செவ்வாய், 23 ஜூலை, 2019

கதம்பம் – ஷாப்பிங் – கொள்ளுப் பொடி – தொடர்பதிவு - மருத்துவர்


ஷாப்பிங் அனுபவம் - 14 ஜூலை 2019இன்னிக்கு ஷாப்பிங் போன போது வாங்கியது இவை. Bபேக்கிங் செய்வதற்கு தேவையான பொருட்களான baking pan, measuring cups, oil brush, sieve போன்றவற்றை வாங்கி வந்தோம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளதால் குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கூட எவர்சில்வரில் இருந்தது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. இரும்பு, பீங்கான், பித்தளை, கண்ணாடி, செப்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் தான் எங்கும் காணப்படுகிறது. Measuring Cups ஏனோ பிளாஸ்டிக் தான் கிடைத்தது. அமேசான்-ல தேடணும்.

Baking pan எடுப்பதை பார்த்து அங்கு பணியில் இருந்த பெண்மணி, "அக்கா! கேக் செய்யறது அவ்வளவு ஈஸியா?? எல்லாரும் வாங்கறாங்க?? என்றார். ஆமாங்க! ஈஸி தான். இட்லிபானையிலும் செய்யலாம். குக்கரிலும், தோசைக்கல்லிலும் கூட செய்யலாம் என்றேன்.

"என்னென்ன போட்டு செய்யணும்" என்றார்... சொன்னேன் :)

"தேங்க்ஸ்க்கா! வீட்டுல குழந்தைகளின் பிறந்தநாளுல நாமே செய்யலாம் இல்லையா! அரைக்கிலோ மாவு வாங்கி செஞ்சு பாக்கறேன். என்றார். 1/4 கிலோ வாங்கினால் இரண்டு தடவையா செய்யலாம்னு சொல்லி விட்டு வந்தேன்.

ஆதியின் அடுக்களையிலிருந்து - 18 ஜூலை 2019

கொள்ளுப் பொடி!! (For weight loss)
தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கும், உடல் வலிமைக்கும் கொள்ளு உதவுகிறது. கொள்ளை வைத்து ரசம், சுண்டல், இட்லி, தோசை போன்றவை செய்வது போல் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள இதோ கொள்ளுப் பொடி. சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பொடியும், நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிடலாம்.

ஸ்டார் மருத்துவர் – 19 ஜூலை 2019

நேற்று நல்லதொரு மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரிடம் மாமனாரை அழைத்துச் சென்றிருந்தேன். வயது மூப்பின் காரணமாக சிற்சில பிரச்சனைகள் இருந்தது.

சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களும் நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொண்டனர்.

இங்கு மின்னஞ்சல் மூலம் அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். பல மணிநேரம் காத்திருக்க வைக்காமல், சொன்ன நேரத்தில் பார்க்க முடிந்தது. ஏறக்குறைய 15 நிமிடங்களை எங்களுடன் செலவிட்டார்.

ஏகப்பட்ட டெஸ்ட்களுக்கு பரிந்துரைக்காமல் தேவையான விஷயங்களை மட்டுமே சொல்கிறார். அவரே கையைப் பிடித்து வெளியே அழைத்தும் வந்து விட்டார்.

இந்த மருத்துவரைப் பற்றி முதல் நாள் கூகுளில் தேடியதிலும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது. 5 ஸ்டார்களில் 4.7 ஸ்டார் கிடைத்துள்ளது. மருத்துவர் பெயர் சுந்தரராஜன், நரம்பியல் மருத்துவர்.

பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில்…

பதிவுலகம் பரபரப்பாக இருந்த நாட்கள் அவை. எப்போதும் ஏதாவது தொடர்பதிவு பதிவுலகத்தில் ஓடிக் கொண்டு இருக்கும். யாரையாவது கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படி, இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு தொடர்பதிவு – ஒன்றுக்கு மூன்று!

பயப்படும் மூன்று விஷயங்கள்?

தெனாலி கமலஹாசன் மாதிரி பெரிய அட்டவணையே இருக்கு… எதைச்சொல்ல? எதை விட?

