எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 9, 2018

அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத் தருவதில் எனக்கும் மகிழ்ச்சி.  அப்படி சில புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்! நேற்று காலை வெளியிட்ட புகைப்படங்களுக்கான விடைகள் கீழே….படம்-1: குஜராத் பயணத்தில் ஹோட்கா கிராமத்தில் பார்த்த குழந்தைகள் செய்த பல பொருட்களில் இதுவும் ஒன்று. பாத்திரங்களை வைக்கப் பயன்படுத்தலாம், தலையில் பொருட்களை எடுத்துச் செல்லும்போது சும்மாடு போலவும் பயன்படுத்தலாம்!


படம்-2: இதுவும் சிறுமிகளின் கைத்திறனால் உருவானது தான். இது தலையில் அணியும் தொப்பி!படம்-3: இலை வடிவத்தில் இருக்கும் விளக்கு – ஒவ்வொரு இதழிலும் மெழுகுத் தீபங்கள் ஏற்றலாம்! சமீபத்தில் சென்ற ஒரு கண்காட்சியில் பார்த்த பொருள்….


படம்-4: இந்த இளைஞர் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். மிகவும் நுணுக்கமான ஓவியம் – ரோகன் ஆர்ட் என்று பெயர் – குஜராத் பகுதிகளில் இந்த ஓவியம் பிரபலம். இந்த இளைஞர் வரைந்த ஓவியம் ஒன்றும் கீழே!
படம்-5: இப்போதெல்லாம் இப்படித் தோரணங்கள் கிடைக்கின்றன. அத்தோரணத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்காரத் தேங்காய் தான் இது! சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த படம்! தோரணம் படம் கீழே!


அடுத்த வாரத்தில் வேறு ஒரு புகைப்படப் புதிர் வந்தாலும் வரலாம்!

என்ன நண்பர்களே, புகைப்படப் புதிர்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

16 comments:

 1. ஹை..நான் கொடுத்த விடைகளில்.ஆர்ட் தவிர மற்றதெல்லாம் கிட்டத்தட்ட சரி என்று நினைக்கிறேன்...இல்லையா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. அப்போ நான் ஸீரோவா!!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. முதல் மூன்றும் நான் நினைத்ததுதான். நல்லாருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. ஒன்று தான் தப்பு என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. இதற்குத்தான் எனது அறியாமையை வெளிப்படுத்தவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 6. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

  தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

  பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

  உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

  நன்றி .
  தமிழ்அருவி திரட்டி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் திரட்டி பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. இதைப் பார்த்தேனா என நினைவில் இல்லை. பின்னால் போய்ப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. ரெண்டு விடைகளை சரியா சொல்லி இருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....