வெள்ளி, 18 டிசம்பர், 2020

கதம்பம் - சஹானா - கேரமல் பாயசம் - ஆன்லைன் - கொத்தமல்லி சாதம் - நூல் அறிமுகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்க்கையில் கற்றுக் கொள்வதில் குழந்தை போல இருக்க வேண்டும்; அதற்கு அவமானம் தெரியாது; விழுந்தவுடன் அழுது முடித்து, திரும்பவும் எழுந்து நடக்கும்!


*****சஹானா இணைய இதழ் - கேரமல் பாயசம் - 13 டிசம்பர் 2020:சஹானா இணைய இதழ் தீபாவளி 2020 போட்டிகளின் முடிவுகள் வெளிவந்தது, அதில் எனக்கு 'ஸ்பெஷல் ரெசிபி' போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது பற்றியெல்லாம் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். உங்கள் வாழ்த்து மழையால் மிகவும் மகிழ்வுற்றேன். நன்றிகள்.


நேற்று இரண்டாம் பரிசுக்கான அழகான Personalised Trophy கொரியரில் வந்தது. பார்க்கும் போதே கெத்தாக இருக்கு!  E certificate முன்பே அனுப்பிவிட்டார்கள். அனுப்பி வைத்த சஹானா இணைய இதழுக்கு அன்பும் நன்றியும்!டிசம்பர் மாதத்திற்கான போட்டிக்கும் என்னுடைய இனிப்பு ரெசிபி ஒன்றும்,  பயணக் கட்டுரை ஒன்றும் அனுப்பி வைத்திருக்கிறேன். கேரமல் பாயசத்துக்கான இணைப்பு..


https://sahanamag.com/caramelpayasam-adhivenkat/


ஆன்லைன் அலப்பறைகள் - கொத்தமல்லி சாதம் - 12 டிசம்பர் 2020: 


ஆன்லைன் அலப்பறைகள்:


Spoken englishக்காக வரும் விளம்பரத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் கூடவே பாடிக் கொண்டே வேலை செய்வார்..நினைவிருக்கிறதா?? அது போல மகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது எங்கேயோ பெருக்கிக் கொண்டோ, சமைத்துக் கொண்டோ கவனித்து பதில்களை சொல்லிக் கொண்டே இருக்கிறேன்...🙂


Students நேத்து "collinear" னா என்னன்னு சொன்னேன்??? சொல்லு பார்க்கலாம். 


யாரும் சொல்லல..🙂


இங்கேயிருந்து நான்...zero..என்றேன்..🙂


H2so4 னா என்ன???


Sulphuric acid...🙂


இப்படித்தான் நாட்கள் செல்கிறது...🙂


வாயெல்லாம் பல்!


சென்ற வாரத்தில் ஒருநாள் நெருங்கிய உறவினருடன் போனில் பேசிய போது, சூப்பரா சமைக்கிறியே புவனா! சேனலும் நல்லா போறது.. Prize எல்லாம் வாங்கற!! சுந்தரி (என் அம்மா) அக்கா மட்டும் இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பா  என்றார். 


"வாயெல்லாம் பல்லா" இருந்திருக்கும் என்றேன்..🙂


ஆதி’ஸ் கிச்சன் காணொளியாக - கொத்தமல்லி சாதம்!அம்மாவிடமிருந்து நான் தெரிந்து கொண்ட சமையல் மிகவும் குறைவு தான்! படிப்பு முடிந்ததும் திருமணம்! படிக்கும் சமயத்தில் அடிப்படை சமையல் மட்டும் தான் தெரியும். 


அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் சமைத்து எனக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு லஞ்ச் பேக் பண்ணி எடுத்துக் கொண்டு  அம்மாவுக்கும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று கொடுத்து விட்டு கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். 


அம்மா செய்ததில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கொத்தமல்லி சாதம்.. இந்த வார காணொளியாக Adhi's kitchen சேனலில் பகிர்ந்துள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை  சொல்லுங்களேன்.


https://youtu.be/nT-gaIL788I


பின்னோக்கிப் பார்க்கலாம் - புத்தக அறிமுகம்:


இதே டிசம்பர் மாதத்தில் 2012-ஆம் ஆண்டு எனது கோவை2தில்லி வலைப்பக்கத்தில் எழுதி வெளியிட்ட ஒரு புத்தக அறிமுகம் ஒன்று இந்த வாரத்தில் பின்னோக்கிப் பார்க்கலாம் பகுதியாக….  புத்தக அறிமுகத்திலிருந்து சில வரிகள் இங்கேயும்!


