செவ்வாய், 16 ஜூலை, 2019

கதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காதுஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூலை 2019நேற்றைய சோதனை முயற்சியில் வெற்றி :)

என்னவாக இருக்கலாம்??? கண்டுபிடிங்க ஃப்ரெண்ட்ஸ்!! முகநூலில் படம் வெளியிட்டு இப்படித்தான் கேட்டு இருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னாலும், கண்டுபிடிக்கக் கஷ்டப் பட்டார்கள் என்று தான் சொல்லணும்! இங்கே உங்களுக்கு அந்தக் கவலையில்லை. என்னவென்று நானே சொல்லி விடுகிறேன்.

சூஜி அல்வா!!படத்தைத் தந்து என்னவென்று கண்டுபிடிக்கச் சொன்னேன் அல்லவா! ஆஹா!! எத்தனை விதமான அல்வாக்கள். அசந்து போய் விட்டேன் :) ஆனால் நான் செய்தது அவசரத்துக்கு நமக்கு உதவும் பண்டமான ரவையில் :) க்ளூ மூலம் கண்டுபிடித்த Shanthy Mariappan க்கு சுடச்சுட அல்வா பார்சல் அனுப்பிட்டேன். அவங்க ஊர் மழைக்கு இதமாக இருக்கும் :)

YouTubeல் உலவிய போது இந்த ரெசிபி கிடைத்தது. செய்வது சுலபம். கோதுமையில் பாலெடுத்து செய்வது போல் ரவையில் பால் எடுத்து செய்துள்ளேன். என்னைப் போலவே மகளும் இனிப்புப் ப்ரியை தான் :) நன்றாக இருந்ததாகச் சொன்னாள் :)

என் சமையல் பகிர்வுகளை பகிர்ந்து கொள்ள YouTube channel ஆரம்பிக்கலாமா என்று நினைக்கிறேன். அப்படி ஆரம்பித்தால் என்ன பெயர் வைக்கலாம்??? உங்கள் கருத்துக்களை சொல்லுங்க???

வயலிலிருந்து வீட்டுக்கு – 2 ஜூலை 2019சில நாட்கள் முன்பு குடியிருப்புத் தோழி ஒருவரின் வீட்டுக்கு செல்லும் போது உப்பில் ஊறிய எலுமிச்சைகளை கொடுத்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் உறவினர் ஒருவர் "எல்லாத்தையும் மாத்தணும். வந்து பார்ப்பாங்களாம்" என்று சொல்லியுள்ளார்.

அவர்களின் அறியாமையை நினைத்துக் கொண்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பிளாஸ்டிக் உடம்புக்கு கெடுதல் செய்யக்கூடியது. முடிந்தவரை தவிர்க்கலாம். இனிமே புதிதாய் வாங்கும் போது யோசிங்க. அவ்வளவு தான்" என்றேன்.

உங்க கிட்ட இருக்கற எவர்சில்வர் பொருட்கள், கண்ணாடி பாட்டில்களையெல்லாம் உபயோகிங்க. அப்புறம் வேணும்னா வாங்கிக்கங்க. என்று சொல்லி வந்தேன். எங்க வீட்டில மாத்திட்டேன். வரும் போது பாருங்க. ஒரு ஐடியா கிடைக்கும். என்றேன்.

நேற்று அந்தத் தோழி எங்க வீட்டுக்கு வந்து பார்த்துச் சென்றார். நான் கொடுத்த எலுமிச்சையில் காரம் சேர்த்து விட்டதாகவும், நன்றாக இருந்ததாகவும் சொல்லி, நான் கொடுத்த டப்பாவில் ஊரில் அவர்கள் வயலில் விளைந்த பயத்தம்பருப்பு கொடுத்துள்ளார் :)

வயலில் விளைந்து அதை நேரிடையாக பெறுவது இதுவே முதல் முறை என்றேன். மனதுக்கு ஒரு மகிழ்வைத் தந்தது :) எத்தனையோ கைகள் மாறி பாக்கெட்டுகளில் அடைத்து வரும் பொருட்களையே உபயோகித்தவள் அல்லவா!!

ஆதியின் அடுக்களையிலிருந்து - 1 ஜூலை 2019இன்னிக்கு டின்னர் இவ்வளவு தான் – பாவ் பாஜி!

பதிவர் சந்திப்பு – 8 ஜூலை 2019

இன்றைய காலைப் பொழுது "தில்லையகத்து கீதா" அவர்களுடன் இனிமையானதாகச் சென்றது.

