எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 21, 2013

ஃப்ரூட் சாலட் – 50 – உடைந்த மேகம் - கொஞ்சம் நடிங்க பாஸ் - காதல் கடிதம்

இந்த வார செய்தி:

உத்திராகண்ட் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அழிவு பற்றி அனைவரும் படித்து/பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். கங்கைக் கரையில் கட்டப்பட்டிருந்த சில கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதை பார்க்கும்போது இயற்கையின் சீற்றமும், வலிமையும் மனிதர்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

கங்கைக்கு இத்தனை அருகில் கட்டிடங்கள் கட்ட அனுமதி தந்தது யார் குற்றம் என்ற கேள்வியெல்லாம் இங்கே கேட்கப் போவதில்லை. இன்று நாம் பார்க்கப் போவது இந்த இயற்கையின் சீற்றத்தில் சிக்கி, 7 மணி நேரம் பல போராட்டங்களுக்குப் பிறகு தப்பித்த ஒரு சென்னை இளைஞனைப் பற்றி தான். சென்னையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் இளைஞர் சரவணனுக்கு புனிதப் பயணம் செய்வது பிடித்த விஷயம். சென்ற வரும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வந்த சரவணன் இந்த வருடம் சென்றது பத்ரி-கேதார் யாத்திரை.

பார்க்க வேண்டிய இடங்கள் பார்த்து விட்டு ஹரித்வார் திரும்ப ஒரு காரில் ஏறி வரும்போது வழியெங்கும் சாலைகள் பல இடத்தில் அடித்துச் செல்லப் பட்டு இருந்தது. ஒரு இடத்திற்கு மேல் முன்னேயும் செல்ல முடியாது, பின்னேயும் செல்லமுடியாது போகவே அருகில் இருந்த காட்டு வழியே பக்கத்தில் இருக்கும் ஹெலிபேட் செல்ல முடிவு செய்திருக்கிறார். அங்கே கிராமத்தில் இருக்கும் நந்தா எனும் நபரும் தன்னுடைய குடும்பத்தினர் இருக்கும் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க, இருவருமாகச் சேர்ந்து மலைகளைக் கடந்து செல்ல முடிவு செய்து பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடுமையான பயணம் – வழியெங்கும் விஷச் செடிகள், கிடுகிடு பள்ளம், தடுக்கி விழுந்தால் அகால மரணம் சம்பவிக்கும் பயம், வழுக்கிவிழும் அபாயம் என எதுவுமே இவர்களை பயமுறுத்த வில்லை போல...  சரவணன் சற்றே தவறும்போதெல்லாம், நந்தா இவருக்கு உறுதுணையாக இருந்து 7 மணி நேர கடும் மலையேற்றத்திற்குப் பிறகு தனியார் மின்நிலையத்துக்குச் சொந்தமான ஹெலிபேட் வந்தடைந்துள்ளார்கள். அங்கும் நிலமை ரொம்பவே மோசமாகத் தான் இருந்திருக்கிறது. மூன்று நான்கு மணி நேரத்திற்கு மேல் அந்த இடத்திலும் இருக்க முடியாது என நந்தா தெரிவிக்க, மேலே சென்ற ஹெலிகாப்டர்களை நோக்கி இரண்டு பேரும் கையசைத்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களை பார்க்கவில்லை!

பின்னர் வந்த இராணுவ ஹெலிகாப்டர் இவர்களைப் பார்த்து மீட்க, எல்லாம் சுபம்! இளைஞர் சரவணன் மற்றும் அவருக்கு உதவிய நந்தா ஆகிய இருவரின் விடாமுயற்சியைப் பாராட்டுவோம். இயற்கைக்கு மரியாதை அளிப்போம்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்க்கை என்பது ரோஜா செடி மாதிரி.....  முள்ளைக் கண்டு தயங்கி விடாதே. பூவைக்கண்டு மயங்கி விடாதே!

