சனி, 4 மே, 2019

காஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளிகாஃபி வித் கிட்டு – பகுதி – 31அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  அடி மேல் அடி வைத்து நடக்கும் ஒரு ஜோடி கால்களில், முன்னால் இருக்கும் கால், ”நான் முன்னே இருக்கிறேன் என பெருமிதம் கொள்வதில்லை! பின்னால் இருக்கும் காலும் பின்னால் இருக்கிறோமே என வெட்கப் படுவதில்லை” இரண்டு கால்களுக்குமே தன் நிலை மாறி மாறி தான் வரும் என்பது தெரியும். அந்தக் கால்களைப் போலவே நம் வாழ்விலும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும், போகும்! கவலை கொள்ளாமல் இருப்போம்!

படித்ததில் பிடித்தது – தேர்தலும் நோடாவும்:

சார் ! என்ன சாப்பிடுறீங்க? இட்லி ?

சீ. அது கார்போஹைட்ரேட்!

தோசை?

சீ! ஆயில்

பொங்கல்?

அது மயக்க மருந்து!!

பூரி?

சீச்சி! அது மைதா! உடம்புக்குக் கெடுதி

அப்ப உப்புமா?

அதை மனுஷன் சாப்புடுவானா?

அப்ப என்னதான் சார் ஆர்டர் பண்ணப் போறீங்க?

எல்லா உணவுமே கெடுதி! நான் பட்டினி கிடக்கப் போறேன்! வர்றேன்.

#நோட்டாவிற்கு வாக்களித்தவர் ஓட்டலுக்குச் சென்று காலை உணவு அருந்திய போது!!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

சமீபத்தில் ரசித்த ஒரு ஹிந்தி பாடல் – கேட்டுப் பாருங்களேன்.
சாப்பிட வாங்க – சூடா பகோடா:மலைப் பிரதேசம் ஒன்றில் பயணித்த போது சாப்பிட்ட பகோடா… மேலே வெங்காயம், கொத்தமல்லி தழைகள், சாட் மசாலா தூவி மேலே இரண்டு பச்சை மிளகாய் வைத்து கொடுக்க பகோடாவும் தேநீரும்! மலைப் பிரதேசத்தில் ரொம்பவே சுவையாக இருந்தது. கடைக்காரர் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம் – அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! இப்போதைக்கு பகோடா சாப்பிடுங்க! என்ன மிளகாய் தான் கொஞ்சம் காரம் அதிகம்! பார்த்து! ஒரு கடி கடிச்சுட்டு எரியுதுன்னு சொல்லக் கூடாது!

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

சிலருக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு - எப்போதுமே வேலை இருந்து கொண்டே இருக்கும்! அவர்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம் எனச் சொல்லும் ஒரு விளம்பரம் – உண்மையில் அப்படி பலரும் யோசிப்பதில்லை என்றாலும், ரசிக்க முடிந்தது…இந்த வார வலைப்பூ அறிமுகம் – எண்ணத்தின் வண்ணங்கள்:

திருமதி ராதா பாலு – நான்கு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதி வருகிறார். வை.கோ அவர்களின் வலைப்பூவில் இவரை பார்த்திருக்கலாம். அவரது சில பதிவுகள் வாசித்ததுண்டு. கோலங்கள், எண்ணத்தின் வண்ணங்கள், என் மன ஊஞ்சலில், அறுசுவைக் களஞ்சியம் என நான்கு வலைப்பூக்களில் எழுதுகிறார். இந்த வார அறிமுகமாக எண்ணத்தின் வண்ணங்கள் வலைப்பூவிலிருந்து ஒரு சிறுகதைக்கான இணைப்பு… படித்து ரசிக்கலாமே!


இந்த வாரத்தின் கதை மாந்தர்:வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், சுக-துக்கங்கள் வரலாம். ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குப் பாடமாக தந்து செல்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப் பகுதி ஒன்றில் அமர்ந்து வனத்தில் கிடைக்கும் மரத்திலிருந்து ஒரு சிறிய கோடரி கொண்டு விதம் விதமான பொம்மைகளும், பொருட்களும் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பெரியவர். பெரிதாக யாரும் வந்து விடப் போவதில்லை. விற்பனையும் அதிக அளவில் ஆவதில்லை – அன்றைய பொழுது கழிய தேவையான பணம் கிடைத்தாலே பெரிது. ஆனாலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார் இப் பெரியவர். நிறைய விஷயங்களைச் சொல்லும் இந்த முகம் – உங்களிடம் என்ன சொன்னது – சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  ஆரம்ப தத்துவம் ஜோர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நோட்டா ஹோட்டல் ஜோக் சூப்பர். முதன் முதலாகப் படிக்கிறேன்!

