சாதாரணமாக தில்லியில் யமுனை என்பது சாக்கடை போலவே ஓடிக்கொண்டிருக்கும்.
தில்லியின் கழிவுகள் மட்டுமே தான் யமுனையில் இருக்கிறதோ என்ற எண்ணம் யமுனையைக்
காணும்போதெல்லாம் தோன்றும். ஒவ்வொரு மழைக்காலத்திலும் யமுனையில் கொஞ்சம் தண்ணீர்
வரவு அதிகரிக்கும். அதுவும் அருகிலுள்ள ஹரியானா மாநிலத்தின் ”ஹத்னிகுண்ட்” அணையினைத் திறந்து
தண்ணீர் திறந்து விட்டால் யமுனையில் வெள்ளம் தான்.
யமுனையின் கரையிலும் அதன் படுகைகளிலும், ஜுக்கி-ஜோம்ப்ரி [Jhuggi Jhompri] என அழைக்கப்படும் நிறைய
குடிசைகள் நிறையவே உண்டு. அதில் வாழும் மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இப்படி
யமுனையில் வெள்ளம் வரும்போதெல்லாம் அவர்கள் யமுனையின் குறுக்கே கட்டப்பட்ட
பாலங்களின் மேலே வந்து தங்களது உடமைகளோடு தங்கிவிடுவார்கள். மழை நீர் வடிந்த பிறகு
மீண்டும் அங்கேயே வாசம்.
இப்போதும் யமுனையில் வெள்ளம். அப்படி கரைபுரண்டு ஓடிய யமுனையின்
சில காட்சிகள் இந்த வார ஞாயிற்றுக் கிழமை புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.....
கரைபுரண்டோடும் யமுனை....
இது என் இடம்....
இதில் ஏன் இவ்வளவு இடையூறுகள்
வெள்ளத்தில் தத்தளிக்கும் கட்டையில்
சில பறவைகள்
இத்தனை வெள்ளம்.....
கடலில் கலக்க அப்படி என்ன அவசரம்....
எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும் பழைய பாலம் –
வெறிச்சோடிக் கிடக்கிறது!
யமுனையின் கோபம் தெரிகிறது இப்படத்தில்....
எத்தனை வெள்ளம் வந்தாலும் எனக்கு பயமில்லை எனச் சொல்லாமல்
சொல்கிறாரோ?
மூழ்கியிருக்கும் குடிசைகள்....
என்ன நண்பர்களே புகைப்படங்களைப் பார்த்தீர்களா? நதியின் படுகைகளில் வீடுகளைக் கட்டி அதன் ஓட்டத்தினைத்
தடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்கிறோமே....
உத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த அழிவுகளுக்குக் காரணம் மனிதர்களும் தான்
எனத் தோன்றுகிறது.
புகைப்படங்களை
எடுத்து என்னுடன் பகிர்ந்து கொண்ட கேரள நண்பர் பிரமோத் அவர்களுக்கு நன்றி.
அடுத்த ஞாயிறன்று மீண்டும் வேறு சில படங்களோடு உங்களைச்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
படங்களும், மனதைப்பதற வைக்கும் செய்திகளும் அருமை. பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ ஜி!
நீக்குஇந்தமாதிரி தண்ணீர் நிறைந்த இடங்களைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நாமாகவும் கொஞ்சம் அழிவைத் தேடிக்கொள்கிறோம் என்பது அதிர்ச்சி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குஉத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த அழிவுகளுக்குக் காரணம் மனிதர்களும் தான் எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇயற்கையின் கோபத்திலிருந்து மனிதன் பாடம் கற்கவேண்டும்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்கு100% மனிதர்கள் தான்...
பதிலளிநீக்குவரும் தகவல்கள் மேலும் மேலும் வருத்தப்பட வைக்கிறது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதவறுகள் அனைத்தும் நம் மீது.. பாவம் நதி என்ன செய்யும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்கு// உத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த அழிவுகளுக்குக் காரணம் மனிதர்களும் தான் எனத் தோன்றுகிறது. //
பதிலளிநீக்குசமவெளிப் பகுதிகளில் ஆழ்துளைகளைப் போட்டதைப் போல மலைப் பகுதியிலும் ஆயிரக்கணக்கான துளைகள் போட்டு இயற்கைச் சூழலைக் கெடுத்து விட்டார்கள்.
இயற்கைக்கு எதிராகவே செயல்பட்டு அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
யமுனையையும் காவிரியையும் ஒப்பிட்டு பெருமூச்சு.. அங்கே ஒரேயடியா தண்ணி.. இங்கே வறண்டு..
பதிலளிநீக்குஇன்றைக்கு மகளிடம் பேசியபோது சொன்னது காதில் ரீங்காரமாய் - “காவேரி Desert ஆயிடுச்சுப்பா!”......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
யமுனையின் கோபம் உங்கள் படங்களில் நன்றாகவே புரிகிறது நண்பரே...
