எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 14, 2014

ஃப்ரூட் சாலட் – 80 – மணக்கப்போகும் கூவம் – காதலர் தினம் – சனியன் - காப்பிஇந்த வார செய்தி:

சென்னையின் தீராத அழுக்கு நதியாக கருதப்படும் கூவம் நதியை சீரமைத்து தூய்மைப்படுத்தும் பெரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத் திட்டம் 3,833 கோடியில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் ரூ.3,833 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும், மறுகுடியமர்வு செய்யவும் ரூ.2,077 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும்.

இந்தத் திட்டத்துக்காக 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூவம் நதி:  திருவள்ளூர் மாவட்டத்தில் உருவாகும் கூவம் நதி 65 கிலோமீட்டர் பயணித்து சென்னை நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. கடந்த 1960 ஆம் ஆண்டு வரை தூய்மையாக இருந்த இந்த நதியில் படகு போக்குவரத்து, மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனால், இந்த நதியில் கழிவு நீர் விடப்பட்டதால் நதிநீர் மாசடைந்து சென்னைக்கு வருவோரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் துர்நாற்றம் வீசும் நதியாக மாறியது.

இந்த நதியைத் தூய்மைப்படுத்த பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே தீட்டப்பட்டுள்ளன. இருந்தாலும், முதல்முறையாக நதியைத் தூய்மைப்படுத்துவது, நதிக்கரையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை மறுகுடியமர்வு செய்வது, நதிநீர் மாசடைவதைத் தடுப்பது என முழுமையான தூய்மைப்படுத்தும் திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எல்.கே.எஸ். நிறுவனம் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கு நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, இப்போது கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூவம் முகத்துவாரம் முதல் பருத்திப்பட்டு அணைக்கட்டு வரை..   ஸ்பெயின் நாட்டு நிறுவனம் சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில், கூவம் நதியின் முகத்துவாரப் பகுதியில் இருந்து ஆவடி பருத்திப்பட்டு அணைக்கட்டு பகுதி வரை சீரான நீரோட்டம், நதிக்கரையோரம் வசிக்கும் குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்தல், கூவம் நதி மாசுபடுவதைத் தடுத்தல் என்ற வகையில் முழுமையான திட்ட அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கூவம் நதியைத் தூய்மைப்படுத்த பலமுறை திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக அனைத்து அம்சங்களும் அடங்கிய ஒருங்கிணைந்தத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த திமுக ஆட்சியில், சிங்கப்பூர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கூவம் நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால், அந்தத் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1971-இல் தொடங்கிய தூய்மைப்படுத்தும் திட்டம்:  கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் முதன் முதலாக 1971-இல் மேற்கொள்ளப்பட்டது. நதிக்கரையில் அப்போது ஆக்கிரமிப்புகளும் குறைவாக இருந்ததால் நதிநீர் தூய்மைப்படுத்தப்பட்டு படகுகளும் விடப்பட்டன.

ஆனால், புயல் மழை பாதிப்பு தொடர்பாக சரியான மதிப்பீடு செய்யாததால் இந்தத் திட்டம் 1976-இல் பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஏற்பட்ட பெரிய புயலில் கூவம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளும் அழிந்துவிட்டன. தன்பிறகு, பலமுறை கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தத் திட்டங்கள் முழுமையானதாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-    தகவல்: தினமணி….

வந்திருக்கும் அறிவிப்பு நல்லதாகத் தோன்றுகிறது. சென்னையின் அடையாளம் என்று இதுவரை சொல்லப்பட்ட விஷயங்களில் ஒன்றான இந்த அழுக்கான கூவம் மாறிவிட்டால் நல்லது தான். தில்லி நகரில் இதே போன்று அழுக்காக மாறியிருக்கும் யமுனையை சுத்தம் செய்வதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தும் இன்னமும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதைப் பார்க்கும்போது கூவம் சுத்திகரிப்பு எந்த அளவிற்கு நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

காதலர் தினம் வந்தாலும் வந்துச்சு

காக்கா குருவிலாம் மேக்கப் பண்ணிட்டு
சுத்துது....!...

-    சேட்டைக்காரன்.

இந்த வார குறுஞ்செய்தி:

ஆசைக்கும் பேராசைக்கும் சின்ன வித்தியாசம் தான்….. 

நீங்க அழகா இருக்கணும்னு நினைச்சா அது ஆசை!
அதுவே என்ன மாதிரி ரொம்ப அழகா இருக்கணும்னு நினைச்சா அது பேராசை! :)

ரசித்த படம்:ராஜா காது கழுதை காது:

திருவரங்கம் கோவில் தேர் பார்க்கும்போது பல விஷயங்களைக் கேட்க முடிந்தது. என்னைத் தாண்டி ஒரு கணவனும் மனைவியும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது இந்த வார ராஜா காது கழுதைக் காது பகுதியாக!

