திங்கள், 1 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஹிமாலயன் பறவைகள் பூங்கா




ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 5

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


என்னைப் பார்க்கவா வந்தீங்க....
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா
 
சென்ற பகுதியில் IIAS, Shimla பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் அடுத்து நாங்கள் சென்ற இடம் பற்றி பார்க்கலாம். ஷிம்லா நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் என ரொம்பவும் அதிகம் இல்லை. ஷிம்லா என்றாலே மால் ரோடு மட்டும் தான் என இங்கே இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள். மால் ரோடு எப்பவுமே கும்பலுடன் இருக்கக் கூடிய ஒரு இடம். இங்கே மாலை நேரத்தில் செல்வது தான் சிறந்தது. பகல் நேரத்தில் வேறு சில இடங்களைப் பார்ப்பது தான் எங்கள் திட்டமாக இருந்தது. ஷிம்லா ஒப்பந்தக் கூட்டம் நடைபெற்ற வைஸ்-ரீகல் கட்டிடம்/ராஷ்ட்ரபதி நிவாஸ் பார்த்த பிறகு எங்கள் ஓட்டுனர் ரஞ்சித் சிங் எங்களை அழைத்துச் சென்ற இடம் ஒரு பூங்கா….


ஏதாவது திங்க இருக்கான்னு பார்க்கலாம்....
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா


இந்த வாலைத் தூக்கிட்டு நடக்க முடியலப்பு....
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

பூங்கா என்றவுடன் ஏதோ பெரிய இடம் போல இருக்கிறது என நினைத்து வாகனத்தினை விட்டு இறங்கினால் ஹிமாலயன் பறவை பூங்கா என்ற பதாகை எங்களை வரவேற்றது. ஹிமாச்சல வனத்துறையினரால் நடத்தப்படும் பூங்கா. நுழைவுக்கட்டணம் மற்றும் கேமரா கட்டணமாக ரூபாய் 110/- கொடுத்து உள்ளே சென்றால் மொத்தமாய் பத்து பறவைகள் தான் இருந்தன! :( சில வாத்துகள், ஆங்கிலத்தில் Pheasant என அழைக்கப்படும் பறவைகள் மற்றும் மயில்கள்! அவ்வளவு தான். அதற்கு ஒரு பூங்கா, நுழைவுக்கட்டணம், சில படிகள் ஏறிச்சென்று பார்க்க வேண்டும்! டேய் இது ரொம்ப ஓவரா இல்லையா உங்களுக்கே என நினைத்தபடியே, சரி வந்தது வந்தோம் – சில படங்களாவது எடுத்துக் கொள்வோம் என படங்கள் எடுத்துக் கொண்டோம்.


அடிமீது அடி வைத்து நடக்கலாம் வாங்க...
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா


ஏனிந்த ஒற்றைக் கால் தவமோ?
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

பிறகு வெளியே வந்ததும் ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் ஏன் இந்த மாதிரி இடத்திற்கு அழைத்து வந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லையே எனக் கேட்க, சுற்றுலா வரும் பயணிகள் எல்லோருமே இங்கே வருவார்கள் எனச் சொன்னார் – நாங்கள் சென்ற போது எங்களைத் தவிர ஒரு சுற்றுலா பயணி கூட இல்லை! என்னவோ போங்க, அடுத்து எங்கே என்ற போது ஒரு அருங்காட்சியகம் என்று சொன்னார். சரி அதாவது நல்லா இருக்குமா பார்க்கலாம் என்று நினைத்தபடியே வண்டியில் அமர்ந்தோம். வண்டியில் அமர்ந்து நாங்கள் அடுத்த இடத்திற்குப் போவதற்குள் ஷிம்லா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். ஷிம்லா நகரம் – ஆங்கிலேயர்களின் கோடைக்காலத் தலைநகரமாக இருந்தது.


இங்கே என்ன இருக்குன்னு வந்துட்டாங்க இவங்க....
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

1815-16-ஆம் ஆண்டுகளில் கோர்கா போர் முடிவுக்கு வந்தது. ஒரு சிறு கிராமமாக இருந்த சிம்லா [அப்போதைய பெயர்!]-வின் சில பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் அங்கே நிறைய கட்டிடங்களைக் கட்டத் துவங்கினார்கள். ராணுவத்தினருக்கான சில கூடங்களை அங்கே அமைத்தார்கள். சின்னச் சின்னதாய் கட்டிடங்கள் அமைக்க ஆரம்பித்து ஒரு சிறு கிராமத்திலிருந்து ஆங்கிலேயர்களின் கோடைக்கால தலைநகராக 1864-ஆம் ஆண்டு வைஸ்ராய் ஜான் லாரன்ஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்த ஷிம்லா நகரம் ஆங்கிலேயர்களின் கோடைக்கால தலைநகரமாகத் தொடர்ந்தது.


அடேய்... அறிக்குதுன்னு சொறிய விடாம எதுக்குடா ஃபோடோ புடிக்கிற...
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலில் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாகத் தான் இருந்தது. பிறகு பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமாக 1966-ஆம் ஆண்டு ஆனது. பல மலைகளைக் கொண்ட ஒரு மலைப்பிரதேசமாக இருக்கும் ஷிம்லாவின் முக்கிய மலையாக ஜாக்கூ மலை [கடல் மட்டத்திலிருந்து 8050 அடி] இருக்கிறது. இதைத் தவிர வேறு மலைகளும் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்களிலேயே – Prospect Hill, Observatory Hill, Elysium Hill, Summer Hill – இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. சஞ்சௌலி எனும் இடத்தில் 560 அடி நீள குகைப் பாதை அமைக்கப்பட்டு சாலையும் ஆங்கிலேயர் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது. இன்றைக்கு மிகவும் பிரபலமாகவும், heritage rail-ஆகவும் இருக்கும் கால்கா – ஷிம்லா இரயில் பாதை 1903-ஆம் வருடம் அமைக்கப்பட்டது.


