வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஃப்ரூட் சாலட் – 63 – டூன் பள்ளி - ருமாலி ரொட்டி - கவிதை





இந்த வார செய்தி:



மேக உடைப்பின் காரணமாக உத்திராகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அடைந்த சேதம் அனைவரும் அறிந்ததே. மீட்புப் பணிகளும், சுத்திகரிப்பு/சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கின்றன.  இதில் பங்கு கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு தங்களது 3 நாள் விடுமுறையை தியாகம் செய்த டூன் பள்ளி மாணவர்கள் பற்றிய செய்தி தான் இந்த வார செய்தி. 



டூன் பள்ளியைச் சேர்ந்த 160 மாணவர்கள், தங்களுக்குள் சில குழுக்களாக பிரிந்து உத்திராகண்ட் மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களான தட்யூர், கணேஷ்பூர், சிரோர், திலோத் போன்ற இடங்களில் ஒரு நடுநிலைப்பள்ளியைச் சீரமைப்பது, பல வீடுகளில் புகுந்து விட்ட மண்ணை அகற்றுவது, குடிமக்களுக்கு மருத்துவ உதவி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டார்கள்.



நான்கு அறைகள் கொண்ட இந்த நடுநிலைப்பள்ளி முழுவதும் உடைந்த பொருட்களும், மண்ணும், சகதியும் மூன்று அடிக்கு மேல் இருக்க அனைத்தையும் பத்து மணி நேரம் உழைத்து சுத்தம் செய்திருக்கிறார்கள். இது போன்ற சேவையை தொடர்ந்து செய்யப் போவதாகவும் சொல்லும் இந்த மாணவர்களை பாராட்டுவோம்.



பள்ளி மாணவர்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கும் இந்த வாரப் பூங்கொத்து!

      

இந்த வார முகப்புத்தக இற்றை:






படம்: கூகிளுக்கு நன்றி.....


இந்த வார குறுஞ்செய்தி



SHARING PROBLEMS AND ASKING FOR HELP DOESN’T MEAN THAT WE ARE WEAK OR INCOMPETENT. IT USUALLY INDICATES AN ADVANCED LEVEL OF TRUST…… 



ரசித்த காணொளி: 



நெய்வேலியின் ஏலச் சந்தை பதிவு எழுதிய அன்று மாலையே முகப் புத்தகத்தில் ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார்கள். இதோ பாருங்களேன் இந்த குட்டி பையனின் அவஸ்தையை....
 





ரசித்த பாடல்:



இந்த வார ரசித்த பாடலாக, 1958-ஆம் வருடம் வெளிவந்த “மாலையிட்ட மங்கைபடத்திலிருந்து செந்தமிழ் தேன் மொழியாள்எனும் பாடல்.  இந்த பாடலுக்கான நெய்வேலி நினைவுகள் தனியாக வெளி வரும் என்று இப்போதே எச்சரிக்கை விடுக்கிறேன்! :)





ராஜா காது கழுதை காது:





தில்லியின் தமிழ்ச் சங்கம் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம். அதன் அருகிலேயே ஒரு மொராதாபாத் பிரியாணி விற்கும் கடை. வாசலில் ஒரு பெரிய வாணலியைத் திருப்பிப் போட்டு அதன் மேல் மெலிதான ரொட்டி செய்து கொண்டிருப்பார்கள் – ருமாலி ரொட்டி என அதன் பெயர். அதனுள்ளே ஸ்டஃப் செய்து தருவார்கள் – சூழலை உங்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்! ருமாலி ரொட்டியின் வாசம் இந்நேரம் உங்கள் மூக்கைத் துளைக்குமே!



பேருந்து நிறுத்தத்தில் ஒரு தமிழ் தம்பதி – வயதானவர்கள் – ஆணுக்கு வயது 65-க்கு மேல். அவரது துணைவியிடம் பேசியது – ருமாலி ரொட்டியை கண்ணால் காண்பித்து, “கண்ணே உனக்கு கைக்குட்டை ரொட்டி வேண்டுமா?என தெள்ளு தமிழில் கேட்க அதற்கு அவர் துணைவி சொன்னது – “அட சும்மா இருங்க! கண்றாவி! சிக்கன் பிரியாணி வைச்சு தர்றான் அதை போய் வாங்கித் தரேன்னு சொல்றீங்களே!



ஒரு ஹிந்தி பாடம்: ருமால் – கைக்குட்டை! அந்த ரொட்டி கைக்குட்டை போல மெலிதாய் இருப்பதால் ருமாலி ரொட்டி.



படித்ததில் பிடித்தது!:



சற்றே இடைவெளிக்குப் பிறகு படித்ததில் பிடித்தது பகுதியில் ஒரு கவிதை....  இக்கவிதை சொல்வது உண்மை தான்......  :)



சின்னஞ்சிறு வயதில்...
 

