எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 24, 2014

ஃப்ரூட் சாலட் – 111 – தீபாவளி பரிசு – ரகசியமானது காதல் – செத்த பாம்புஇந்த வார செய்தி:
வைர வியாபாரியின் தீபாவளி

நன்றி: இணையம்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் – துணிகளுக்கும் வைரங்களுக்கும் பெயர் போனது.  அந்த நகரத்திலிருந்து இயங்கும் Hari Krishna Exports நிறுவனத்தினர் வழக்கம் போல தங்களது நிறுவனத்தில் பணி புரியும் 6000 ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழக்கம் போலவே கொடுத்துள்ளார்கள்.  இது தவிர கடந்த வருடத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 1268 ஊழியர்களுக்கு – மேலாளர் முதல் தொழிலாளி வரை அனைத்து நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் நான்கு லட்சத்திற்கும் மேலான பரிசுகளைக் கொடுத்துள்ளார்.

பரிசுகளிலும் உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் - Fiat ‘Punto Evo’ car, வைர நகைகள் அல்லது ஒரு வீடு! இப்படி பரிசு வழங்குவதால் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றுவார்கள் – பரிசு கிடைக்காத மற்ற பணியார்களும் மேலும் அதிகம் ஈடுபாடுடன் பணி புரிவார்கள் என்றும் நம்புவதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

நிறுவனத்தின் சென்ற வருட மொத்த விற்பனை 6000 கோடி ரூபாய் என்பது கூடுதல் தகவல்.  ஒரு சாதரண தொழிலாளியாக இருந்து படிப்படியாக இந்த நிலைக்கு முன்னேறி இருக்கும் இந்த முதலாளி படித்தது நான்காம் வகுப்பு வரை மட்டுமே.  இவரது சகோதரர்கள் மூன்று பேருடன் சேர்ந்து வைரங்களை அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் நன்காக வளர்ந்து இருக்கிறார். எத்தனை கொடுக்கிறேனோ அந்த அளவிற்கு நான் திரும்பப் பெறுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.   

நிறைய பணம் இருந்தாலும் அதை மற்றவரளுக்குக் கொடுப்பதற்கும் நல்ல மனம் வேண்டுமே! தானும் தனது நிறுவனமும் இத்தனை பெரிய உயரத்தினை அடைந்ததற்கு காரணமான உழைப்பாளிகளையும் மனதில் கொண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி தந்த அந்த நிறுவனத்தின் முதலாளிக்கு இந்த வார பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:


இந்த வார காணொளி

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைஅப்படின்னு அடிக்கடி சொல்றாங்க! இங்க பாருங்க என்னமா ரசிக்குது இசையை! :)
ரசித்த பாடல்:

கோடம்பாக்கம்படத்திலிருந்து ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்இந்த வார ரசித்த பாடலாய்!  இந்த பாடல் சொல்லும் விஷயத்தினை விட இந்த பாடல் படமாக்கப்பட்ட இடங்களும் காட்சிகளும் மிகவும் பிடித்த விஷயம்! நீங்களும் பாருங்களேன்!


இந்த வார புகைப்படம்:

சென்ற வாரத்தில் வெளியிட்ட காதணி படம் எடுத்த அதே இடத்தில் எடுத்த புகைப்படம் இது! குஜராத் மாநிலத்தில் பல ஆண்கள் இந்த மாதிரி உடை அணிந்திருந்தார்கள் – ஃப்ரில் வைத்த சட்டை, காத்தாட இருக்கும் ஒரு இடுப்பாடை – என இருந்த இந்த உடையில் ஒருவரையாவது புகைப்படம் எடுக்க நினைத்தேன்.  சாலையில் ஆடுகளை ஓட்டியபடி வந்த இந்த மீசைக்காரரிடம் படம் எடுக்க அனுமதி கேட்டேன் – “சந்தோஷமா எடுத்துக்கோ, என்னை, ஆடுகளை என்னுடன் இருக்கும் நபரை [சென்ற ஃப்ரூட் சால்ட்-ல் பார்த்த காதணி அணிந்தவர்], யாரை வேணும்னாலும் சந்தோஷமா எடுத்துக்கோ!


படித்ததில் பிடித்தது:

செத்த பாம்பு வளருமா ஐயா

சூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றான். உடனே தன் வீட்டிற்குள் வந்து தன் மனைவி, மகனிடம், ‘‘நான்  மூன்றடி நீளமுள்ள பாம்பைக் கொன்றேன்’’ என்று சொன்னான்.அதைக் கேட்டு அதிசயித்த மனைவி, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம், ‘‘என் கணவர் ஐந்தடி நீள பாம்பை தனியொருவராகவே அடித்துக் கொன்றார், தெரியுமா?’’ என்று பெருமையுடன் சொன்னாள். அந்தப் பெண்மணியோ, பக்கத்து தெருவிலுள்ள தன் தோழியிடம், ‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி நீள பாம்பைக் கொன்றிருக்கிறார் என்று தெரிவித்தாள். அதைக் கேட்ட தோழி, பக்கத்து ஊரிலிருந்து வந்த தன் உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர் ஒருவர் முப்பதடி பாம்பை  சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி ‘‘மிகைப்படுத்துவதால் கற்பனை திறன் வேண்டுமானால் வளருமே தவிர, உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்’’ என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைக் கேட்ட விவசாயி, தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும் முப்பதடி பாம்பைக் கொன்ற பெருமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனசில்லை. அதனால், தன் வீரம் பற்றி புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாகக் கேட்டான்.