கணவன்: தேருக்குப் பக்கத்தில் போகலாம்.
மனைவி: அங்கே ஒரே கும்பல், இழுக்கும்போது நம்மள தள்ளினாலும் தள்ளிடுவாங்க. வயசான காலத்துல விழுந்தா யார் பார்த்துப்பாங்க!
கணவன்: ”அதெல்லாம் ஒண்ணும் விழமாட்டோம். சீக்கிரம் வா” என்று சொல்லியபடி முன்னே சென்றார். அதன் பிறகு மனைவி சொன்னது…..

“சனியன்….  சொன்னா கேட்கறதே கிடையாது!”

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக ஒரு ஹிந்தி பாடல். ராஜேஷ் கன்னா அவர்கள் நடித்த ஆனந்த் படத்திலிருந்து “மேனே தேரே லியே ஹி சாத்” எனும் பாடல் – முகேஷ் பாடிய பாடல் நான் ரசித்த ஹிந்தி பாடல்களில் ஒன்று – உங்கள் ரசனைக்கு…..படித்ததில் பிடித்தது:

”கல்யாணி வாசலில் கோலம் போட்டபடி இருந்தாள். உள்ளே காபி ஃபில்டரை அம்முணி தட்டும் சப்தம். பல குடும்பங்களில் இந்த ஃபில்டர் தட்டும் சப்தத்துக்கு ஒரு தனி வரவேற்பு உண்டு.

முடங்கியும், சுருண்டும் கிடக்கும் ஜீவன்களின் காதுக்கெல்லாம் இந்தச் சப்தம் ஒரு கானாமிர்தம். அப்புறமாய் இழைய வரும் அந்த வாசம், பின் பூத்து நுரை ததும்பத் தெரியும். அந்த வண்னம், கையை அசைத்து ஆற்றிச் சரிக்கும்போது புகை மேனியோடு அது பாய்ந்து டபராவில் வட்டமிட்டுத் தேங்கும் விதம், எல்லாமே அகராதியில் இல்லாத இனி சேர்க்கப்பட வேண்டிய உற்சாக்ச் சமாச்சாரங்கள்.

‘ட்ணொட்… ட்ணொட்… அந்த மகா பெரிய வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிரது அம்முணி ஃபில்டர் தட்டும் சப்தம்…..”

- சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து. என்ன புத்தகம், யார் எழுத்தாளர் என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….

66 comments:

 1. திட்டம் தானே தீட்டி உள்ளார்கள்...

  பேராசையும் செம சேட்டை...!

  படைப்பாளி ஓவியம் சூப்பர்...

  புத்தகத்தை அனுப்பி விட்டால் சொல்லி விடுகிறேன்... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   புத்தகம் அனுப்பி வைத்தால் சொல்லி விடுவீர்களா.... :)

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  பதிவு மிக அருமையாக உள்ளது அதிலும் முகப்புத்தக செய்தியாக ....
  காதலர் தினம் வந்தாலும் வந்துச்சு

  காக்கா குருவிலாம் மேக்கப் பண்ணிட்டு
  சுத்துது....!...

  அத்தோடு உண்மையான படைப்பாளியின் படம் மிக அழகு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. வணக்கம்
  “ஐயா.

  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. எத்தனைமுறை கூவம் சுத்தப்படுத்தப் படப்போகிறதோ! நமது வரிப்பணம் எப்படியெல்லாம் போகிறது, பாருங்கள்.
  சேட்டைக்காரனின் கவிதை அருமை! படைப்பாளியின் ஓவியம் அவரது உழைப்பை பேசுகிறது.
  லா.சா.ரா?
  ஆனந்த் படப்பாடல் காலம் கடந்து நிற்கும் இனிமையான பாடல்.

  ReplyDelete
  Replies
  1. லா.ச.ரா.... - தவறான பதில்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 5. ஃப்ரூட் சாலட்- அருமை..

  எத்தனை திட்டம் கண்டோம்..
  எல்லாம் ஏட்டில்தான் ..
  ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா..
  எத்தர்களின் சுரண்டல் திட்டம்..
  ஏங்கி ..மிரண்டு தவிக்கும் மக்கள் கூட்டம்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete

 6. //தில்லி நகரில் இதே போன்று அழுக்காக மாறியிருக்கும் யமுனையை சுத்தம் செய்வதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தும் இன்னமும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதைப் பார்க்கும்போது கூவம் சுத்திகரிப்பு எந்த அளவிற்கு நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!//

  எந்த ஆட்சி வந்தாலும் எத்தனை முறை புதிய திட்டங்கள் தீட்டினாலும் கூவம் சுத்திகரிப்பு என்பது ஏட்டளவிலேயே இருக்கும். காரணம் இங்கே யாரும் யாருக்கும் Accountable என்பது தான்!