எல்லா கதைகளுமே அருமையாக உள்ளன. எதை குறிப்பிட எதை விட. இருந்தாலும் கரைமேட்டுக் குறிஞ்சி என்னும் அறுசுவை விருந்தில் ஒரு சிறு பகுதியாக ஒரு கதையைப் பற்றிச் சொல்கிறேன்…


”வீரரே நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நம் திருமணம் தடைபட்டால்...” விசும்பலுடன் அமுதா வைரவனின் மார்பில் சாய்ந்தாள்.


”கலங்காதே அமுதா. நிச்சயமாக நம் திருமணம் நடக்கும். ஒருவேளை நாம் பிரிய நேர்ந்தால், நான் வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மீண்டும் அடுத்த பிறவியிலாவது உன்னை மணப்பேன். இது வில்லுடையான் மீது சத்தியம். ஆனால் நீ யார், உன் தாய், தந்தை பற்றி சொல்ல மறுக்கிறாயே”


இது நெய்வேலி.நா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள ”வில்லுடையான்” என்ற சிறுகதையில் உள்ள வரிகள். பாண்டிய நாட்டு தளபதி வைரவன் கானகத்தில் தன் புரவியில் சென்று கொண்டிருக்க திடீரென்று தன் உயிரை காப்பாற்றும்படி ஒரு அலறல். அலறல் வந்த திசையை நோக்கி சென்றால் அங்கு ஒரு சிறுவனை மலைப்பாம்பு விழுங்க காத்திருக்கிறது. அருகில் சென்று சிறுவனை மலைப்பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறான் வைரவன். நன்றி சொல்லி விட்டு வேறு தன்னை பற்றிய எந்த தகவலுக்கும் பதில் தராமல் அந்த சிறுவன் சென்று விட…


முழுப்பதிவும் படித்திட சுட்டி கீழே…


கரைமேட்டுக் குறிஞ்சி


என்ன நண்பர்களே இந்த நாளில் ”கதம்பம்” பதிவாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம். 

 

நட்புடன்,


ஆதி வெங்கட்


30 கருத்துகள்:

 1. கதம்பம் நல்லா இருந்தது.

  ஒரு காலத்துல உங்க தளத்தைப் படிக்க ஆரம்பித்திருந்தபோது கொத்தமல்லி சாதம் செய்முறை போட்டிருந்தீங்க. எனக்கு சரியா வரலை. இப்போ இன்னும் அனுபவம் இருப்பதால் செய்துபார்க்கிறேன். (இதுவரை கொத்தமல்லி துவையல் செய்து சுட சாத்த்தில் நல்லெண்ணெயோடு கலந்து சாப்பிடுவதைத்தான் கொத்தமல்லி சாதம் என்பேன், எனக்கு மிகவும் பிடித்தமானது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வாசகம் சொல்வது உண்மை.  
  சஹானா இணைய இதழ் போட்டியில் பெற்ற  பரிசுக்கு வாழ்த்துகள். 

  டிசம்பர் போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகள்.

  கொத்துமல்லி, புதினா சாதங்கள் நாங்களும் செய்வதுண்டு.  உங்கள் ரெசிபியை சென்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பரிசு பெற்றமைக்கு மீண்டும் வாழ்த்துகள்.
  கதம்பம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதம்பம் வெகு சுவை, வழக்கம் போல். வாழ்த்துக்கள் தோழிக்கு 🙂

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கதம்பம் அருமை. கொத்தமல்லி சாதம் நன்றாக இருந்தது. எளிதாக இருப்பதால்அடிக்கடி செய்ய முடிகிறது. வெற்றி பெற்று வர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  கதம்பம் அருமை. வாசகம் முழுக்க முழுக்க உண்மை. எப்போதுமே குழந்தை மனதுடன் இருந்து விட்டால், நல்லது என்றும் சமயங்களில் தோன்றும்.

  சஹானா இணைய இதழ் போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்கியதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இன்னும் பல பரிசுகளை நீங்கள் தொடர்ந்து வாங்குவதற்கு அன்பார்ந்த வாழ்த்துக்களும். .

