வியாழன், 16 மே, 2019

தங்கமே தங்கம் – சுதா த்வாரகநாதன்அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இப்பதிவின் மூலம் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தில்லியில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் பற்றி பார்க்கலாம்.
 
எல்லோருடைய வாழ்விலும் தங்கம் மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது. வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால், பிறந்த நாளிலிருந்தே, அப்பெண் குழந்தையின் திருமணத்திற்கு தங்கம் தேவை என, பெற்றவர்கள் தங்கத்தினை சேமிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தங்கத்தின் மீது தான் எத்தனை எத்தனை மோகம் பெண்களுக்கும் சில ஆண்களுக்கும்! ஒவ்வொருவர் வாழ்விலும் இந்தத் தங்கம் படுத்தும் பாட்டை விவரித்துக் கொண்டே போகலாம். புதிதாய் ஒரு தங்க நகை வாங்கிவிட்டால், அதை அணிந்து கொண்டு ஒரு வித பெருமிதத்துடன் பீடு நடை நடக்கும் பெண்கள் நிறைய பேர் உண்டு. நகையைக் கழட்டி விட்டால், அப்பெண்ணுக்கு பெருமிதமும் கிடைக்கும் மரியாதையும் குறைந்துவிடுமா என்ன என நான் நினைப்பதுண்டு.

தலைநகர் தில்லியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, இங்கேயுள்ள பெண்கள் கழுத்தில் போட்டுத் தங்கம் கூட இல்லாமல் வளைய வருவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். பெரிய பெரிய உயர் பதவியில் இருக்கும் பெண்கள் கூட ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியோ, இல்லை எனில், துடைத்து விட்ட கழுத்துடனோ தான் இருப்பார்கள். தென்னிந்திய பெண்கள் என்றால், அதுவும் திருமணம் நடந்து விட்டால் மஞ்சள் சரடு மட்டும் அணிந்து கொண்டால் நன்றாக இருக்காது என தங்கத்தில் சங்கிலி இல்லாமல் இருப்பது இல்லை.  நானும், எனது திருமணத்திற்குப் பிறகு ஒரு தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்து இருப்பேன். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, எங்கள் வீடு இருக்கும் காம்பவுண்ட் உள்ளே நுழைந்தேன். அப்போது யாரோ பின்புறமிருந்து என்னை தட்டுவது போல ஒரு உணர்வு!

நான் திரும்பும் வேலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் என் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் நான் கீழே விழ, அவன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியே தயாராக நின்றிருந்த பைக்கில் அமர்ந்து சென்று விட்டான். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யலாம் எனச் சென்றால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார்கள். பொறுமையாக பதில் சொல்லியும் அன்றைக்கு புகாரை பதிவு செய்யவில்லை. அடுத்த நாள் வந்து புகாரை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தட்டிக் கழித்தார்கள். 5 பவுனில் செய்த தங்கச் சங்கிலி அது! காவல் நிலையத்தில் இருந்தவர்கள் படுத்திய படுத்ததில் புகார் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே போய்விட்டது. அடுத்த நாள் அங்கே போகவில்லை. இந்த நிகழ்வு நடந்த ஆறு மாதத்திற்குள் அதே மாதிரி ஒரு தங்கச் சங்கிலியை எனது கணவர் வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனாலும், அதன் பிறகு, ரொம்பவும் ஜாக்கிரதையாக கவரிங் நகையோ அல்லது முத்து, கருகமணி மாலையோ தான் அணிந்து கொண்டு செல்வது வழக்கம் ஆகிவிட்டது. இந்த நிகழ்வு நடந்து 15 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், இப்போதும் தங்க நகை அணிந்து, வெளியே செல்ல பயம் தான்.

