செவ்வாய், 14 மே, 2019

கதம்பம் – தில்லி டைரி – ரிக்‌ஷா – விதம் விதமாய் சாப்பிட வாங்க…


தில்லி டைரி –- E Rickshaw & Delhi Metro & Ice cream milkshake - 30 ஏப்ரல் 2019


கேசர் பிஸ்தா மில்க் ஷேக் 
மேங்கோ மில்க் ஷேக் 


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

ஞாயிறன்று நட்புவட்டத்தில் ஒரு சிலரை ஏழு வருடங்களுக்குப் பின் சந்தித்து அரட்டை அடித்து விட்டு வந்தோம். அன்றைய பயணம் முழுதும் டெல்லி மெட்ரோவிலும், ஈ ரிக்‌ஷாவிலுமாக இருந்தது. மெட்ரோவில் பயணித்ததால் களைப்பு தெரியலை :)

பேட்டரி  ரிக்‌ஷா...

நாங்கள் தில்லியில் இருந்த போதே மெட்ரோ வந்துவிட்டது. எஸ்கலேட்டரில் போக நான் பயந்ததும், ஒரு கட்டத்துக்கு மேல் படியேற முடியாமல் நான் கற்றுக் கொண்டதும் நினைவுக்கு வந்தது :) அதே போல் அப்போது ஈ ரிக்‌ஷாக்கள் கிடையாது. இருக்கைகளும் சரிவாக இருக்கும். நம்முடைய பளுவை சுமக்கிறாரே என்று தோன்றும் :( இப்போது எளிதாக உள்ளது :) ஒரு நபருக்கு 10 ரூ மட்டுமே!

மதியம் தோழியின் கையால் ஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ் சுவைத்தோம், இறுதியாக ஐஸ்க்ரீம். மற்றொரு தோழி வீட்டில் கேசரி :)

காலையில் கிளம்பும் போது எங்கள் பகுதியில் உள்ள Bangla sweets ல் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் சுவைத்தோம். கணவர் mango milkshake, நான் kesar pista, மகள் strawberry-ம் தேர்வு செய்தோம். ஒவ்வொன்றும் அவ்வளவு சுவை. விலை கூடுதல் தான். வரிகளுடன் சேர்த்து 100 ரூக்கும் மேல் :) ஆனால் மதியம் வரை பசிக்கவில்லை :)

Karol Bagh & Shikanji – 30 ஏப்ரல் 2019ஷிக்கஞ்சி...

காலையில் சமையல் வேலை. கணவர் அலுவலகம் கிளம்பியதும் நாங்களும் சாப்பிட்டு விட்டு, தினமும் வீட்டில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுத்தம் செய்யும் வேலை. தேவையற்ற பொருட்களை அகற்றி வருகிறேன்.

மதியம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை YouTube ல் பார்ப்போம். மாலை வேலைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தால் கணவர் வந்ததும் அருகிலிருக்கும் பகுதிகளுக்கு சென்று வருகிறோம் :) இப்படித் தான் செல்கிறது எங்கள் டெல்லி நாட்கள் :)

வெயிலின் தாக்கம் மூக்கு, கண்ணெல்லாம் எரிகிறது. பஞ்சு வேறு பறக்கிறது.  ஆனால் புழுக்கம் இல்லை.

நேற்று கரோல்பாக் பகுதியில் உள்ள Monday market சென்று வந்தோம். பயங்கர கும்பல். அஜ்மல்கான் ரோட்டில் இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை வலம் வந்தோம். 25 ரூ முதல் 500 வரை எத்தனை விதமான பொருட்கள். நாங்கள் வெறும் window shopping தான் :) எல்லாமே நம்ம ஊரிலும் கிடைக்கிறது :) இதை இங்கிருந்து சுமந்து செல்ல வேண்டுமா? நாங்கள் ஆளுக்கொரு backpack உடன் பயணம் செய்து டெல்லி வந்தவர்கள் :)