கொத்திக் கொத்தி திங்க கஷ்டமா இருக்காதோ?
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

ஷிம்லா என்ற பெயர் எதிலிருந்து வந்தது என்ற கதைகளும் உண்டு. அதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. ஜாக்கூ மலையில் ஒரு ஃபகீரால் நீல நிற கற்களால் அமைக்கப்பட்ட “ஷ்யாமாலயா” என்ற நீல வீட்டின் பெயரிலிருந்து உருவானது தான் ஷிம்லா என்ற பெயர் என்று ஒரு பிரிவினர் வாதம். இல்லை இல்லை அப்படி இல்லை காளி மாதாவின் பல பெயர்களில் ஒன்றான “ஷாம்லா” – நீல நிற பெண்மணி என்ற பெயரிலிருந்து உருவானது தான் இந்த ஷிம்லா பெயர் என்று மற்றவர்களின் வாதம். அதே ஜாக்கூ மலையில் இருந்த காளி வழிபாட்டு தலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டது – இப்போதும் காளி Bபாரி என்ற பெயரில் ஷிம்லாவில் உண்டு. எது எப்படியோ சிம்லா என்பது ஷிம்லாவாக இப்போதும் பல சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தபடி அமைதியாக இருக்கிறது!


மயிலே மயிலே... ஒரு இறகு தாயேன்...
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா

என்ன நண்பர்களே, ஷிம்லா நகர் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டீர்களா? எங்கள் ஓட்டுனர் பறவைப் பூங்காவிலிருந்து அடுத்து ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்று அந்த இடத்தின் வாயிலில் விட்டார். அது ஒரு அருங்காட்சியகம். அந்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை எல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன். மீண்டும் ச[சி]ந்திப்போம்…

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஷிம்லாவில் நிறைய கட்டிடங்கள், மக்கள் சில இடங்களில் நடப்பதுவே சிரமமாக மக்கள் கூட்டம் என்றுதான் இருந்தது. இயற்கைக் காட்சிகள் கட்டிடங்களை விட்டு கொஞ்சம் தள்ளிச் சென்றால் ரசிக்கலாம். நாங்களும் மினி மிருகக்காட்சி சாலை என்று சென்றோம் ஆனால் அங்கு அப்படி ஒன்றும் நிறைய இருக்கவில்லை அப்போதும்...ஃபெஸன்ட் இருந்தன...மகன் அப்போது சிறு வயது என்பதால் அவனது ஸ்வாரஸ்யத்திற்கு...

    நல்ல தகவல்கள் ஜி. படங்கள் அழகாக இருக்கு அதற்கான கமென்ட்ஸும். தொடர்கிறோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் இப்படித்தான் நிறைய கட்டிடங்கள், சுற்றுலா வாசிகளும், உள்ளூர் மக்களும் நடக்கவே முடியாத அளவிற்கு கும்பல்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. 110 ரூபாய் பத்து பறவைகள்... ஒரு பறவைக்கு ஒன்பது ரூபாய் ப்ளஸ் ஜி எஸ் டி...!!! ஹா.. ஹா.. ஹா...

    காலை வணக்கம் வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்....

      ப்ளஸ் ஜி.எஸ்.டி! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சிம்லா என்னும் ஷிம்லா பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டேன். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பறவைகள் நல்லாத் தான் கொழுகொழுவென இருக்கின்றன. ஓட்டுநருக்கு இந்த இடம் முக்கியமா இருந்திருக்கும். ஆனால் நமக்கெல்லாம் இது ஜூஜூபி! இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு இது ஜூஜூபி! ஆமாம். நான் நிறைய வனங்களுக்குச் சென்று விட்டதால் இப்படி பார்க்கும்போது பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. பறவைகளின் கற்பனை மொழி நன்றாகவே இருக்கு! நல்ல கற்பனை வளம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  9. சிம்லா விடயங்கள் ஸூப்பர் பறவைகளின் வசனங்கள் ரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. பறவைகள் எல்லாம் அழகுதான்.
    அவை சொல்லுவதும் அருமை.
    இருக்கும் கொஞ்ச பறவைகளையும் அழகாய் எடுத்து வந்து விட்டீர்கள் உங்கள் காமிராவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. சிம்லா குறித்த தகவல்கள் சிறப்பு. பறவைகள் இதுவரை பார்க்காதவை. ரசித்தேன். திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் நபருக்கு ரூ.10, கேமராவுக்கு ரூ.500 வசூலித்தார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சியைக்கூட அங்கு அன்று நான் பார்க்கவும் இல்லை, படமெடுக்கவும் இல்லை. :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேமராவுக்கு 500 ரூபாய் இல்லையே... கேமராவிற்கு 20 ரூபாய், வீடியோ கேமரா என்றால் 100 ரூபாய். நான் சென்ற போது 20 ரூபாய் தான் கொடுத்தேன். அப்போது எழுதிய பதிவின் சுட்டி கீழே...

      http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_27.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....