  கொத்தமல்லி சாதம் பண்ணியிருக்கிறேன். உங்கள் பக்குவத்தையும் சென்று பார்க்கிறேன். நம் அம்மாக்கள் இப்போது இருந்தால் நம் சமையலைப் பார்த்து கண்டிப்பாக மிகவும் சசந்தோஷந்தான் அடைவார்கள். நானும் என் அம்மா என்னுடன் வந்திருக்கும் சமயங்களில் அவர்களுக்கு என் சமையலை செய்து போட்டு பாராட்டை பெற்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தன் கையால் எங்களுக்கு சமைத்துப் போடவே அதிகம் விரும்புவார். (அதுதான் தாய் பாசம்)

  பல விஷயங்களை பகிர்ந்த உங்கள் கதம்ப பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. சஹானா இணைய இதழ் வெற்றிக்கு வாழ்த்துகள்...

  ஆன்லைன் அலப்பறை - 'கொத்த'மல்லி - நல்லதொரு பொருத்தம் .. கணக்கியல் அப்படி தான் சொல்கிறது... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. முகநூலிலும் பார்த்தேன். இரண்டாம் பரிசுக்கு வாழ்த்துகள். ட்ராஃபி எனக்கும் வந்திருக்கு. இன்னும் பகிரவில்லை. பரிசு வந்ததும் சேர்த்துப் போடலாம்னு இருக்கேன். கொத்துமல்லி சாதம் நான் அதிகம் பண்ணுவதில்லை. எப்போவானும்.காரமல் பாயசம் ஆசையாக இருந்தாலும் பண்ணினால் சாப்பிட ஆள் தேடணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. அவமானங்களுக்கு எல்லாம் கலங்குவதே இல்லை. பழகிப் போயாச்சு! முகம் தெரியாத்வர்களெல்லாம் எளிதில் அவமானப்படுத்துகையில் ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மாதிரி எல்லாம் சொல்றாங்க என்று நினைச்சுப்பேன்.
  சமையல் விஷயத்தில் என் அம்மாவுக்கு நான் மசாலா தோசை, கை முறுக்கு போன்றவை செய்து காட்டி அசத்தி இருக்கேன். மசால் தோசையே எங்க வீட்டில் நான் பண்ணுவதைப் பார்த்துட்டுத் தான் பண்ண ஆரம்பித்தார்கள். எழுபதுகளிலேயே பண்ணி இருக்கேன். அதே போல் பூரி, கிழங்கும்! அம்மா பூரிக்குக் கடலைமாவுச் சட்னி தான் (பாம்பே சட்னி என்போம்) பண்ணுவார். நான் தான் கிழங்கு பண்ண ஆரம்பிச்சு இப்போ எல்லோரும் கிழங்கு பண்ணுகிறார்கள். அதே போல் மதுரா ஆலு(வடக்கே உள்ள மத்ரா)வும் நான் பண்ணுவது பிரபலம். வெங்காயம், பூண்டு, மசாலா இல்லாமல் பண்ணுவதால் அனைவருக்கும் பிடிக்கும். கொத்துமல்லி நிறையத் தூவிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 11. ரொம்பப் பீத்திக் கொண்டு விட்டேனோ? இஃகி,இஃகி,இஃகி! சகிச்சுக்குங்க! வேறே வழியே இல்லை. :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 12. அன்பு ஆதியின் முகனூல் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
  இங்கேயும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

  கொத்தமல்லி சாதம் , கருவேப்பிலை சாதம் முன்பு செய்வதுண்டு.

  சஹானா இதழ் மென்மேலும் வளர ஆசிகள்.
  வெகு நல்ல முயற்சி.

  தங்கள் மின் புத்தகங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
  பன்முகத்திறமையோடு திகழும் குடும்பம் மென் மேலும் வளர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. பரிசு பெற்றதற்கு மீண்டும் ஒரு முரை வாழ்துக்களை தெரிவிதுக் கொள்கிறேன். கேரமல் பாயசம் முயற்சி செய்கிறேன்.ஆனால் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்ய முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி பானும்மா.

   ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்ய முடியுமா? என்னைக் கேட்டால் செய்யலாம் என்றே சொல்வேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....