புதன், 23 அக்டோபர், 2013

துள்ளி ஓடும் பம்பை…..



கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 5

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

 
சுவையாக இல்லை என்றாலும் மதிய உணவு சாப்பிட வேண்டுமே என்ற காரணத்திற்காகவே முதல் முறை போட்ட சாதத்திலேயே சாப்பிட்டதாக முடித்துக் கொண்டேன்.  பக்கத்து டேபிளில் பார்வையை ஓட்டினேன். அங்கே கண்ட காட்சி என்ன? [பதிவர் என்றால் இப்படி அடுத்தவன் சாப்பிடறதைக் கூட விடாம பார்க்கணுமா என்ன!] அடுத்த பதிவில் பார்க்கலாமா?

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

பக்கத்து டேபிளில் ஒரு வட இந்தியர் – இருக்கையின் அருகில் கம்பளி மூட்டை. கேரளாவில் கம்பளி விற்க வட இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு நாளுக்கு கம்பளி விற்று கிடைக்கும் லாபத்தில் வயிற்றுப் பிழைப்பு ஓட்ட வேண்டும். சில நாட்கள் ஒரு வேளை மட்டுமே சாப்பிட முடியும் நிலை – அன்று சாப்பிட்ட சாப்பாடு 55 ரூபாய். வேளைக்கு இவ்வளவு என்றால் சராசரியாக 165 ரூபாய் ஒரு நாள் சாப்பாட்டு செலவு - மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிட்டால். அதனால் ஒரே வேளையில் சாப்பாடை முடிக்க நினைத்திருப்பார் போல அந்த கம்பளி விற்பவர்.

ஒவ்வொரு முறையும் நிறைய சிகப்பரிசி சாதம் வாங்கி, குழம்பு, ரசம், மோர்க்குழம்பு, மோர் என சாப்பிட, அந்த ஹோட்டல் சிப்பந்திகள் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்டார்கள் – “எல்லாத்தையும் போடுடா…  சாப்பிட்டு ஒரு வழியாகட்டும் அவன் வயிறு” என்ற சாபம் வேறு. இதைக் கேட்டு மனதுக்குள் அப்படிச் சொன்னவரை திட்டிவிட்டு வெளியே வந்து வழியில் சாப்பிட சில நொறுக்குத்தீனிகளை வாங்கிக் கொண்டு கார் நிறுத்திய இடத்திற்கு வந்தோம்.



காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம். பத்தனம்திட்டாவிலிருந்து பம்பை செல்லும் வரை வழியெங்கும் இருக்கும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணம் தொடர்ந்தது. சாலையின் இரு மருங்கிலும் நிறைய இடங்களில் ரப்பர் தோட்டங்கள். உயர்ந்த ரப்பர் மரங்கள் – தரையிலிருந்து சில அடிகளுக்கு மேல், மரத்தில் ஒரு வெட்டு வெட்டி, அதன் கீழே பிளாஸ்டிக் பேப்பர் வைத்து ஒழுகும் ரப்பரை சேகரிக்கிறார்கள். இந்த இடங்களில் இருக்கும் ரப்பர் தோட்ட முதலாளிகள் அனைவருக்கும் நிறைய பணபலம் என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார்.



வழியிலே ஒரு கிராமம் – ரோட்டோரமாய் ஒரு தேநீர் கடை. மாலை நேரமாகிவிட்டபடியால் அங்கே தேநீர் அருந்திவிட்டு பயணத்தினைத் தொடர நினைத்து வண்டியை ஓரங்கட்டினோம்.  கடையில் ஒரு சேச்சி தான் தேநீர் போட்டுக் கொண்டிருந்தார். மூன்று தேநீர் சொல்ல, சேச்சி, “சேட்டா, பருப்பு வடை உளுந்து வடை, ஏதெங்கிலும் வேணோ?” என்று வினவ, வேண்டாம் சேச்சி எனச் சொல்லி சூடாக இருந்த தேநீரை மலைப்பிரதேசத்தில் அடிக்கும் குளிருக்கு இதமாக தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.



வழியெங்கிலும் இருக்கும் மரங்களும், மலைகளும் கண்களுக்குக் குளிர்ச்சியாய் காட்சி தர, ஒரு இனிமையான பயணமாக இருந்தது. சில இடங்களில் படம் எடுக்க மனது கேட்டாலும், வந்த வேலையை முதலில் முடித்துவிட்டு திரும்பும் வழியில் மலைகளையும் காட்சிகளையும் படமெடுக்கலாம் என மனதுக்குக் கடிவாளம் போட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.



மாலை ஆறு மணிக்கு மேல் பம்பையை அடைந்தோம். கீழே இருக்கும் சபரிமலை கோவிலின் அலுவலகத்தின் வாயிலில் காரை வைத்துவிட்டு, பம்பையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் நிறைய தேநீர் கடைகள், மாலைக் கடைகள் என பல கடைகள். ஒவ்வொரு கடையிலும் கருப்பு வேட்டி அணிந்த அய்யப்ப சாமிமார்கள் ஐயனை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.



பம்பையில் தண்ணீர் ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டு எங்களை வரவேற்றது. மாலை நேரமாக இருந்தாலும், பயணத்தின் அலுப்பு தீரவும், சபரிமலை ஏற்றத்திற்கு முன் அங்கே நீராடுவது வழக்கம் என்பதாலும் அங்கே நீராடினோம்.

அலுப்பு தீர நீராடிவிட்டு மலையேற்றத்திற்கு தயாரானோம். நான் தயார் ஆகும் வரை நீங்களும் உங்களது வேலைகளை முடித்து வாருங்களேன்…..