திருவரங்கத்துக்கு ஒரு திருமணத்திற்காக வந்தவர், ரோஷ்ணி பள்ளிக்கு கிளம்புவதற்குள் அவளையும் சந்தித்து விட வேண்டும் என்று தன்னுடைய நேரத்தை அதற்கேற்றாற் போல் மாற்றியமைத்துக் கொண்டு இருவரையும் சந்தித்தார்.

பார்த்தது முதல்முறையாக இருப்பினும் வலைப்பூக்களில் இவருடைய தவறாது இடம்பெறும் பின்னூட்டங்களால் நட்பு உண்டானது என்று சொல்லலாம். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர்.

ரோஷ்ணியின் ஓவியங்களையும், என்னுடைய பகிர்வுகளையும் நினைவு வைத்துச் சொல்லி பாராட்டினார்.

அடுத்த முறை முன்பே தெரியப்படுத்தினால் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னேன். திருவரங்க பதிவர்களும் சந்தித்து நாளாயிற்றே :)

ஆதியின் அடுக்களையிலிருந்து – பிடி கொழுக்கட்டை - 5 ஜூலை 2019காலை உணவு - சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை வைத்து செய்த பிடி கொழக்கட்டை. அரிசியை குறைத்து இவைகளைச் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மை தரும். இது சத்தான உணவு. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

பேருந்துப் பயணத்தில் – இது ராணி காது – 13 ஜூலை 2019

அடுப்பு ஊதற பொம்பளைக்கு படிப்பு எதுக்குன்னு சொன்ன காலம் போய் இப்ப பொம்பளைங்க கார் ஓட்டறாங்க, ரயில் ஓட்டறாங்க, பிளேன் கூட ஓட்டறாங்க..பஸ் கண்டக்டரா கூட இருக்காங்க அக்கா...

எப்படிப்பா?? ஆம்பிளைங்க எல்லாம் இருப்பாங்களே??

இதென்னக்கா இப்படி சொல்லிட்ட?? சென்னைல கூட ஆம்பிளைகளும் பொம்பளைகளும் ஒண்ணா உட்கார்றாங்க...நம்ம ஊர்ல தான் இப்படி...:)

ஓ!! அப்படியா?? சரி வாரேன்..:)

கிராமத்தை நோக்கிய என் பேருந்துப் பயணத்தில் இரு பெண்மணிகள் பேசிக் கொண்டது...:))

இப்படி முகநூலில் எழுதியபோது வந்த ஒரு சுவாரஸ்ய கருத்துரை:

ஒன்னா சேர்ந்து உக்கார்ந்தா காது அறுந்துடும்..
எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்..
ரிஸ்க் எடுக்கறவங்க எடுக்கலாம்!

ஸ்ரீமதி ரவி

பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில்….


இதே நாளில் எனது வலைப்பூவான “கோவை2தில்லி”-இல் எழுதிய புத்தக வாசிப்பனுபவம் ஒன்று. வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

38 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  வெங்கடாதி நிலையமென்று வையுங்கள்!! சுஜி அல்வா பார்க்கவே அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   வெங்கடாதி நிலையம் - ஆஹா... நல்லாத்தான் இருக்கு பேரு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பாவ் பாஜி சூப்பர். ஆதியின் அடுக்களை என்றே வைக்கலாமே,, நன்றாய்த்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதியின் அடுக்களை - நல்ல பெயர் தான் ஸ்ரீராம். என்ன பெயர் வைப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கீதாவுடனான சந்திப்புக்கு மகிழ்ச்சி. பிடி கொழுக்கட்டை அருமை. ராணி காது ரசிக்காது போகுமா?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறை சந்திக்கிறார்கள் அவர்கள். அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   ராணி காது ரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பழைய பதிவில் என் கமெண்ட் அப்டித்து மகிழ்ந்தேன்!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரம்ப காலத்தில் சில பதிவுகள் தவிர்த்து பலவற்றில் உங்கள் கருத்து உண்டு ஸ்ரீராம். எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் ஆதி! அண்ட் வெங்கட்ஜி!

  உங்களையும் ரோஷ்னியையும் (ரோஷ்னி குட்டி என்றே சொல்லிப் பழகிவிட்டது எல்லாம் மலையாளத்து வழக்கம் ஹிஹிஹிஹி) சந்தித்தது மிக மிக மகிழ்ச்சி! அடுத்த முறை கண்டிப்பாகத் திட்டமிட்டுச் சந்திக்க வேண்டும் எல்லோரையும். நீங்க பதிவில் எப்படியோ அப்படியே நேரிலும்! வெரி ஜிம்பிள்!!! அண்ட் ஸ்வாரஸியமான உரையாடல்!

