செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மரச் சிலைகளின் கதை…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 26

பகுதி 25 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் - ஒரு ஓவியமாக....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருப்பது மரத்திலால் ஆன சிலைகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஏன் மரச் சிலைகள் என்பதற்கும் ஒரு காரணமும் கதையும் உண்டு.  அக்கதையையும் மற்ற சில விவரங்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.  

திங்கள், 4 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மூன்று மரச்சிலைகள் – பிரம்மாண்டமான கோவில்!

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 25

பகுதி 24 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் மந்திர்
வெளிப்புறத் தோற்றம்

கோனார்க்-இல் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பார்த்த பிறகு, சிற்பங்களின் அழகையும், அதைச் செதுக்கிய சிற்பிகளின் உழைப்பு, கலைநயம், நளினம் ஆகியவற்றை எண்ணி அதிசயத்தபடியே அங்கிருந்து மனமே இல்லாமல் புறப்பட்டோம். ஒவ்வொரு சிற்பங்களையும் பார்ப்பதற்கே அரை மணி நேரமாவது வேண்டும் – அத்தனை நெளிவு-சுளிவு, நுணுக்கமான வேலைப்பாடு! கோனார்க் நகரிலேயே தங்கிக் கொண்டு சில நாட்கள் சிற்பங்களைப் பார்த்து வியக்க வேண்டும்! வெகு சிலர் மட்டுமே இப்படி சிற்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிக்கவே ஒரு வார காலம் இங்கே தங்குவதுண்டு! குறிப்பாக வெளிநாட்டவர்கள்! நம்மவர்கள் சிலர் “என்ன இங்கே இருக்கு! உடைந்து போன சிலைகள் தானே!” என்று சொல்கிறார்கள். அழிவுக்குக் காரணம் மனிதர்களும் தானே…. எதனையும் ரசிக்க ஏதுவாய் மனது வேண்டும். அது எல்லோரிடமும் இருப்பதில்லையே!

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஒட்டக எலும்பில் ஆபரணங்கள்…



சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் பயணம் சென்றிருந்தேன். ராஜஸ்தான் என்றாலே ஒட்டகங்கள் நினைவுக்கு வருமே உங்களுக்கு! ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்தில் கூட நிறைய ஒட்டகங்கள் உண்டு.  சில மாதங்களுக்கு முன்னர் ஆடு மாடு மேய்ப்பது போலவே, நிறைய ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டு போன காட்சியைப் பார்த்ததோடு, அதை காணொளியாகப் படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்! பார்க்காதவர்கள் வசதிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் சாலையைக் கடக்கும் காட்சியைப் பகிர்ந்து கொண்ட பதிவின் சுட்டி கீழே.

சனி, 2 செப்டம்பர், 2017

மேகம் கருக்குது டக்குசிக்கு டக்குசிங்!



Clicks and Colours என்ற முகநூல் குழுமம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் சொல்லும் கருவிற்கு ஏற்ற படங்களை, குழுவின் உறுப்பினர்கள் முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள். நானும் அங்கே ஒரு Silent உறுப்பினர்! மற்றவர்களின் படங்களை ரசிப்பதோடு சரி. வெகு குறைவாகவே எனது படங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கரு கொடுத்து, அதற்குத் தகுந்த ஐந்து படங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடைய முந்தைய கருக்களில் ஒன்றான ”மூன்று” என்பதற்கு ஏற்ற சில படங்களை எனது வலைப்பூவிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டி கீழே.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 205 – காதல் அன்றும் இன்றும் – எழுத்தோவியம் – யார் புத்திசாலி

இந்த வார புகைப்படம்:

மாலை நேரச் சூரியனை படம் எடுப்பதில் ரொம்பவே ஆர்வம் அதிகமா? இல்லை, மாலை நேரத்தில் மட்டுமே சூரியனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பது புரியாத புதிர்.  மாலை நேரச் சூரியனை நிறைய படம் பிடித்திருக்கிறேன். பல முறை பயணங்களில், சாலையில் பயணித்தபடியே சூரியனை படம் பிடிக்க முயல்வேன். அப்படி சமீபத்திய பயணத்தில் எடுத்த சூரியன் புகைப்படம்!