பதிலளிநீக்குசைக்கிளில் உறங்குபவர் சுகமுடன் தூங்குவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது, நல்லா குளிர்ந்து இருக்கும் போல பூமி இல்லையா.
எக்கவலையும் இல்லை அவரிடம்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
"நதியின் படுகைகளில் வீடுகளைக் கட்டி அதன் ஓட்டத்தினைத் தடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்கிறோமே.... உத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த அழிவுகளுக்குக் காரணம் மனிதர்களும் தான் எனத் தோன்றுகிறது.@
பதிலளிநீக்குவீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்து வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளே முதல் குற்றவாளிகள்.
அதிகாரிகளும் மனிதர்கள் தானே ஊரான். சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் தான்.....
நீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊரான்.
//உத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த அழிவுகளுக்குக் காரணம் மனிதர்களும் தான் எனத் தோன்றுகிறது. //
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை வெங்கட்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.
நீக்கு"இயற்கைக்குக் கோபம் வந்தால்....."
பதிலளிநீக்குகோபம் வந்தால் ஊழித் தாண்டவம் தான்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கரை புரண்டோடும் நதியைப் பார்க்க பரவசம்தான். ஆனால் அதுவே வெள்ளமாக மாறி உயிர்களை பறிக்கும்போது கதி கலங்குகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..
நீக்குஇயற்கையின் சீற்றம் மிரள வைக்கிறது சகோ... மூடர்களின்
பதிலளிநீக்குசுயநலத்தால் வந்த விளைவோ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குஉத்தரகண்ட் மாநில வெள்ளம் பற்றி பதிவுகளை அதிகம் பார்க்க முடியவில்லை. கரை புரண்டு ஓடும நதியைப் சீற்றத்தைப் பார்த்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப் படவேண்டும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபடங்கள் மிக அருமை ..பகிர்ந்த உங்களுக்கு நன்றி தண்ணிர் சில சமயங்களில் சந்தோஷத்தையும் பல சமயங்களில் பயத்தையும் தருகின்றன
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.
நீக்குவெள்ள அனர்த்தம் விழுங்கும் மனிதம்...:(
பதிலளிநீக்குதிகைக்கவைக்கும் படங்கள் சகோ!
மனம் பதைக்கின்றது...
த ம.7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குநதியின் ஓட்டத்தை முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தால் என்னாகும்?.. வேறு வழியை நோக்கிப் பாயத்தானே செய்யும். அப்புறம் ஊருக்குள் வெள்ளம் வந்து விட்டது என்று புலம்புகிறோம். மனிதர்கள் தங்கள் போக்கை எப்போதுதான் மாற்றிக்கொள்ளப்போகிறார்களோ :-(
பதிலளிநீக்கு//நதியின் ஓட்டத்தை முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தால் என்னாகும்?.. வேறு வழியை நோக்கிப் பாயத்தானே செய்யும்.//
நீக்குஅது தான்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நல்ல படங்கள்.
பதிலளிநீக்குயமுனை எந்தக் கடலில் கலக்கிறது? bay of bengal?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
நீக்குகங்கையுடன் அலஹாபாதில் சங்கமித்து பின்னர் Bay of Bengal - ல் கலக்கிறது.
கரை புரண்டோடும் வெள்ளம் பழைய நினைவுகளை
பதிலளிநீக்குமனக் கண்ணில் நிறுத்திச் சென்றது .படங்களும் பகிர்வும்
சிறப்பு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.
நீக்குvethanaiyaana padangal anne..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குமனசாட்சியைக் கொல்லக்கூடாது. அது நமது நியாய அறிவின் நாடித்துடிப்பு
பதிலளிநீக்குபடங்களைப் போல வார்த்தைகளும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி திருப்பூர்.
நீக்குஇயற்கையின் சீற்றம் தடுக்க முடியாத ஒன்று தான். நிறைய சமயங்களில் இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் நாம் தான் அசட்டையாக இருந்துவிடுகிறோம்.
பதிலளிநீக்குபடங்கள் யமுனையின் கோபத்தை படம் பிடித்து விட்டது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅப்பாடா..... ஒருவழியா அழுக்கெல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சுன்னு மகிழ்வதா? இல்லை குடிசைவாசிகளுக்கு இடமில்லாமப் போச்சேன்னு பரிதாபப்படுவதா?
பதிலளிநீக்குஎன்னன்னு சொல்வது?
படங்கள் நல்லா வந்துருக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குயமுனை பாய்ந்து செல்கின்றது. இயற்கையை அதன் போக்கில் ரசிப்போம். இடர்களைத் தவிர்ப்போம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஇயற்கையின் கோபத்திலிருந்து மனிதன் பாடம் கற்கவேண்டும்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.
நீக்கு