எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, February 24, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர்சில மாதங்களுக்கு முன்னர் புகைப்படங்களை வெளியிட்டு அவை என்ன என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன். இரண்டு பதிவுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை. இதோ இப்போது மூன்றாவது புகைப்படப் புதிர்.  வாங்க, படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க….


படம்-1
படம்-2


படம்-3


படம்-4


படம்-5

இந்தப் படங்கள் மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்டவை. இன்னும் நிறைய புகைப்படங்கள் இருந்தாலும், முடிந்த போது இப்படி புதிர் பதிவுகள் வெளியிடுகிறேன்.

இந்தப் படங்களுக்கான விடைகள்/விளக்கங்கள் நாளை இரவு வெளியிடப்படும். அதுவரை வலைப்பூவின் கருத்துக்கள் மட்டுறுத்தப்படும்.... 

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

22 comments:

 1. நல்ல சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. பஞ்சுமிட்டாய் மட்டும் தெரியுது சாமீ

  ReplyDelete
  Replies
  1. பஞ்சு மிட்டாய் மட்டுமா - கூடவே தில்லி அப்பளமும் இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார் ஜி!

   Delete
 3. கடைசிப் படம் வாத்தியக்கருவி. நகராவோ! இடுப்பில் கட்டித் தொங்கவிடுவது!

  படம் நான்கு அரக்கு வளையல்கள்.
  படம் மூன்று சாப்பிடும் பொருள். அநேகமாக் கேக், மேலே செரி வைச்சிருக்குனு நினைக்கிறேன்.

  இரண்டாவது படம் பஞ்சு மிட்டாயும் பன்னும்!

  ஹரியானா டூரிசத்தின் நிகழ்ச்சி ஏதோ! அந்தக் குடைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மனிதரின் முகம் தெரியவில்லை. :) ஏதோ பார்த்துப் போட்டுக் கொடுங்க. தப்புக்குக் குறைச்சுண்டு! :)))

  ReplyDelete
  Replies
  1. நகாரா - இல்லை! அதைப் போலவே தாஷா!

   குடைக்குள் ஒளிந்திருக்கும் மனிதரின் முகம் - விடைகள் பதிவில் முகம் தெரிகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 4. 2. பஞ்சு மிட்டாய் - காட்டன் கேன்டி மற்றும் அப்பளமுமா?
  4. கையில் போடும் பெரிய சைஸ் வளையல் (கங்கணம் மாதிரி)
  5. கவுத்து வச்ச தம் பிரியாணி அண்டா மாதிரி இருக்கு

  ReplyDelete
  Replies
  1. தம் பிரியாணி அண்டா - :) நல்ல கற்பனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. வெங்கட்ஜி நீங்கள் சமீபத்தில் அந்த குர்காவ்ன் வில்லேஜ் போய் வந்தீங்களே, அப்புறம் ராஜஸ்தான் அங்க எடுத்தவையோ...

  1. ஹர்யானா பழமையான நடனம் கூமரா அல்லது ஃபேக் நடன போஸ்சர்

  2. வடக்கு ஃபேமஸ் பஞ்சுமிட்டாய்

  3. டெஸ்ஸர்ட் மேலே செரியுடன் இருக்கு...அப்படித்தான் தெரிகிறது

  4. கையில் இடும் கங்கண்..கடா என்று சொல்லுவாங்க அதைக் கழட்டி கைக்குள் இட்டு அணிந்து மாட்டிக் கொள்ளலாம். ராஜஸ்தான் என்றாலும் நார்த்தில் பார்க்கலாம்...இங்கு நார்த் எக்ஸிபிஷன் எல்லாத்துலயும் இருக்கும்..

  5. ஹர்யானாவின் பழம் பெரும் இசைக் கருவி போல இருக்கு கொட்டு கவிழ்த்து வைத்திருக்கு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கூமர் நடனம் அல்ல! விடைகள் வெளியிட்டு இருப்பதில் பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. ஹப்பா ஒரு வழியா விடை போயிருச்சு...காலைலருந்து அனுப்பி அனுப்பி...போகாம...இப்பத்தான் போயிருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இணையப் பிரச்சனை என்றால் இப்படித்தான்.... கஷ்டமா இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 8. 1. அவர் அந்த உடையோடயே (வட்டமா கீழயும் மேலயும் இருக்கே) ஆடுவார். அது சுழன்று சுழன்று ஆடும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். ஆட்டம் பார்க்கும் நமக்கே தலைசுத்துவது போல இருக்கும்! அத்தனை சுற்றுவார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. முதல் படம். ஆடுகிறவர் உடையை குடை மாதிரி பிடித்து இருக்கிறார்.
  இரண்டாவது. படம் பஞ்சு மிட்டாய், அப்பளம் பொரித்து கவரில் அடைப்பட்டு இருக்கிறது.
  மூன்றாவது. படம் வெற்றிலை இனிப்பு தேங்காய் பூ செர்ரி பழம் வைத்து இருக்கிறது.
  நான்கு . வளையல் வரிசையாக கயிற்றில் கோர்த்து தொங்குகிறது.

  ஐந்து. வாத்திய கருவிகள்.

  ReplyDelete
  Replies
  1. வெற்றிலை என சரியாக கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. 1. நம்மூர் பயாஸ்கோப் மாதிரி ஏதோ ஒன்று...பெரிய சைஸ் கலைடாஸ்கோப்.

  2. பஞ்சு மிட்டாய்!

  3. தேங்காய்ப்பூ கல்கண்டு தூவிய ஏதோ ஸ்வீட்.

  4. வளையல் அல்லது ஹேர்க்ளிப்

  5. குங்குமச்சிமிழ் அல்லது ஒருவகை இசைக்கருவி.

  ReplyDelete
  Replies
  1. நல்ல முயற்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. 3. சிவப்பு எறும்புகளாயிருக்குமோ? (குழந்தை எறும்புகள்)

  ReplyDelete
  Replies
  1. சிவப்பு எறும்புகள் - நல்ல கற்பனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....