எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 23, 2014

ஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள் – என்ன பூ?

இந்த வார செய்தி:

ஆசிரியர் பணி என்பது ஒரு மகத்தான பணி. தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான படிப்பினையும், தன்னம்பிக்கையும், அவர்களது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான தகுதிகளையும் தொடர்ந்து தருபவர்கள் ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஒரு செய்தியும் ஆசிரியர் பற்றியது தான். ஆனால் இவர் இன்னமும் ஆசிரியர் ஆகவில்லை. ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்து தகுதித் தேர்வெழுதும் ஒருவர் பற்றிய செய்தியை நாளிதழ் ஒன்றில் படித்தேன். அது என்ன செய்தி என்று பார்க்கலாம்!திண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசன் என்பவரின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. தனது நான்காம் வயதில் ஒரு சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். காரைக்குடியில் இருந்த ஒரு ஊனமுற்றொர் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அப்பள்ளியை நிர்வாகம் மூடிவிட, மீண்டும் தனது சொந்த ஊரில் ஒன்றாவதிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நைந்து போன கைகளை வைத்துக் கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்ட பள்ளியினருக்கு, நைந்து போன கைகளின் மிஞ்சிய பகுதியைப் பயன்படுத்தி எழுதி ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். முதலில் வாயில் பேனா வைத்தும், கால்களில் பிடித்தும் எழுதிப் பார்த்து அது ஒழுங்காக வராததால், தொடர்ந்து கைகளில் எழுத முயற்சி செய்து, தொடர்ந்து படித்து தற்போது எம்.ஏ., பி.எட் வரை முடித்து விட்டார்.  

அவர் வீட்டிலேயே அவர்தான் முதல் பட்டதாரி, அண்ணன்கள் இருவரும் தந்தையின் தொழிலிலேயே ஈடுபட, சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. யாரும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தது பற்றி அவர் சொன்ன விஷயம்:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்என்றார்.

அப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.

ரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..!

முழுக்கட்டுரை இங்கே……

இந்த வார முகப்புத்தக இற்றை:

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்.

கடமையைச் செய்தால் வெற்றி.
கடமைக்குச் செய்தால் தோல்வி!

இந்த வார குறுஞ்செய்தி:


IF YOU STAND FOR A REASON, BE PREPARED TO STAND LIKE A TREE. IF YOU FALL ON THE GROUND, FALL LIKE A SEED THAT GROWS BACK TO FIGHT AGAIN.

சுஜாதாட்ஸ்:

எனக்கு வேண்டிய எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண் காணாமற்போன உண்மை நிகழ்ச்சியை எனக்கு எழுதியிருந்தார். நான் எழுதும் த்ரில்லர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியாக வினோதமான நிகழ்ச்சிகள்… நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகள். பயங்கர நிகழ்ச்சிகள். கடைசியில் பெண்ணைக் காணவில்லை. என்னை அபிப்ராயம் கேட்டிருந்தார். கதையாக எழுதுவதில் ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட அத்தியாயத்தில் கதாநாயகியை மீட்கலாம்…. நிஜ வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவ்வளவுச் சுலபமாக இருப்பதில்லை. தேர்ந்த எழுத்தாளர் நண்பர் அவர். விதவிதமான குற்றங்களைப் பற்றி எழுதுகிறவன் நான்….. இருவரும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் பெண் நிஜம், போலீஸ் நிஜம்….

-    கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏப்ரல் 1977.  

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக மோகன் மற்றும் நளினி நடித்த நூறாவது நாள் படத்திலிருந்து “விழியிலே மணி விழியின்” எனும் பாடல்….புகைப்படம்:
தற்போது தமிழகத்தின் பல சாலைகளின் ஓரங்களில் இந்தப் படத்தில் இருக்கும் பூ பூத்திருக்கிறது. இந்தப் பூ என்ன பூ என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

படித்ததில் பிடித்தது:

என்னமாய் எழுதியிருக்கிறார் இக்கவிஞர். திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியம் தான்! :)

உன்னருகே நானிருந்து
சொன்ன கதையெல்லாம்
சுவையற்றுப் போனதென்ன
என்னை எதிர்நோக்கி
வீதியின் கோடிவரை
விழிக்கடையில் சிறைப்படுத்தி
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்.
இன்று? இல்லை!
காரணமோ
ஆணொன்றும் பெண்ணொன்றும்
குழந்தைகள் காரியங்கள்
அடுப்பில் புளிக்குழம்பு…..