  நான் பதிவுகள் எழுதுவது குறைந்து???? இல்லை எழுதுவதே இல்லை என்பதால் இதைப் பற்றியும் சொல்லவில்லை.

  மிக்க நன்றி ஆதி!

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெரி ஜிம்பிள்! அதே அதே! அப்படி இருப்பது தான் நல்லது இல்லையா கீதாஜி!

   நீங்களும் தொடர்ந்து எழுத வேண்டும். எழுதுவதற்கான சூழல் விரைவில் அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா..

   நீக்கு
 7. ஆதி செம ஐட்டம்ஸ். சூஜி ஹல்வா, கொழுக்கட்டை என்று அசத்தறீங்க!!

  பயத்தம் பருப்பு நேரடியாகக் கிடைத்திருப்பது சூப்பர். எனக்கு சென்னையில் இருந்தவரை ராகி, புளி, பயத்தம்பருப்பு, தட்டைப் பயறு, நிலக்கடலை என்று பலதும் நேரடியாக வயலில் இருந்து கிடைக்கும். தோழி ஒருவரின் கிராமத்திலிருந்து. இங்கு வந்தபிறகு அதெல்லாம் மிஸ்ஸிங்க்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூஜி அல்வா பார்க்க எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த முறை செல்லும்போது தான் நான் சுவைக்க முடியும் போல கீதாஜி! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ரிஷபன் அண்ணாவையும் சந்திக்க ஆசை உண்டுதான். ஆனால் இம்முறை நேரம் அத்தனை இல்லையே. சந்திக்க என்று வர வேண்டும். நீங்க கூடக் கேட்டீங்கதான். ரிஷபன் அண்ணவைச் சந்திக்கலாமா என்று.

  ஆனால் அப்படி அவசர அவசரமாக சந்திக்கத் தயக்கம் இருந்ததால்தான் முடியவில்லை. நான் கல்யாணத்திற்கு வந்ததே கூட அத்தனை பக்கா ப்ளான் இல்லாமல்தான்..என் முதல் திட்டம் வேறு ஆனால் இறுதியில் மாறியது...

  பார்ப்போம் அடுத்த முறை..
  மிக்க நன்றி ஆதி. அருமையான டீ க்கு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை வரும்போது ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து விடலாம் கீதாஜி! ரிஷபன் ஜி, மூவார் [ஆரண்யநிவாஸ் ஆர். இராமமூர்த்தி] என இன்னும் சிலரை பார்க்கலாம். பேசலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ஸ்‌ரீராம் அழகான பெயர் கொடுத்திருக்கிறாரே யுட்யூப் சானலுக்கு!! ஆரம்பிங்க ஆதி சொல்லிட்டுருந்தீங்களே அன்று!! கண்டிப்பா ஆரம்பிங்க. ஸ்ரீராம் சொன்னதோடு ஆதியின் அடுக்களை "கலை" என்றும் வைக்கலாமோ என்றும் தோன்றியது.

  ராணி காது ஹா ஹா ஹா ராஜா காது போல ராணி காது!!

  பழைய சுட்டி போறேன்...வாசித்து விட்டு அப்புறம் வருகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்காதான் சொன்னாங்க காலைல 8.30க்குள்ள போனா ரோஷினியைப் பார்க்கலாம் என்று. அன்று திங்கள் இல்லையா. கீதாக்காவை முந்தைய தினம் ஞாயிறு மாலை சந்தித்தேன். அவங்க வீடு மண்டபத்திற்கு அருகிலேயே என்பதால். அப்புறம் உங்க வீட்டுக்கு வர முடியவில்லை. ரிசெப்ஷன் என்பதால்.

   உங்க நாலுபேரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

   கீதா

   நீக்கு
  2. 'அந்த நாலு பேருக்கு நன்றி' - எந்த நாலு பேர்?

   நீக்கு
  3. ராணி காது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. ஆமால் பள்ளி நாட்களில் பகல் நேரத்தில் பார்க்க இயலாது. காலையில் சென்றது நல்லது கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. நாலு பேர் - எங்கள் வீட்டில் இரண்டு பேர், கீதாம்மா வீட்டில் இரண்டு பேர்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. அல்வா படமே அசத்தலாக இருக்கிறது.
  சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்வா படம் அசத்தல் - ஆஹா... மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வயலிலிருந்து நேரிடையாக கிடைப்பது மகிழ்ச்சிதான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. மிக அருமையாக இருக்கிறது.
  கீதாரெங்கன் உங்களையும், கீதாவையும் பார்த்து வந்த விவரம் அறிந்தேன்.
  அல்வா ரவையில் செயதது என்பதை அறிந்து கொண்டேன்.