  அந்த கதையை யார் எழுதியது எனத் தெரியவில்லை. தவறாக யூகிக்க விரும்பவில்லை.

  வழக்கம்போல் பழக்கலவை அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Accountability - சரியாகச் சொன்னீர்கள்.... இது ஒரு பெரிய பிரச்சனை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. //திட்ட அறிக்கையை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த//
  வாவ்... இன்டர்நேஷனல் டீலிங்

  //இதற்கு நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து//
  ஓ... டீலிங் நல்லபடியா முடிஞ்சிடுச்சி போல...!!

  //நதிக்கரையோரம் வசிக்கும் குடிசைவாழ் மக்களை மறுகுடியமர்வு செய்தல்//
  நிச்சயமா இதை அவர்களால் சென்னை நகருக்குள் செய்ய முடியாது. அவர்களைக் கொண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் குடியமர்த்தினால் வேலைக்கு என்ன செய்வார்கள், எங்கு போவார்கள்?

  ReplyDelete
  Replies
  1. இண்டர்நேஷனல் டீலிங்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.....

   Delete
 8. கூவம்
  கொள்ளையடிக்க
  ஒரு திட்டம்


  அப்புறம்

  சேட்டைக்காரன் வீட்டில
  நிறைய காக்கா குருவிகள் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேல்முருகன்.

   Delete
 9. முதலில் அரசியல் சாக்கடை ஆகி வருகிறதே! அதை யார் சுத்தம் செய்வது!?

  ReplyDelete
  Replies
  1. சரியான கேள்வி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 10. கூவத்தைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சந்தோஷம்தான். அரசு எதையும் குறுகிய காலத் திட்டமாகவே போடாது! ராஜா காது... சிரிப்பு. ராஜேஷ் கன்னா பாடல் - இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. கூவம் ப்ராஜெக்ட் கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்....ஊழல் பெருகும்....ஏதோ அந்த மக்களும் மகிழ்வாகவும், சென்னை நாராமலும்,கொசு உற்பத்தி செய்யாமலும் இருந்தாலே பெரிய வெற்றிதான்!

  இந்த வார முகப்புத்தக இற்றை:

  காதலர் தினம் வந்தாலும் வந்துச்சு

  காக்கா குருவிலாம் மேக்கப் பண்ணிட்டு
  சுத்துது....!...
  சிரிச்சு வயிறு புண்ணாகிவிட்டது!

  உண்மையான படைப்பாளி! சூப்பர்! நிஜமாகவே இப்படிப்பட்ட படைப்பாளிகள் நம் சமூகத்தில் அதிகம்!

  நாங்களும் தலைய பிய்ச்சுகிட்டோம் அந்த எழுத்தாளர் தெரியவில்லையே ,.....நீங்களே சொல்லிவிடுங்களேன் அப்படியாவது நினைவுக்கு வருதானு பார்க்கிறோம்.....

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.....

   Delete
 12. mmmm தி.ஜானகிராமன் கதை ஒண்ணிலே படிச்ச நினைவு. :))) அல்லது அம்முணினு பேர் வந்திருக்கிறதாலே பி..வி.ஆராவும் இருக்கலாமோ? ஹிஹிஹிஹி, எதுக்கும் ரெண்டு பேரிலே யாரா இருந்தாலும் தப்புக்குக் குறைச்சுட்டு மிச்சத் தங்கக்காசைக் கொடுத்துடுங்க. :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   இரண்டு பேரும் இல்லை.....

   Delete
 13. கூவம் - திட்டம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப் பட்டு கொஞ்சமாவது முன்னேற்றம் தெரிந்தால் வாழ்க வாழ்க என்று கூவுவோம். இல்லையென்றால் அப்போ வேற மாதிரி கூவுவோம்.

