் நன்றாக இருக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 17. முகல் கார்டன் பார்க்க, திருப்பதி போல முன்பதிவு செய்து கொள்ளலாம் போல!

  இற்றை சிந்திக்க வைக்கிறது... நாம் யாரை எப்படி வைத்திருக்கிறோம் என்று.

  sms சிரிக்க வைக்கிறது!

  பு.ப : "நீ வர்ற வரைக்கும் தான்காதும்மா.... அங்கேருந்தே த்ரோ பண்ணு... "

  உமா மகேஸ்வரி கவிதையை தினமணி கலாரசிகன் பகுதியில் படித்தேனோ?

  ReplyDelete
  Replies
  1. உமா மகேஸ்வரி கவிதை - தினமணியில் படித்தது தான். - ‘படித்ததில் பிடித்தது!”

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. செய்தி, பயனுள்ள தகவல். பகிர்ந்த புகைப்படம் அருமை. வழக்கம் போல் அருமையான தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி

   Delete
 19. இந்த வார முகப்புத்தக இற்றை:

  நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும் போது அழுகிறார்கள்! நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் தாம் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்.  உண்மையான வரிகள் நண்பரே
  உங்கள் ரசனைகள் அனைத்தும் அருமை ....


  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 20. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

  //நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ அவர்கள் தான் நாம் இறக்கும் போது அழுகிறார்கள்! நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ அவர்கள் தாம் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்.//

  உண்மையான வாழ்க்கைத் தத்துவம். ;)

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் பிடித்தது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 21. ஃப்ரூட் சாலட் - 34 – குடியரசுத் தலைவர் மாளிகை – காதலர் தினம் wonderful.
  ஆனால் "இந்த வார முகப்புத்தக இற்றை:" தான் man of the match நைனா.
  All the very best for your future blogs.

  vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....