1. பல்லி [என்னைப் பார்த்து பயந்த பல்லி, தனது வாலை விட்டுவிட, துடித்துக் கொண்டு இருக்கும் பல்லி வாலைப் பார்த்து அலறிய சத்தத்தில் மொத்த கட்டடமும் வீட்டு வாசலில்…].
2. இருட்டு.
3. ”பேய் இருக்கா? இல்லையா?” என்ற விவாதமே இல்லை மனதுள்.  யாராவது ”பே” என்று ஆரம்பித்தாலே பயந்து விடுவேன்.

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

44 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!!

  ஆஹா பேக்கிங்க் செய்யத் தேவையான pan brush அளவு கப்புகள் பார்த்ததும் ஆர்வம் மேலிட்டது. அத்தனையும் இருக்கு..

  ஆதி அளவு கப்புகள் எவர்சில்வரில் கிடைக்கிறது. சென்னையில் இப்ராஹிம் ஸ்டோர்ஸ் ல்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மாலை வணக்கம் கீதாஜி.

   எவர்சில்வர் அளவு கப்புகள் இணையத்திலும் கிடைக்கிறது. தேடிப் பார்த்து சொல்லி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தெரியாமல் எவர்சில்வர் என்று சொல்லிவிட்டேன் ம் சாதாரணமாகப் பயன்படுத்தும் மெட்டல் இல்லை இது ஹிண்டாலியம் என்று நினைக்கிறேன் லைட் வெயிட்...அது எவர்சில்வர் போல பளிச் என்று இருக்காமல் ஒரு டல் கலரில் இருக்குமே அது. இப்ப டக்குனு சொல்ல வரவில்லை...

  கொள்ளு மிளகாய்ப் பொடி/கொள்ளுப்பொடி சூப்பரா இருக்கு ஆதி. வீட்டில் செய்து வைத்திருக்கிறேன். நானும் கறுப்பு உடைத்த உளுந்துதான் பயன்படுத்துகிறேன் பொடிகளுக்கு. தனிச்சுவை கிடைக்கும். உங்கள் அளவு பார்த்துக் கொண்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோல் நீக்கப்படாத உளுந்து பலவகையிலும் நல்லது..

   ஜனனேந்திரியங்கள் பலப்படும்..
   தாது விருத்தி... வத்தலும் தொத்தலுமாக இல்லாமல் தேகம் புஷ்டியாக இருக்கும்...

   அதனால் தான் பருவம் எய்திய கன்னியர்க்கு உளுத்தங்களி கொடுப்பது...

   நலம் வாழ்க...

   நீக்கு
  2. கறுப்பு உளுந்து இங்கே அவ்வளவாகக் கிடைப்பதில்லை. தோல் நீக்கிய உளுந்து வகைகளே இங்கே அதிகம் கிடைக்கின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  3. உளுத்தங்களி நல்லது - இப்போதெல்லாம் நிறைய பெண்கள் இப்படிச் சாப்பிடுவதை விரும்புவதே இல்லை - அதன் வலிமை தெரியாமல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. (எள்ளு இல்லா !!!!!! இது வெயிட் போடுமாமே!!!!!) கொள்ளு ரசம், கொள்ளு சூப்பும் கூட நல்லாருக்கும் தேவையற்றக் கொழுப்பைக் குறைக்க...

  நல்ல மருத்துவர் சூப்பர்!!! நல்ல விஷயம். நல்ல மருத்துவர் கிடைப்பதுதான் அரிதாகி வருகிறது..

  பழைய சுட்டி அப்புறம் பார்க்கிறேன்

  ஆஹா தெனாலி பயமா!!! ஹா ஹா...

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எள்ளு எடை அதிகரிக்கும்... கொள்ளு குறைக்கும்!

   தெனாலி :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. அடடே...பிளாஷ்டிக்வாங்கி விட்டீர்களா? நிறுத்தியிருந்தீர்களே..

  குட்மார்னிங்.

  ஓ... கீழே நீங்களே விளக்கம் சொல்லியிருக்கீங்களா? ஓகே..ஓகே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம். தவிர்க்க முடியாமல் வாங்கி இருக்கிறார்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கொள்ளுப்பொடி பார்க்க நன்றாய் இருக்கிறது.

