எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 14, 2013

ஃப்ரூட் சாலட் – 49 – ஏழைகளின் வக்கீல் – என்னை மறந்துடு - ராணிஇந்த வார செய்தி:

1983:  கோபிந்த் மோகன் [G]கோஷ் – ஒரு இசையில் ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞர்.  இசையில் சாதிக்க வேண்டிய ஆர்வத்துடன் இருந்த இவருடன் விதி விளையாடியது. இரண்டு பேரைக் கொன்ற பழி. தன் மீது தவறில்லை என இவர் சொன்னாலும் கிடைத்தது சிறைத் தண்டனை. வக்கீல்களின் மூலம் தனது வழக்கினை நடத்தும் போது சந்தித்த விஷயங்கள் இவரை சட்டம் படிக்க உந்து கோலாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்து சட்ட கல்லூரியில் சேர்ந்தார். 1986-ஆம் ஆண்டு LLB படித்து முடித்தார்.

அவருடைய வழக்கும் கீழ்கோர்ட், மேல் கோர்ட், உச்ச நீதிமன்றம் என இழுத்துக் கொண்டிருந்தது. தானே சட்டம் படித்ததால் தனது வழக்கினை தானே நடத்த யோசித்தபோது மூத்த வக்கீல்கள் தடுக்க, உச்ச நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. தான் படித்த சட்டப் படிப்பு மற்ற ஏழை கைதிகளுக்கு உதவியாக இருக்கட்டுமே என சிறைக்குள்ளேயே உதவி செய்து வந்தாராம்.  

ஆயுள் தண்டனையாக 14 ஆண்டுகள் ஒன்பது மாதம் கழித்து விடுதலை பெற்ற பிறகு முழு நேர வக்கீல். ஏழைக் கைதிகள் எவரிடமும் கட்டணம் வாங்காது சட்ட உதவிகள் செய்து வருகிறார். தனது வருமானத்திற்கு அவர்களுடைய குடும்பத்தின் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அதனால் தான் நான் இவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்குவதில்லை எனச் சொல்லும் இவர் தற்போது கொல்கத்தா உயர் நீதி மன்றத்தின் அருகே அலுவலகம் வைத்து இருக்கிறார்.

சட்டத்தின் பிடியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டபின் தளர்ந்து விடாது, சட்டம் படித்து மற்றவர்களுக்கு உதவும் இவருடைய தன்னம்பிக்கையும் முயற்சியும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் இவரது சேவைகள்.  திரு [G]கோஷ் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

PATIENCE IS NOT AN ABILITY TO WAIT, BUT THE ABILITY TO KEEP A GOOD ATTITUDE WHILE WAITING.

 அடுத்த முறை எங்கேயாவது காத்திருக்க வேண்டியிருந்தால் இதை நினைத்துக் கொள்ளுங்கள்!

இந்த வார குறுஞ்செய்தி

அம்மா தனது மகனுக்குச் சொன்ன பாடம்: “LOVE YOUR FRIENDS…  NOT THEIR SISTERS AND LOVE YOUR SISTER, NOT HER FRIENDS….”  ஆனா பாதி பசங்க பண்றது எப்பவுமே உல்டா தான்! :)

ராஜா காது கழுதை காது: 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு பெண் கை கொண்டு காது மூடிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடக்கும் போது கேட்டது – “நமக்குள்ள இதுவரைக்கும் என்ன நடந்ததோ, அதெல்லாம் போகட்டும். இனிமே நமக்குள்ள ஒண்ணும் கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. கல்யாணம் ஆனபிறகு எனக்கு எல்லாமே என் கணவர் தான். அதனால என்ன மறந்துடு!.  தொந்தரவு பண்ணாதே!”.

நமக்குள்ளே ஒண்ணுமே நடக்கலையேன்னு கேட்க நினைத்தேன் – பிறகுதான் புரிந்தது அப்பெண் பேசியது என்னுடன் அல்ல! அலைபேசியில் :)

ரசித்த காட்சி:

எல்லா வீட்டுலயும் பெண்ணுக்கு தலை வாரி விடும்போது ஒரு மஹாபாரத யுத்தமே நடக்கும் – அம்மாவுக்கும் பெண்ணுக்கும். இங்க பாருங்க ஒரு அப்பா தலை வாரி விடறார் பெண்ணுக்கு. எவ்வளவு சந்தோஷமா பொண்ணு தலை வாரிக்கிறா....  ஆனா நிச்சயம் இது மாதிரி பண்ணக் கூடாது. ஆபத்து நிறைந்த விஷயம். யாரும் முயற்சிக்காதீங்க. பார்க்க மட்டுமே.....  முயற்சி செய்ய அல்ல.

T-Shirt வாசகம்:

சென்ற ஃப்ரூட் சாலட் பகுதியில் ஒரு T-Shirt வாசகம் வெளியிட்டது நினைவிருக்கலாம். அதற்கு நேர் மாறான இன்னுமொரு வாசகம். இதுவும் ஒரு கணவனின் T-Shirt-ல் தான் எழுதப்பட்டிருந்தது என்பதை கவனிக்கவும்!

ALL GIRLS ARE DEVIL BUT MY WIFE IS QUEEN......

. . . . . . . OF THEM..:-

படித்ததில் பிடித்தது:

சமையல் செய்து கொண்டிருக்கும் மனைவி: “என்னங்க....  ஷெல்ஃப்ல இருந்து உப்பு எடுத்துக் கொடுங்க.....

பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவன், முனகிக் கொண்டே வந்து, ஷெல்ஃப் முழுவதும் தேடிய பிறகு:  ‘இங்கே இல்லையேம்மா.....

மனைவி:  சரியான குருடு. உங்களுக்குக் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். அதனால நான் முன்னாடியே எடுத்து வைச்சுக்கிட்டேன்!

கணவன்:  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... 

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. குறுஞ்செய்தி சூப்பர்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 2. படித்ததில் பிடித்ததும் சூப்பர்....இந்த கால மனைவிகள் இப்படித்தான் கணவனை வாட்டி வதக்குகிறாங்க.... ஹைய்யா இதை இங்கே தைரியமா சொல்லலாம் ஏன்னா என் மனைவி இங்க வரமாட்டங்க ஹீ.ஹீ

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இங்க வரமாட்டாங்கன்னு தைரியமா... காபி பேஸ்ட் பண்ணி உங்க பக்கத்தில போட்டுட வேண்டியது தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 3. இந்த வாரம் ப்ருட் சாலட் மிக மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 4. நல்லவேளை... மனசுல நினைச்சதோட நின்னுட்டாரு... அந்தப் பொண்ணுகிட்ட நினைச்சத கேட்ருந்தா, ராஜா காது மட்டும் கழுதைக் காதில்ல.. கன்னமும் ஆப்பக் கன்னமாயிருக்கும்! ஹா... ஹா...! கடைசி ஜோக்.... கர்ர்ர்ர்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... இப்படி ஒரு ஆசை வேற இருக்கா உங்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. சிறப்பான செய்தியுடன் ஃப்ரூட் சாலட் அனைத்தும் நல்ல சுவை...

  தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி.

   Delete
 7. சுவையான மனமான சத்தான
  சாலட்டை படித்து ரசித்தேன்
  காணொளியும் பழமொழியும் அருமை
  தான் பாதிக்கப்பட்டதைப் பற்றியே எண்ணி
  நொந்து திரியாது இதுபோல் அடுத்தவர்கள்
  குறிப்பாக ஏழைகள் பாதிக்கப்படக்கூடாது என
  செயல்படும் அந்த வழக்குரைஞர் மிகவும்
  பாராட்டுக்குரியவர்,
  அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. ரசித்தகாட்சி அருமை..  ஃப்ரூட் சாலட் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 11. பூங்கொத்து வாசம் அருமை...,
  குறுஞ்செய்தி வாசகமும் அருமை...,
  அப்பா தலை பின்னிவிடுதல் அருமையிலும் அருமை..,
  ஜோக் உங்க வீட்டுல நடக்கலைன்னா இன்னும் அருமை..,

  ReplyDelete
  Replies
  1. ஆஹா எங்க வீட்டுல இது வேற நடக்கணுமா! :) ஆசை தான் உங்களுக்கு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. ”நமக்குள்ளே” ஒண்ணுமே நடக்கலியே
  >>
  இது ஆதங்கமா? இல்ல ஆற்றாமையா?!

  ReplyDelete
  Replies
  1. ஆதங்கமும் இல்லை. ஆற்றாமையும் இல்லை! வெறும் தகவல்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 13. ப்ரூட் சாலட் சுவையோ சுவை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 14. திரு கோஷ் அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு பூங்கொத்து.
  காத்திருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் - எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
  கானொளியில் அந்த இயந்திரம் vaccum cleaner - ஆ?
  குறுஞ்செய்தி புன்னகைக்க வைத்தது.
  நாள் சுவையான ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. வாக்வம் க்ளீனர் தான் மா அது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 15. இதேபோல மும்பையில் தீவிரவாதி என கைதுசெய்யப்பட்டு பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்ட ஒருவரும் சட்டம் பயின்று தன்னைப்போன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
  ஜோக் எடுத்து பேஸ்புக்ல போட்டுடலாம்னு யோசனை.

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவலுக்கு நன்றி ஷாஜஹான் ஜி!....

   ஜோக் எடுத்து போடுங்களேன்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 16. ஃப்ரூட் சாலட்டை ருசிச்சாச்சு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 17. சத்தான சாலட்..

  மோகன் கோஷின் முயற்சி பாராட்டப்படத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 19. ரஸித்தேன். பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 21. திரு. மோகன் கோஷ் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்! பொன்மொழி பிரமாதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 22. டீ ஷர்ட் கடைசி வார்த்தை 'of them' சூப்பர் பஞ்ச்

  ReplyDelete
  Replies
  1. அது தான் பஞ்ச்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 23. குறுஞ்செய்தி அசத்தல்.

  ராஜா காது ஹா..ஹா....

  சென்றவாரம் காலை பிசியான வீதிகள் நானும் அதனூடே..... பின்னால் " கருமாரிக்குத்தான் வருவியா..... ரிப்பீட்.... ரிப்பீட்..... ரிப்பீட்... பலத்தசத்தமாக.......நீ இப்போ நல்லா மாறிட்டே...... " நான் திகைத்துத்தான் போனேன் இந்த நெருக்கடியில் கத்துவது யாரு என யோசித்தபடியே நடக்கின்றேன்.... என்னை முந்தி காதில் செல்போனுடன செல்கிறாள் இளம் பெண் ஒருத்தி.

  செல்போன் அம்பலமாகிறது நடுவீதியில் :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   செல் ஃபோன் தொல்லைகள் - நிறையவே மாதேவி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....