எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 14, 2012

ஃப்ரூட் சாலட் – 12 – தன்னம்பிக்கை மனுஷி – கண்ணாலே கொல்![பட உதவி: கூகிள்]


இந்த வார செய்தி:  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இருக்கும் ஒரு சிகரம் சாம்சேர் காங்க்ரி. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 21710 அடி.  கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி  அருணிமா சின்ஹா என்ற பெண்ணும் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினரும் இச்சிகரத்தின் 21110 அடி வரை சென்றிருக்கிறார்கள்.  இன்னும் 600 அடி சென்றால் சிகரத்தினைத் தொட்டிருக்க முடியும் – ஆனால் இடைவிடாத பனிப்பொழிவும் மழையும், போதிய வெளிச்சம் இல்லாமையாலும் அவர்களால் இன்னும் 600 அடி ஏறி சிகரத்தினைத் தொடமுடியவில்லையாம். 

”இது என்ன பெரிய விஷயம்? இதைவிட உயரமான இமயமலைச் சிகரத்தினையே பச்சேந்த்ரி பால் போன்ற பெண்கள் தொட்டிருக்கிறார்கள்!” என்று நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி – அருணிமா சின்ஹா அவர்களுக்கு ஒரு கால் கிடையாது.  இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

ஏப்ரல் 12, 2011:  உத்திரப்பிரதேசத்தின் பரைலி நகரிலிருந்து தில்லி வரும் பத்மாவதி எக்ஸ்பிரஸ்.  குண்டர்கள் சிலர் தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எதிர்த்துப் போராடினார் அருணிமா சின்ஹா.  கோபம் கொண்ட அந்தக் கயவர்கள் ஓடும் ரயிலிருந்து அருணிமாவைக் கீழே தள்ளிவிட எதிர் பக்கத்திலிருந்து வந்த மற்றொரு ரயிலில் அவரின் கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பயங்கர அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருணிமாவின் உயிரைக் காப்பாற்ற அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. 

தேசிய அளவில் கைப்பந்து போட்டிகளில் விளையாடி வந்த அருணிமாவிற்கு பேரிழப்பு.  ”அவரது இழப்பிற்கு அவரே காரணம் – குண்டர்களிடம் சண்டை போடாமலிருந்தால் அவருக்கு இது நேர்ந்திருக்குமா?” என்று சப்பைக் கட்டு கட்டியது ரயில்வே நிர்வாகம், போனாப் போகிறது என அவருக்கு 25000/- ரூபாய் வழங்கியது. அதை வேண்டாமென மறுத்த அருணிமா, பல மாத சிகிச்சைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார். 

பொதுவாகவே இங்கே எந்த ஒரு விபத்தோ, நிகழ்வோ நடந்த பின், அடுத்த விபத்து நடைபெறும்வரை தான் பழைய விபத்து நினைவில் இருக்கும்.  வேறு நடந்தபின் அதன் பின் ஓடி விடுவார்கள் எல்லோரும்.  இவருடைய விபத்திலும் இதே நடந்தது.  ஆனால் அருணிமா இத்தனை நாட்களும் விதியை நொந்தபடி இருக்கவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உத்தர்காஷியில் டாடா நிறுவனத்தினர் நடத்தும் Tata Steel Adventure Foundation-ல் சேர்ந்து, விடாமுயற்சியுடன் பச்சேந்த்ரி பால் அவர்களிடம் மலையேற்றத்திற்கான பயிற்சி பெற்று, தற்போது இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:


[பட உதவி: கூகிள்]


ஒரு காரியத்தை உண்மையிலே செய்ய நினைத்தால் நமக்கு வழிகள் கிடைக்கும்; இல்லையேல் காரணங்கள் தான் கிடைக்கும்.

இந்த வார குறுஞ்செய்தி: 


[பட உதவி: கூகிள்]


Having a smile on your face is a good compliment of life.  But putting a smile on other’s fae by your efforts is the best compliment to life.


[பட உதவி: கூகிள்]
நடந்தது என்ன: இன்று 14, செப்டம்பர்.  இதே நாளில் தான் 1949-ஆம் வருடம் ஹிந்தி மொழியை அலுவலக மொழியாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த நாளை ஹிந்தி தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.  செப்டம்பர் மாதம் 1 முதல் 14 வரை அரசு அலுவலகங்களில் ஹிந்தி பக்வாடா கொண்டாடப்படுகிறது.

