செவ்வாய், 8 டிசம்பர், 2020

கதம்பம் - க்ரீச் - வரம் - ஆப்பிள் பேடா - தில்லி - வெண்ணெய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


விட்டுக்கொடுப்பதும், மன்னிப்பதும் தான் வாழ்க்கை.  ஆனால், வாழ்க்கையின் போராட்டமே, யார் விட்டுக்கொடுப்பது, யார் மன்னிப்பது என்பது தான்!

*****
இந்த வாரத்திற்கான செய்தி:  க்ரீச் - Misophonia!!


க்ரீச் என்ற சத்தத்தைக் கேட்கும் போதோ, எந்த பொருளாவது உராயும் போதோ, நகர்த்தும் போதோ பற்கள் பயங்கரமாக கூசும் உணர்வை ஏற்படுத்துமா உங்களுக்கு? அப்போது உங்களுக்கு இருப்பது Misophonia!! சமீபகாலமாக மகளுக்கு இது ரொம்பவே படுத்துகிறது.. இணையத்தில் பார்த்ததில் தெரிந்து கொண்டது.


புயல் சிலருக்கு வரம் - பலருக்கு தொல்லை - 3 டிசம்பர் 2020


தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் புயல் பலருக்கு கஷ்டமான சூழலைக் கொடுத்திருக்க, திருச்சி வாழ் மக்களுக்கு இந்தப் புயல் வரமாக இருக்கிறது.  


அதிகாலை முதல் நசநசவென்று இடைவிடாத தூறல்! சில்லென்ற திருவரங்கம்!!! மின்விசிறியின் பயன்பாடு தேவைப்படாத நாள்! புயலின் தாக்கம்! அருளிய இறைவனுக்கு நன்றி!  இதுவன்றோ வரம்!!


இந்த வாரத்திற்கான காணொளி - ஆதி’ஸ் கிச்சன் - க்ரீன் ஆப்பிள் பேடாஇந்த வாரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் காணொளி, தீபாவளி சமயத்தில் செய்த ஒரு இனிப்பான க்ரீன் ஆப்பிள் பேடா எப்படிச் செய்வது என்பதைப் பற்றிய காணொளி தான்! பாருங்களேன். 


How to make easy Green apple peda by Adhi Venkat/ Green apple peda/Sweet peda/ஆப்பிள் பேடா/ஸ்வீட்!! - YouTube


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு:


எனது கோவை2தில்லி வலைப்பூவில் இதே வாரத்தில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ஸ்தம்பித்துப் போகுமா தில்லி? - அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.


பொதுவாக வட மாநிலங்களில் பாலின் உபயோகம் அதிகமாக இருக்கும். தரமும் அதற்குத் தகுந்தாற்ப் போல் நன்றாக இருக்கும். எருமைப் பால் தான் இங்குள்ளவர்கள் உபயோகிப்பார்கள். பசும்பால் சில இடங்களில் தான் கிடைக்கும். எருமைப்பாலை விட பசும்பாலின் விலை அதிகம். ஏனென்றால் இந்த குளிரில் பசுமாடுகளால் இருக்க முடியாது.


நான்கு பேர் கொண்ட ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு 4-லிருந்து 5 லிட்டர் வரை பால் வாங்குவார்கள். எல்லோருமே அவ்வப்போது பால் எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் டீ போட்டுக் குடிப்பார்கள். நம்மூரில் ஆவின் போல இங்கு மதர் டைரி, தில்லி அரசாங்கத்தின் டி.எம்.எஸ், மற்றும் நேரிடையாக நம் கண் முன்னேயே கறந்து தரப்படும் எருமைப் பால் என்று விதவிதமாக கிடைக்கும். கொழுப்புச் சத்துள்ள பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், இரண்டு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் மற்றும் டோக்கன் போட்டால் மிஷினிலிருந்து வரும் பால் என்று பாலிலும் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே!


கோவை2தில்லி: ஸ்தம்பித்துப் போகுமா தில்லி? (kovai2delhi.blogspot.com)


இந்த வாரத்தின் இரண்டாம் காணொளி - நெய்/வெண்ணெய்: 


மேலே பகிர்ந்த பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவுக்கு சம்பந்தமான, இந்த வாரத்தில் எனது Adhi’s Kitchen YouTube Channel-ல் பகிர்ந்த ஒரு காணொளியையும் இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதால்…


டெல்லியில் பால் தரமானதாக இருக்கும்..எருமைப் பால் தான்! திக்காக ஏடு படியும்.. பால் ஏடை திக்காக எடுக்க சல்லடை போன்று வலைத்தட்டு கிடைக்கும்..அதை பாலை காய்ச்சியவுடன் போட்டு மூடி வைத்தால் ஏடு திக்காக படியும்.. 


