வியாழன், 31 ஜனவரி, 2019

மொழிக் குழப்பம் – சுதா த்வாரகநாதன்




எங்களுக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். எனவே தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. பேசுவதும் தமிழ் கலந்த தெலுங்கில் தான் பேசுவோம். எங்கள் குழந்தைகள் இருவருமே தில்லியிலேயே வளர்ந்தவர்கள். பள்ளியில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப் படித்தார்கள்.  மேலும், தமிழ் பேசும் நண்பர்களும் நிறையவே இருந்தார்கள். தலைநகரில் வளர்ந்த மற்ற தமிழ்க் குழந்தைகளைப் போல, பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். ஓரளவிற்குத் தமிழ் பேச வரும். ஆனால் எங்கள் மொழியான தெலுங்கில் பேசும் போது, தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகள் கலந்து அடித்து விடுவார்கள்.

புதன், 30 ஜனவரி, 2019

பிங்கி பாட்டி கரோ – ஆதி வெங்கட்




அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. தலைநகர் தில்லியில் ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே.  Service Street” என்று சொல்லக்கூடிய சிறிய தெருவைத் தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம் வந்து விடும்.  இந்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய் 30 அடி இடைவெளிதான்.

செவ்வாய், 29 ஜனவரி, 2019

POPEYE ஆகணுமா - பாலக் பனீர்!


இந்த இடுகையில் பாலக் பனீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  ஹிந்தியில்பாலக்என்றால் பசலைக் கீரைபசலைக் கீரையில் விட்டமின் A, K, C, B2, B6 போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன.  அதில் போடும் மற்ற பொருளான பனீரிலும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.  

திங்கள், 28 ஜனவரி, 2019

தோய்ப்பு நடனம் - ஆதி வெங்கட்

இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள்  கீழே படிங்க.


ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பாண்டிச்சேரி – ஏரோவில் - நிழற்பட உலா





கடந்த மே மாதம் பாண்டிச்சேரி நகரில் இரண்டு நாட்கள் தங்கி கல்லூரி நண்பர்கள் சிலர் சந்தித்தோம்.