இந்த வார குறுஞ்செய்தி

DON’T GUESS A PERSON’S CHARACTER ON HIS PRESENT SITUATION. BECAUSE, TIME HAS THE POWER TO CHANGE AN ORDINARY COAL INTO A PRECIOUS DIAMOND.

ரசித்த பாடல்: 

ரிஷிமூலம் படத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். அவர்கள் குரலில் ஒரு பாடல் – “ஐம்பதிலும் ஆசை வரும்”.  சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடிப்பில்.... 
அது சரி இந்தப் பாட்டு இன்னிக்கு எதுக்கு! உங்களுக்கு ஐம்பது வயசாயிடுச்சா? இல்லை இப்படி எதாவது ஆசை வந்திடுச்சா?அப்படின்னு எல்லாம் கோக்குமாக்கா கேள்வி கேட்கக்கூடாது! இன்னிக்கு ஐம்பதாவது ஃப்ரூட் சாலட்! அதனால் ஐம்பதுன்னு வர பாடல்! அவ்வளவு தான்! :)

ரசித்த காட்சி:

குழந்தைகளின் சிரிப்பில் மயங்காதவர்கள் யார்! அதுவும் எதற்குச் சிரிக்கிறார்கள் எனத் தெரியும் போது கிடைக்கும் மகிழ்ச்சி!  பாருங்களேன் நீங்களும்.....


கொஞ்சம் நடிங்க பாஸ்:

ஆதித்யா டி.வி.யில் நிகழ்ச்சிகளுக்கு நடுநடுவே வரும் “கொஞ்சம் நடிங்க பாஸ்சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.  வசனம் கொடுத்து பலரிடம் நடித்துக் காண்பிக்கச் சொல்கிறார்கள். வசனம் பேசும் பலரைப் பார்க்கும் போது ரசிக்க முடிகிறது! நேற்று “நான் உன்னை கொஞ்ச நாளாவே பார்க்கிறேன். உன்ன எனக்குப் பிடிச்சுருக்கு. I think I am crazy about you. நான் உன்னை லவ் பண்ணறேன்னு நினைக்கிறேன்!இப்படியெல்லாம் வசனம் கொடுத்து பல பெண்களை நடிக்க வைத்தார்கள். சில சமயங்களில் வீர வசனங்கள், சில சமயங்களில் காதல் என நன்றாகவே இருக்கிறது. வசனம் பேச முடியாமல் தடுமாறும்போது தான் நகைச்சுவையே!

காதல் கடிதம் எழுதுங்க!:

திடம் கொண்டு போராடும் சீனு தனது வலைத்தளத்தில் காதல் கடிதம் எழுதுங்க என அழைத்து ஒரு போட்டியும் வைத்திருக்கிறார். யார் யாருக்கு காதல் கடிதம் எழுத நினைத்திருந்தீர்களோ, அடி கிடைக்குமோ என பயந்து எழுதாமல் விட்டீர்களோ, அதையெல்லாம் எழுதிட இப்போது ஒரு வாய்ப்பு! போட்டி பற்றிய விவரங்கள் அவரது தளத்தில். அது இல்லாம காதல் கடிதம் எழுதினால், அது தேர்வு செய்யப்பட்டால் பரிசு வேற தரபோறார் சீனு! அதுனால உங்க கற்பனைக் குதிரையை தட்டி விடுங்க! என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. சரவணன் & நந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ஐம்பதாவது ஃப்ரூட் சாலட் + பாட்டும் சூப்பர்...!

  காதல் நண்பரின் காதல் ஆசையோடு முடித்த ஃப்ரூட் சாலட் நல்ல சுவை....!

  தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கும் வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கும் மனமார்ந்த நன்றி.....

   Delete
 2. ப்ருட் சாலட் வழக்கம் போல அருமை

  மரணச் செய்தியை முதலில் படித்து மனம் அதிர்ந்த எனக்கு இறுதியில் வந்த காதல் செய்தி மகிழ்ச்சியை கொடுத்தது.. நானும் காதல் கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் அது எழுத எனக்கு ஒரு காதலி தேவை......