மாதம் ஏறக்குறைய 1 கி நெய் கிடைக்கும்..ஃபுல்கா ரொட்டிக்கு தடவ, இனிப்பு செய்ய என்று எல்லாவற்றுக்கும் இது தான்.. கடையில் நெய் வாங்கியது மிகவும் அரிது...திருமணமானது முதல் இந்த முறையைத் தான் பின்பற்றுகிறேன்..மிகவும் எளிது..வேலையும் குறையும்..

 

Adhi's kitchen சேனலில் இந்த வார காணொளி..


How to make Homemade butter - by Adhi Venkat/ Easy butter making/Healthy Butter at home!! - YouTube


பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..


என்ன நண்பர்களே இந்த நாளில் ”கதம்பம்” பதிவாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம். 

 

நட்புடன்,


ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

 1. ஆப்பிள் பேடா பற்றி இப்போத் தான் பார்க்கிறேன். மத்தியானமா யூ ட்யூபிலும் பார்க்கணும். பால்பற்றி எழுதி இருப்பவை, வெண்ணெய் பற்றிச் சொல்லி இருப்பவை எல்லாமும் படித்தேன். ரோஷ்ணிக்கு இருக்கும் அதே உணர்வு எனக்கும் இருக்கு. கீழே மாவு கொட்டினால் அள்ளக் கூடக் கூசும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 2. அருமையான வாசகம். நேற்று ஒரு பதிவு வந்ததா.
  பார்க்கிறேன்.
  அன்பு ஆதி, பேடா செய்முறை இனிமை. பார்க்கவும் அழகாக இருக்கு.
  தில்லி பால் மகிமை பாட்டி சொன்னதிலிருந்தே ஆசை.
  வெண்ணெய் இவ்வளவு கிடைக்குமா. ஆச்சர்யமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஸ்ரீரங்கத்தில் சாரல். இதைவிட என்ன வேண்டும்.!!!!
  அனுபவியுங்கள்.
  எனக்கும் இந்தக் கிரீச் சத்தம் ஆகாது. என்னை விட மகளுக்கு அதிகம். அவள் கால்விரல்கள்
  மடங்கிக் கொள்ளும்.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கால் விரல்கள் மடங்கிக் கொள்ளும் - அடடா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 4. இன்றைய வாசகம் புன்னகைக்க வைக்கிறது.  உண்மைதானே...  க்ரீச் என்கிற சத்தம் தரும் அதே அலர்ஜி எனக்கு தண்ணீர் டம்ளரில் நிறையும் சத்தமோ, ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்துக்கு தண்ணீர் மாற்றும் சத்தமோ எனக்கு மகா...  அலர்ஜி!   ஏனென்று தெரியாது.

  புயல் என்பதைவிட மழை படுத்தியது.  அலுவலகம் செல்ல விடாமல்..   அத்தியாவசியப்பணி என்பதால் போகாமல் இருக்கவும் முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அலுவலகம் செல்ல முடியாமல் படுத்திய மழை - கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ஆப்பிள் பேடா என்றவுடன் ஆப்பிள் உபயோகித்து செய்யும் பேடா என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 6. ஆப்பிள் பேடா அழகாக இருக்கிறது.

  பொதுவாக நம்மவர்கள் எருமைப்பாலை விரும்புவதில்லை...

  கதம்பம் வழக்கம் போல் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே எருமைப் பால் தான் விரும்புவார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. அருமையான வாசகம். கிரின் ஆப்பில் பேட்டா பார்பதற்கு அழகாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 8. விட்டு கொடுப்பது, மன்னிப்பது நாமே செய்யலாம். பலன் Granted ஆக எடுத்துக் கொள்கிறார்கள். உறவில் பலன் Back to square one தான். One cannot forgive too much.
  Green apple பேடா video பார்த்தேன். Super. Delhi mother dairy ல் cow milk விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். மிகவும் நன்றாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. பெங்களூரிலும் இடைவிடாத தூறல்.

  நல்ல தொகுப்பு. ஆதியின் குறிப்புகள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....