  பகோடா நல்லாதான் இருக்கு.. ஆனாலும் நாளை சாப்பிடுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகோடா - மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. என் மன ஊஞ்சலில் தளம் அவ்வப்போது படிப்பதுண்டு. விளம்பரம், பாடல் - பின்னர்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. "வேற வேலை ஏதாவது சீக்கிரமே கற்றுக்கொள்ள வேண்டும்"

  செய்தி படித்து படம் பார்த்தபோது தோன்றிய வாசகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பாட்டும் காணொளியும் மத்தியானமாப் பார்த்துக்கறேன். ராதா பாலு இப்போ முகநூலில் மத்யமர் தளத்தில் ரொம்பவே பிசி! அவர் கதைகள் மங்கையர் மலரில், மற்றும் சில பெண்கள் புத்தகங்களில் வந்திருக்குனு நினைக்கிறேன். ஒரே முறை பார்த்திருக்கேன் ருக்மிணி சேஷசாயி வீட்டில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்யமர் தளத்தில் பிசி - இப்போது பலர் அங்கே இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 6. வலைப்பூ அறிமுகம் என்பதை இன்னிக்குத் தான் பார்க்கிறேன். நல்ல விஷயம். இந்தப் பகோடாவின் மேல் காரட், வெங்காயம் துருவலைத் தூவியும் தருவாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 7. நோட்டாவுக்கு வாக்களித்து விட்டு எதற்காக ஓட்டலுக்குள் பிரவேசம்?...
  இத்தனை சொல்கின்றவன் இத்தனை காலம் எதைத் தின்றூ வாழ்ந்தானாம்!?...

  உணவுப் பொருட்களை சீ.. என்று சொன்னால் - கடைசி காலம் எப்படியிருக்கும் என்று தெரியாது...

  நகைச்சுவைக்காகக் கூட உணவின் மீது துவேஷம் வேண்டாம்...

  ஒவ்வொரு ஊடகங்கள் அந்த உணவு இப்படி.. இந்த உணவு அப்படி என்று வயிற்றுப் பாட்டிற்காக எழுதித் தள்ளுவதைக் கண்டு - இப்படியான வார்த்தைப் பயன்பாடுகள் வந்திருக்கின்றன...

  யாரோ எழுதியதைப் படித்தாலும்
  என் நாவில் இருந்து மங்கல வார்த்தைகள் வர வேண்டாமா?...

  பலவிதமான உணவு வகைகளை பதிவில் தந்து கொண்டிருக்கும்
  அன்புக்குரிய வெங்கட் அவர்களின் தளத்தில் இப்படியான வார்த்தைகள் வேதனையைத் தருகின்றது...

  சாகம்பரி தேவி எல்லாரையும் காத்தருள்வாளாக!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உணவுப் பொருட்களை சீ.. என்று சொன்னால் - கடைசி காலம் எப்படியிருக்கும் என்று தெரியாது...நகைச்சுவைக்காகக் கூட உணவின் மீது துவேஷம் வேண்டாம்...​//


   இது புதிய பார்வை... இல்லை, இலை மறந்து விட்ட பழைய நல்ல பார்வை. குறித்துக் கொண்டேன் துரை ஸார்.​

   நீக்கு
  2. அடடா.... இந்தப் பதிவால் உங்களைக் கஷ்டப் படுத்திவிட்டேனே..... மன்னிக்க வேண்டுகிறேன். இனிமேல் இப்படி நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
  3. பொதுவாக நான் சாப்பாட்டின் மேல் கோபம் கொண்டது இல்லை. ஒரே ஒரு முறை ரொம்பத் தாங்க முடியாமல் தட்டில் வைத்த சாப்பாட்டை நகர்த்திவிட்டு எழுந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் உடனடியாக மூன்று நாட்கள் உணவே கிடைக்கவில்லை. அதுக்கப்புறமா சாப்பாடை வேண்டாம் எனச் சொல்லுவதில்லை. இதுக்கு பதில் அது என மாற்றிக் கொண்டேன். வயிறு ஏற்கும்படியாக.

   நீக்கு
  4. அன்பின் வெங்கட்.. பெரிதாகக் கொள்ள வேண்டாம்..
   தங்கள் அன்பினுக்கு நன்றி...

   நீக்கு
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. உணவின் மீது கோபம் கொள்வது எப்போதுமே சரியல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. //கதை மாந்தர்// - மனதைச் சலனப்படுத்துகிறார்...... இளமைக் காலத்தில் இவர் நினைத்திருப்பாரா முதுமைக் காலத்தில் இப்படி கஷ்டப்படவேண்டும் என்று... இருந்தாலும் உழைப்பு அவருக்கு உயர்வு தரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழைப்பு அவருக்கு உயர்வு தரட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. பகோடா - தில்லி வந்திருப்பவர் செய்தது என்று நினைத்தேன். பச்சை மிளகாயை படத்தின் அழகுக்காக வைத்திருக்கிறாரோ என்றும் நினைத்தேன்.

