சனி, 21 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – முத்தம் – மூதாட்டி – பிண்ட் எனும் கிராமம்


காஃபி வித் கிட்டு – பகுதி – 46

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது. ஆனால் மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது – சாமுவேல் ஸ்மைல்ஸ்.

இந்த வாரத்தின் செய்தி – அடுத்த பயணம்:

இன்னும் சென்ற மாதம் சென்ற பயணத்தொடர் பற்றியே எழுதி முடிக்கவில்லை! அதற்குள் அடுத்த பயணமா என்று வம்புக்கு வர வேண்டாம்! இந்தப் பயணம் தமிழகம் நோக்கி. இரு வார விடுமுறையில் வரப் போகிறேன். இன்றைக்கு இந்தப் பதிவினை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் பயணத்தில் இருப்பேன் – விமானத்திலோ அல்லது திருச்சி நோக்கிய சாலைப் பயணத்திலோ! இந்த முறை ஒரு பெங்காலி நண்பரும் கூடவே வருகிறார் – அவரது மகன் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த வருடம் சேர்ந்திருக்கிறார். அவரைப் பார்க்க வர வேண்டும் என்பதால் என் உடன் பயணம். திருச்சியில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் அவருக்கு உண்டு – குறிப்பாக உச்சிப் பிள்ளையார் கோவில் – அவர் விதம் விதமான பிள்ளையார் பொம்மைகளைச் சேகரிப்பவர்! நானும் கூட அவருக்கு ஒன்றிரண்டு பிள்ளையார் பொம்மைகள் வாங்கித் தந்தது உண்டு! இந்தப் பயணத்தில் எத்தனை பிள்ளையார் வாங்குகிறார் எனப் பார்க்க வேண்டும்!  

இந்த வாரத்தின் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம்:

கன்னடக் காரர்கள் பஞ்சு கொண்டு இறைவனுக்கு மாலை தயாரிப்பது உண்டு. கஜ்ஜே வஸ்த்ரா என்று சொல்வார்கள். தமிழர்களிலும் சிலர் வீடுகளில் பூஜை சமயத்தில் இப்படி பஞ்சு மாலை உண்டு. அப்படி பஞ்சு கொண்டு தயாரித்த பிள்ளையார் மற்றும் மண்டபம். பாருங்களேன் எவ்வளவு அழகு?


படித்ததில் பிடித்தது – கவிதை:

கழுத்தில் தாலி கட்டி #புதுதம்பதிகளாக
இருந்தபோது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்.
அப்போது அவள் சொன்னாள்:
"எப்ப #பார்த்தாலும் இதே தானா?"

இரண்டு குழந்தைகள் பெற்றபின் வீட்டில் யாரும்
#கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்.
அப்போது அவள் சொன்னாள்:
"என்ன இது #குழந்தைகளை வச்சிக்கிட்டு?"

சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கம் விழுந்து
பழைய #நினைவுகளுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன்.
அப்போது அவள் சொன்னாள்:
"வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதானா?"

கடைசியாக அவளை என் வீட்டுல்
ஊரார் குளிப்பாட்டி #திருமணபட்டுடுத்தி
படுக்கையில் கிடந்தவளை #முத்தமிட்டேன்.
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தாள்.
என் காதில் மட்டும் கேட்டது:
"கிழவனுக்கு வேற வேலையே இல்லை."

இந்த வாரத்தின் பாடல்: பஞ்சாபி பாடல்!

இந்த வாரமும் ஒரு பஞ்சாபி பாடல் தான் – பஞ்சாப் மாநிலத்தின் பச்சைப் பசேலென இருக்கும் கிராமங்கள் அழகு. கல்யாணத்திற்கு முன் இப்படி எல்லாம் காணொளி எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இனிமையான பாடல். பிண்ட் என்று பஞ்சாபியில் சொன்னால் கிராமம் என்று அர்த்தம். வாருங்களேன் ஒரு பஞ்சாப் பிண்ட் பார்க்கலாம்!



