ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – பறந்து பறந்து மேளம் - விதம் விதமாய் நடனம் – பகுதி 4



பர்யாடன் பர்வ் - 2018, ராஜ்பத், தில்லி...

பர்யாடன் பர்வ் – 2018 – தலைநகர் தில்லியில் கடந்த மாதம் 16-27 தேதிகளில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்திய அரசின் சுற்றுலாத் துறையினர் நடத்திய நிகழ்ச்சி. தலைநகர் தில்லியின் ராஜபாட்டையில் [ராஜ்பத்] நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றாக ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் பல மாநிலங்களிலிருந்து நடனங்கள் நடந்தன.  அப்படி நடந்த நடனங்களை நான் எடுத்த நிழற்படங்களை சில பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இதோ நான்காம் பகுதியாக வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஒரு நடனம்.  சென்ற பகுதியில் பார்த்த கத்திச் சண்டையினைத் தொடர்ந்து அவர்களது மாநிலத்திலிருந்து வந்திருந்த கலைஞர்கள் தங்களது இசைக்கருவியை இசைத்தபடியே சுழன்று சுழன்று ஆடினார்கள். பார்க்கவே வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது அந்த நடனமும் இசையும். குறிப்பாக கடைசியில் ஆடிய இரண்டு இளைஞர்களின் நடனம் ரொம்பவே நன்றாக இருந்தது – அப்படி ஒரு துடிப்பு அந்த இளைஞர்களிடம்.

நான் எடுத்த படங்களுடன், நண்பர் பத்மநாபன் எடுத்த ஒரு காணொளியும் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். சற்றே தொலைவிலிருந்து எடுத்த காணொளி என்பதை நினைவில் கொள்க!






















நடனம் - காணொளியாக....
































என்ன நண்பர்களே நிழற்படங்களை ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். பறந்து பறந்து மேளம்... அந்தரத்தில் நிற்கும் தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காணொளி அருமை. தூரத்திலிருந்து பார்க்கும்போது பறக்கும் அவர்கள் ஒருவடொருவர் மோதிக்கொள்ளாமல் லேண்ட் ஆகவேண்டுமே தோன்றியது!​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அத்தனை வேகமும் ஆட்டமும் - பார்க்கும்போது எனக்கும் அதே எண்ணம் - மோதிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காணொளி அருமை.
    தூரத்திலிருந்து என்றாலும் அருமையாக இருக்கிறது.
    எவ்வளவு வேகம்! பின்னால் பெரிய திரையிலும் தூரத்திலிருந்து பார்க்க வசதி செய்யப் பட்டுள்ளது போலவே!

    படங்கள் துரிதகதி நடனத்தை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பெரிய திரைகளில் மேடை அருகேயும் மற்ற இடங்களிலும், நடனம் பார்க்க வசதி செய்திருந்தார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. பெங்களூர் இஷ்கான் கோவிலில் இப்படி அங்கு உள்ள இஷ்கான் பக்தர்கள் ஆடியதை நேரில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஸ்கான் பக்தர்கள் சிலர் இப்படி ஆடுவதுண்டு. நானும் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....