இரு மாநில பயணம் –
பகுதி – 44
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
தண்ணீரில் பிம்பம்.... கூடவே வெள்ளையாய் சிறு சிறு புள்ளிகள் -
அது என்ன? இதைப் புகைப்படப் புதிராக வைத்துக் கொள்ளலாம்!
அடலஜ் கி வாவ்....
காந்திஜியின் சபர்மதி
ஆஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் ஒரு படிக்கிணறு –
அஹமதாபாத் நகரின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த படிக்கிணற்றின் பெயர்
அடலஜ் கி வாவ். இந்தப் பயணத் தொடர்
ஆரம்பிக்கும் போது எழுதிய ராணி கி வாவ் பதிவுகள் உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.
இல்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து, படங்களைப் பார்த்து விடுவது நல்லது –
அந்த படிக்கிணற்றுக்கும் இந்த படிக்கிணற்றுக்கும் இருக்கும் வித்தியாசங்கள்
உங்களுக்குப் புலப்பட ஏதுவாக இருக்கும். அடலஜ் கி வாவ் – இங்கே என்ன இருக்கிறது,
இந்த இடத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.