-    கி. கஸ்தூரிரங்கன்.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..56 comments:

 1. ப்ரூட் சாலட் சுவையாக இருதது.
  // பெண் நிஜம், போலீஸ் நிஜம்…. //
  இதுதான் முத்தாய்ப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 2. இந்த வார பழக்கலவையில் எனக்குப்பிடித்தது முகப்புத்தக இற்றையும் குறுஞ்செய்தியும் தான்.
  திரு ரங்கசாமியின் ஆசிரியராகும் கனவு நனவாக என் வாழ்த்துக்கள்.

  நீங்கள் சாலை ஓரங்களில் பார்த்த பூ ‘ஊமத்தம் பூ’. என்ன சரிதானே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   அந்த பூ ஊமத்தம் பூ தான்.....

   Delete
 3. திரு ரெங்கசாமியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

  குழாய் ஸ்பீக்கர் போலிருக்கும் அந்த பூ ஊமத்தம் பூதானே ?
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   அந்த பூ ஊமத்தம் பூ தான்.

   Delete
 4. கடமையைச் செய்தால் வெற்றி.
  கடமைக்குச் செய்தால் தோல்வி!....................
  மடமையை நிக்கும் வரிகள் அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. ரங்கசாமியின் ஆசிரியர் கனவு நனவாக வேண்டும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மாணவர்கள் அவரிடம் கற்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  முகப்பு இற்றை அருமை.
  பழையக்காலத்து கிராமபோன் ஸ்பிக்கர் போல் இருபப்தால் இதை ரேடியோ பூ என்றும் சொல்வார்கள்.
  திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள் மிக சரியாக சொல்லி இருக்கிறார் கவிதையில்.
  அருமையான கவிதை.

  ஃப்ரூட் சாலட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ரேடியோ பூ - அட இது கூட நல்லா இருக்கே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. நீக்கும் என்று நீட்டவேன்டும்..

  சென்ற பின்னூட்டத்தில் எழுத்துப்பிழையை மன்னிக்கவும் ...நன்றி..

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் தட்டச்சுப் பிழைகள் ஏற்படுவது தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. ரங்கசாமி அவர்களின் கனவு கண்டிப்பாக ஒரு நாள் நனவாகும்... மற்ற ப்ரூட் சாலட் நல்ல சுவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. திரு.ரங்கசாமி அவர்களின் கனவு நினைவேற வாழ்த்துக்கள். அவரின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

  முழு கட்டுரைக்கான லிங்கை கிளிக் செய்தால், அந்த பக்கம் இல்லை என்று வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. சுட்டி இப்போது சரி செய்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 9. ரங்கசாமியின் கனவு நனவாகட்டும்.

  பூவின் பெயரை நண்பர்களிடமே கேட்டுவிட வேண்டியதுதான்:)! ரேடியோ பூ எனும் பெயர் எனக்கும் புதிது.

  அருமையான தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. ஊமத்தம் பூ என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரேடியோ பூ எனும் பெயர் எனக்கும் புதிது தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. Rangaswami in muyarchi vetri pera Iraivanai vendugirom

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 11. சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. கட்டாயம் ரங்கசாமியின் கனவு பலிக்க வேண்டும். வாழ்த்துகள். பாசிட்டிவில் சேர்க்க நானும் எடுத்து வைத்துள்ளேன்! :)))

  சூப்பர் இற்றை, குறுஞ்செய்தி!

  சுஜாதாட்ஸ் ரசித்தேன்.

  விழியிலே பாடலின் கன்னடப் பாடல் கேட்டிருக்கிறீர்களோ... தமிழை விட, இதே பாடலை எனக்குக் கன்னடத்தில் கேட்கப் பிடித்திருக்கிறது!

  கவிதை ரசித்தேன்.