  படைப்பாளியின் படைப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 14. அரசியல் சாக்கடை சுத்தப்படும் போது தான் இந்தக் கூவங்களும் சுத்தப்படும்
  தமிழனுக்கு சுதந்திரம் (இலங்கையில் )கிடைத்த மாதிரி இந்தக் கூவத்தின்
  விவகாரமும் எப்போதுமே ??????????? தான் .ஓவியம் வரையும் படைப்பாளியின்
  திறமை போற்றுதற் குரியது !! செட்டைக்காரன்னின் குறும்பான இற்றை மிகவும்
  பிடித்துள்ளது :) சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. அரசியல் சாக்கடை சுத்தம் செய்ய, எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது..... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 15. முகப்புத்தக இற்றை கலக்கல்! கூவம் சுத்தம் ஆக வேண்டியதுதான்! ஆனால் அதற்கு இத்தனை செலவா? நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 16. சிங்காரச்சென்னை சிங்கப்பூர் ஆகிவிட்டதா. கூவத்தில் படகு விட்டனரே கூவம் மணக்கத் துவங்கியதா. இன்னும் எத்தனை கோடி ரூபாய்கள் கூவத்தில் கரைக்கப் போகின்றனரோ. சொல்லும் செயலும் இணைவதெப்போது. கங்கை யமுனை போன்ற ஜீவநதிகளின் கதியே சாக்கடை நீர் என்றால் கூவம் எம்மாத்திரம் அட போங்க சார்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 17. Replies
  1. தவறான விடை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

   Delete
 18. சுவரில் வரையும் ஒவியர் உனமையான படைப்பாளிதான். பாடல் பகிர்வு அருமை.
  பாலகுமரன் கதை என்று நினைக்கிறேன.

  ReplyDelete
  Replies
  1. எழுதியது பாலகுமாரன் இல்லைம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 19. குறுஞ்செய்தி , படம் எல்லாம் சூப்பர். விடைதான் தெரியல :(
  பாலகுமாரனா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   பாலகுமாரன் இல்லை!

   Delete
 20. கூவத்தை சுததப்படுதரேன்னுட்டு இதுவரைக்கும் எத்தனையோ கோடிஙலை ரெண்டு கத்சிஙகளும் சுதுத்தியாச்சி. இப்பவும் அதான் நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் நடக்கும்.... நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
  2. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 21. நல்ல தொகுப்பு. விடை அறியக் காத்திருக்கிறேன் நானும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. கூவம் ஒருநாளும் மாற போவதில்லை !

  உண்மையான படைப்பாளி....மனம் ரணம் ஆகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 23. உண்மையிலேயே அந்தப் படைப்பாளி, உண்மையான படைப்பாளி தான்.. அனைத்தும் அருமை வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 24. கூவம் எப்படியோ
  பெயருக்கேற்றார் போல
  ஆறானால் சரி
  அது யாரால் ஆனாலும்...
  பய்னுள்ள சுவாரஸ்யமான சாலட்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 25. //இந்தத் திட்டத்துக்காக 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு//
  ஸ்ரீஅம்பிகையே ஸ்வாஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 26. திட்டங்கள் செயல்பாடாகினால் அனைவருக்குமே நல்லது தான்... அருமையான படைப்பாளியின் அறிமுகம்..... நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 27. அந்த படைப்பாளியின் கை வண்ணம் அருமை!

  எழுத்து சுஜாதா மாதிரியும் இருக்கிறது, தி.ஜானகிராமனின் எழுத்து மாதிரியும் இருக்கிறது அந்த வாசகங்களைப்பார்க்கும்போது!

  ஃப்ரூட் சாலட் மிகுந்த சுவை கொண்ட‌ பழக்கலவைகளின் தொகுப்பு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 28. கூவம் திட்டங்கள் வரவேற்போம். காதலர்தின ஜோக் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 29. என் பெயா் ரங்கநாயகி -- இந்திரா செளந்தர்ராஜன்
  நல்ல படைப்பாளி

  ReplyDelete
  Replies
  1. சரியான விடை.... கதை - “என் பெயர் ரங்கநாயகி” எழுதியவர் - “இந்திரா சௌந்தர்ராஜன்.


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.

   Delete
 30. கூவம் நதியைப் பற்றி தெரியாத விளக்கங்கள் அருமை.

  "“?/சனியன்…. சொன்னா கேட்கறதே கிடையாது!”// - எல்லார் வீட்டிலும் கேட்கக்கூடிய வசனம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 31. Kadhalar Dhinam vandalum vandhadhu... nalla karuththu. Indhavara fruit salad miga arumai..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 32. கூவம் மணப்பதெப்போ. பார்க்கலாம். சுவர்ச்சித்திரமே நீ உயிர் பெறுவாயாக..கழுதைக் காது பெரிதாக எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறது. தேவனா அந்தக் காஃபிபடைப்பாளி__

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   அந்த படைப்பாளி இந்திரா சௌந்தர்ராஜன் - கதை - “என் பெயர் ரங்கநாயகி”

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....