வெள்ளி, 24 மே, 2019

தில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…


குல்ஃபி ஃபலூடா – 10 May 2019 :


தலைநகர் வந்து விட்டு குல்ஃபி ஃபலூடா சாப்பிடாவிட்டால் எப்படி? கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி சென்றபோது அங்கே கூட்டம் அதிகம். சாப்பிட முடியவில்லை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் ஸ்விக்கி மூலம் அதே பகுதியில் இருக்கும் கிங்க்ஸ் குல்ஃபியிலிருந்து ஃபலூடா வரவழைத்து சுவைத்தாயிற்று!
 
மலேரியா – 10 May 2019:

டெல்லி அரசிலிருந்து மலேரியா ஒழிப்பு சார்பில் வீடு வீடாக வந்து ஏர்கூலரில் உள்ள தண்ணீரை சோதித்து மருந்து போடுவதற்காக ஒரு அலுவலர் வந்தார்.

எத்தனை கூலர் இருக்கு என்று வினவினார்? நானும் பதில் சொன்னேன்.

பெயர் கேட்டார்! சொன்னேன்.

ஃபோன் நம்பர் கேட்டார்? சொன்னேன்.

போகும் போது நீங்க மதராஸா! என்றார்?

ஏன்யா!! மூஞ்சிய பார்த்தா தெரியுதா!!! இல்ல ஓட்டை ஹிந்தியில் கண்டுபிடிச்சானா!!

Pandey's Paan – 11 May 2019:  YouTube-ல் தேடியதில் இந்த பான் கடை பற்றி தெரியவந்தது. 1943-லிருந்து இந்த கடை செயல்பட்டு வருகிறது. இவர்கள் 40-க்கும் மேற்பட்ட பான்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அனைத்தும் Tobaccoless!! இதுவரை இருக்கும் அனைத்து இந்திய ஜனாதிபதிகளும் இவர்களிடம் பான் வாங்கி சுவைத்திருக்கிறார்களாம்.

இந்தக் கடை North Avenue M.P குவார்ட்டர்ஸ் அருகே உள்ளது. Barack Obama அவர்கள் கூட சென்ற இந்தியப் பயணத்தில் இவர்கள் தயாரித்த Chocolate paan வாங்கி சுவைத்திருக்கிறாராம் :)

இவ்வளவு புகழ்பெற்ற கடையில் நாங்களும் பான் வாங்கி சுவைத்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னவர் அலுவலகம் முடிந்து வரும் வழியில் வாங்கி வந்தார். அழகாக பேக் செய்து தந்திருந்தார்கள்.

நாங்கள் சுவைத்தது Mango paan, Chocolate paan மற்றும் 4th idiot paan. மூன்றுமே சுவையில் ஜோர். இவர்களிடம் வாய்ப்புண்ணுக்கும், சளி, இருமல் தொந்தரவுக்கு கூட பான் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து பாருங்கள்.

ஊர்சுற்றல் - INA market, Sarojini nagar market & Connaught place!!!ஞாயிறன்று [12 May] இங்கு தேர்தல் இருந்தது. முதல் நாள் சனியன்று எங்களை லோதி கார்டனுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர், என்னவரிடம் யாருக்கு ஓட்டு போடுவீங்க ஜி! நான் ஜாடுக்கு தான் ஓட்டு போடலாம்னு இருக்கேன். அது சரி தானே என்று கேட்டுக் கொண்டு வந்தார் :) யாருகிட்ட!!! ஒன்றும் அங்கிருந்து பதில் வராதுன்னு எனக்குத் தெரியும் :) பாவம்!! அந்த ஆட்டோ ஓட்டுனர் :)

தேர்தலன்று மாலை எங்கேயாவது போகலாம் என்று யோசித்து INA market ஐ தேர்வு செய்து கிளம்பினோம். படியிறங்குகையில் மூன்று படிகள் வழுக்கி நான்காவது படியில் நச்சென்று உட்கார்ந்து விட்டேன் :) கையில் சிராய்ப்பு!