மகளுக்கு அப்பா சில காதணிகளும், பொட்டும் வாங்கித் தந்தார் :) அங்கே விற்றுக் கொண்டிருந்த shikanji ஐ மூவரும் பருகினோம். வெயிலுக்கு இதமான பானம். பல வருடங்களுக்குப் பின் சுவைத்தேன். Shikanji என்பது எலுமிச்சை, கறுப்பு உப்பு, வறுத்தரைத்த சீரகம் போன்றவை சேர்த்த பானம் :)

இரவு உணவுக்கு இடம் தேடி கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது! எல்லா இடத்திலும் கும்பல்! எங்கு சாப்பிட்டோம்? சொல்கிறேன்!

Delhi Bus & Haldirams - 30 ஏப்ரல் 2019ராஜ்போக் 


ஹல்திராம்....


கேசர் ரஸ்மலாய்...


நமக்கு நாமே எடுத்துக் கொண்டு வர....


ஆலூ ப்யாஜ் பராட்டா...

எங்கள் பகுதியிலிருந்து கரோல் பாக் பேருந்தில் ஐந்தே நிமிடங்கள் தான் :) அஜ்மல்கான் ரோடில் சுற்றிய பிறகு அங்கேயிருந்த பிரபலமான Roshan di kulfi சென்றோம். அப்படி ஒரு கும்பல். அங்கேயிருந்து Punjabi sweet house சென்றோம். அங்கே வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை! காலியாகப் போகும் இடத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலைமை :)

அங்கேயிருந்து பேருந்து ஏறப் போகும் இடத்தருகே Haldirams!! Self Service! ஆர்டர் செய்ததும் ஒரு பேஜரை நம்மிடம் தந்து விடுகிறார்கள். நம்முடைய உணவு தயாரானதும், pager vibrate ஆகிறது. அப்போது சென்று நாம் சொன்ன உணவை எடுத்து வர வேண்டும்.

நாங்கள் ஆர்டர் செய்தது (Aloo pyaaj parantha) உருளையும் வெங்காயமும் ஸ்டஃப் செய்த சப்பாத்தி! அதனுடன் கட்டித் தயிர் தரப்பட்டது. ஒரு துளி நீரில்லை :) மசாலா மோர் ( Tadka chaach ) மற்றும் இனிப்புக்காக நானும் மகளும் Rajbhog! கணவர் Rasmalai!!

Tadka chaach ம் பேஜரையும் நான் படம் எடுக்க மறந்துட்டேன் :(

Tadka chaach - 1 மே 2019
நேற்று இங்கு பக்கத்து காலிமனையில் மதியத்திலிருந்தே ஏதோ விழா போல. பாட்டு அலறல். மாலை காய்கறி வாங்கச் செல்கையில் பார்த்தால் ஆட்டம். என்ன விழாவென்று தெரியலை. எல்லோரும் ஆடுகிறார்கள். பாட்டுக்களும் ஒரே மாதிரி தான் :) இன்னிக்கு தூங்கினாற் போல் தான் என்று நினைத்தேன். ஆனால், ஏதோ பாவப்பட்டு 10 மணி போல் நிறுத்தி விட்டார்கள்.

இரண்டு நாளாக வெப்பம் இன்னும் கூடுதலாகி விட்டது. 45 டிகிரிக்கும் மேல் செல்கிறது. புழுக்கம் குறைவு தான் என்றாலும், சுவர், கதவு, தரை என்று எல்லாம் சுடுகிறது :( மழை வந்தால் நன்றாக இருக்கும்.

மழையே மழையே வா வா!!!
மண்ணை நனைக்க வா வா!! பிரார்த்தனை இங்கேயும் தொடர்கிறது!

Mother diaryல் Tadka chaach அதாங்க மசாலா மோர் கிடைக்கிறது. 400 மி 10 ரூ தான். இரண்டு பேர் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருந்தது. அடிக்கும் வெயிலுக்கு ஏற்ற பானம்.