என் மகள் கல்லூரியில் சேர்ந்த புதிது. நவராத்திரி சமயத்தில் சுமார் 9-10 கிராமில் ஒரு சங்கிலியும், 1-2 கிராமில் ஒரு சின்ன டாலரும் வாங்கி இருந்தோம். வீட்டில் இருக்கும்போதாவது போட்டுக் கொள்ளட்டும் என்ற ஆசையில் தான் வாங்கினோம். வீட்டில் இருக்கும்போது போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு நாள் திடீரென பார்த்தால் அந்த சங்கிலியைக் காணவில்லை. சங்கிலி எங்கே எனக் கேட்டால், மகளுக்கு நினைவில்லை! பிறகு உங்க கிட்ட தான் கொடுத்தேன் என்றும் சொல்ல, நன்றாக நினைவுபடுத்தி சொல்லச் சொன்னேன். கடைசியாக எங்கே பார்த்தாய், எப்போது கழற்றினாய்,  என விதம் விதமாகக் கேட்க, அவள் ஐந்தாறு இடங்களைச் சொல்லி, எங்கே பார்த்தாலும் கிடைக்கவில்லை.  பாத்ரூமில் மாட்டினேன் என்பாள், அந்த டப்பாவில் தான் வைத்தேன் என்பாள், தலைகாணிக்கு அடியில் வைத்தேன் என்பாள் – எங்கு தேடினாலும் இல்லை. சங்கிலிக்கு பதில் குப்பை தான் வந்தது!

வேறு வழி.... மனதைத் தேற்றிக் கொண்டு கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் என்ன செய்ய முடியும், நம்முடையதாக இருந்தால் கிடைக்கட்டும் என விட்டு விட்டோம். தனது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வதில்லை என அவ்வப்போது அவளுக்கு டோஸ் விடுவதும் நடக்கும். நான்கைந்து மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை வேளையில் மகள் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தவள், “அம்மா” என அழைத்தபடியே  ஓடி வந்தாள். என்ன ஆயிற்று என பதட்டத்துடன் கேட்க, “இதைப் பிடி” என்று காணாமல் போன செயின் மற்றும் டாலரை என் கையில் தந்தாள். எப்படிக் கிடைத்தது என்று ஆச்சர்யமாய் கேட்க, அன்றைக்கு போட்டுக் கொண்ட சட்டையின் பாக்கெட்டில் ஏதோ நிரடுவது போல இருக்க, எடுத்துப் பார்த்தால் டாலர் வைத்த செயின். அந்த உடையை கடைசியாக போட்டுக்கொண்ட போது, பாக்கெட்டில் வைத்ததை மறந்து, அடுத்த நாள் வாஷிங் மெஷினில் தோய்த்து, பால்கனியில் ஹேங்கரில் போட்டு காய வைத்து, மடித்து வைத்து இருந்திருக்கிறேன். அது அப்படியே இருந்து, நல்ல வேளையாக அடுத்த முறை போடும்போது கிடைத்தது!

இப்படி காணாமல் போய் கிடைத்த பட்டியல் கொஞ்சம் நீளமானது! சமீபத்தில் மூக்குத்தி மட்டும் மூக்கில் இருக்க, திருகினைக் காணவில்லை. அன்று காலை, மாலை என இரு வேளையும் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள், சாரு [எங்கள் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறி விட்ட ஒரு பணிப்பெண் – கிட்டத்தட்ட 15 வருடங்களாக எங்கள் வீட்டில் வேலை செய்யும் நல்மனம் கொண்ட பெண்] வீடு பெருக்கும்போது சொல்ல, அவரும் மூலை முடுக்கெல்லாம் பெருக்கி, அங்கே இருந்த குப்பை சுத்தமாச்சு! ஆனால் மூக்குத்தியின் திருகு கிடைத்தபாடில்லை! ஒரு வாரம் கழித்து சமையலறை வெளியே இரண்டு டைல்ஸ் சேருமிடத்தில் ஏதோ மினுமினுக்க, கையை வைத்து தடவிப் பார்த்து எடுத்தால் மூக்குத்தியின் திருகு! பெருக்கும்போது, அங்கே சிக்கிக் கொண்டது சில நாட்களுக்குப் பிறகு என் கையில் சிக்கியது ஆச்சர்யமாக இருந்தது.

இந்த நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதும்போது, “தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்” பாடலும், வேறு சில தங்கம் பற்றிய பாடல்களும் மனதில் ஓடுகிறது. முடிந்த வரை கஷ்டப்பட்டு சேமித்து வாங்கிய தங்கத்தினை பாதுகாப்பாக வைத்திருப்போம்!

மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை....

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் சுதாஜி அண்ட் வெங்கட்ஜி!

