செவ்வாய், 29 அக்டோபர், 2013

லங்கோட்டியா யார்......




ஞாயிறு மாலை அலைபேசியில் ஒரு அழைப்பு.... 

நான்: “ஹலோ...

அலைபேசிக் குரல்: “என்னடா பண்ணறே.....

நான்: சொல்லுடா....

அலைபேசிக்குரல்: வெளியே எங்கும் சுத்தக் கிளம்பிடாத, அம்மா வந்திருக்காங்க, அழைச்சிட்டு வரேன்.

நான்: எங்க அம்மா, அப்பாவும் இங்கே தான் இருக்காங்க.... நிச்சயம் அழைச்சுட்டு வா!  ரொம்ப நாள் கழிச்சு பார்க்கப் போறோம். நான் வீட்டிலேயே இருக்கேன்

அந்த அழைப்பு வந்தது என்னுடைய நெய்வேலி நண்பர் ஒருவரிடமிருந்து.  பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த குடும்பங்கள் எங்களுடையது. எங்கள் வீட்டில் மூன்று பேர். அவர்கள் வீட்டில் மூன்று பேர், அதற்கடுத்த வீட்டில் ஒரு பெண். ஏழு பேர் கொண்ட அணி எங்களுடையது. பெண்கள் நால்வரும் ஒரு அணி. வால்கள் மூவரும் ஒரு அணி! எத்தனையோ நாட்கள் விளையாடியிருக்கிறோம். அவர்களது பெற்றோர்கள் வெளியூர் சென்றுவிட்டால், எங்கள் வீட்டில் சாப்பாடு. என் பெற்றோர்கள் வெளியூர் சென்றால் எங்களுக்கு அவர்கள் வீட்டில் சாப்பாடு.



அவர்கள் வீட்டில் எப்போது புட்டு கடலை செய்தாலும் எங்களுக்கும் நிச்சயம் வரும். எங்கள் வீட்டில் வற்றல் குழம்பு செய்தாலும் அவர்கள் வீட்டுக்கும் கொஞ்சம் போகும். கிட்டத்தட்ட எனது பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் 35 வருட பழக்கம். நாங்களும் பிறந்ததிலிருந்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். படித்த பள்ளிகள் வேறாக இருப்பினும், வீடு வந்துவிட்டால் நிறைய விளையாடி இருக்கிறோம்.



இந்த எழுவர் அணி சேர்ந்து நாவல் பழம் பறிக்கப் போய் அடி வாங்கிய கதை ஏற்கனவே இந்த வலைப்பக்கத்தில் டவுசர் பாண்டி எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அன்று மரத்திலிருந்து கீழே விழுந்த முரளி தான் மாலை அலைபேசியில் அழைத்துப் பேசியது. தில்லியிலேயே அவர் வசித்தாலும், பணிச்சுமை, இருக்கும் இடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி போன்ற பல விஷயங்களால் அடிக்கடி சந்திப்பதில்லை. இப்படி ஏதாவது ஒரு நாளில் – சில வருடங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கம். அப்படிச் சந்திக்கும் போது நெய்வேலியின் நினைவுகளும், சொந்த விஷயங்களும் பேச ஆரம்பித்து விட்டால், நேரம் போவது தெரியவே தெரியாது.



நேற்றும் ஐந்தரை மணிக்கு வந்த பின் தொடர்ந்த பேச்சு தான். முடிவுக்குக் கொண்டு வர யாருக்கும் மனதில்லை. நடுவில் எனக்கு வேறொரு அழைப்பு வர கொஞ்சம் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழல். நான் வெளியே சென்று வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் நெய்வேலி கதை தான் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நானும் வெளியே சென்றுவிட்டாலும் அதே நினைவுகள் தான் எனது மனதிற்குள்ளும்.



நண்பரின் மகன் தனது பாட்டியிடம் “நீ ரொம்ப நாள் கழிச்சு உன்னோட ஃப்ரண்டை பார்க்கப் போற, பேச்சு சுவாரசியத்துல மறந்து போய் அங்கேயே இருந்துடாத, ராத்திரிக்குள்ள வீட்டுக்கு வந்துடு. அப்பாவுக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகணும்என்று சொல்லி தான் அனுப்பினானாம்.  நிஜமாகவே மறந்து தான் போய் விட்டார்கள். உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பவர்கள், திடீரென நினைவு வந்து எழுவதும், நின்றபடியே சில விஷயங்கள் பேசுவதும், வேறு ஒரு விஷயத்திற்கு தாவும்போது சுவாரசியத்தில் மீண்டும் அமர்ந்து பேசுவதும் என தொடர்ந்தது பேச்சு.

நடுவே எங்களது வீர பராக்கிரம செயல்கள் பற்றிப் பேசும்போது நான் அவர்களது பல் செட்டினை காக்கையிடமிருந்து தட்டிப் பறித்து வந்த விஷயமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள் நண்பரின் அம்மா.  அட அது என்ன விஷயம்னு?தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்கே போய் படிங்க! – அண்டங்காக்கையை வென்ற பல்லவன்

நான், அப்பா, மற்றும் நண்பர் ஒரு இடத்தில் பொது விஷயங்கள் பேச, அம்மாவும், நண்பரின் அம்மாவும் தேநீர் தயாரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இடைவிடாத பேச்சு. ஓய்வில்லாத பேச்சு.....  முடிக்கத்தான் மனசில்லை – மைக் கிடைத்த அரசியல்வாதி போல தொடர்ந்த பேச்சு. ஆனால் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஹிந்தியில் லங்கோட்டியா யார் எனச் சொல்வார்கள் – அதாவது குழந்தைப் பருவ நட்பு. லங்கோட் என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அந்த வயதில் தொடர்ந்த நட்பிற்கு கொஞ்சம் பலம் அதிகம் தான் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே. வருடங்கள் பல கடந்து, படிப்பு முடித்து அவரவர் வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நேரிலே பாக்காது இருந்தாலும், மனதிற்குள் இந்த நட்பு தொடர்கிறது என்பதை இது போன்ற சந்திப்புகளின் போது தான் உணர முடிகிறது. 