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் இனிய பயணம்... அதிக ஜில்லென்று இருக்கும் பம்பையில் குளிப்பதே தனி சுகம் தான்.... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி....

    பதிலளிநீக்கு
  3. இயற்கையை அனுபவித்து ரசித்ததோடு அழகான படங்களுடன் பகிர்ந்தது சிறப்பு. தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. சபரிமலைப் பயணம் எப்போதும் சுவையான அனுபவங்கள் தரும்.. உங்க பயண அனுபவமும் சுவாரஸ்யமாக இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  5. எனக்கும் இந்த அனுபவங்கள். உண்டு . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  6. இன்றுதான் முதல் நான்கு பதிவுகளையும் படித்தேன். கேரளாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தபோது கோட்டயத்திலிருந்து சபரி மலை சென்றது நினைவுக்கு வந்தது. புகைப்படங்கள் அருமை. பயணிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  8. பலமுறை பார்த்து பார்த்து ரசித்த இடம் நண்பரே..
    பம்பையைக் கண்டதும்.. சபரிமலைக்கு சென்றுவந்த திருப்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  9. துள்ளி ஓடும் பாம்பை ...தப்பு தப்பு ...பம்பையை படம் எடுத்திருக்கும் ஆங்கிள் அருமை !
    த.ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  10. பம்பையின் அழகையும்
    வழித்தட அழகையும்
    அருமையான விளக்கத்துடன்
    பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
    தொடர்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. கேரளத்து குளுமை உங்க படத்திலயும், பதிவுலயும். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. வட இந்திய கம்பளி வியாபாரி மட்டுமல்ல சுமைதூக்கும் அனைவருமே நன்றாக வயிறார சாப்பிடுவார்கள். நாம் உளமார வாயார அந்த உழைப்பாளிகளை வாழ்த்துவோம்.

    இன்றுதான் உங்களின் இந்த சபரிமலை தொடர் முழுக்க படிக்க நேரம் கிடைத்தது. இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  13. பம்பையில் தண்ணீர் ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டு எங்களை வரவேற்றது.

    அருமையான கண்கொள்ளாக்காட்சி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  14. படங்களும் பயணக்கட்டுரையும் குறிப்பாக பம்பையின் அழகையும் வழித்தட அழகையும்
    அருமையான விளக்கத்துடன் பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது. பாராட்டுக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. பெண்கள் போக முடியாத இடமாம் அது.
    ஆனால் உங்களின் இடுகையிலேயே போய் வந்த திருப்தி
    வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
    தொடர்கிறேன் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  17. அழகிய படங்கள் .. மழைப் பிரதேசத்தில் தேநீர் குடிப்பதே தனி சுகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      நீக்கு
  18. அவர் ஒரு நாளுக்கு கம்பளி விற்று கிடைக்கும் லாபத்தில் வயிற்றுப் பிழைப்பு ஓட்ட வேண்டும்.//

    உழைப்புக்கு ஏற்ற உணவு உண்டால் தான் அவர்களால் வாழமுடியும். கம்பிளி ஆடைகளை சுமந்து மலைபகுதியில் நடக்க வேண்டுமே!
    தமிழ் இளங்கோ அவர்கள் சொல்வது போல் உடலை வருத்தி வேலை செய்பவர்கள் எல்லாம் நன்றாக உணவு உண்பார்கள்.. அவரை ஒட்டல் சிப்பந்திகள் நடத்தியவிதம் வேதனை அளிக்கிறது.
    பம்பையின் அழகு உங்களின் படங்களில் நன்றாக தெரிகிறது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  19. பம்பை நதியின் அழகை நேரில் கண்டு ரசித்திருக்கிறேன். கேரளா மிகவும் அழகான மாநிலம். என்ன ஒரு நீர்வளம்! சென்னையில் வளர்ந்த என்னைபோன்றவர்களுக்கு கேரளாவின் நீர்வளம் வியப்பைக் கொடுக்கும். சாப்பாடு பரிமாறுபவர்கள் இதைப் போல வைது கொண்டே பரிமாறுவது அவர்களுக்கே நல்லதில்லை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திட்டிய அவரை திட்ட எனக்கும் ஆசை வந்தது......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தமிழ் மணம் பன்னிரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  22. அழகான படங்களுடன் ஒரு இனிய பயண அனுபவப் பகிர்வு...
    பம்பையில் நானும் குளித்திருக்கிறேன்... அழகான ஆறு...நாங்கள் சபரிமலை செல்லும் போது குளிக்க இடம் இருக்காது... அவ்வளவு கூட்டம் இருக்கும்... இப்போ அமைதியாக இருப்பது உங்கள் போட்டோவில் தெரிகிறது அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பல் அதிகம் என்பதாலேயே அந்த சமயங்களில் போகத் தயக்கம். இதுவரை போகாததும் அதனால் தான்.

      இது எனது முதல் சபரிமலை பயணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  23. பாவம் அந்த வட இந்திய வியாபாரி. நம்மவர்களுக்கே இந்த அலட்சிய சுபாவம் எப்போத் தான் மறையுமோ தெரியவில்லை. அவர் என்ன ஏமாற்றியா வயிறு வளர்க்கிறார்? :((((

    பம்பை ஆற்றின் சுத்தம் கண்ணைப் பறிக்கிறது. படங்கள் எல்லாமும் அழகு. நானும் உங்களை மாதிரித் திரும்பிச் செல்கையில் எடுக்கலாம் என எண்ணிப் பல படங்களைத் தவற விட்டேன். ஆட்டோவின் குலுக்கலும் ஒரு காரணம், நம்ம முன்னோர்கள் படையெடுப்பு இன்னொரு காரணம். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....