ஆட்டோவில் பயணித்து Dilli Haat INA market சென்றோம். வாசலில் இருந்த கடைகளைத் தவிர உள்ளே விடுமுறை என்று போட்டிருந்தது. அங்கிருந்து அருகிலேயே சரோஜினி நகர் மார்க்கெட். அங்கும் இதே நிலை. திறந்திருந்த ஓரிரு கடைகளும் போலீசாரின் நடவடிக்கையால் மூடப்பட்டது.

INA ஸ்டேஷனில் Textile ministry யிலிருந்து பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற துணிகள் அங்கே ஃப்ரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது...அங்கிருந்து மெட்ரோ பிடித்து கனாட் ப்ளேஸ் வந்தோம்.. பேல்பூரி வாங்கி ஓரிடத்தில் அமர்ந்து சுவைத்தோம். நல்ல காரம் :) அப்படியே கொஞ்சம் சுற்றி வலம் வந்தோம். Shake square ல் strawberry Icecream milkshake ஆர்டர் செய்து சுவைத்தோம். பிரமாதம்.

கிட்டக்க தான் சென்ட்ரல் பார்க். வாங்க போகலாம். அங்கே புதிதாக Heritage Charka Museum திறந்திருக்காங்க என்றார் என்னவர். 20 ரூ நுழைவுச்சீட்டு. உள்ளே புகைப்படங்கள் கொஞ்சம் எடுத்தேன். அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பினோம். மற்ற சில விஷயங்கள் வேறு பதிவில்! இன்றைக்கு கொஞ்சம் ஸ்பெஷல்! அது கீழே!

18ஆம் ஆண்டில் அடியெடுத்து… - 24 May 2019

பெற்றோருக்கு இணையாக என்னை அன்போடும், மிகுந்த அக்கறையுடனும், அதே சமயம் கண்டிப்பும் காட்டும் ஒரு ஜீவன்!!

பதினேழு வருடங்கள் கடந்தாலும் இவரைப் பொறுத்த வரையில், ஏதும் அறியாப் பெண்ணாகவே இருக்கிறேன் :) நானும் அப்படியிருக்கவே விரும்புகிறேன் :)

அவருக்கு ஊரைச் சுற்ற மிகவும் பிடிக்கும். எனக்கோ அவரையும், வீட்டையும் சுற்றி வரவே மிகவும் பிடிக்கும் :)

அவர் பெரிதாக எதற்கும் பயந்ததில்லை. நான் அதற்கு எதிர்ப்பதம். என் பட்டியல் தெனாலி கமல் போல் நீளம் அதிகம் :)

திருமணமான புதிதில் நான் பேசியதேயில்லை. "ஏதாவது கேளேன்" என்று அவர் பல நாட்கள் சொன்னதுண்டு. ஆனால் பின்னாட்களில் அப்படியே மாறிப் போகும் என்று தெரியவில்லை :))

இப்படி மாற்று கருத்துகளும், மாற்று விருப்பங்களும் இருந்தாலும் விடாமல் தொடரும் பந்தம்!!!

இத்தனை வருடங்களில் எந்த விதத்திலாவது தொந்தரவு தந்திருக்கலாம். சங்கடப்படுத்தியிருக்கலாம். எதுவாயினும் என்னை பொறுத்துக் கொண்டு அன்பு மட்டுமே செலுத்தும் இந்த உறவு என்றென்றும் தொடரணும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லியிலிருந்து….

32 கருத்துகள்:

 1. ஆதி அண்ட் வெங்க்ட்ஜி இனிய காலை வணக்கம்! இன்று வழக்கம் போல் பதிவு பார்க்க வந்து வரலை என்றதும் போய்விட்டேன்...இப்போது ஆஜர்..