  பொதுவா வடநாட்டில் மிளகாயை வதக்கி காரம் இல்லாமல்தானே தருவார்கள்... பச்சை மிளகாயை இப்படித் தருகிறார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிளகாய் இப்படி பச்சையாகத் தருவது உண்டு - சப்பாத்தியுடன் பச்சை மிளகாய் கடித்துச் சாப்பிடுவதுண்டு - நானும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. பாடல் காணொளி நன்றாக இருக்கிறது. இந்த பையன் நடித்த பாடல்கள் இரண்டு மூன்று கேட்டு இருக்கிறேன், பார்த்து இருக்கிறேன் மிக நன்றாக இருக்கும்.

  பகோடா குளிருக்கு நன்றாக இருக்கும். பச்சைமிளகாய் காரமாய் இருக்காதா?


  //வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், சுக-துக்கங்கள் வரலாம். ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும்.//

  அவர் நெற்றியில் உள்ள கோடுகள் அவரின் கடந்து வந்த பாதைகளைகளை சொல்கிறது.
  இன்னும் எவ்வளவு காலம் உழைக்க முடியும்? என்று யோசிப்பது போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 12. கால்களை வைத்து சொன்ன தத்துவம் புதுசு...

  நோட்டா ஆசாமியை எதாலும் திருப்திப்படுத்தமுடியாதுன்னு புரிஞ்சுது...

  விளம்பரம் ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. பெரியவரின் உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 15. கால்களை வைத்து சொன்ன தத்துவம் மிக அருமை! அந்த ஹிந்திப்பாடலும் காட்சியும் ஒரு மாறுதலாக, freshஆக இருந்தது. படத்தின் பெயர் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "Mausam" எனும் ஹிந்தி திரைப்பட பாடல் அது. உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 16. சுவையான செய்திகள்...பாடல் சூப்பர்...இனிமை...நன்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜட்ஜ்மெண்ட் சிவா.

   நீக்கு
 17. பெரியவர் போட்டோ நன்றாக உள்ளது. வறுமை, வெறுமை,விரக்தி,களைப்பு என்று பல உணர்ச்சிகள். என்றாலும் க்ளோசப்பைத் தவிர்த்து ஒரு மிடில் ஷாட் ஆக பொம்மைகளையும் உட்படுத்தி எடுத்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் படம் எடுத்திருக்கிறேன். முகங்கள் என்ற தொகுப்பிற்காக இப்படி க்ளோஸ் அப்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. இந்தி பாடல் அருமை. நொட்டாவிற்கு வாக்களித்தவரின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளமுடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 19. பெரியவரின் உழைப்பு அவரை வாழவைக்க வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 20. துளசிதரன் : அனைத்தும் அருமை வெங்கட்ஜி. பக்கோடா ஆஹா. சாப்பிட்டு நிறைய நாள் ஆகிவிட்டது. பெரியவரின் பாவம் உழைப்பு அபரிதம். அனைத்தும் ரசித்தோம்.

  கீதா: வெங்கட்ஜி! முதல் வாசகம் அட்டகாசம்.

  பாடல் செமையா இருக்கு. வேறு ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்துகிறது சொல்லத் தெரியவில்லை..

  பபி ல் ....எந்த உணவையும் நாம் சீ என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நமக்கு உணவு கிடைக்காமல் போகும் காலமும் வரும் அல்லது உணவே உண்ண முடியாமல் போகும் காலமும் வரும் என்று என் பாட்டி ஒரு கதை சொல்லி ஊட்டிவிட்ட நினைவு. எந்த உணவையும் (கெட்டுப் போகாத உணவை) பழிப்பது, குற்றம் சொல்லுவது ஐயே என்று சொல்லுவது கூடாது என்பார் என் அப்பா வழிப்பாட்டி. அதுவும் ஒரு பருக்கை கூட சாக்கடையில் வேஸ்ட் பண்ணக் கூடாது போட்டால் அது சமுத்திர ராஜாவிடம் போய் அழும் அப்போ நம் மீது கோபம் வந்து சாப்பாட்டை வேஸ்ட் பண்ணிய உனக்கு சாப்பாடு இல்லாமல் போகும் என்ற சாபம் வரும் எத்தனை பேர் சாப்பாடே இல்லாம இருக்காங்க பாருனு சொல்லி ஊட்டியது நினைவுக்கு வருகிறது. எந்த சாப்பாட்டையும் இறைவனின் பிரசாதமாக உண்ணச் சொல்லுவார்.

  பாடல் நன்றாக இருக்கிறது ஜி. விளம்பரமும் அருமை.

  முதியவர் பாவம் மனது வேதனைப்படுகிறது. இப்படியானவர்களைப் பார்க்கும் போஹ்டு.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....