  விரைவில் YouTube channelஆரம்பிங்க வாழ்த்துக்கள் ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. You tube ஆரம்பிக்க வேண்டும். எப்போது என்பது தான் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. படங்கள் மிக அருமை.

  இனிப்பு சாப்பிடக்கூடாது என்று விரதமிருக்கும் என்னை அசைத்துப்பார்த்துவிட்டது அல்வா படம்.

  பாவ்பாஜி சில நாட்கள் முன்புதான் என் மனைவி செய்து தந்திருந்தாள். அது யம்மியாக இருந்தது.

  பிடிகொழுக்கட்டை. அதைச் செய்து செய்து, சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்பவும் போர். அதனால் படம் அழகா இருந்தாலும் என்னைக் கவரவில்லை. ஹா ஹா.

  யூ டியூப் சேனல் - காலையிலேயே என் மனதில் உதித்தது ஆதியின் அடுக்களை (அல்லது ஆதிவெங்கட்டின் அடுக்களை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிப்பு சாப்பிடக் கூடாது என விரதம்... ஹாஹா... நெல்லைத் தமிழன், உங்கள் விரதத்தை தொடர் விட மாடார்கள் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. தி/கீதா இங்கேயும் வந்திருந்தார். ஞாயிறன்று மாலை! ஆனால் எதுவும் சாப்பிடவில்லை. பேச்சுத் தான்! பாடச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவங்களும் பாடலை! எனக்கும் பேச்சு சுவாரசியத்தில் அப்புறம் கேட்க மறந்தும் போச்சு! அன்னிக்குனு பார்த்து இருமல் வேறே பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. இது மாதிரித் தான் துளசி/கோபால் வந்தப்போ ஒரே வாந்தி, மயக்கம்னு நிற்கக் கூட முடியாமல் இருந்தது. நல்லா இருக்கையில் யாரும் வரதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 3 ஆகஸ்டுலேர்ந்து 8 ஆகஸ்டுக்குள்ள ஒரு நாள், சில நிமிடங்கள் நேரம் கிடைத்தால் வருகிறேன் (யாத்திரையின் இடையில்). இப்போவே சொல்லியாச்சு. உடம்பை அதுக்குள்ள சரிபண்ணி வச்சுக்கவேண்டியது உங்க பொறுப்பு.ஹா ஹா

   நீக்கு
  2. இருமல் தொல்லை - விரைவில் உங்கள் உடல் நலம் சரியாகட்டும் கீதாம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. ஆஹா... ஆகஸ்டில் திருவரங்கம் பயணமா... பயணம் சிறக்க வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. முன்னர் கொடுத்த இரு கருத்துக்களும் போகவில்லை. இந்த ரவா அல்வாப் பதிவை முகநூலிலும் பார்த்தேன். ரவையில் அல்வா செய்யலாம் என்று தெரிந்திருந்தாலும் அந்த வம்புக்கெல்லாம் போனதில்லை! மற்றவைகளையும் ஏற்கெனவே பார்த்திருக்கேன்.

  தி/கீதா, பார்த்ததாகச் சொன்ன நாலு பேர் யார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டில் இருவர், என் வீட்டில் இருவர்! மொத்தம் நாலு கீதாம்மா... நெல்லைத் தமிழனுக்கும் இதே சந்தேகம்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. ஆதி உங்கள் விமர்சனம் வாசித்துவிட்டேன். நல்லாருக்கு அங்கு கருத்திடவில்லை அதற்குப் பதிலாக இங்கு.

  நல்ல எழுத்தாளர் என்று தெரிகிறது. முதல் கதை போல கிட்டத்தட்ட ஒரு கதை நான் எழுதியது நம்ம ஏரியாவில் வந்தது. அதற்கு கேரக்டர்ஸ் பெயர்கள் ஒரு சில வரிகள் கூட நம்ம நெல்லைதான் கொடுத்திருந்தார் அதை பேஸ் செய்து எழுதிய கதை...

  உங்கள் விமர்சனம் வாசித்ததும் ஆ என் கதை காப்பி என்று ஆகிவிடக் கூடாதே என்ற ஒரு எண்ணமும் வந்தது. அக்கதை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் வாய்ப்பு கிடைத்தால்..

  நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகத்திற்கு மிக்க நன்றி ஆதி. பாதி வாசித்துவிட்டேன் முழுவதும் வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நீங்கள் எழுதிய கதை போலவே இருந்ததா கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....