இந்த வாரத்தின் விளம்பரம்:

பெரும்பாலும் விளம்பரங்கள் எடுப்பது தங்களது பொருட்களை விற்பனை செய்ய என்றாலும், சில சமயங்களில் நல்ல விஷயங்களையும் அதன் மூலம் சொல்கிறார்கள். இந்த விளம்பரம் பாத்ரூமில் பதிக்கப்படும் Anti Skid Tiles பற்றியது. ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கவில்லை என்பதால் ஹிந்தியிலேயே பகிர்ந்து கொள்கிறேன் – மூதாட்டி தனது பேரனுக்கு, தனது மகன் செய்த குறும்புகளைச் சொல்லும் கதை – நன்றாகவே நடித்திருக்கிறார் மூதாட்டி – ஜன்னல் வழியே உள்ளே வந்து கீழே விழுந்த மகனைத் தூக்கியதாகச் சொல்ல, பேரன் நீங்களா என்று கேட்டதும், தற்போது குண்டாக இருக்கும் அவர் “அந்த சமயத்தில் நான் ஒல்லியாகவே இருந்தேன்” என்று சொல்வது அழகு! பாருங்களேன்.



பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2015-ஆம் வருடம் இதே நாளில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு! எத்தனை அழகான நிழற்படங்கள். பார்க்காதவர்கள் பார்க்கலாம்! பார்த்தவர்களும் மீண்டும் ஒரு முறை பார்த்து ரசிக்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. அருமையான இயல்பான காணொளி! உணர்ச்சிகளைக் காட்டி எடுத்திருக்காங்க. காஃபி வித் கிட்டு நன்றாக இருக்கிறது. தமிழகப் பயணம் நல்லமுறையில் செலவிட வாழ்த்துகள். உங்க பெண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். பின்னோக்கிப் பார்க்க வேண்டியதைக் காலையில் தான் பார்க்கணும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. பயணம் நன்றாக அமைந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படித்ததில் பிடித்த கவிதை அருமை. கண்ணீர் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தொட்ட கவிதை... பல அப்பாக்களின் எண்ண ஓட்டம் சொன்னது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல வாசகம்.  மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

    காஃபி மார்னிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி மார்னிங் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தமிழகம் வருகை இனிதாகட்டும்.  குடும்பத்துடன் சேர்த்து களித்திருக்க வாய்ப்பு.

    என் மாமாவின் நண்பர் ஒருவர், அரவிந்தனேன்றுபெயர், திருவண்ணாமலையில் இருக்கிறார்.  அவருக்கும் விதம் விதமான பிள்ளையார்கள் சேகரிப்பது பொழுதுபோக்கு.   ஆயிரக்கணக்கான பிள்ளையார்களை காட்சிப்படுத்தி நண்பர்களுக்கு காட்டினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் சேமிப்பு. இந்தப் பயணத்தில் கூட இரண்டு வாங்கி விட்டார். உங்கள் நண்பரும் இப்படியா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பஞ்சிலேயே மண்டபமா?  அழகாய் இருக்கிறது.   ஆம், எங்கள் வீடுகளிலும் பஞ்சு மாலை செய்து வழிபடுவதுண்டு.  குறிப்பாக வரலக்ஷ்மி விரதத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எங்கள் வீட்டில் கூட இப்படி உண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிக அழகிய அந்த புகைப்படங்களை மறுபடியும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. கவிதை உணர்வுகளுடன் இருக்கிறது.

    பாடல் ஓகே.  விளம்பரம் வழக்கம்போல சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கவிதை மனதை பிசைந்து விட்டது ஜி
    உயிரோட்டமாக இருந்தது கிழவியின் உயிரற்ற சடலம்.

    பஞ்சாப் பிண்ட் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. உங்கள் பதிவைப் போலவே கருத்துரை மன்னன் ஸ்ரீராமின் கரூத்துரைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய பட்டம்!  நன்றி!  ஆனால் என்னைவிட ரசனையாக கருத்துரை வழங்குபவர்கள்தான் அதிகம் ஜோஸப் ஸார்..

      நீக்கு
    2. கருத்துரை மன்னன் ஸ்ரீராம் நல்ல பட்டம் ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆஹா... நீங்கள் பட்டத்துக்கு உரியவர் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தமிழகத்திற்கு வருகை தரும் தங்கள் நண்பருக்கு நல்வரவு...

    மனதைத் தொடும் கவிதை... இனிய பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  11. கவிதை கண்ணில் கண்ணீர் வர வைத்து விட்டது.
    பாடல் அருமை.

    பாட்டி பேரன், பெற்றோர்கள் எல்லோரும் அருமையாக நடித்து இருக்கும் காணொளி அருமை.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. கவிதை வரிகள் நெகிழ்ச்சி...

    தமிழக பயணம் சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. பஞ்சு பிள்ளையார் கவிதை காணெளி என அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....