வளர்ந்துவிட்டோம் பெண்ணே
ஆனால் நினைவுகள் அப்படியே
 
கிச்சிகிச்சான் தாம்பாளமும்  
ஒத்தையா ரெட்டையாவும்
கண்ணாமூச்சி ரே...ரேவும்
கொலை கொலையா முந்திரிக்காவும்
மாலைப்பொழுதும் விடுமுறை தினமும்
கொடுக்காப்புளியும், பிஞ்சி மாங்காயும்  
அல்லி மலரும் அடுத்த வீட்டு ரோஜாவும்
மறந்துவிட்டாயா?

நீ என்ன செய்வாய் பாவம்!
 
பருவத்தை சொல்லி  
பாழாக்கிவிட்டார்கள் நம் நேசத்தை!
 
- ந. ஏகம்பவாணன்





என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 கருத்துகள்:

  1. எல்லாமே சூப்பர்.ஃபுட்பால் பையன் டூ குட்.:)
    செந்தமிழ்த் தேன் மொழியாள் எல்லோருக்கும் பள்ளிக்குட நினைவுகளைக் கிளப்பிவிடு,(எங்களுக்கு)
    என்றும் மகைழ்ச்சியாக இருக்க புத்தரே வழிகாட்டிவிட்டார்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  2. டூன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.... ஏகம்பவாணன் அவர்களின் கவிதை அருமை... கால்சட்டை அவிழும் பையனின் செய்கைகள் ரசிக்கவைத்தது... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  3. எல்லாமே அருமை எப்போதும்போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  4. சேவையை தொடர்ந்து செய்யப் போவதாகவும் சொல்லும் டூன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள்..
    ஃப்ரூட் சாலட் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. ஏகம்பவாணன் அவர்களின் கவிதை அருமை...

    என்றைக்கும் ரசிக்க வைக்கும் காணொளி பாடல்... நெய்வேலி நினைவுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. கவிதை நாட்டு நடப்பை சொல்லி சென்றது, கைக்குட்டை ரொட்டி சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  7. டூன் பள்ளி மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்! காணொளி இரசித்தேன்! கவிதை அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  8. இந்த வார ப்ரூட் சாலட் மிக மிக அருமை.
    அனைத்துப் பகுதிகளும் நான் தான் முதல் இடம்
    என்று போட்டி போடுகின்றன. புத்தரின் பொன்மொழி மிக டாப்.
    விரைவில் உங்கள்
    எச்சரிக்கைப் பதிவை எதிர்பார்த்து ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  9. Dear Kittu,

    Fruit salad.....yil indhavara seidhi,indhavara mugapputhaga itrai, indhavara kuruncheidhi, Rasitha kanoli, rasitha padal, rajakadhu kazhudai kadhu, padithadhil padithadhu. Agiya anaithu pazhangalum serndhu suvaiyana virundhu padaithadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  10. காணொளிகள் இரண்டும்
    கவிதையும் பழமொழியும் மிக மிக அருமை
    சுவையான சத்துள்ள ஃபுரூட் சாலட் பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  12. ப்ரூட் சாலட் அருமை...
    கவிதை கலக்கல் அண்ணா...
    ஏகம்பவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    செந்தமிழ் தேன்மொழியாள் குறித்த நெய்வேலி நினைவுகள் விரைவில் எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  13. காணொளி மிகவும் சிரிக்க வைத்தது...
    பெண்மையின் நிலைப்பாட்டை உணர்த்திய கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...

      நீக்கு
  14. ஃப்ரூட் சாலட் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  15. டூன் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுக்கள். கால்பந்து ஆடும் சிறுவனின் நிலை சிரிப்புதான்!
    சந்தோஷத்தை பற்றிய படங்கள் உண்மையில் சந்தோஷத்தைக் கொடுத்தன. குண்டு குண்டாக குழந்தைகள் வெகு அழகு.
    உங்களின் மனம் கவர்ந்த செந்தமிழ் தேன்மொழியாள் நெய்வேலியில் இருந்தாளோ? (ஆதி கோபித்துக் கொள்ளப் போகிறார்!)
    நீங்கள் படித்து ரசித்த கவிதையை நாங்களும் மிகவும் ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் கவர்ந்த செந்தமிழ் தேன்மொழியாள் - ஆஹா இப்படி வேற ஒரு விஷயம் இருக்கோ?

      அதெல்லாம் யாருமில்லையே!..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு

  16. மாணவர்களின் இயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலும் குச்சி குச்சி ராக்கம்மா பாடலும் ராகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே ராகம்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. செயல் இயலாகி விட்டது போல! மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. //செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலும் குச்சி குச்சி ராக்கம்மா பாடலும் ராகம்!//

    செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலும் குச்சி குச்சி ராக்கம்மா பாடலும் ஒரே ராகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  19. மஹாலிங்கத்தின் மறக்க முடியாத குரல்!
    சுவையான பழக்கலவை
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. அந்தக் குழந்தையின் அவஸ்த்தை மிகவும் நன்றாக இருந்தது.
    மற்ற அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. உங்களின் தகவல் எல்லாமே அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....