உடனே ஞானி, விவசாயியின் ஐந்து வயது மகனை அழைத்தார். உன் அப்பா முப்பதடி பாம்பைக் கொன்றாராமே என்று கேட்டார். ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்துவிட்டு, “செத்த பாம்பு வளருமா ஐயா? என்று கேட்டான்.

அதைக் கேட்டுப் பெரிதாக சிரித்தார் ஞானி. தந்தையார் பாம்பைக் கொன்ற தாக சொன்னவுடனேயே அவன் ஓடிப்போய் பார்த்திருக்கிறான். அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. அந்தப் பையனை போல எல்லோரும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண் வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா? என்று அவர் ஊர் மக்களை பார்த்துக் கேட்டார். மக்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. ஃப்ரூட் சாலட் அருமை.
  அதுவும் செத்த பாம்பு விஷயம், ஆஹா, ஆஹா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 2. ///நிறைய பணம் இருந்தாலும் அதை மற்றவரளுக்குக் கொடுப்பதற்கும் நல்ல மனம் வேண்டுமே///
  போற்றப்பட வேண்டியவர் ஐயா
  பாராட்டுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. வரவேற்புக்குரியது வைரவியாபாரியின் செயல். ஆம், பாடலில் வரும் இடங்கள் மிக அழகாக இருக்கும். ஃப்ரில் வைத்த சட்டையும் குட்டிக் கதையும் அருமை. நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 5. அள்ளிக் கொடுத்த வைர வியாபாரியின் தாராள மனமும் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 6. ஃப்ரூட் சாலட் ரசிக்கவைத்தது..

  செத்த பாம்பும் வளரும் விந்தை- வதந்தியின் கைங்கர்யம்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. நிறைய பணம் இருந்தாலும் அதை மற்றவரளுக்குக் கொடுப்பதற்கும் நல்ல மனம் வேண்டுமே!//

  நல்லமனம் வாழ்க!

  பாடல் படமாக்கப்பட்ட இடங்களில் உள்ள இயற்கை காட்சிகள் மிக அருமை. இயற்கை அன்னை அள்ளித்தந்த வளம் அப்படியே இருக்கட்டும் என்று வாழ்த்த தோன்றுகிறது.

  ஆடு மேய்கிறவர் படம், கதை அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 8. செத்த பாம்பு .. கதை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 9. இந்த வார பழக்கலவையில், கழுதை பாடிய(!) இலாவணியை இரசித்தேன். வழக்கம்போல் தாங்கள் படித்து தங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. Venkat-hi, Vaira viyaabaari bonus matter enga companykku theriyalaiyeeeeeeeeeeee.......... Fruit salad intha vaaram super !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 11. ஃப்ரூட் சாலட் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்

   Delete
 12. வைர வியாபாரியின் செயல் மிகவும் போற்றற்குரியது! இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை! காணொளி பார்க்க முடியவில்லையெ!

  புகைப்படம் ஆஹா! பாடல் கேட்டிருக்கின்றோம் என்றாலும் மீண்டும் கேட்டோம்...நல்ல இசை...காட்சியும் அருமை.....

  செத்தபாம்பு வளர்ந்த கதை ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   காணொளி சில சமயங்களில் பிரச்சனை தருகிறது. ஒரு முறை மீண்டும் முயற்சித்து பாருங்களேன்!

   Delete
 13. வணக்கம் சகோதரரே.!

  இந்த வாரத்தில் வைர வியாபாரியின், நல்ல சிந்தனைக்கும், நற்செயலுக்கும் நல்ல மனதிற்கும் பணிவுடன் வாழ்த்துவோம்.!

  அருமையான வாசகங்களினால், மிளிர்ந்த, முகப்புத்தக இற்றையும், குறுஞ்செய்தியும்,
  தெளிவான புகைப்படமும் , படித்ததில் பிடித்த கதையும் சிறப்பாகச்செய்தது இந்த வார ப்ரூட் சால்ட்டையும்.! பகிர்ந்தமைக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 14. சுவையான பழக்கலவை. கழுதையின் லாவணி.....செத்தும் வளர்ந்த பாம்பு..... மிகவும் ரசித்தேன் வெங்கட். ஆதிக்கும்,குழந்தைக்கும் என் அன்பு.

  ReplyDelete
  Replies
  1. கழுதையின் லாவணி! ஹாஹாஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் ஜி!

   Delete
 15. வணக்கம் அண்ணா...

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

  தாங்கள் பார்த்து விட்டீர்கள்... இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை அல்லவா.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னையும் வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி குமார்.

   Delete
 16. ரா.ஈ. பத்மநாபன்October 27, 2014 at 11:53 AM

  உயிருள்ள பாம்பு மேல் கால் வைத்தால்தான் சிக்கல். செத்த பாம்பு தானே! எத்தனை கால் வேண்டுமென்றாலும் போடலாம். அதனால் தான் பாம்பு, பா--------ம்பு ஆச்சு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....