  ஆதி நீங்க தில்லி போனாலும் போனீங்க ஒரே திங்க படங்கள் ஹா ஹ ஹாஹாஹா

  குல்ஃபி ஃபல்லூடா சுவைத்திருக்கேன் பின்னே நாங்களும் டில்லி போனோம்ல!! விடுவமா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி!

   ஒரேடியா திங்க படங்கள்! :)))) ஹாஹா... அதே தான் ஜி.எம்.பி.யும் சொல்லி இருக்கிறார் - திங்கறத பத்தி தவிர வேற எதுவும் எழுத மாட்டீங்களா இந்த ப்ளாக்ல! என்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  பலூடா எல்லாம் ஸ்விக்கியில் வாங்கினால் ஒழுங்காய் இருக்கிறதா? நான் ஒருமுறை அப்படி வாங்கிச் சாப்பிட்டு ஏமாற்றம் அடைந்தேன். ஜிகர்தண்டாவும் அவ்வண்ணமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   மிகச் சிறப்பான பேக்கிங்க்-கில் வந்தது - நாங்கள் வாங்கியதும் முதல் முறை தான். பெரும்பாலும் இந்த ஸ்விக்கி-பிக்கி எல்லாம் பயன்படுத்துவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நீங்க மதராஸா என்று கேட்டதும் நீங்கள் 'நோ... சென்னை" என்று பதில் அளித்திருக்க வேண்டும்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை அட!! சூப்பர் இல்ல இனி நான் அப்படித்தான் சொல்லப் போறேன் ஸ்ரீராம்!!!

   கீதா

   நீக்கு
  2. மதராஸி என்று அழைப்பதில் இவர்களுக்கு ஏனோ குதூகலம்! :(

   சென்னை என்று சொன்னாலும் மதராஸி தான்! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. சென்னை என்று சொல்லிப் பார்க்கலாம்! நானும் முயற்சிக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. நம் ஹிந்தியும் காட்டிக் கொடுத்துவிடுகிறது ஆதி...அண்ட் முகத்திலும் எழுதி ஒட்டியிருக்குமே!! மதராசி என்பது. ஹா ஹா ஹாஹ் மட்டுமல்ல எந்த தென்னிந்தியர்களையும் அவர்கள் மதராசி என்றுதானே சொல்றாங்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்கள் தில்லியில் இருந்தாலும் சிலர் பேசுவதை வைத்தே கண்டுபிடித்து விடுவார்கள். முகம் பார்த்து கண்டுபிடிப்பது சில சமயம் கடினம்.

   எல்லா தென்னிந்தியர்களும் மதராஸி தான் இவர்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. //நான் ஜாடுக்கு தான்//

  ஜாடு?

  உங்கள்-வெங்கட் பந்தம் பற்றிச் சொல்லியிருப்பது நெகிழ்ச்சி.. எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஆதி அன்ட் வெங்கட்ஜி! பிரார்த்தனைகளும் இந்த அன்பு எப்போதும் தொடரும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 8. ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகள். 'வாலிபங்கள் போகும் வயசாகக் கூடும்..ஆனாலும் அன்பு மாறாதம்மா' என்று சொல்லும்படி வாழ்க்கை தொடர ப்ரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. இனிய திருமணனாள் வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்.
  மிக அருமையாக சொன்னீர்கள் ஆதி.
  உங்கள் பிரார்த்தனை அருமை.நானும்
  பிரார்த்தனை செய்து ஆசியும் செய்கிறேன். என்று அன்புடன் மகிழ்ச்சியாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 11. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 12. வெங்கட் + ஆதி இனிப நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 13. உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வெங்கட்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 14. ஸ்ரீரங்கத்தார் பதிவுகளில் உண்பத ற்கும் சாப்பிடவுமே முன்னுரிமையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்கள் படிக்க வில்லை என்று தெரிகிறது!

   நீக்கு
 15. நீங்கள் விரும்பியபடியே அந்த உறவு நன்கு தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....