ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மார்கழி முதல் பத்து - கோலங்கள் - 2020


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒருவன் பணத்தால் நாயை வாங்கி விட முடியும்; ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும் - ஷெர்லாக் ஹோம்ஸ்.


******


சற்றே இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் ஒரு நிழற்படப் பகிர்வு.  சென்ற ஞாயிறுகளில் நான் பார்த்து ரசித்த, எனக்குப் பிடித்த குறும்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.  இந்த வாரம் மீண்டும் ஒரு முறை நிழற்படங்களுடன் வந்திருக்கிறேன் - படங்கள் நான் எடுத்தவை அல்ல!  இல்லத்தரசி அவரது கைபேசியில் எடுத்தவை!  மார்கழி மாதத்தில் தினம் தினம் காலை வேளையில் எழுந்து கோலமிட்டு, அதற்கு வண்ணம் கொடுத்து அவர் பகிர்ந்து கொள்ளும் படங்களைச் சேமித்து, ஒரு தொகுப்பாக இங்கே தந்து இருக்கிறேன் - இந்த ஞாயிறில் ஒரு நிழற்படத் தொகுப்பாக!  காலை நேரத்தில் எழுந்து கோலமிடுவதற்கு முன்னர் முதல் நாளே அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியிருக்கிறது - மகளுக்கும் அவருக்கும்!  கோலம் இரண்டு பேருடைய கைவண்ணம்!  வாருங்கள் மார்கழி மாதத்தின் முதல் பத்து நாட்கள் எங்கள் இல்லத்தின் வாயிலில் இட்ட கோலங்களைப் பார்க்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்த கோலங்கள்/படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 


மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

புது தில்லி


30 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. முடிந்த போது வந்து பாருங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் நன்று. ரசித்தேன். தங்கள் வீட்டு கோலங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.ஒவ்வொன்றும் அழகான வண்ணங்களுடன் கண்களை கவர்கிறது. தங்கள் மனைவிக்கும். மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இந்தப் பதிவு என் கண்ணில் நேற்று பட்டு இருக்க வேண்டும். அடுத்த மாத காணொளி காட்சியில் தொடக்கத்தில் பலவிதமான கோலங்களை பயன்படுத்தி உள்ளேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... பரவாயில்லை! அடுத்த முறை பயன்படுத்தலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 7. வணக்கம்
  ஐயா

  சொல்லிய விதமும் கோலங்களை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை! மகிழ்ச்சி ரூபன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மார்கழியை காலையிலேயே அழகாக்குவது இக்கோலங்கள்தாம். மார்கழி மேலும் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கடைசி பெஞ்ச்.

   நீக்கு
 9. மார்கழியை காலையிலேயே துவக்கிவடுவது இக்கோலங்கள்தான். அழகான கோலங்கள். மார்கழி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கடைசி பெஞ்ச்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. கோலம் ஒவ்வொன்றும் அழகு ❤️. அழகிய வண்ணத்தில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கோலங்கள் அழகு.. ஒவ்வொரு வருடமும் கோமதி அக்காவும் போடுவா கோலப் படங்கள்.. இம்முறை மிஸ் பண்ணுகிறேன்...:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

   கோமதிம்மாவின் கோலங்கள் இந்த முறை இல்லை. வருத்தம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. மிக அருமையான வடிவங்கள்.
  வண்ணக் கலவைகள்.
  மிகச் சிரமமான படைப்புகள்.
  அன்பின் வாழ்த்துகள் தங்கள் மனைவிக்கும்
  மகளுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. ஓவியங்கள் போல் ஒவ்வொன்றும் மிகவும் அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. கோலங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு! வண்ணங்களிட்ட விதம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....