ஞாயிறு, 7 ஜனவரி, 2018

இந்தி திணிப்பு – அனுஷ்கா, தமன்னா, தீபிகா - இந்தி சினிமா




படம்: இணையத்திலிருந்து....

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி நண்பர் எங்கள் கல்லூரி நண்பர்களுக்கான Whatsapp குழுவில் அன்றைய இரவு உணவு பற்றி கேட்க, நான் “phulka [Chapathi], Cabbage-Carrot-Mutter Subji” என எழுதியபோது “இந்தித் திணிப்பு” என கருத்துச் சொன்னார்! இந்தப் பதிவினை எழுதலாம் என நினைத்தபோதே நண்பர் இதற்கு என்னச் சொல்லப் போகிறாரோ என்ற நினைவும் கூடவே வந்தது! ஏனெனில் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது சில ஹிந்தி பாடல்கள்!

வலையுலகில், குறிப்பாக என் வலைப்பூவினைத் தொடரும் நண்பர்களுக்கு, யார் அனுஷ்கா ரசிகர், யார் தமன்னா ரசிகர் என்று நன்றாகவே தெரியும்! இப்போது மூன்றாவதாக நீங்கள் ”தீபிகா ரசிகரா?” என்ற கேள்வி உங்களிடம் வரப் போகிறது! நான் இன்று பகிர்ந்து கொள்ளப்போகும் ஹிந்தி பாடல்கள் தீபிகா படுகோன் நடித்த படங்களிலிருந்து தான்! இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது ஒரு பாடல் வர கேட்டுவிட்டேன். தொடர்ந்து அவரது பாடல்களாகவே Suggest செய்தது யூட்யூப்! அப்படி பார்த்ததில் எனக்குப் பிடித்த சில பாடல்கள் இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாம் பாடல்:

பத்மாவதி – சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்பு – வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்கள் – இந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் – கூமர் கூமர்” என்ற பாடல்! கூமர் எனும் நடனம் பற்றி எனது வலைப்பூவில் முன்னர் எழுதி இருக்கிறேன் – அந்தப் பதிவு கீழே!


நாம் படத்தின் பிரச்சனைகளுக்குள்ளே செல்லாமல் இந்தப் பாடலினை பார்க்கலாம் வாங்க! இந்தப் பாடலில் தீபிகா அணிந்திருக்கும் உடை/நகைகள் எடை அவரின் எடையை விட அதிகம்!


இரண்டாவது பாடல் – ”Bபாஜிராவ் மஸ்தானி” படத்திலிருந்து ”நசர் ஜோ தேரே லாகே” பாடல் – இந்தப் பாடலும் மிகவும் நன்றாக எடுத்திருப்பார்கள் – இராஜா ராணி காலத்துப் பாடல் என்பதால் செட்டிங்க்ஸ், உடைகள் என பலவும் பிரம்மாண்டமாக இருக்கும்.  இந்தப் பாடலும் நன்றாகவே இருக்கும்! பாருங்களேன்….


மூன்றாவது பாடல்:

மூன்றாவது பாடலும் தீபிகா படுகோன் பாடல் தான்! இந்தப் பாடல் ”ராம் லீலா” எனும் படத்திலிருந்து “நகாடா சங்க் டோல் பாஜே” எனும் பாடல். நடனம், இசை என இரண்டுமே செம வேகத்தில்!  பாருங்களேன்.


என்ன நண்பர்களே, இன்று பகிர்ந்து கொண்ட பாடல்களை ரசித்தீர்களா? அவ்வப்போது இது போன்ற, நான் ரசித்த “இந்தி” பாடல்கள் வெளியிட உத்தேசமுண்டு!
மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

34 கருத்துகள்:

  1. பாடலைக் கேட்கணும். கேட்டுட்டு, ஆட்டத்தையும் பார்த்துட்டுச் சொல்றேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுப் பாருங்க கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. பாட்டை கேட்டால் மட்டும் போதாது ஒரு ஆட்டம் ஆடிவிட்டும் சொல்லுங்கம்மா

      நீக்கு
    3. ஹாஹா.. ஒரு ஆட்டம் ஆடணுமா.... சரி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. அட!!!!!!!!!!!! மீ ஃபர்ஷ்டு???????? கமென்ட் மாடரேஷன் இல்லையா? !!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ம்ம்ம்.. நீங்க தான் ஃபர்ஷ்டு! புதிய பதிவுகளுக்கு கமெண்ட் மாடரேஷன் எடுத்துவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
    2. ///அட!!!!!!!!!!!! மீ ஃபர்ஷ்டு???????? !!!!!!!!!!!!!!!!!!!!///

      karrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:)

      நீக்கு
    3. ஆஆஆஆவ்வ்வ் இங்கினயும் மொடரேசன் போயிந்தி:)).. மொடரேசன் இருந்தால் நிறையக் கொமெண்ட் போடுவோருக்கு ஒரு நன்மை.. என்ன தெரியுமோ? மளமள வெனக் கொமெண்ட்ஸ் ஐப் போட்டுக் கொண்டே போயிடலாம், இல்லை எனில் ஒவ்வொரு கொமெண்ட்டைப் போஸ்ட் பண்ணும்போதும் புளொக் ரீஈஈஈஈஈஈ பிரெஸ் ஆகும்ம்ம்ம்:)).. வெயிட் பண்ணிக்கொண்டிருக்கோணும்:)..