இனிமையான நினைவுகளோடு பேசிப் பேசிய கழித்த இந்த மூன்றரை மணி நேரமும் இன்னமும் பல நெய்வேலி நினைவுகளை மீட்டெடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இனிய நினைவுகளோடு, இன்னும் சில நாட்கள் இருந்தாலும் தொடர்ந்து பேச விஷயங்கள் இருந்தாலும், செல்ல வேண்டிய இடம் தூரம் என்பதால் மனதில்லாது வீட்டை விட்டு கிளம்பினார்கள் நண்பரும் அவரது அம்மாவும்.  இது போன்ற சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து விடுகிறது அல்லவா. அவர்கள் சென்ற பிறகும் இந்த பேச்சு எங்களுக்குள் தொடர்ந்தபடியே......

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

படங்கள்: கூகிளாண்டவர் இருக்க பயமேன்?     

44 கருத்துகள்:

  1. பழங்கதை நண்பர்களுடன் பேசுவது மகிழ்ச்சியுடன்இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  2. நண்பர்களுடன் பேசும் நேரத்திற்கு எல்லைதான் ஏது? இனிமையானபொழுதுகள் அல்லவா? நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம் ஜீவா.

      நீக்கு
  4. நெய்வேலி நினைவுகளை பற்றி எழுத வேண்டுகிறேன். முக்கியமாக குடிக்க குளிக்க தண்ணீர் வசதி, மின்சாரம், மருத்துவ வசதி (நானும் மனிதன் தானே) பற்றி எழுதுங்கள். நன்றி!

    நான் ஆறு மாதம் இந்தியா வந்தால் அங்கு வாழலாம் என்ற ஆசை!

    தமிழ்மணம் வோட்டு +4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் எழுதுகிறேன் நம்பள்கி.....

      அங்கு நான் இருந்தது 20 வருடங்கள்.... எத்தனை இனிமையான அனுபவங்கள் - சில கசப்பான அனுபவங்கள். அவ்வப்போது எழுதுவது உண்டு. மின்சாரம், தண்ணீர் பற்றியும் விரைவில் எழுதுகிறேன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பழைய நண்பர்களைச் சந்திப்பது இனிமை அதுவும் அன்னையரும் சேர்ந்து கொண்டால் கேட்கணுமா. உங்களுடைய மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சி. நட்பு நீடிக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தால், அந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை...

    சந்தோச சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. இனிமையான நினைவுகளின் சந்தோஷப் பகிர்வுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. உங்கள் சிறு வயது நட்பு நீங்கள் இருக்கும் இடத்திலேயே
    வந்து வசிப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் இருவரின்
    பாச பந்தம். இயற்கையின் இனிய இணைப்பு.
    விட்டு விடாது தொடரவும். வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  9. நம்மை முழுதும் அறிந்தவர்களுடன்
    குறிப்பாக எந்தவித பிரிப்புகளுக்கும் உட்படாத
    அந்த சிறிய வயதில் உடன் இணைந்த நட்புகளுடன்
    பேசி மகிழ்வதன் சுகம் அதை உணர்ந்தவர்களால்தான்
    புரிந்து கொள்ள முடியும்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. கொசுவத்தி சுத்த யாருக்குத் தான் பிடிக்காது! அதுவும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து நட்புப் பாராட்டி வருவது நிச்சயம் பாராட்டுக்கு உரியது. :))) மற்றப் பதிவுகளையும் இனிதான் பார்க்கணும். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      கொசுவத்தி சுத்துவதில் நிச்சயம் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது! :)

      நீக்கு
  12. பேசப் பேச அலுக்காது எம் வார்த்தைகளுக்கும் அதிக மதிப்புக் கிட்டுவது
    என்னமோ நண்பரளிடத்தில் தான் என்று தோன்றும் .நட்பின் மகிமை அது !
    கடந்த காலத்தை நினைவு கூறிய சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

      நீக்கு
  13. //சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து விடுகிறது //

    இனிமையான நினைவுகளின் சந்தோஷப் பகிர்வுகள் அருமை, வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. எல்லையில்லா இனிமையன்றோ மலரும் நினைவுகள்!...
    நல்ல பகிர்வு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி....

      நீக்கு
  15. நல்ல அனுபவங்கள். இனிமையான பொழுதுகள். என் இளவயது நண்பனுடன் எனக்கு வித்தியாச அனுபவம். அதை நியாயமா என்று கதையாக்கியிருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. மீட்டெடுத்த மலர்ச்சியை எங்களோடும் பகிர்ந்த அன்பிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  17. படித்ததும் என் பள்ளி நாட்கள்நினைவுக்கு வந்தன.. இனிமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

      நீக்கு
  18. பழைய நினைவுகளைப் பேசுவது என்றுமே இனிமைதான்...திகட்டாதது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  19. அருமையான மலரும் நினைவுகள்.
    இளமை கால நட்பு, குடும்ப நட்பு நீடித்து இருக்கும் எத்தனை காலங்கள் ஆனாலும் அவை
    மகிழ்ச்சியை தருபவை.
    நட்பு என்றும் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  20. மறக்க முடியாத இனிய நினைவுகள்... ஞாபகத்தில் வந்து போயின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  22. இளமைகால நினைவலைகளை மீட்டுத் தரும் நல்லதொரு பதிவு, தொடுப்பிட்டுள்ள பிற ஓர்மைப் பதிவுகளையும் வாசிக்க முயல்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....