[On the sidelines:  தில்லி வந்த புதிதில் அது என்ன ஹிந்தி பக்கோடா எனக் கேட்டிருக்கிறேன்!]

படித்ததில் பிடித்தது: 


[பட உதவி: கூகிள்]
 
கியோட்டாவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு
இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்
பதினெட்டு.
ஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களைத் தத்தம்
கண்களால் கொல்கிறார்கள்.

-    ஜப்பானிய கவிதை-கணையாழியின் கடைசிபக்கங்களிலிருந்து.

மீண்டும் ஃப்ரூட் சாலட்டோடு அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 


60 comments:

 1. //கயவர்கள் ஓடும் ரயிலிருந்து அருணிமாவைக் கீழே தள்ளிவிட எதிர் பக்கத்திலிருந்து வந்த மற்றொரு ரயிலில் அவரின் கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பயங்கர அடிபட்டது.//

  இதைப் பற்றி நான் தீவிரமாக சிந்தித்திருக்கிறேன். நானும் ஒரு முறை இவ்வாறு ரிசர்வ்டு கம்ப்பார்ட்மென்டில் ரிசர்வேஷன் இல்லாமல் ஏறியவர்களிடம் போராடியிருக்கிறேன்.

  யோசிக்கும் போது நியாயத்திற்காக நீங்கள் போராடும்போது யாரும் உதவிக்கு வருவதில்லை என்பது ஒரு சோகமான உண்மை. இரண்டாவது இத்தகைய போராட்டம் தார்மீகமானது என்றாலும் உயிரைப் பயணம் வைப்பது சரியா?

  விடை தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //யோசிக்கும் போது நியாயத்திற்காக நீங்கள் போராடும்போது யாரும் உதவிக்கு வருவதில்லை என்பது ஒரு சோகமான உண்மை.//

   இப்போதெல்லாம் இந்த விஷயத்திற்காகவே எதுவும் கேட்பதில்லை!

   //இத்தகைய போராட்டம் தார்மீகமானது என்றாலும் உயிரைப் பயணம் வைப்பது சரியா?//

   என்னைப் பொருத்தவரையில் சரியில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

   Delete
 2. அருணிமாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
  நம்ம தமிழ் பாட்டே இருக்கே "கண்கள் அம்புகள்"

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 3. தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்தும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 4. மனம் மிகவும் வேதனையடைய செய்தாலும், அவரின் தீரமும் விட முயற்சியும் மெய் சிலிர்க்க வைக்கிறது, இந்தியனின் நோயான மறதி மறைத்திருந்த நேரத்தில் மீண்டும் நினவேற்றியமைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜகோபாலன்.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் கருத்துரை.... மிக்க மகிழ்ச்சி.

   Delete
 5. அருணிமா சின்ஹா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இந்த வார முகப்புத்தக இற்றை - மிகவும் பிடித்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. //பொதுவாகவே இங்கே எந்த ஒரு விபத்தோ, நிகழ்வோ நடந்த பின், அடுத்த விபத்து நடைபெறும்வரை தான் பழைய விபத்து நினைவில் இருக்கும். வேறு நடந்தபின் அதன் பின் ஓடி விடுவார்கள் எல்லோரும்.//

  ஆமாம், வெங்கட்ஜி. எங்குமே இப்படித்தான்.

  தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹா மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவரின் தீரமும் விடாமுயற்சியும் மெய் சிலிர்க்க வைக்கிறது,

  நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. //தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹா மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவரின் தீரமும் விடாமுயற்சியும் மெய் சிலிர்க்க வைக்கிறது,//

   உண்மை. அதனால்தான் படித்ததை பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete


 7. //இந்தப் பெண்கள் ஆண்களைத் தத்தம்
  கண்களால் கொல்கிறார்கள்.//

  இருபதும் பதினெட்டும்
  இருவிழிகளால் கொல்வதில்
  இன்னா இருக்குது ஸர்ப்ரைஸ் ??

  எங்க் வீட்டுக் கிழவி
  எழுபது வயசிலேயும்
  என்னைக் கொல்றாளே !!
  எங்க் போய் சொல்ல !!!

  சுப்பு ரத்தினம்.