  இன்று தங்கமான பதிவா!! ஹா ஹா

  தென்னிந்தியர்கள் தான் தங்கம் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. நல்ல காலம் தொலைந்தவை மீண்டும் கிடைத்ததே.

  இங்கும் தங்கம் எல்லாம் திருடப்படுகிறதே செயின் ஸ்னாச்சிங்க்.

  தங்கம் அணிவது ஒருபுறம் என்றாலும் பலரும் அதை நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்று சொல்வதுண்டு. ஆனால் எனக்கு அதைப் பற்றி நோ ஐடியா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ஊர்களிலும் இப்படிக் கொள்ளை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. அடப்பாவீ...அதுக்குள்ள பின்னூட்டமா? ஹாஹா... வணக்கம் கீதா ரங்கன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. தங்கத்தில் இன்வஸ்ட்மென்ட், தங்கச் செயின்கள் வேஸ்ட்தான்.(இந்த ஊரில்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. குட்மார்னிங்.

  பெண்குழந்தை இல்லா நிலையிலும் (ஒரே மகன்) அவ்வப்போது ஒரு கிராம், இரண்டு கிராம் என்று தங்கம் தனது சர்விஸ் தொடக்கத்திலிருந்தே வாங்கி கொண்டிருக்கும் ஒரு பெண்மணி எங்கள் அலுவலகத்தில் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கத்தை வாங்கி வைக்கும் பழக்கம் நம் ஊரில் அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. தங்கம் மீண்டும் கிடைத்த கதை சுவாரஸ்யம். நான் கூட சில சமயம் பணங்களை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்க, அது வாஷிங் மெஷின், அயர்ன் என்று சுற்றி மீண்டு வந்திருக்கிறது. ஆனால் நமக்குதான் சந்தேக நோயாச்சே... இது மாதிரி எத்தனை தரம் பணம் போய் இருக்கோ.. என்றெல்லாம் தோன்றும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தேகம் பொல்லாதது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. தங்க நகைகளைப் பாதுகாப்பது கடினம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. தாலியை மஞ்சள் கயிற்றில் போடுவது கௌரவக் குறைச்சல் என்ற நிலைக்கு பெண்கள் வந்து விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான கருத்து.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 9. டெல்லியில் பாதுகாப்பாக இருக்க தங்க ஆபரணங்களை தவிர்ப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. உழைத்த பணத்தில் வாங்கியதால் மீண்டும் கிடைத்ததோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. என்னோட மோதிரம் ஒண்ணு திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது, நான் தனியாக குளிப்பேன்னு போச்சு. இன்னும் குளிச்சு முடிச்சு திரும்ப வரலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  தங்கம் ஒரு உபயோகமான சேமிப்புதான்.! பாதுகாக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட வேண்டும். அப்படி சிரமப்பட்டு தங்கம் வாங்கி நாம் கழுத்தில், காதில் போட்டு அனுபவிக்கலாம் எனும் போது தொலைந்து போனால் மனது கஸ்டபடும். (போடாமல், அனுபவிக்காமல் அலமாரி, மற்றும் லாக்கர்களிலேயோ பூட்டி வைத்தாலும் அதுவும் நமக்கில்லைதான்.ஹா.ஹா.ஹா )
  ஆனால் எது கிடைக்க வேண்டுமென்று இருக்கிறதோ, அதுதான் நம்மிடம் மறுபடியும் வரும். இந்த இரண்டையும் என் அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன். தங்கள் அனுபவங்களையும் மிகவும் சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 14. நகைகள் எப்போதும் ஆபத்துதான்.
  லாக்கரில் வைத்தாலும் பாதுகாப்பு இல்லை என்று இருக்கும் காலம்.
  நகைகள் தொலைந்து போன அனுபவம், திருடன் அத்து கொண்டு போன அனுபவம் மகளுக்கு உண்டு.
  எனக்கும் நகையை கைதவறவிட்டு கிடைக்காமல் போன அனுபவம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. தங்கம் என்ன, கவரிங் கூடப் போட்டுக்க முடியலை! திருடன் ஏமாந்து போனால் நம்மை வந்து அடிப்பான்! ஆகவே கூடியவரை நகைகள் போட்டுக்காமல் இருப்பதே நல்லது. பெரிசாத் தங்கத்தில் ஆர்வம் கிடையாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....