செவ்வாய், 9 அக்டோபர், 2018

கதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை





சென்னைப் பயணம் நிறைவு – 1 அக்டோபர் 2018:



இன்று திருச்சிக்கு கிளம்பணும்!!

சென்னைக்கு வந்திருந்த ஒரு வாரத்தில் நான் பார்த்த படங்கள் - மெர்சல், ரெமோ, தெறி, சீமராஜா, வேலைக்காரன், டிக் டிக் டிக், லஷ்மி, குலேபகாவலி.....

நேரத்தைக் கடத்த இந்தப் படங்கள் உபயோகமாய் இருந்தது. கதை என்ன என்று இப்போது யோசிக்கிறேன். பாடல்களும் மனதில் நிற்கவில்லை.

Padma Mani அம்மாவுடன் ஃபோனில் பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தது. வயது முதிர்வின் காரணமாக தளர்ச்சி இருந்தாலும் அவரின் தன்னம்பிக்கை, தைரியம், திறமைகளுக்கு முன் அவை ஒன்றுமேயில்லை. அடுத்த முறை தம்பதிகளாய் வந்து ஆசி பெறுகிறோம் என்று சொல்லியிருக்கிறேன்.

Revathy Venkat லாஜியுடனும் நெடுநாட்களுக்குப் பிறகு பேச முடிந்தது. பள்ளித்தோழி Anitha Mani உடனும் நேரில் சென்று சந்திக்க முடியாத காரணத்தால் பேசினேன்.

நேற்று அருகில் இருந்த தாய்மாமா வீட்டிற்குச் சென்று வந்தோம். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மாமி தயார் செய்திருந்த பாயசம் மற்றும் அவியலுடன் அருமையான சமையல்... வடை தட்டவில்லை என்று மாமி குறைபட்டுக் கொண்டார்.

மாலை - மாமாவின் கைவண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மணத்துடன் குடமிளகாய் பஜ்ஜி், தேநீருடன் சுவைத்தோம்.




தாம்பூலத்தில் மகளுக்கும், எனக்கும் வைத்துக் கொடுத்ததைப் பற்றி மாமியிடம் கேட்டால், "ஒவ்வொரு தடவையும் நீ இங்கே வரணும். நான் உனக்கு வாங்கித் தரணும்" என்கிறார். என் சமையல் பகிர்வுகளைப் பற்றி பாராட்டினார். அம்மாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். மனதுக்கு நெருக்கமான சந்திப்பாக இருந்தது.

தம்பியுடன் சரவணா ஸ்டோர்ஸுக்குச் சென்றோம். வேண்டாமடா என்றாலும் மிரட்டலுடன அவனின் அன்புப் பரிசுகள். வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்..

மோதி விளையாடு பாப்பா - குறும்படம் – 28 செப்டம்பர் 2018:

அவசியம் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம். பாருங்களேன்!



அன்பு சூழ் உலகு – 27 செப்டம்பர் 2018:

சிலநாட்களுக்கு முன்னர் என் உயரத்தின் காரணமாக நைட்டி கிடைக்கவில்லை என்று எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என் முகநூல் நட்புவட்டத்தில் உள்ள சுஜாக்காவிடமிருந்து அழைப்பு. இவர் எனக்கு டெல்லியில் எங்கள் ஏரியாவில் இருக்கும் போதே பழக்கமானவர். தற்போது இவர் சென்னையில்.

தன் குடும்பத்திற்கு நைட்டி வாங்குவதற்காக கடைக்குச் சென்ற போது என் நினைவு வந்ததாம். ஏறக்குறைய ஆறடி என்று சொல்லி வாங்கியிருக்கிறார்.

எப்படி அனுப்பி வைப்பது என்று யோசித்தாராம். நான் சென்னையில் இருப்பதாக முகநூல் இற்றைகளில் பார்த்து தம்பி வீட்டு முகவரிக்கு கூரியரில் அனுப்பி வைத்தார்.

நேற்று மாலை பார்சல் கிடைக்கப் பெற்றது. அழகான கலரில் என் உயரத்திற்கு ஏற்றதாய் வாங்கியிருக்கிறார். ஃபோனில் கிடைத்த விவரங்களைச் சொன்ன போது, ஊருக்குச் சென்று உபயோகித்தப் பின் இரண்டு மூன்று முறை துவைத்து பார்த்துட்டு சொல்லு!!! இன்னும் வாங்கி அனுப்பறேன் என்று சொல்லியிருக்கார்.

கொலு பொம்மைகள் – நவராத்ரி – 01 அக்டோபர் 2018





நேற்று சரவணா ஸ்டோர்ஸ் சென்ற போது அங்கு வாசலில் வைத்திருந்த ஒன்பது படி கொலு. ரோட்டில் நின்று எடுத்திருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும்.

இந்த வாரத்தின் ஒரு நிழற்படம் – 01 அக்டோபர் 2018:



ஓடும் ரயிலிலிருந்து - விழுப்புரத்தை கடந்த போது.

அழகான உலகு – 01 அக்டோபர் 2018

எங்கள் கோச்சில் ஒரு குட்டி தேவதை. சிலுக்கு சிலுக்கென்று நடந்து வருவதும், எட்டி எட்டி பார்ப்பதும், அருகிலிருந்த அண்ணாவுக்கு ப்ரியத்துடன் பிஸ்கட் பகிர்வதுமாக இருக்கிறாள். கோச்சில் உள்ள அனைவரையும் கவர்கிறாள். Rishaban Srinivasan சாரின் ஜ்வல்யாவை நினைத்துக் கொண்டேன். அவர் பார்த்திருந்தால் இந்நேரம் கவிதை எழுதியிருப்பார்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட் அண்ட் திருமதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  2. கதம்பத்தில் சில முகநூலில் படித்தவை. புகைப்படம் அழகு. ஜ்வல்யா நினைவுக்கு வரவைத்த குழந்தை சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. முகநூலிலும் படித்தேன். பொம்மைகள் இந்த வருஷம் கொஞ்சம் விலை குறைஞ்சிருக்கோனு நினைக்கத் தோணுது! நானும் ஒரு பொம்மைக்கடைப் படம் எடுத்திருக்கேன். இன்னும் பகிரும் வேளை வரலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை.
    முகநூலில் படித்து ரசித்தேன்.
    பொம்மைகள் வாங்கவில்லை என்றாலும் பார்த்து ரசிப்பது மிகவும் பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் இன்னும் இந்த வருடம் பொம்மைகள் ஒன்றும் வாங்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. எல்லாமே முகநூலில் பார்த்தது. சரவணா ஸ்டோர் கொலு சூப்பர். எங்க வீட்டில்தான் கொலு வைக்கும் பழக்கமில்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. சிறப்பு. உங்கள் குடும்பத்தினரையும் வலைப்பதிவில் ஆசிரியராக இணைத்து விடுங்கள்.

    ஆட்சென்ஸ் விளம்பர சேவையை வலைப்பதிவுக்கு இணையுங்கள்.

    வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா
    https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html
    #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....