  பி.கு.:
  பழைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதற்கே
  இன்னும் பதிலைக் காணோமே
  அதுக்குள்ளே இன்னும் ஒண்ணா ?

  வெங்கட நாகராசு தம்பி,
  வேணும்னா நா வாரேன்.
  ரிப்ளை காலத்துலே
  அப்பப்ப பதில் போட
  அஞ்சு நிமிசத்துக்கு
  அம்பதே ரூபா தான்
  அப்ளை பண்ணட்டுமா ?

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பத்து ரூபா போதும். நான் வரட்டுமா?

   Delete
  2. //இருபதும் பதினெட்டும்
   இருவிழிகளால் கொல்வதில்
   இன்னா இருக்குது ஸர்ப்ரைஸ் ??

   எங்க் வீட்டுக் கிழவி
   எழுபது வயசிலேயும்
   என்னைக் கொல்றாளே !!
   எங்க் போய் சொல்ல !!!

   சுப்பு ரத்தினம்.//

   எத்தனை வயதானால் என்ன :)))

   //ரிப்ளை காலத்துலே
   அப்பப்ப பதில் போட
   அஞ்சு நிமிசத்துக்கு
   அம்பதே ரூபா தான்
   அப்ளை பண்ணட்டுமா ?//

   பார்த்து - உங்களுக்கு போட்டியா கந்தசாமி ஐயா வேற கிளம்பியிருக்காரு - பத்து ரூபா போதும்னு :)))

   உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு நானே பதில் போடறேன் - லேட்டா ஆனாலும்! :)))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
  3. பழனி. கந்தசாமி: உங்களுக்குள்ள போட்டி வந்துடுச்சே... ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம்....

   உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு நானே பதில் போடறேன் - லேட்டா ஆனாலும்! :)))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 8. கவிதையும் படமும் நல்லாயிருக்கு.

  அருணிமா சின்ஹா! அவரின் சாதனையைப் படிக்க மெய் சிலிர்த்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   Delete
 9. அருணிமா சின்ஹாவின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது.
  வாழ்வில் சோர்வுற்ற பலருக்கும் ஒரு பாடமாக இருக்கும். இவரை பற்றி இங்கே பகிர்ந்ததற்கு உங்களுக்கு என் நன்றிகள் வெங்கட்.

  ஹிந்தி தினம், தெரிந்து கொண்டேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. //வாழ்வில் சோர்வுற்ற பலருக்கும் ஒரு பாடமாக இருக்கும். //

   உண்மை கௌசல்யா....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 10. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கு இணங்க வாழ்ந்து காட்டி இருக்கிரா அருணிமா சின்ஹா......வாழ்த்துகள் அருணிமா சின்ஹா...  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ப்ரியா.

   Delete
 11. தன்னம்பிக்கைப் பெண் அருணிமாவிற்கு என் நல்வாழ்த்துக்களும் பூங்கொத்தும். இற்றை எனக்கு மிகப் பிடித்திருந்தது. கடைசியில் தந்துள்ள ஜப்பானியக் கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 12. தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 13. சுவை அதிகம் சார் ... அருணிமா நிச்சயமாக சாதனைப் பெண் தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 14. அருணிமா சின்ஹாவுக்கு நல்வாழ்த்துக்கள். உண்மை நேர்மை இவையெல்லாம் இந்தியாவில் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அருணிமாவின் விடாமுயற்சிக்கு சல்யூட்.
  "ஒரு காரியத்தை உண்மையிலே செய்ய நினைத்தால் நமக்கு வழிகள் கிடைக்கும்; இல்லையேல் காரணங்கள் தான் கிடைக்கும்" - மிகவும் உண்மையான வார்த்தைகள்.

  தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!
  மிகச்சிறந்த பகிர்வு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 16. ஒரு காரியத்தை உண்மையிலே செய்ய நினைத்தால் நமக்கு வழிகள் கிடைக்கும்; இல்லையேல் காரணங்கள் தான் கிடைக்கு

  --- நூற்றுக்கு நூறு உண்மை...

  delicious salad

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை.. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 17. நிறைய குட்டிக்குட்டித் தேடல்கள்.. மனதை கொள்ளை கொள்கின்றன. தொடருங்கள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 18. அருகில் வந்து தன் வாள் வீச்சால் கொல்வான் வீரன் !

