ஞாயிறு, 9 ஜூன், 2013

ரத்த பூமி – ஒரு புகைப்பட முன்னோட்டம்




மஹா கும்பமேளா பயணம் பற்றிய தொடர் முடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. அடுத்த பயணம் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லையா என சில நண்பர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் [நிஜம்மாதாங்க! நம்புங்க….  இல்லைன்னா அளுதுருவேன்!]. அடுத்த பயணத்தொடரின் முன்னோட்டமாக இந்த ஞாயிறன்று சில படங்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து சில ஞாயிறுகளாக படங்களும் வெளியிடுவதில்லை. பதிவுகள் எழுத முடியாத அளவில் பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாகிவிட்டது! அதுவும் நான் ஆணி பிடுங்க, பிடுங்க, பக்கத்திலேயே வேறொருவர் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்! முதல்ல அவர் கையில் இருக்கற ஆணிகளையும், சுத்தியலையும் பிடுங்க வேண்டும்! சரி போதும் சொந்த புலம்பல்கள்! இன்றைய படங்களைப் பாருங்கள்…..  எந்த இடம், சென்று பார்த்தது என்னன்ன என்பதை வரும் புதன் கிழமை அன்று தொடங்கும் பயணத்தொடரில் சொல்கிறேன். அதுவரைக்கும் பொறுமையோடு காத்திருக்கணும் சரியா!












படங்கள் எங்கே எடுத்தது? ”ரத்த பூமி எனத் தலைப்பில் சொல்லிவிட்டு போட்டிருக்கும் படங்கள் பார்த்தால் அப்படி தோன்றவில்லையே?” எனக் கேட்போருக்கு, சற்றே காத்திருங்கள்!

வேறொரு புகைப்படப் பகிர்வில் அடுத்த ஞாயிறன்று உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. படங்கள் அருமை...

    காத்திருக்கிறோம் ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      வரும் புதன் அன்று தொடரின் முதல் பகுதியை வெளியிடுகிறேன்.

      நீக்கு
  2. படங்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. படங்கள் அருமை. புதன் வரை காத்திருக்கலாம்! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. படங்கள் அத்தனையும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. பார்த்திராத இடங்கள். புகைப்படங்களை வெளியிட்டு ஆவலைத் தூண்டிவிட்டுவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  6. சிறப்பான புகைப்படப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. எங்கே போனார் இந்த வெங்கட் னு தேடினேன்.
    நல்ல வேளை படங்கள் போட்டுவிட்டீர்கள்.:)
    தலைப்புக்கும் படங்களுக்கும் சம்பந்தம் இல்லையே. ஒரு வேளை குருக்ஷேத்ரமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாகவே வேலை அதிகம் வல்லிம்மா... பயணங்களும் நடு நடுவே..... இனி தொடர்ந்து வருவேன்!

      குருக்ஷேத்திரமே தான்.... இன்று பிரம்ம சரோவர் பற்றி எழுதி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  8. ரத்தபூமியில் அந்த அணில் படம் மிகவும் கவர்ந்தது நண்பரே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.... எனக்கும் பிடித்தது. இரை தேடிக் கொண்டிருந்ததை எனது கேமராவுக்குள் அடைத்து விட்டேன்..... ஆனாலும் சுதந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறது இன்னும் குருக்ஷேத்திரத்தில்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  9. அந்தக் குளம் சூப்பரா இருக்கு வெங்கட்! என்ன இடம்னுதான் என் புத்திக்கு எட்டலை. (வேற வழியில்லாம) புதன்கிழமை வரை பொறுமையா காத்திருக்கேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கிழமை இன்று தான்! இடம் குருக்ஷேத்திரம்.

      இன்று பிரம்ம சரோவர் பற்றி எழுதி இருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  10. உங்க டாஷ்போர்ட்ல எதும் பிரச்னையா? நீங்க போஸ்ட் போட்டு பல மணி நேரம் கழிச்சே என் டாஷ் போர்ட்ல வருது. ஒருவேளை... என் டாஷ் போர்ட்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதியம் தான் வெளியிட்டேன் கணேஷ். சில சமயங்களில் பிளாக்கர் தளமும் படுத்துகிறது! :)

      தங்களது வருகைக்கும் இரண்டாம் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  11. படங்கள் அத்தனையும் அழகு. புகைப்பட பதிவுகள் ஸ்பெசலிஸ்ட் இராஜேஸ்வரி மேடத்திற்கிட்டேயே பாராட்டு வாங்கிட்டீங்க.... பிரம்மரிஷி பட்டம் கிடச்ச மாதிரி ... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் நான் எடுத்தவையே.....

      இராஜராஜேஸ்வரி மேடம் தளத்தில் இடும் படங்கள் அனைத்தும் அருமையாக இருக்குமே..... பிரம்மரிஷி - இன்னும் நான் வளர வேண்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. இடம் ஜெய்ப்பூர் அல்ல - குருக்ஷேத்திரம் சிவகுமாரன்.

      இன்று தொடரில் பிரம்ம சரோவர் பற்றி எழுதி இருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் இரண்டாம் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. காத்திருப்பு இன்று முடிந்து விடும்.... பிரம்ம சரோவர் பற்றி இன்று ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  15. அடுத்த தகவல் வரும்வரை ரசிக்கும்படி இருக்கின்றன படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ரசனைக்கு நன்றி நிலாமகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. குருக்ஷேத்திரம் தானே?? அருமையான படங்கள். நாங்கள் 2006 ஆம் ஆண்டில் போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருக்ஷேத்திரமே தான்....

      உங்கள் நினைவுகளை மீட்டெடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  17. நான் இரண்டாவது பதிவை முதலில் படித்து விட்டு வந்ததால் இடம் தெரிந்து விட்டது. படங்கள் அருமை வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா......

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....