உணவைத் தேடி!! (Shake square & Malik Sweet House) – 2 May 2019
ஆலூ டிக்கி


கச்சோடிகுல்ச்சா....

YouTube ல் டெல்லியின் கனாட் ப்ளேஸ் மற்றும் கரோல் பாக் ஆகிய பகுதிகளின் பழமையான மற்றும் சிறப்புமிக்க உணவுகள் கிடைக்கும் இடங்களைப் பற்றி தேடிப் பார்த்தோம். அந்த இடங்களை குறித்துக் கொண்டு மாலை வேளைகளில் தேடிச் செல்கிறோம் :)

இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் ஏற்கனவே சில முறை பார்த்தவை தான் :) பார்க்காத இடங்களும், சுவைக்காத உணவுகளும் தான் இந்தப் பயணத்தின் நோக்கம் :)

நேற்று மாலை கனாட் ப்ளேஸ் சென்று malik sweet house ல் குல்ச்சா சோலே, கச்சோரி, ஆலு டிக்கி சுவைத்தோம். ஆலு டிக்கி மிகவும் hot & spicy யாக இருந்தது. கண்களிலும், மூக்கிலும் நீர் :)

அடுத்து செல்ஃபோனின் GPS வழியாகத் தேடி Shake square சென்றோம். 1971-ல் ஆரம்பிக்கப்பட்ட பழமையான கடை. அங்கு மூவரும் milkshake ருசித்தோம். கணவர் coffee milkshake ம், நாங்கள் இருவரும் Butterscotch milkshake. பாட்டில் ஒன்றுக்கு 80 ரூ. நல்ல பெரிய பாட்டில். வயிறும் நிறைந்தது.

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தில்லி டைரி பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

40 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  ஆஹா இன்று ஒரே சாப்பாட்டு படங்களா இருக்கே ஈர்க்குதே.

  ஈ ரிக்ஷா செமையா இருக்கே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈ ரிக்ஷா நல்ல விஷயம். இப்போது வடக்கில் பல இடங்களில் இந்த மாதிரி ரிக்ஷாக்கள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. ஃபுல்கா ரொட்டி, தால் மக்கனி, ஷாஹி பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஜீரா ரைஸ்//

  நாவூறுது...

  எங்க வீட்டுல ஸ்டராபெரி பழம் வாங்கியாச்சுனா மில்க் ஷேக்தான் அதே போல மாங்கோ, மகனை நினைத்துக் கொண்டேன். அவன் சிறு வயதில் காலையில் எதுவும் சாப்பிட மாட்டான் அப்போது இப்படி மில்க் ஷேக் ஏதேனும் செய்து கொடுத்துவிட்டால் சாப்பிட்டுவிடுவான். வயிறும் ரொம்பும்.

  ப்யாஜ் ஆலு பராட்டா சூப்பர்...! ராஜ் போக், ரசமலாய் சாப்பிடனும் போல இருக்கு. இப்ப இங்கு வீட்டில சாச், ஷிக்கந்திதான் வெயிலுக்கு...அப்பப்ப...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. ஷேக்ஸ் ஸ்கொயர், மாலிக் ஸ்வீட் ஹவுஸ் இரண்டுமே போயிருக்கோம் நானும் மகனும் தில்லி சென்றிருந்த போது.

  தில்லியில் ஈட்டரிஸ் நிறையவே உண்டு.

  குல்சா சோலே, ஆலு டிக்கி, கச்சோரி வாவ் சூப்பர். குல்சா கலர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே..வெள்ளையாக ..

  அனைத்தும் சுவைத்தோம் ஹா ஹா ஹா ஹா

  எஞ்சாய் பண்ணுங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. குட்மார்னிங்.