  ஐந்தடி தொலைவில் இருந்தாலும் தன் வேல் விழியால்

  கொல்வாள் பெண் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 19. sako !

  pirayosanam mikka pathivu!

  arunimaa!
  arumai!

  kavithai-
  super!

  mikka nantri!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 20. பெரும்பாலான நேரங்களில் சக பயணிகள் தவறுகளை தட்டிக் கேட்பதில்லை. ஒருமுறை ஒரு பயணி பெட்டியின் உட்பகுதியில் இருந்து கொண்டே புகைபிடித்துக்கொண்டிருந்தார். அதே பகுதியில் இருந்தோர் முகம் சுளித்தாலும் அவரை கண்டிக்கவில்லை. நான் தான் தைரியமாக(??) அவருடைய கண்ணில் படாமல் ”எவண்டா அது! பெட்டிக்குள்ளே புகைப் பிடிப்பது?” என்று குரல் விட்டேன். அவர் பாதி சிகரெட்டை வெளியே தூக்கி எறிந்தார். (ஏன் கண்ணில் படாமல் குரல் விட்டேன் என்கிறீர்களா! நம்ம பெர்சனாலிட்டி அப்படி. நான் தான் குரல் விட்டேன்னு தெரிஞ்சா இன்னும் இரண்டு சிகரெட்டு கிட்ட வந்து குடிச்சிருப்பாரு.)

  ReplyDelete
  Replies
  1. //ஏன் கண்ணில் படாமல் குரல் விட்டேன் என்கிறீர்களா! நம்ம பெர்சனாலிட்டி அப்படி. //

   நீங்க தான் என்றும் இருபத்தி எட்டாச்சே!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]

   Delete
 21. ப்ரூட் ஸாலட் எல்லாமா கலந்து ஏகருசி. இன்னும் கொஞ்சம் கேட்கவிரும்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி காமாட்சி.

   Delete
 22. தன்னப்பிகையும்,விடா முயற்சியும் ஒரு மனிதனை நல்ல நிலைக்கு கொண்டுவரும் என்பது திண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete
 23. அருணிமா சின்ஹா மனதைத் தொட்டார்.
  ஜப்பானிய கவிதை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 24. எளிதில் சோர்ந்து போகும் அனைவருக்கும் அருணிமா ஒரு பாடம்
  மிக நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 25. Replies
  1. தமிழ்மணம் 11-ஆம் வாக்கிற்கு நன்றி குட்டன்.

   Delete
 26. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி என்ற சிகரத்தைத் தொட முடியுஎன் பதை நிரூபித்து விட்டார் அருணிமா.சிறந்த பகிர்வைத் தந்தமைக்கு தங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   Delete
 27. தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!//

  என்னுடைய பூங்கொத்தும் அருணிமாவுக்கு.
  நல்ல தொகுப்பை அளித்த உங்களுக்கும் பூங்கொத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிமையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 28. ஃப்ருட் சாலட் அருமை.
  // தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து! // அருமையான பெண் அருணிமா.
  //குண்டர்கள் சிலர் தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எதிர்த்துப் போராடினார் அருணிமா சின்ஹா. // தைரியத்தை பாராட்டுகிறேன்.
  // ”அவரது இழப்பிற்கு அவரே காரணம் – குண்டர்களிடம் சண்டை போடாமலிருந்தால் அவருக்கு இது நேர்ந்திருக்குமா?” என்று சப்பைக் கட்டு கட்டியது ரயில்வே நிர்வாகம், போனாப் போகிறது என அவருக்கு 25000/- ரூபாய் வழங்கியது. அதை வேண்டாமென மறுத்த அருணிமா //நிமிர்ந்து நின்று விட்டார்

  // இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 21710 அடி. கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அருணிமா சின்ஹா என்ற பெண்ணும் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினரும் இச்சிகரத்தின் 21110 அடி வரை சென்றிருக்கிறார்கள். // சாதனை பெண்மணி தான்.

  இந்த வார முகப்புத்தக இற்றை மற்றும் இந்த வார குறுஞ்செய்தி அருமை.சிறப்பான பதிவு.தொடருங்கள்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராசன்.

   Delete
 29. //Having a smile on your face is a good compliment of life. But putting a smile on other’s fae by your efforts is the best compliment to life./

  கடைபிடிக்க வேண்டிய அழகான தத்துவம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....