  ReplyDelete
  Replies
  1. கன்னடப் பாடல் கேட்டதில்லையே ஸ்ரீராம். சுட்டி இருந்தால் தாருங்களேன்.... கேட்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. மாற்றுத்திறனாளி நண்பருக்கு பாராட்டுக்கள்! முகப்புத்தக இற்றை சூப்பர்! இனிய சாலட்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. தன்னம்பிக்கை சிறிதும் குறையாத திரு ரங்கசாமி அவர்களின் கனவு நிறைவேற, ஆண்டவனை மனமாற பிராத்திக்கிறேன். ஃப்ரூட் சால்ட்டின் இனிமையான சுவை மனதையும் தித்திப்பாக்கியது. இனி தங்களின் சிறப்பான பகிர்வுகளை தவறாமல் பின் தொடர்கிறேன்.
  நட்புடன். கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை..... தொடர்ந்து வாசிக்கிறேன் எனச் சொன்னதும் மகிழ்ச்சி தந்தது.

   Delete

 15. வணக்கம்!

  //ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா?//

  நல்ல தமிழில் நறுமணப் போ்சூட்டி
  வல்ல வலையை வடித்திடுக! - சொல்லுமே
  உன்புகழை இவ்வுலகு! என்தோழா வெங்கட்டே
  பொன்மொழிபோல் ஏற்பாய் புாிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
 16. ரெங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க வாழ்த்துகிறேன்.
  இதுபோன்றவர்களை அரசு அடையாளம் கண்டு ஊக்கப் படுத்த வேண்டும் என்பது
  எனது தாழ்மையான விருப்பமாகும்.
  முன்னாள் குடியரசுத் தலைவர் கூறியதுபோல் இதுபோன்ற ஆசிரியர்களால்
  மாணவர் மனங்களில் தன்னம்பிக்கையை விதைப்பது எளிது,
  ஏனெனில் இவர்களே தன்னம்பிக்கையின் உருவாகத்தானே திகழ்கிறார்கள்
  ரெங்கசாமியை வாழ்த்துவோம்
  எனது முக நூலில் பகிர்கிறேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. அரசு அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.... இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. உங்களின் மொத்த ப்ரூட் சாலட்டுமே சுவையோ சுவை. அதிலும் இறுதியில் எழுதிய கவிதை மிகவும் ரசித்தேன். எத்தனை உண்மை. .
  வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 19. பணி ஆசை, பாடல் கவிப்பா பிடித்து இருக்கும் பகிர்வு அண்ணாச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 20. திரு ரங்கசாமியி ன் முயற்சி வெற்றி பெற வேண்டும். சுஜாதாட்ஸ் எப்பவும் போல இனிமை.ஊமத்தம்பூவை மறக்க முடியாது. வெள்ளிக்கிழமை தோறும் கரும்பலகைகு கறுப்புப் பூச இந்த ஊமத்தப் பூ இலைகள் எல்லாம் அரைத்து பூசுவோம் பள்ளியில். பாடல் பழைய நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   ஊமத்தம் பூ உங்கள் நினைவுகளையும் தூண்டி விட்டது போலும்....

   Delete
 21. அனைத்தும் அருமை. முகநூல் இற்றை கலக்கல்.
  கஸ்தூரி ரங்கனின் கவிதை நடைமுறையை பிரதிபலித்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 22. மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணம். விரைவிலேயே அவர் ஆசிரியராக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 23. திரு. ரங்கசாமி அவர்களின் முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. விரைவிலேயே அவர் கனவு நனவாக வாழ்த்துக்கள். சுஜாதாட்ஸ், பாடல், கவிதை அனைத்தும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 24. ரங்கசாமி அவர்களின் ஆசிரியர் கனவு விரைவில் நனவாக கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 25. விழியிலே மணி விழியிலே ... இளைய ராஜாவின் மாஸ்டர்பீஸ் பாடல்களில் ஒன்று. செலெக்‌ஷன் பிரமாதம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 26. ரங்கசாமி அவர்களின் எண்ணம் விரைவில் ஈடேற வாழ்த்துவோம்! எனக்குப் பிடித்த பாடல் பகிர்விற்கு நன்றி! கவிதை அருமை! ஊமத்தை பூவோ எனத் தோன்றுகிறது! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. ஊமத்தம் பூவே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 27. பகிர்வுக்கு நன்றி..
  தன்னம்பிக்கை ஆசிரியர் மிக சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 28. எப்போது படித்தாலும் சுவாரசியம்..
  அது உங்கள் தனித்திறமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....