  ReplyDelete
  Replies
  1. காதலிக்க ஆள் தேவைன்னு ஒரு கடிதம் எழுதிப் பாருங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்...

   Delete
 3. இன்னிக்கு ஃப்ரூட் சாலட் நல்லாவே இருக்கு சகோ!

  ReplyDelete
  Replies
  1. பகிர்வினை ரசித்த சகோ ராஜிக்கு நன்றி!

   Delete
 4. ஐம்பதிலும் ஆசை வரும் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் என் கலெக்‌ஷன்ல இருக்கு அந்த பாட்டு

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்களுக்கும் பிடித்த பாடலா? மகிழ்ச்சி ராஜி!

   Delete
 5. பத்ரி-கேதார் யாத்திரை நாங்கள் போன போது இருந்தவைகள் இப்போது இல்லை என்று நினைக்கும் போது மனம் மிகவும் வருத்த்ம் அடைகிறது. மீண்டும் பகதர்கள் வணங்க போக மூன்று வருடங்கள் ஆகும் என்று சொல்வதை கேட்கும் போது எவ்வளவு சேதம், பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று வருத்தம் ஏற்படுகிறது.
  கேதார் நாத் கோவில் அருகில் இருந்த சங்கரமடம், அதன் அருகில் இருந்த அன்னதானமடம், அங்கு உல்லாசமாய் சுற்றி பறந்த குருவிகள், எல்லாம் என்னவாகி இருக்கும்? மக்களை சுமந்து சென்ற குதிரைகள என்னவாபிற்று? பாதுகாவலுக்கு நின்ற 50 காவலர்கள் காணோம், கோவிலுக்குள் சென்ற 300 பக்தர்கள் தவிர , வெளியில் இருந்த பக்தர்கள் காணோம் என்கிறார்கள்.
  சரவணன் நந்தா இருவரும் விடாமுயற்சியால் தப்பி வந்தமைக்கு வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

  ஐம்பதாவது ஃப்ரூட் சாலட்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் மனிதர்களையே காப்பாற்றுவதில் பிரச்சனை இருக்க, குதிரைகளையும் குருவிகளையும் பற்றி யாரும் யோசித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் இறப்பு, பல கோடி ரூபாய் சேதாரம் என ஒவ்வொன்றும் தெரியும்போது பதற்றமும் மனிதர்களின் மேல் கோபமும் அதிகரிக்கிறது - இயற்கையை மதிக்க மறந்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete
 6. ஆதித்யாவுல அந்த நிகழ்ச்சி எனக்கும் ரொம்பப் பிடிச்சது வெங்கட்! நடிக்க வராம தப்பா டயலாக் பேசிட்டதும் ஒவ்வொருத்தர் முகத்துலயும் வர்ற வெட்கம் கலந்த சிரிப்பு... ரொம்பவே ரசனை! ஐம்பது சாலட் போட்டாச்சா? இன்னும் நிறைய சாப்பிடணும்னு ஆசைதான் வருது! தொடருங்க... வாழ்த்துக்கள்!

  அதுசரி... ஸ்ரீரங்கத்துல இருக்கறவங்களுக்கு புதுதில்லில இருந்து ஒரு காதல் மடல் எழுதி நீங்க சீனுவோட போட்டில கலந்துக்கலாம்ல?

  ReplyDelete
  Replies
  1. சீனுவோட போட்டில கலந்துக்கணும்.... ரொம்ப யோசிச்சா குணா மாதிரி ஆயிடுவேனோன்னு பயமா இருக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 7. விடாமுயற்சியைப் பாராட்டுவோம். இயற்கைக்கு மரியாதை அளிப்போம்!