  நல்ல மருத்துவர் பற்றி பேஸ்புக்கிலபடித்தேன். வாழ்க அவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பல்லி என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. நேற்றிரவு ஒரு குட்டி பல்லி எங்கள் வீட்டில் யாருக்கும் பயப்படாமல் அவ்வப்போது அறைமுழுவதும் இங்குமங்கும் ஓடி லூட்டி அடித்து பீதியாக்கிக்கொண்டிருந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறை முழுவதும் லூட்டி அடித்த குட்டி பல்லி - ஹாஹா... தில்லியிலும் வீட்டில் ஒரு சிறு பல்லி பயமின்றி நடமாடிக் கொண்டிருக்கிறது. அதனிடம் “உனக்கு பயமே இல்லையா?” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! ஹாஹா..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பே என்று சொல்லும்போதே அலறலா ?
  ய் சொல்லவேயில்லையே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ய் வேற தனியா சொல்லணுமா!..

   பயத்துல கத்துறதே
   ய்...ந்னு தானே!..

   நீக்கு
  2. ஹாஹா... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
  3. பயத்துல கத்துறதே ய்..ந்ந்னு தானே! அதானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. நல்ல மருத்துவருடைய மின்னஞ்சல் தந்திருந்தால் எல்லோருக்கும் பயனாகுமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. கூடுமானவரை
  மைதா அடிப்படையிலான உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்..

  Fortified white flour நல்லதல்ல ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதா உடலுக்கு நல்லதல்ல... நான் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. கொள்ளுப் பொடி செய்முறை அருமை...

  மருத்துவர் சுந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. மருத்துவருக்கு வாழ்த்துகள்

  பின்னோக்கி பார்க்கும் போது நாம எப்படிலாம் கும்மியடிச்சோம்ன்னு ஏக்கப்பெருமூச்சை வரவழைக்கும். முகநூலில் அத்தனை பேரும் சேர்ந்திருப்பது வரம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னோக்கி - பல பதிவுகள் இப்போதும் நினைவில். வலையுலகம் முழுவதும் முகநூலில் - ஆனால் எனக்கு அங்கே அத்தனை பிடிப்பில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. சுந்தரராஜன், நரம்பியல் மருத்துவர் பற்றிய தகவல்கள் அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். இந்த காலத்திலும் இப்படி ஒரு டாக்டரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 16. இவற்றை எல்லாம் முகநூலிலும் படித்தேன். என்ன தான் நாம் முயன்றாலும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதை அடியோடு ஒழிப்பது இயலாது என்றே நினைக்கிறேன். கூடியவரை குறைத்துக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூடியவரை குறைத்துக் கொள்ளலாம்... அதே தான் எனது எண்ணமும் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. நமக்கு "பேய்" அதுவும் எங்கள் ப்ளாகுக்கு வருகை தரும் "நட்பேய்" இல்லைனா போரடிக்குது! புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பேயாட்டம் போடுவதாகப் பார்த்து ரசிக்க ரொம்பப் பிடிக்கும். நாளைக்கு எ.பி.க்கு "நட்பேய்" வருமா வராதா தெரியலை. என்னமோ ரொம்பப் பேர் ரசிக்கறதில்லை! அதான் போல எனக்கு ரசனையா இருக்கு! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... பேய் உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் ஆயிற்றே! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 18. இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு.

  ஸ்டார் மருத்துவருடைய டீடெயில்ஸ் கொடுத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டீடெயில்ஸ் கொடுத்திருக்கலாம் - லாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 19. கொள்ளுப் பொடி !!! முயற்சி பண்ணிபார்க்கிறேன் !! உங்க பதிவு பிடிக்காமல் இருக்குமா அண்ணி!! இங்க லைக் பட்டன் இல்லைதா குறைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது செய்து பார்த்துச் சொல்லுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. ஏதோ ஒன்று குறைகிறதே? கொள்ளுப்பொடி செய்முறையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைக்க வேண்டியது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....