சனி, 2 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – தக்காளி தோசை [அ] அடை



தக்காளி தோசை

தக்காளி நிறைய இருந்ததால் தக்காளி தோசை செய்தேன். எப்போதும் செய்வது போல அல்லாது YouTube ல் Chitra murali's kitchen-ல் போய்ப்பார்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இவரைப் பற்றி மாத இதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. ஆடம்பரம் இல்லாமல் இவருடைய கிச்சனிலேயே அன்றாடம் சமைப்பது போல் செய்து காட்டியுள்ளார்.



தேவையான பொருட்கள்:


தேவையான பொருட்கள்....

பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
தக்காளி - 7(அ) 8
வரமிளகாய் - 8
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசி பருப்பை கழுவி மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.

தக்காளி, வரமிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும்.


தக்காளி அரைத்தாயிற்று!

ஊற வைத்த அரிசி-பருப்பையும் அரைக்கவும். 


அரிசி பருப்பும் அரைச்சாச்சு!

இரண்டையும் கலக்கவும்!


கலக்கியாச்சு!

கலக்கிய மாவில் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும்.


கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்தாச்சு....

தோசை [அ] அடையாக வார்த்து, திருப்பி போடவும்.


தோசை வார்த்தாச்சு!


தோசை திருப்பி போட்டாச்சு!



தக்காளி தோசை ரெடி!

தேவையான தொட்டுக்கை சேர்த்து சாப்பிடலாம்! நாங்கள் கொத்தமல்லி பொடி, நெய் சேர்த்து சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....

26 கருத்துகள்:

  1. சுவையாக இருக்கும். இதை நான் வேறு மாதிரி செய்து மசாலா தோசை என்கிற தலைப்பில் எங்கள் தளத்தில் போட்டிருக்கிறேன். இதே போல இட்லியும். ஆனால் மாவோடு சேர்த்து அரைக்காமல் அப்புறம் தனியாக வெங்காயம், தக்காளி, கொஞ்சம் பூண்டு, குடைமிளகாய் (இதை நறுக்கி சிறு பத்தைகளாகவும் சேர்த்தேன்) வரமிளகாய் கொத்துமல்லி எல்லாம் அரைத்து மாவில் சேர்த்து இட்லி, தோசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பார்க்க நல்லா வந்திருக்கு. பசங்க இங்க வரும் அன்று செய்துவைத்திடறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ஸூப்பர் செய்ய சொல்கிறேன் வீட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. ஆஹா! அழகான தோசை1! பார்த்தாலே அப்படியே எடுத்துச் சாப்பிடணும் போல இருக்கு... என்ன இன்று யாரும் சாப்பிட வரவில்லையா? இல்லை வந்ததன் அட்டெண்டஸ் இன்னும் வெளியாகவில்லையோ??!! ஹா ஹா ஹா ஹா

    ஆதி தக்காளி தோசை செய்ததுண்டு ஆனால் பாசிப்பருப்பு, பச்சரிசி சேர்த்துச் செய்ததில்லை. சுவையாக இருக்கும் போல இருக்கே..பஉங்கள் புகைப்படங்களும் அருமையா இருக்க்..வீட்டிலேயே சரியான போட்டி சபாஷ்!!!! குறிப்புகள் சூப்பர். பகிர்விற்கும் மிக்க நன்றி. நானும் அவரது யுட்யூப் போய்ப் பார்க்கிறேன். இந்த அறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஆதி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. ஆமாம் இப்படி வகை வகையாக சமைத்து அசத்துவதுமட்டுமல்லாமல் அதையும் அழகாக படம் எடுத்து போடுறீங்களே அதை டில்லியில் இருந்து பார்க்கும் உங்க கணவர் ஏக்கம் கொள்ள மாட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கெல்லாம் ஏக்கப்படமாட்டேன்! வேணும்னா சமைத்துக் கொண்டால் ஆச்சு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. தக்காளி தோசை படங்களுடன்அழக வந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  10. பாசிபருப்பு போடாமல் தான் நான் செய்வது....

    அடுத்தமுறை இவ்வாறு செய்து பார்க்கலாம்...

    படங்களும் வெகு அழகு...பளிச் பளிச் ன்னு சாருக்கு போட்டியா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

      நீக்கு
  11. ஆந்திரப் பெசரெட்டில் தக்காளி சேர்த்ததுபோல் இருக்கிறது காம்பினேஷன்கள் மாறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. மாலையில் அரைத்து மறுநாள் காலை மேலும் சற்று காரம் சேர்த்து ஊற்றினால் இன்னும் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  13. ஏற்கனவே முகநூலில் பார்த்தது, அதில்லாம நானும் செய்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....