  டெல்லியைச் சுற்றிச் சுற்றிக் காண்பிப்பதற்கு நன்றி. ஃபேஸ்புக்கிலும் பார்த்து வருகிறேன்.​ மழையை நாங்களும் மிக எதிர்பார்க்கிறோம். நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பவேவா? இன்னும் ஒரு மாத்த்திற்குமேல் இருக்கிறதே.....

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தண்ணீர் கஷ்டம் கொடுமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. உணவு வகைகளின் பெயர்களும், படங்களும் ஆவலைத் தூண்டுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முறை தில்லி வாருங்கள். சுவைக்கவும் செய்யலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. எல்லா உணவு வகைகளும், குறிப்பாக இனிப்பு வகைகள் ஆவலைத் தூண்டுகின்றன. ஊருக்குக் கிளம்பி வருவதற்கு முன், சம்மரியாக, எங்கு எது நன்றாக இருந்தது என்று எழுதவும். இதற்காகவே நானும் மனைவியும் ஒருநாள் பயணம் மேற்கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. கேசர் பிஸ்தா மில்க் ஷேக் கொஞ்சம்கூட பச்சை நிறம் இல்லையே... ராஜ்போக், ரசமலாய்...யம்மி... தில்லி ஹால்திராமில் சாப்பிட்ட சென்னா பட்டூரா (சோளே?) நினைவுக்கு வந்தது. ஆலுடிக்கி சாப்பிட்டுப் பார்க்கவேண்டும். இதற்காகவே பயணம் மேற்கொள்ளணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி வாருங்கள் சாப்பிடலாம் விதம் விதமாக....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. படங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. டெல்லி டைரி முகநூலில் படித்து மகிழ்ந்தேன். இங்கும் படித்தும் பார்த்து மகிழ்ந்தேன்.
  பேட்டரி ரிக்ஷா நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. டெல்லியில் வெயிலுக்கு இதமாக சாப்பிடவும் குடிக்கவும் நிறைய இடங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. தில்லி சாப்பிட ஆசைப்படுபவர்களின் சொர்க்கம். மோமோஸ்
  இன்னும் சாப்பிடலியா. பேத்திக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.

  படங்கள் கண்களுக்கு மிக இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோமோஸ் வாசனை பிடிக்கவில்லை அவர்களுக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
  2. மோமோஸ் இப்போச் சென்னைக்கும் வந்து விட்டதே! ஏப்ரலில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் காலை உணவில் ஒரு பெரிய கடலை மிட்டாய், இரண்டு மோமோஸ், ஒரு தட்டை, ஒரு மில்க் கேக் தான் காலை உணவு. மோமோஸில் பீன்ஸ், காரட் தான் போட்டிருந்தார்கள். ஆனாலும் வாசனை எனக்கும் பிடிக்கலை! அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன்.

   நீக்கு
  3. ஆமாம். நம் ஊரிலும் கிடைக்கிறது
   வாசனை பிடிப்பதில்லை.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. கரோல்பாக் அஜ்மல்கான் சாலை இப்போது பாதசாரிகளுக்கு மட்டும் என்று ஆனதால் நிம்மதியாக
  நடக்கலாம் என்று நினைக்கிறேன்.

  தில்லியில் சாப்பிட இத்தனை உணவு வகைகள் இருப்பது குறித்து தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 14. வடநாட்டு உணவென்றாலே எனக்கு அலர்ஜி...

  கரோல் பாக் பற்றி இன்றுதான் அறிந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிட்டு சொல்லுங்கள்

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 15. கோடைக்கு தகுந்த பதிவு. படங்களின் குளிர்ச்சியால் டெல்லி வெப்பம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 16. மகிழ்சியான தருணங்கள். சுவைத்திடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 17. வித்தியாசமான உணவு வகைகள். கோடைக்கேற்ற பதிவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 18. ஏற்கெனவே முகநூலிலும் பார்த்து ரசித்தேன். இங்கேயும் பார்த்தாச்சு. இங்கே நீர்மோர்தான் அடிக்கடி! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....