  ஐம்பதாவது ஃப்ரூட் சாலட்டுக்கு
  வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. நன்றி! மீண்டும் இன்னொரு கப் ப்ரூட்சாலட் தருக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 9. ஒருபக்கம் கொடும் வெயில்... மறுபக்கம் கடும் மழை... இயற்கையை புரிஞிக்கவே முடியலை... கொஞ்சம் நடிங்க பாஸ் நானும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.... சீனுவோட காதல் கடிதப் போட்டியில் நானும் இருக்கேன்.....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... போட்டியில் நீங்களும் இருக்கீங்களா... வெற்றி பெற வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 10. அழகான பாடல் அதையும் சாலட்டுக்கு பொருத்தமாக மாற்றிய விதம் சிறப்பு.
  வீடியோ இயங்கவில்லை என்க்கு மட்டும் தானா ?
  ப்ரூட் சாலட் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வீடியோ இயங்கவில்லை..... பகிர்ந்தவர் எடுத்து விட்டார் போல. இப்போது வேறு ஒரு இணைப்பினை கொடுத்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. உத்திராகண்ட் வெள்ளப் பெருக்கு மிகுந்த சோகத்தை உண்டாக்கி உள்ளது... வடமாநிலங்களில் பெய்யும் அளவிற்கு தென்மாநிலங்களில் மழை இல்லை என்பதும் வருந்தத்தக்கது...

  ReplyDelete
  Replies
  1. ஒரு இடத்தில் மழையினால் சேதம் - மற்றொரு பகுதியில் மழையில்லாது சேதம்.... வருத்தம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 12. ஃப்ரூட் சாலட் 50!! வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடரட்டும்
  இதுவும் சிறப்பானதே .காதல் கடிதம் வரைந்தால் பரிசு கிடைக்குமா ?...!!!
  சொக்க நாதா.... அவருக்கே எழுதிட வேண்டியது தான் பார்வதியம்மா
  பகைகாத வரைக்கும் கடிதம் தொடரும் என்னும் முக்கிய அறிவித்தலைச்
  சொல்லிவிடுங்கள் சகோ :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.....

   Delete
 13. ஃப்ரூட் சாலட் வழமைபோல் அருமை. ஆனாலும் உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு மனதுயரை பெருக்குகிற சம்பவம்.
  நிச்சயமா உங்களுக்கு ஐம்பது இன்னும் ஆகலை என்பதை நம்புகிறேன்...:0

  அனைத்தும் அருமை. நல்ல பகிர்வு சகோ.
  வாழ்த்துக்கள்!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. 50 - இன்னும் ஆகலை நிச்சயமா.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. கேதார்நாத் சாதாரண நாட்களிலேயே போகும் போது திக் திக் என்று இருக்கும். இந்த நிலைமையில் அங்கே மாட்டி கொண்டவர்களை நினைத்து பார்க்கவே முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மாட்டிக்கொண்டவர்களின் நிலை ரொம்பவே மோசம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 15. ஐம்பதாவது ஃப்ரூட் சாலட்டுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

   Delete
 16. பதிவில் ஒரு 'ட' விட்டுப் போயிருக்கு. எங்கேன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்! :))))

  சரவணனுக்கும் நந்தாவுக்கும் இறைவன் அருட்பார்வை இருந்திருக்கிறது! பாராட்டுகள் அவர்களது விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும்!

  இளையராஜா இசையில் ஐம்பதிலும் ஆசை வரும் ரசிக்கத் தக்கது!

  ReplyDelete
  Replies
  1. பதிவில் ஒரு ட விட்டுப் போயிருக்கு! அடடா எங்கே! கண்டுபிடிக்க முடியலையே.... சொல்லுங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. 50 வது சாலட்டுக்கு வாழ்த்துக்கள்... உங்கள் ஐம்பதில் ஸ்பெஷல் ஆக பரிசுப் போட்டி குறித்து அறிவித்தமைக்கும், பங்கு கொள்வதாய் கூறியமைக்கும் ஸ்பெஷல் நன்றிகள் சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 18. அத்தனை ப்ரூட் சாலட் பதிவுகளும் ரசிக்கும்படியாகவே இருந்தது - இந்தப் பாட்டு கஷ்டப்படுத்துதே?