      நீக்கு
    4. அதிரா கிர்ர்ர்ர்ர் க்கே கிர்ர்ர்ர்ர்ர்ர் ஆ? நல்ல போட்டி தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    5. கமெண்ட் மாடரேஷன் பழைய பதிவுகளுக்கு மட்டும் [இரண்டு நாளுக்கு முந்தைய பதிவுகளுக்கு மட்டும்!] உண்டு. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு தான் வெளியிட வேண்டியிருக்கிறது என்பதால் எடுத்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மியாவ் அதிரா.

      நீக்கு
  3. பதிவைப் படித்தேன். பாடலை பிறகுதான் கேட்கவேண்டும். கேட்டாலும், புரிஞ்சமாதிரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை ரசிக்க மொழி அவசியம் தான் என்றாலும் இசையை ரசிக்க முடியும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. முதல் படத்தைப் பார்த்ததுமே, இவ்வளவு நகைகள், அதுவும் கழுத்தை அசைக்க முடியாமல் அத்தனை நகைகள் - பார்க்க அழகா இருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு ( நான் சொல்றது ராணிகள்/இளவரசிகளுக்கு) எவ்வளவு கஷ்டமாக இருக்கவேண்டும், எப்போதும் அழகுப் பதுமைபோல இருப்பதே என்ன வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காலத்துப் பெண்களைப் போல -
      கொடுக்!.. என்றா இருந்திருப்பார்கள் அக்காலத்திய இளவரசிகள்!..

      தற்காப்பு, குதிரையேற்றம், வாள், வில் - என, போர்க்கலைகளைப் பயின்றிருந்தவர்கள் தானே!..

      அதிலும் -
      மண்ணுக்கு மரம் பாரமா?.. - என்கிற மாதிரி
      நங்கைக்கு நகை பாரமா!..

      நீக்கு
    2. அழகுப் பதுமைகள் - சிலர் அப்படி இருந்தாலும் பல பெண்கள் ராஜாங்கத்தில் முக்கிய பதவிகள் வகித்தும் இருக்கிறார்களே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. உண்மை தான் பல பெண்கள் குதிரையேற்றம், வாள் பயிற்சி எனவும் பயின்று இருக்கிறார்கள் - எத்தனை ராணிகள் கதைகள் படித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  5. எல்லாவற்றிலும் கூமர் பாடலை முன்பே கேட்டிருப்பதால் அது தான் முதல் விருப்பம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூமர் பாடல் எனக்கும் பிடித்த ஒன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. இருந்தாலும் அனுக்கா, தமனாக்கா எனத் தலைப்புப் போட்டு “இருவரை” ஏமாற்றியமைக்கு என் வன்மையான கண்டங்கள்:))...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரை ஏமாற்றியமைக்கு கண்டனங்கள்! :) ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  7. ///இந்தப் பாடலில் தீபிகா அணிந்திருக்கும் உடை/நகைகள் எடை அவரின் எடையை விட அதிகம்!///

    ரொம்ம்ம்ம்ம்ப வருத்தப்படுறீங்கபோல:)) ஆடு நனையுதே என ஓநாய் அழுததாமே:).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப வருத்தப்படுறீங்க போல! உண்மையைச் சொன்னேன்!

      மீ ரொம்ப நல்ல பொண்ணு! சரி தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. தீபிகா வின் நடிப்பு எனக்கும் பிடிக்கும் ஆனால் பாடல்கள் என்றால் பழைய பாடல்கள் ரெக்கார்டு பிளேயரில் கேட்பது .....(இப்போது ரிப்பேர் ஆகி விட்டது ) அதில் இருந்த இனிமை இப்போது இல்லை என் எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பாடல்களில் இருந்த இனிமை - இப்போது இல்லை! பல சமயங்களில் புதிய பாடல்களில் இரைச்சல் மட்டுமே இருக்கிறது. ஒன்றிரண்டு பாடல்கள் தவிர.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  9. ஒரு பாடல் பத்மா(அ)வதி கேட்டேன் ஸூப்பர்.

    அடுத்த பாடல் இன்னும் கேட்கவில்லை இணையம் ஸ்வாஹா...

    மூன்றாவது ஸ்ரீராம் & லீலா அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. நன்றாக இருந்தது.
    இரண்டாவது பாடல் தமிழில் டப் செய்யப்பட்து நண்பர் அனுப்பி முன்பே பார்த்திருக்கிறேன்.
    https://www.youtube.com/watch?v=9Mz9iIT1j2w

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பாடல் பார்த்த நினைவில்லை நண்பரே. பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேகநரி.

      நீக்கு
  11. ஹிந்தி மொழி புரியாவிட்டாலும் அவர்களின் பாடல்களை வீடியோவாக பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசையை/பாடலை ரசிக்க, அதுவும் காணொளியோடு பார்க்கும்போது, மொழி அவசியமில்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. பாடல்கள் நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி...இங்கு கேட்க அழுத்திய போது கணினி படுத்துக் கொண்டு விட்டது..என் கணினியில் பிரச்சனை இன்னும் அதன் டாக்டர் ஃப்ரீ ஆகவில்லை..அதான்..

    அது சரி பாவம் ஸ்ரீராம், நெல்லை அனுஷ்கா தமனாவைக் காணவில்லையே...ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்கா, தமனாவைக் காணவில்லையே! அதுக்கு தான் மூணுமே தீபிகா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. இப்போதைய திரை இசைப் பாடல்கள் கேட்கவே பிடிப்பதில்லை அதுவும் ஹிந்தியில்....... மூச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி பாட்டுன்னா மூச்ச்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....