  ReplyDelete
  Replies
  1. அடடா பாட்டு கஷ்டப்படுத்திடுச்சா.... ஐம்பது என்று வருவதால் மட்டுமே பகிர்ந்தேன்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 19. சரவணன் மற்றும் நந்தாவின் விடாமுயற்சி வியக்க வைக்கிறது. ஐம்பதாவது ஃப்ரூட் ஸாலட்டுக்கு வாழ்த்துகள் வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 20. கேதார்நாத் சம்பவங்கள் பார்த்துப் பார்த்து வெம்பிய மனதுக்கு உங்கள் நற்செய்தி
  ஒரு இனிப்பு சாப்பிட்ட உணர்வு. மிக நன்றி வெங்கட்.
  நீங்கள் காதல் கடிதம் எழுதவில்லையா.:)

  நந்தா சரவணன் தோழர்களின் விடாமுயற்சிக்கும், உங்களது ஐம்பதாவது ஃப்ரூட்சாலடுக்கும் வாழ்த்துகள். 60லும் ஆசை வரும்னு யாராவது பாடி இருக்காங்களா:)

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் காதல் கடிதம் எழுதவில்லையா :)//

   எழுதணும்.... :))))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 21. ஃப்ரூட் சாலட் சுவை சூப்பர்.
  நேற்று வலைச்சரத்தில் உங்கள் பகிர்வை பகிர்ந்திருக்கேன் சகோ,மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 22. கட்டிடங்களெல்லாம் தொப்புன்னு விழுறதைப் பார்க்கவே பயம்மா இருக்கு.. சரவணனும் நந்தாவும் தப்பிச்சது மகிழ்ச்சிதான். ஆனாலும் மத்தவங்கல்லாம் என்ன ஆனாங்களோன்னு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கவலை தான் அமைதிச்சாரல்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 23. ஐம்பதாவது ஃப்ரூட் சாலட்! வாழ்த்துகள். நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 24. ரொம்ப நல்லா இருந்தது.. கடுமையான வெள்ளப்பெருக்கு, மழையில் இருந்து தப்பித்து தாயகம் திரும்பிய சென்னை இளைஞருக்கு என்னுடைய வாழ்த்துகள்.. அவருக்கு உதவிய வடநாட்டு நண்பருக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.. எவ்வளவு பெரிய இடம்பாடு அது..!!!வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக இருந்திருக்க கூடும்..!மிகப்பெரிய சோதனை அது... ! கீழிருக்கும் மற்ற பகுதிகளும் நன்றாகவே இருந்தது...

  ஐம்பதிலும் ஆசை வரும் பாடல்.. இனிமை.. அதற்கு அடுத்த பகிர்ந்த 'ரசித்த காட்சி' வீடியோ திறக்கவில்லை..

  பேஸ்புக் இற்றையும், குறுந்தகவலும் நன்று....

  பகிர்வுக்கு மிக்க நன்றி திரு.வெங்கட் சார்.. !!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோகுல். ரசித்த காட்சி வேறு இணைப்பினை இப்போது சேர்த்து விட்டேன்....

   Delete
 25. Ranjani Narayanan has left a new comment on your post "ஃப்ரூட் சாலட் – 50 – உடைந்த மேகம் - கொஞ்சம் நடிங்க...":

  ஐம்பதாவது 'ப்ரூட் சாலடுக்கு வாழ்த்துக்கள்.
  சரவணனுக்கும், நந்தாவிற்கும் ஏற்பட்ட அனுபவங்கள் திகிலை ஏற்படுத்தியது. தப்பித்து வந்தார்களே , அது பெற்றோர்கள் செய்த புண்ணியம்.
  ஐம்பதிலும் ஆசை வரும் - அத்தனை ரசிக்க முடியவில்லை. வேறு பாடல் போட்டிருக்கலாம்.

  குழந்தைகளின் சிரிப்பு மனதை வருடியது....

  ReplyDelete
  Replies
  1. அடடா.... பாடல் உங்களையும் கஷ்டப்படுத்தி விட்டதா.... வருந்துகிறேன்.... :((((((

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....